ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது… பகுதி -2

ரவூப் மௌலவியின் பொய் புரட்டு அம்பலமாகுகிறது… பகுதி -2

By Zainul Abdeen 0 Comment January 28, 2022

அல் கிப்ரீத்துல் அஹ்மர்’ என்று ஒரு ஃபத்வா வஹ்தத்துல் வுஜூது பற்றி எழுதி அதில் அம்பா நாயகம் அவர்கள் கையொப்பமிட்டிருப்பதாக ரவூப் மௌலவி என்பவர் முகநூலில் பதிவிட்டமைக்கு,

அம்பா நாயகத்தின் மகனாருடன் நான் பேசிய தொலைபேசி உரையாடலை முதல் பாகத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் அம்பா நாயகம் அவர்கள் கையெழுத்திடவில்லை என்று அவர்கள் உறுதிபட தெரிவித்திருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இதுபற்றி மேலும் விவரமாக அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த *1-1-2022* அன்று கம்பம் சென்று *கல்வத் நாயகம் தைக்கா* வில் அன்னாரை சந்தித்து இதுபற்றி விரிவாக சொல்லும்படி கேட்டேன்.

அதற்கு ‘ *ரவூப் மௌலவி வந்தது உண்மை. அந்த பத்வாவில் என் கைப்பட (அதில் ஷஃன் இல்லை) என்று எழுதினேன். அம்பா அவர்கள் அதில் கையெழுத்திடவில்லை’என்றார்கள். மேலும் அவரின் ஞான சறுகுதலுக்குரிய விளக்கத்தையும் விளக்கினார்கள்.அதன் முழு ஆடியோ (Audio)வையும் கேளுங்கள்.

ரவூப் மௌலவியின் பொய் புழுகல்களையும் நயவஞ்சக செயலையும் பாருங்கள். அவர் இத்தனை நாட்கள் கழித்து அதுவும் கையெழுத்திடப்பட்டதாக சொல்லப்பட்ட அனைவரும் வபாத்தான பிறகு இது சம்பந்தமாக அந்த ஷைகுமார்களின் பெயர்களை இதில் இழுத்து விட்டிருப்பது எதற்கு? யாருக்கும் புரியாது சந்தேகம் வராது என்பதாலா?

ஆனாலும் ரவூப் மௌலவியின் முகத்திரை மேலும் கிழிக்கப்பட்டது அம்பா நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனாரால்.

அப்போ அதிலுள்ள கையொப்பம்…? என்று கேட்டால் இவ்வாறு தகிடுதத்தம் செய்யும் இவருக்கு அதுகூட முடியாதா என்ன?

அதேபோல் மகான் பாக்கர் ஆலிம், யாஸீன் ஆலிம் ரழியல்லாஹு அன்ஹுமா போன்றவர்களுடனும் நான் தொடர்பில் இருந்தவன். அவர்களும் ரவூப் மௌலவி சொல்வதுபோல் சொல்லக் கூடியவர்கள் அல்ல.

அவர்களிடமும் விசாரிக்கலாம் என்றால் அவர்களிருவரும் ஹயாத்தாக இல்லை. இதனால்தான் ரவூப் மௌலவி இவ்விசயத்தைப் பற்றி இப்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்.

ஆனாலும் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே. இப்படித்தான் மற்றவர்களிடம் என்ன பேசினாரோ? எப்படி கையொப்பம் (???) பெற்றாரோ? நம்பிக்கையற்றவரின் பேச்சை எப்படி நம்புவது?

அல்லாஹ் மிக்க மேன்மையானவன்.
ஆனால் இதுமாதிரி வழிகேடுகளைப் பற்றி மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தினால் எங்க மிஸ்பாஹி மேல் பொறாமை, வயிற்றெரிச்சல் என்று பழைய பல்லவியையே பாடுவார்கள்.

அவர் மீது பொறாமைபட எனக்கு என்ன இருக்கிறது?அவருக்கும் எனக்கும் எவ்விதப் பகையுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை நான் நேரடியாக சந்தித்ததும் இல்லை.

அம்பா அவர்களுக்கும் ஸூபி ஹழ்ரத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கும் நீண்ட தொடர்பு இருந்து கொண்டிருந்தது. அம்பா அவர்களை சந்திக்கும் போதெல்லாம் ஸூபி ஹழ்ரத் அவர்களை புகழ்ந்து பேசக் கூடியவர்களாகவும், ஸூபி ஹழ்ரத் அவர்களின் ஞானமும் எமது ஞானமும் ஒன்றுதான் என்று சிலாகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அவர் கொள்கை வழிகேடு என்று ஷைகுனா ஸூபி ஹழ்ரத் அவர்கள் சொல்லிவிட்டார்கள். அதில் எவ்வித முரண்பாடும் இருக்காது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அதேபோல் காமிலான ஷைகுமார்களும், இறைநேசர்களும் ஒருக்காலும் வழிகேட்டை ஆதரிக்க மாட்டார்கள் என்ற உறுதிபாடும் கொண்டவன்.

அம்பா நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் முஹிப்பீன்களில் நானும் ஒருவன்.

அந்த வகையில் அவர்கள் மேல் ரவூப் மௌலவி சாட்டியிருக்கும் பொய்களும், குற்றச்சாட்டும் *உண்மையானதல்ல* என்று நிரூபிக்கும் கடமை எனக்குண்டு. அந்த காரியத்தை செய்ய வல்லமை தந்த வல்ல நாயனுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

ஞானவான்கள் போதித்த வஹ்தத்துல் வுஜூது தத்துவத்தைத்தான் எஜமான் கல்வத்து ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து பெற்று முஹம்மது ஸயீத் ஜல்வத்தி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மகனாரும் கலீபாவுமாகிய அம்பா நாயகத்திற்கும் பேரராகிய அப்துல் கபூர் ஹழ்ரத் அவர்களுக்கும் போதித்தார்கள். அதைத்தான் அப்துல் கபூர் ஹழ்ரத் அவர்களும் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

*ஞானவான்கள் சொன்ன கருத்துக்களுக்கு தான்தோன்றித் தனமாக தவறான விளக்கங்கள் கொடுத்து ரவூப் மௌலவி வழிகேட்டில் செல்கிறார்.*

அதிலும் உண்மை ஷைகுமார்களை தமக்கு ஆதாரத்திற்காக துணைக்கு இழுத்துக் கொள்கிறார். மக்கள் அதை உண்மையென நம்பி வழிகேட்டில் சென்றுவிடாமலிருக்க அவரை *வழிகேடர்* என்று அடையாளம் காட்டிக் கொள்ளவே இப்பதிவு.

ஆக, இனியும் இதற்கு வலிந்துரைகளும், விளக்கங்களும், எழுத்து- கருத்துப் பிழைகளும் தேடிக் கொண்டிராமல் இனியாவது உண்மையை புரிந்து திருந்துங்கள் என வேண்டுகிறேன்.

https://youtu.be/Zat6LrHL1VA

-ஜமால் முஹம்மது.

Add Comment

Your email address will not be published.