ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் கொள்கைப் போர்
By Zainul Abdeen
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் கொள்கைப் போர்:
ஷெய்குனா அவர்கள் தமது குருநாதரின் வழியைப் பின்பற்றி வழிகேடார்களுக்கும் குழப்பக் கொள்கை படைத்தோருக்கும் ஒரு பெரும் சவாலாகவே எப்போதும் விளங்கி வந்துள்ளார்கள். தீனை விற்றுப் பிழைக்கும் வகையற்றோரின் முகமூடி கிழித்துக் கொள்ளச் செய்வதில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் அவர்கள் செய்த பணி மகத்தானது! மறுக்க முடியாதது!
ஸூபி ஹலரத் என்ற பெயரைக் கேட்டதும் தமிழகத்திலும் சரி. ஈழத்திலும் சரி. வஹ்ஹாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமிகள், தப்லீகர்கள் போன்ற இன்ன பிற கொள்கைக்காரர்கள் நடுங்கி வாய் பொத்திய வரலாறுகள் ஏராளம் உண்டு!
கபட வேடதாரிகளின் கூடாரங்களை கதிகலங்கச் செய்த ஷெய்குனா அவர்கள் மீது காழ்ப்பு கொண்ட குறைமதியாளர்கள் அவ்வப்போது ஏவிய கேள்விக் கணைகள் சொல்லம்புகள் ஆகியவற்றை முனை மழுங்கச் செய்ததோடு சில அறைகுறை மேதாவிகள் சொரிந்த இழிமொழிகளையும் தாங்கிக் கொண்டு தம் கருமத்தில் கண்ணாயிருந்தார்கள் எங்கள் கண்ணியத்திற்குரிய ஷெய்குனா அவர்கள்!
இப்பணிக்காகவும், இறை தியானத்திற்காகவும், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் காயல்பட்டினம், தூத்துக்குடி, மேலப்பாளையம், கேரளத்தின் பீமாபள்ளி மற்றும் பல பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ஸபை ஸூபி மன்ஸில் என்ற பெயரில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட வைத்தார்கள்.
போலி தரீகாவைப் புறக்கணித்த ஷைகுனா:
தரீகத் என்ற போர்வையில் வஹ்ஹாபிகள் ஊடுருவிக் கொண்டிருந்த 70-80 காலகட்டங்கள்.
தமிழகத்தில் அக்காலத்தில் பரவிக் கொண்டிருந்த வஹ்ஹாபிய தேவ்பந்தி கொள்கை கொண்ட போலி தரீகாவான நூரிஷாஹ் தரீகத்தினர் கேரளாவில் தரீகத் மாநாடு என்று ஒன்று ஏற்பாடு செய்து ஷைகுனா ஸூபி ஹழ்ரத் அவர்களை அழைத்தனர்.
ஆனால் ஷைகுனா அவர்கள் அவர்களின் வழிகெட்ட கொள்கையை அறிந்து அம்மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.
(அம்மாநாட்டில்தான் நூரிஷாஹ் கேரளா உலமாக்களால் வழிகேடான கொள்கை கொண்டவர் என்று அறிவிக்கப்பட்டு, அவரால் உருவாக்கப்பட்ட கேரளா பட்டிக்காடு அரபி மத்ரஸாவை சுன்னத் வல் ஜமாஅத்தினர் கைப்பற்றி கேரளாவை விட்டும் நூரிஷாஹ் துரத்தி அடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
மேலும் நூரிஷாஹ் தரீகத்தினர் மகானாக கொண்டாடும் அஷ்ரப் அலி தானவி யை பற்றி அவர் *காபிர்* என்று வெளிவந்த பர்ரத் மின் கஸ்வரா என்ற பத்வாவை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.
மேலும் அத்தரீகத்தினர் கொண்டாடும் வஹ்ஹாபிய தேவ்பந்தியர்களை கடுமையாக சாடியும், கண்டித்தும் நூல்களை வெளியிட்டும் பிரச்சாரம் செய்தும் சத்திய கொள்கையை விளக்கினர்.
தமிழ் கூறும் தீன்குலப் பெருமக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளையும், மாற்றாரின் குழப்ப வாதங்களையும் தெளிவாகத் தெரிந்துக் கொண்டு செயல்பட – அதன் மூலமாக ஈருலக நல்வாழ்வினையும் பெற்றிட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் பல கொள்கை விளக்க நூற்களையும் ஷெய்குனா எழுதினார்கள். அவற்றுள் குறிப்பிடத் தக்க நூற்கள்:
1. இன்ஹாருல் ஹக் – சத்தியப் பிரகடனம்2. உலமாக்களின் உண்மை பத்வா3. அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள்4. காதியானி – தேவ்பந்த் சம்பாசனை 5. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள் 6. சுவர்க்க நகைகளா? அல்ல! அது நரக விலங்குகள் 7. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில்தட்டு8. மவ்தூதி சாகிபும் அவரது ஜமாஅத்தே அஸ்லாமி இயக்கமும்9. அல்முஹன்னதின் அண்டப் புழுகு 10. தப்லீக் என்றால் என்ன? 11. புலியைக் கண்டு ஓட்டம்
இன்றும் தமிழுழகில் சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றக் கூடியவர்கள் ஷைகுனாவையே முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகின்றனர் என்றால் அவர்களின் பணி மகாத்தானது என்று விளங்கும்.
அல்லாஹ் அன்னாரின் சேவையைப் பொருந்திக் கொண்டு, அன்னாரின் வழியில் வழிநடந்திட நமக்கு கிருபை செய்வானாக. ஆமீன்.