அஷ்ஷெய்க் அஷ்ஷாஹ் அப்துல் அஜீஸ் ஷகர்பாரி ஸூபி காதிரி
By Zainul Abdeen
அஷ்ஷைகு அப்துல் அஜீஸ் ஷகர்பாரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்
(கி.பி.1493-1567)
ஷெய்கு அவர்கள் சிஷ்தியா தரீக்காவின் புகழ்பெற்ற சூஃபி ஆகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய குடும்பம் சூபிகள் நிறைந்த குடும்பமாக காணப்பட்டிருக்கிறது. இவர்களுடைய கவ்வாலி மெஹ்ஃபில்களால் இவர்கள் அந்த காலத்தில் வெகுவாக பிரபலமடைந்திருக்கிறார்கள்.
முகலாய ஆரம்ப மன்னர்கள் பாபர் , ஹுமாயூன் , அக்பர் ஆகியோர் காலத்தில் ஷெய்கு அப்துல் அஸீஸ் அவர்கள் வாழ்ந்தார்கள்.
இந்தியாவில் லோடி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் (1451- 1526) பிரபலம் பெற்று விளங்கிய ஸூபியும் சிஷ்திய்யா நிஸாமிய்யா தரீக்காவின் ஷெய்குமான ஹழ்ரத் ஹஸன் பின் தாஹிர் ஜான்பூரி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) என்பவர்களுக்கு அவர்களுடைய இறுதி காலப்பகுதியில் இளைய மகனாக அப்துல் அஸீஸ் அவர்கள் கி.பி.1493 (ஹிஜ்ரி 898) இல் ஜான்பூரில் பிறந்தார்கள். ஷெய்கு முஹம்மத் (சிஷ்தி) ஹழ்ரத் அப்துல் அஸீஸின் மூத்த சகோதரர் ஆவார்கள்.
ஷெய்கு அப்துல் அஸீஸ் அவர்களுடைய தந்தையார் ஷெய்கு ஹஸன் இப்னு தாஹிர் அவர்கள் மூல்தானிலிருந்து பீஹார் – ஜான்பூர் வந்தவர்கள்.
அவர்கள் சிஷ்திய்யா தரீக்காவுடைய கிலாபத்தினை ஷெய்ஹ் ராஜி செய்யித் நூர் சிஷ்தி அவர்களிடமிருந்து பெற்றார்கள்.
கி.பி.1494 யின் பின்னர், ஷெய்கு ஹஸன் ஆக்ரா-டெல்லிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்கள். உடன் சிறுவர் அப்துல் அஸீஸ் அவர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஷெய்கு அவர்கள் பாலகராயிருக்கையில் தந்தையார் காலமாகி விட்டார்கள்.
தந்தையார் மரணிக்க முன்னர் தம்முடைய கிலாபத்துக்கான இஜாஸாவினை தமது மகனான அப்துல் அஸீஸுக்கு கொடுக்கும்படி ஏற்பாட்டைச் செய்து தமது சக கலீபாவான ஹழ்ரத் மியான் காஜி கான் அவர்களிடம் அமானிதமாக ஒப்படைத்து விட்டு 1503ல் காலமானார்கள்.
இளவல் அப்துல் அஸீஸ் அவர்கள் உள்ரங்க வெளிரங்க கல்விகளை ஹழ்ரத் செய்யித் புஹாரி இப்ன் ஹழ்ரத் அப்துல் வஹ்ஹாப் புகாரி என்பவர்களிடம் கற்றுத் தேர்ந்தார்கள். அவர்களிடமிருந்து சுஹ்ரவர்திய்யா தரீக்காவின் கிலாபத்துக்கான இஜாஸாவையும் பெற்றார்கள்.
ஒரு நாள் அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் ஷகர்பாரி அவர்களுக்கு ஹழ்ரத் ஷெய்ஹ் காழி கான் ஸபராபாதி அவர்களிடமிருந்து அவர்களுடைய மகனார் ஷெய்ஹ் அப்துல்லாஹ் மூலம் தம்மிடம் உமக்கு வழங்கத்தக்க அமானிதம் ஒன்றுள்ளது என ஞாபகமூட்டி செய்தி வந்தது.
எனவே ஷாஹ் அப்துல் அஜீஸ் ஷகர்பார் டெல்லியிலிருந்து ஜான்பூர்- ஸபராபாதில் ஷெய்ஹ் அவர்களுடைய இடத்திற்குச் சென்று தந்தையார் கொடுத்து வைத்திருந்த இஜாஸாவினையும் பைழ்களையும் பெற்றபோது, அவர்களுடைய நிலைமைகள் மாறிவிட்டன. அவர்களுடைய உடமைகளான ஆடைகள், பணம், குதிரைகள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கிடைத்த அனைத்தையும் தர்மம் கொடுத்துவிட்டு, தனிமையில் மூன்று ஆண்டுகள் ரியாழாவில் கழித்தார்கள். அதன் பின்னர் தக்மீல் மற்றும் இர்ஷாத்தின் மகாமினை அடைந்து தெளிந்தார்கள்.
அதன்பிறகு அவர்கள் மீண்டும் டெல்லிக்கு வந்து ஆன்மீகப் பணியை தொடர்ந்தார்கள்.
இந்த சந்தர்பத்தில் ஹழ்ரத் இப்றாஹிம் இரஜீ அவர்களிடமிருந்து இல்முத் தஸவ்வுபின் அகமிய அறிவுகளையும் பெற்று காதிரிய்யா ஸில்ஸிலாவுக்கான இஜாஸாவினையும் பெற்றார்கள்.
றிஸாலா ஏ ஐனிய்யா ஷெய்ஹ் ஸகர்பாரி அவர்களுடைய நூலாகும். அப்துல் காதர் பதாயூனி இவர்களுடைய சீடர்களுள் ஒருவராவர்.
அவர்களின் மரணத்தருவாயில்,
فَسُبْحٰنَ الَّذِىْ بِيَدِهٖ مَلَـكُوْتُ كُلِّ شَىْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ
(ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள். (ஸூறா யாஸீன் -83)என ஓதிக் கொண்டிருந்தவர்களாக வபாத்தானார்கள்.
இவர்களுடைய ஸியாரம் டெல்லி- மெஹண்டியன் கப்ருஸ்தானத்தில் உள்ளது.
ஹழ்ரத் அப்துல் அஸீஸ் ஷகர்பாரி அவர்களுடைய மக்பராவை நக்ஷபந்திய்யா தரீக்காவின் புகழ்பெற்ற ஷெய்கான ஹழ்ரத் ஹாஜா பாக்கி பில்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், அடிக்கடி சென்று ஸியாரத் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.
அதேபோன்று தம்முடைய கவ்வாலி மெஹ்பில்களால் சிஷ்திய்யா தரீக்காவினரால் கொண்டாடப்படும் பிரபலமான ஸூபியாகவும் ஹழ்ரத் அப்துல் அஸீஸ் அவர்கள் இருந்துள்ளார்கள்.
ஹைதரபாத் நகரிலிருந்து சுமார் 8கி.மீ. தொலைவிலுள்ள செகந்திராபாத் எனும் ஊரில் “கான்காஹ் ஏ றவ்ழதுல் அஸிபா ஷாஹ் வலியுல்லாஹ்” என்ற கான்காஹ் அமைந்துள்ளது.
காதிரிய்யதுல் அலிய்யா சில்சிலாவின் 37வது குருமகான் அஸ்செய்யித் அப்துல் காதிர் ஸூபி முஹத்தித் செகந்தராபாதி (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) இங்குதான் அடங்கப்பட்டுள்ளார்கள்.
முகவரி
Kanqahe Rauzatul Azifa Shah Waliyullah,
5-3-292, M.G.Road,
Dargah Soofi Sahab,
Secunderabad, Telangana.
Location :- Tank Bund Road, Khanqah-E-Rauzatul Asfia Shah Waliullahi, Asifiya Qabrastan, Secunderabad, Hyderabad District, Telangana, India.
Source: facebook.