எங்கள் உயிரே யாரஸூலல்லாஹ்
By Zainul Abdeen
பாசநபியே உங்களின் பாத விந்தங்களை எம் சிரசில் சுமப்போம்!
எங்கள் உயிரே யாரஸூலல்லாஹ்
உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்
உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்
ஒருமுறை வருவீர் எஜமானே! – நீங்கள்
பலமுறை வருவீர் எஜமானே! (எங்கள் உயிரே)
1. முழுமதி இல்லா வானம் போல் – எங்கள்
வாழ்க்கை இருளில் துடிக்கிறதே – எங்கள்
வாழ்க்கை இருளில் துடிக்கிறதே
உங்கள் முழுமதி முகத்தை ஒரு தடவை
காண வரம் தரவேண்டும் எஜமானே
நீங்கள் வரம் தரவேண்டும் எஜமானே
உங்கள் பாதத்தை முத்தணும் எஜமானே (2) (எங்கள் உயிரே)
2. ஆதவன் ஒளிமுன் பனி உருகும்
உங்கள் பார்வை பட்டால் பாவம் மறையும் (2)
அந்த பார்வையிலே நன்மை பெருகும்
இந்த பாவியை பாருங்கள் எஜமானே(2)
உங்கள் பாதையில் சேருங்கள் எஜமானே (எங்கள் உயிரே)
3. மரிக்கின்ற வேளையில் சொறக்கின்ற
இனிய கலிமாவை மொழிந்திடவே – நன்று
சுவைக்கின்ற கலிமாவை மொழிந்திடவே
கருணை நபி அவர் கண் முன்னே
என் ரூஹும் அடங்கணும் ரஹ்மானே!
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (எங்கள் உயிரே)
4. இறையோனே வல்ல ரஹ்மானே – அண்ணல்
நபிமுகத்தை காணும் நஸீபை – திங்கள்
நபி முகத்தைத காணும் நஸீபை
நீ தருவாயே வல்ல யாஅல்லாஹ்
நாங்கள் இருகரம் ஏந்தி வேண்டுகிறோம்
எங்கள் வாழ்க்கை முழுவதும் நபி மீது
ஸலவாத் ஓதும் பாக்கியம் தந்திடுவாய்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம் (எங்கள் உயிரே)