தேவ்பந்திகளின் வார்த்தைகள் குஃப்ர் எனச் சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுபவர் பற்றி…
By Zainul Abdeen
தேவ்பந்திகளின் வார்த்தைகள் குஃப்ர் எனச் சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுபவர் பற்றி…
- கேள்வி: ஜைது என்பவர் அரபு நாட்டில் வசிக்கிறார். அரபுலகில் வழிகெட்ட வஹ்ஹாபிய மதம் பரவலாகி இருப்பது யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஜைதானவர் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கிதாபுத் தவ்ஹீத், அஷ்ரப் அலி தானவியின் ஹிப்ளுள் ஈமான், இஸ்மாயில் திஹ்லவியின் தக்வியத்துல் ஈமான், கலீல் அஹ்மது அம்பேட்டவியின் பராஹீனே காத்திஆ, காஸிம் நானூத்தவியின் தஹ்தீருன்னாஸ், ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஃபதாவா ரஷீதிய்யா போன்ற புத்தகங்களில் உள்ள வழிகெட்ட வார்த்தைகளைக் கண்டு அவை குஃப்ரியத்தானவை என்று ஏற்றுக் கொள்கிறார் என்றும், யாரஸூலல்லாஹ், யா கவ்து என அழைப்பது கூடாது எனவும் இந்தியாவில் ஓதப்படும் தரூது சலவாத்து, சலாம் பைத்துகளை தவறானவை எனவும் வாதிடுகிறார். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் கேட்டு கைப் பெருவிரல்களை கண்களில் முத்திக் கொள்வதையும் அவர் விரும்பவில்லை. தேவ்பந்திகளை பின்துயர்ந்து தொழுவதையும் கூடும் என்பரே அவரின் நிலைப்பாடாக உள்ளது.
ஜைது குறித்த ஷரீஅத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை மார்க்க அறிஞர்கள், முஃப்திகள் தெளிவுபடுத்த வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
முஹம்மது நிஜாமுத்தின் காதிரி
தாருல் உலூம் அன்வாரே முஸ்தபா,
ஜாம்நகர், குஜராத்.
பதில்:
பிஸ்மிஹீ தஆலா வதகத்துஸ்
அல்ஜவாபு பிஅவ்னில் மலிகில் வஹ்ஹாப்.
செய்யிதீ அஃலா ஹழ்ரத் முஜத்திதே தீன் வ மில்லத் இமாம் அஹ்மத் ரஜா காதிரி பாழிலே பரேலவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் எழுதுகிறார்கள்:
தேவ்பந்திகள் பெருமானரை இழித்துரைத்திருப்பது தெரிந்தும் தேவ்பந்திகளைப் பின்துயர்ந்து தொழுபவரை முஸ்லிமாகக் கருத முடியாது. அவர் தேவ்பந்திகளைப் பின்தொடர்ந்து தொழுவதே அவர் தேவ்பந்திகளை முஸ்லிம்கள் எனக் கருதுகிறார் என்பதற்கு தெளிவான ஆதாரமாக உள்ளது. பெருமானரை அவமதித்தவரை முஸ்லிமாக கருதுவது குஃப்ராகும்.
–ஃபதாவா ரிழ்விய்யா பாகம் 6 – பக்கம் 77.
மேற்கண்ட அஃலா ஹழ்ரத் அவர்களின் பத்வாவே ஜைதுடைய விசயத்தில் ஷரீஅத்தின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. ஆகவே ஜைது என்பவர் தேவ்பந்திக் கும்பலைச் சார்ந்தவராகவே ஆவார்.
தேவ்பந்திகளின் வார்த்தைகளை குஃபர் என சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுவது ஜைதுடைய நிஃபாக் எனும் நயவஞ்சக நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நிஃபாக்தனம் ஒருபோதும் நன்மை பயப்பதல்ல. அவர்களைத் துயர்ந்து தொழுவது கொண்டு அவர்களுடன் நட்புறவாடிக் கொண்டு அவர்களின் வார்த்தைகளை குஃப்ர் எனவும் பேசுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தேவ்பந்திகளின் வார்த்தைகளை குஃப்ர் எனக் கருதியும் அதைச் சொல்பவர்களை காபிர் எனக் கருதாமல் முஸ்லிம்கள் எனக் கருதி அவர்களின் பின்னால் தொழுவது அதாவது அவர்கள் இமாமத் செய்தால் கூடும் என நினைப்பது மாபெரும் வழிகேடாகும்.
ஆகவே ஜைதும் தேவ்பந்தீ கும்பலைச் சார்ந்தவரே. தேவ்பந்திகளை புறக்கணிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஜைதையும் புறக்கணிக்க வேண்டியது கட்டாயமாகும்.