Tableeg Jamath in the Light of Hadeed-நபி மொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்

Tableeg Jamath in the Light of Hadeed-நபி மொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்

By Sufi Manzil 1 Comment October 14, 2010

Print Friendly, PDF & Email

நபி மொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்

மூலம்: அல்லாமா அஷ்ஷெய்கு அர்ஷத்துல் காதிரி ரலியல்லாஹு அன்ஹு

தமிழில்: மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஸெய்யிது வஜீஹுன்னகீ சகாப் லதீபி ஷத்தாரி அவர்கள்.

1.இதுவரை வந்த நபிமொழியின் ஒளியில்

2. நபிமொழி ஒளியில் சில அடையாளங்கள்

3. உங்கள் சிந்தனைக்கு ஒரு சில கேள்விகள்

4. அறிவுணர்த்தும் அருள் மருந்து

5. மனசாட்சியின் இறுதித் தீர்ப்பு

6.இறுதியாக ஒரு வார்த்தை

 

இப்பூ மண்டலத்தில் மறைந்துள்ள ஞானங்களின் கருவூலப் பொக்கிஷம் அண்ணல் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்வில் தமக்குப் பின் மார்க்கத்தின் பெயரால் உதயமாகப்போகும் குழப்பங்கள் அனைத்தையம் ஒவ்வொன்றாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது தோழர் பெருமக்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் விழிப்புணர்ச்சி பெறும்பொருட்டு எடுத்தியம்பிச் சென்றுள்ளனர். அவற்றில், 'நஜ்த்' என்னும் பிரதேசப் பகுதியிலிருந்து உதயமான 'வஹ்ஹாபியக் குழப்பம்' பற்றிய ஹதீஸிலிருந்து துவங்கி வரிசை கிரமமப்படி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஹதீஸ் நிர் ஒன்று:

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……

'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)

மேற்கண்ட ஹதீஸில் வரும் வாக்கியமான 'கர்னுஷ் ஷைத்தான்' என்பதற்கு பழக்கத்தில் 'ஷைத்தானின் கொம்பு' என்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தப்லீக் ஜமாஅத்தினரால் எழுதப்பட்டுள்ள 'மிஸ்பாஹுல் லுஹாத்' என்னம் அரபி மொழி அகராதி பற்றிய நூலில், 'கர்னுஷ; ஷைத்தான்' என்பதற்கு 'ஷைத்தானின் அபிப்பிராயத்திற்கு கட்டுப்பட்டவன்' என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் இதன்மூலம் நாம் விளங்கிக்கொள்வது யாதெனில், 'நஜ்து தேசம்' குழப்பங்களின் உதயஸ்தானம் என்பதாம். காரணம், நபிகளாரின் நல்லாசியாகிய 'துஆ' அத்தேசத்திற்குக் கிடைக்காததே. அதுவே அதற்குரிய சான்றாகும். அங்கு தீய செயல்களும், துன்பங்களும்தான் தலை தூக்கும். அங்கிருந்து ஓர் நல்ல செய்தியை எதிர்பார்ப்பதானது இறைக்கட்டளையாகிய விதியுடன் மோதுவதற்கு ஒப்பான ஒன்றாகும்.

அப்பிரதேசத்திலிருந்து ஷைத்தானின் அபிப்பிராயத்திற்குக் கட்டுப்பட்ட எவனாவது ஒருவன் நிச்சயம் வெளிப்பட்டே தீருவான் என்பதோடன்றி, எவ்வாறு அதிகாலையில் உதயமாகம் சூரியனின் முதல் கதிரை 'கர்னுஷ; ஷம்ஸு' என்று அரபியில் சொல்லப்படுகிறதோ, அவ்வாறே 'கர்னுஷ் ஷைத்தான்' என்பதற்கு பிதனாவாகிய குழப்பம் நஜ்து தேசத்திலிருந்து உதயமாகி உலக முழுவதையும் பரவிப்போய் விடும் என்பதேயாகும்.

புரிய வேண்டிய பொருள்:

பூகோள அமைப்பில் பூமியின் வரைபடத்தை உங்கள் முன்னால் வைத்து பார்ப்பீர்களேயானால் மதீனா மாநகருக்கு நேர் கிழக்கே நஜ்து பிரதேசம் உள்ளதைக் காணலாம். இதில் அண்ணல் நபி எந்த அரபிச் சொல்லைக் (கர்ன்) கொண்டு நஜ்து தேசத்தை சுட்டிக் காட்டினார்களோ, அந்த (கர்ன், உதயம்) வார்த்தையே ஒரு உண்மை விசுவாசியான முஃமின் விழித்தெழப் போதுமான ஒன்றாகும். இந்த 'கர்ன்' என்ற வார்த்தையின் மூலமாக நபிகளாhட, நஜ்து தேசத்திலிருந்து உதயமாகும் 'குழப்பம்' மக்களை சின்னாபின்னமாகச் சிதறடித்துவிடும் என்று அறிவுறுத்துகின்றனர். இனி அதுபற்றிய ஹதீஸ்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள்.

ஹதீஸ் நிர் இரண்டு:

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

அண்ணல் நபிகளார் அன்னை ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லக் கதவருகே நின்று  கொண்டு அங்கிருந்தவாறே தமது புனிதமிகு கரத்தை 'கிழக்குத் திசை பக்கம்' சுட்டிக்காட்டி பித்னா(குழப்பங்க)ளின் இடம் இதுதான். இங்கிருந்துதான் iஷத்தானின் கொம்பு வெளியாகும் என்று கூறினர்.

(அறிவிப்பாளர் கூறுகிறார், நபிகளார் இவ்வார்த்தையை இரு முறையோ அல்லது மும்முறையோ கூறினர் என்று அறிவிக்கிறார்)

(ஆதாரம்: முஸ்லிம், பாகம் 2, பக்கம் 394)

ஹதீஸ் நிர் மூன்று:

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

அண்ணல் நபிகளார் கிழக்குத் திசை நோக்கி திரும்பி நின்று கொண்டு, குழப்பம் இங்கிருந்து உண்டாகும்…. குழப்பம் இங்கிருந்து உண்டாகும்… குழப்பம் இங்கிருந்து உண்டாகும். இங்கிருந்துதான் iஷத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினர்.

(ஆதாரம்: முஸ்லிம், பாகம் 2 பக்கம் 393)

ஹதீஸ் நிர் நான்கு:

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

அண்ணல் நபிகளார் ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தை விட்டும் வெளியே வந்து கிழக்குத் திசைநோக்கி தமது கரத்தை சுட்டிக்காட்டி, குப்ரின் மையம் இதுதான். இங்கிருந்துதான்  ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினர்.

(ஆதாரம்: முஸ்லிம் பாகம் 2, பக்கம் 94)

கொஞ்சம் சிந்தியுங்கள்! மேற்கண்ட மூன்று ஹதீஸ்களும் கிழக்குத் திசை பற்றியே சுட்டிக் காட்டுகின்றன. அந்த கிழக்குத் திசை என்னும் வார்த்தையானது நஜ்து தேசத்தைத் தான் குறிப்புக் காட்டுகின்றது என்பதை முதல் ஹதீஸில் நஜ்து வாசி நபிகளாரிடம் தமது நாட்டுக்கு அபிவிருத்தி வேண்டி கேட்ட வாக்கியம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஆகையால் நபிகளார் குறிப்பிட்ட குழப்பமும், iஷத்தானின் கொம்பு உதயமாதலம் நஜ்து தேசத்திலிருந்துதான் என்பதை மிகத் தெளிவாக நன்கு தெரிந்து கொள்ளலாம்.

ஹதீஸ் நிர் ஐந்து:

அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது 'அத்துரருஸ்ஸனிய்யா' என்னும் நூலில் நபி மொழி ஒன்றைக் குறிக்கின்றனர். அதாவது….

சிலர் கிழக்குத் திசையிலிருந்து உதயமாவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழியை விட்டும் கீழே இறங்காது. எவ்வாறு அம்பானது வில்லை விட்டும் வெளியேறி விடுமே, அவ்வாறு அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியேறிவிடுவார்கள். இன்னும் வில்லை விட்டுப் புறப்பட்ட அம்பு எவ்வாறு திரும்ப வில்லுக்கு வந்து சேராதோ, அவ்வாறு இவர்கள் தீனின் (மார்க்கத்தின்) பக்கம் திரும்ப மாட்டார்கள். அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மொட்டையடிப்பதாகும்.

(ஆதாரம்: அத்துரருஸ் ஸனிய்யா, பக்கம் 49, மிஸ்ர் பிரிண்ட்)

ஹதீஸ் நிர் ஆறு:

அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது 'அத்துரருஸ்ஸனிய்யா' என்னும் நூலில் நபி மொழி ஒன்றைக் குறிக்கின்றனர். அதாவது….

சிலபேர் கிழக்குத் திசையிலிருந்து வெளிவருவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் குர்ஆன் அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. அவர்களின் ஒரு ஜமாஅத் (கூட்டம்) முடிந்து விட்டால் பின்னர் அங்கிருந்து உடனே மறு ஜமாஅத் (கூட்டம்) உதயமாகும். இவர்களின் கடைசிக் கூட்டம் தஜ்ஜாலுடன் சேர்ந்து கொள்ளும்.

(ஆதாரம்: அத்துரருஸ் ஸனிய்யா, பக்கம் 50, மிஸ்ர் பிரிண்ட்)

ஒரு புதிர்!

அண்ணல் நபிகளார் அறிவித்த குழப்பமும், ஷைத்தானின் அபிப்பிராயத்திற்கு கட்டுப்படும் நிலை வாய்ந்த அக்கூட்டம் நஜ்து தேசத்தின் நாதியற்றுப்போன பனு| ஹனீபாவின் கோத்திரத்திலிருந்துதான் (வம்சம்) உதயமாயிற்று. அந்தப் பூமியில்தான் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளும், குழப்பங்களும் உருவெடுத்தன. இதைப் பற்றி மௌலவி மஸ்வூத் ஆலிம் நத்வி என்பவர் தமது 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்' என்னும் நூலின் ஓரக்குறிப்பில் கூறுகிறார்,

நஜ்து தேசத்தின் புகழ் வாய்ந்த ஒரு ஸ்தலம் 'அல்ஹாரிஸ்' என்னும் இடமாகும். அதன் தலைநகரம் 'ரியாத்' ஆகும். இன்று ரியாத் தான் சவூதி அரேபியாவின் தலைநகராக இருக்கிறது. அல் ஹாரிஸ் என்னும் அவ்விடத்தை 'யமாமா மலை' என்றும் அழைக்கின்றனர். உண்மையில் இது ஒரு மலையடிவாரத்தின் பெயராகும். இதன் சுற்றுப்புற நலத்தை ஹனீபா யமாமா என்றழைக்கின்றனர். iஷகுல் இஸ்லாம்(முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்) இங்கு வைத்து 'உயைனா' என்னும்மிடத்தில்தான் பிறந்தார். 'தர்அய்னா' என்னும் இடத்தில்தான் தமது வஹ்ஹாபிய இயக்கத்தை துவங்'கினார். இவ்விரு இடங்களும் இங்குள்ள மலையடிவாரத்தில்தான் உள்ளன.

(ஆதாரம்: ஹாஷியா இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்து, பக்கம் 16)

மனதை ரணமாக்கி விட்ட வரலாற்றுச் சோகக்கரைபடிந்திட்ட ஏடாக துவக்கத்திலிருந்தே பனூ ஹனீபாவின் வம்சம் தூக்கி எறியப்பட்டதாவும், நபிகளாரின் நல்லாசியாகிய துஆவுக்கு அருகதையற்றதாகவும் இருந்து வந்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வம்சத்தை பற்றி ஹதீஸில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹதீஸ் நிர் ஏழு:

அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது 'அத்துரருஸ்ஸனிய்யா' என்னும் நூலில் நபி மொழி ஒன்றைக் குறிக்கின்றனர். அதாவது….

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் நபித்துவம் அறிவிக்கப்பட்ட துவக்க காலத்தில் ஹஜ்ஜுடைய காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் சென்று புனித இஸ்லாத்தின் மேன்மை பற்றி எடுத்துக் கூறி அழைத்து வந்தேன். அப்போதெல்லாம் 'பனூ ஹனீபாவின் வம்சத்தாரிடமிருந்து வந்த விதண்டாவாதங்களையும், வெறுப்பு சொற்களையும் போன்று வேறு யாருமே என்னிடம் வாதம் செய்ததில்லை என கூறுகின்றனர்.
 

(ஆதாரம்: அர்துர்ரருஸ் னிய்யா பக்கம் 52)

குறிப்பு: மௌலானா மஸ்வூத் ஆலிம் அவர்களின் நஜ்து தேசம் பற்றிய விளக்கவுரையில் ஹனீபாவின் மறுபெயர் 'யமாமா' என்பதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.

ஹதீஸ் நிர் எட்டு:

ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றர்,

மூன்று வம்சத்தவர் எனது அழைப்பை இறைவனின் அழைப்பு வரும்வரை விரும்பவில்லை. அவர்கள் 'சகீப்' கோத்திரத்தார், 'பனூ ஹனீபா' கோத்திரத்தார், 'பனூ உமையா கோத்திரத்தார்' என்று அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றனர்.

(ஆதாரம்: திர்மிதீ)

துவக்கத்திலிருந்து எட்டாவது வரை உள்ள ஹதீஸ்களில் நஜ்துப் பிரதேசத்திலிருந்து உதயமாகவிருக்கும் குழப்பங்களைப் பற்றி தெளிவுபடுத்திக் காட்ட பல கோணங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஆணித்தரமான ஹதீஸ்களது அறிவிப்புகள் நபிகள் பிரான் 'பனூ ஹனீபா' என்னும் கோத்திரத்தாரை விரும்பவில்லை என்பதற்குப் போதுமான ஆதாரங்களாய் அமைந்திருப்பதுடன், அவர்களின் நடைமுறைப் பற்றியும் அவர்களது தலைவர்கள் பற்றியும் இனி அடுத்தடுத்து வரும் ஹதீஸ்கள் வாயிலாகப் படித்துப் பாருங்கள்.

ஹதீஸ் நிர் ஒன்பது:

ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்றது, 'ஒரு முறை நாங்கள் நபிகளாரைச் சூழ அமர்ந்திருந்துதோம். நாயகமவர்கள் கனீமத் (போரில் கிட்டிய) பொருட்களை பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 'பனூ தமீம்' உடைய கோத்திரத்தைச் சேர்ந்த 'துல் குவைஸரா' என்பவன் 'முஹம்மதே! நீதத்துடன் பங்கீடு செய்யுங்கள்' என்று கூற, இது  கேட்ட நபிகளார்,……நீ செல்லும் அழிவுப் பாதை குறித்து நான் வருத்தப்படுகிறேன். நானே நீதியாக நடந்து கொள்ளாவிடில் நீதத்தை வேறு யார்தான் கடைபிடிப்பர்? நான் நீதமுள்ளோனாக நடந்திருக்காவிடில் நீ இந்நேரம் இக்கட்டில் சிக்கி கஷ்டத்திலிருப்பாய். இதைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெகுண்டெழுந்து, …… இறைவனின் திருத்தூதரே, அனுமதி தாருங்கள்! நான் அவனது தலையை சீவிக் கொன்று விடுகிறேன் என்று  கேட்க, அதற்கு நபிகளார், …….உமரே அவனை விட்டுவிடுங்கள். இவனைப் போன்று நோக்கங்கொண்ட இன்னும் பவர் இவனிடையே உள்ளனர். அவர்களது தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கண்டு நீங்கள் உஙகளது தொழுகை, நோன்பையெல்லாம் மிகமிக அற்பமாக எண்ணுவீர்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழியை விட்டும் கீழே இறங்காது. அநேக வகைப்பட்ட நல்ல அமல்கள் அவர்களிடையே காணப்படும். ஆனால் அவர்கள் வில்லிலிருந்து வெளியேறிச் செல்லும் அம்பைப் போன்று மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் என்று கூறினர்.

(ஆதாரம்: புகாரி, பாகம் 2, பக்கம் 1024)

ஹதீஸ் நிர் பத்து:

மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்படும் சம்பவத்தை மற்றோர் ஹதீஸில் இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது. அதாவது,……

ஒருவன் அண்ணல் நபிகளாரின் முன் வந்தான். அவனது கண்கள் குழி விழுந்திருந்தன. அகலமான நெற்றியும், தாடி நீண்டு அடர்த்தியாகவும் இருந்தது. கன்னங்கள் உறுதியாயிருந்தன. தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. அவன் நபிகளாரை நோக்கி ஓ முஹம்மதே! இறைவனது வாக்குக்கு அஞ்சிக் கொள்ளும் என்றான். இது கேட்ட நபிகளர், நானே  இறைவனது வாக்குக்கு அஞ்சாவிடில் வேறு யார்தான் அவன் வாக்கை நிறைவேற்றுவார். இறைவனே என்னை இப்புவியிலுள்ள அனைவரையும் விட அபிமானியாக்கியுள்ளான். நீ என்னை அபிமானியென நினைக்க வில்லையா? இதனிடையே நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து நபிகளாரிடம் அவனை வெட்டிவிட அனுமதி கேட்க, அவன் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் நபிகளார் தம் தோழர்களை நோக்கி,…. இவன் சந்ததியில் ஒரு கூட்டம் தோன்றும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களி; தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது. இலக்கை நோக்கிப் பாய்ந்து செல்லும் அம்பைப்போல் அவர்கள் தீனை(மார்க்கத்தை) விடடும் வெளியாகி விடுவார்கள். அவர்கள் முஸ்லிம்களை வெட்டுவார்கள். விக்கிரக தொழும்பர்களை விட்டுவிடுவார்கள் என்று கூறினர்.

ஹதீஸ் நிர் பதினொன்று:

மேற்கண்ட ஹதீஸில் உள்ள அதே சம்பவத்தை ஷரீக் இப்னு வஹ்ஹாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது நபிகளார் தம் தோழர்களை நோக்கி,….

இறுதி காலத்தில் ஒரு கூட்டம் வெளிப்படும். இவனும் அக்கூட்டத்தைச் சார்ந்தவனே. அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது. இலக்கை நோக்கிச் செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியாகி விடுவார்கள். அவர்களின் முக்கியமான அடையாளம் மொட்டையடிப்பதாகும். அவர்கள்; தொடர் கூட்டமாக கிளம்புவார்கள். அப்படியே அவர்களின் கடைசிக் கூட்டம் தஜ்ஜாலுடன் சென்று இணையும். நீங்கள் அவர்களை சந்தித்தால் உங்களை விட கீழ்த்தரமான நடத்தையுள்ளோராக அவர்கள் இருப்பார்கள் என்று கூறினர்.

(ஆதாரம்: மிஷ்காத் பக்கம் 309)

ஹதீஸ் நிர் பன்னிரெண்டு:

ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர்,

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எனது உம்மத்தில் பிரிவினையும், வேற்றுமையும் எழுதப்பட்ட ஒன்றாகும்.  அதன்படி ஒரு கூட்டம் வெளியாகும். அவர்களின் வெளித்தோற்றம் மற்றவர்களை கவரும். ஆற்றல் நிறைந்த அவர்களது பேச்சுக்கள் கேட்போருக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால் அவர்களின் நடத்தை கெட்டவைகளாகயிருக்கும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. வில்லை விட்டுப் பாய்ந்து செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை(மார்க்கத்தை) விட்டு வெளியேறிவிடுவார்கள். எவ்வாறு வில்லை விட்டுச்  சென்ற அம்பு வில்லுக்குத் திரும்பாதோ, அவ்வாறே தீனின் பால் திரும்புவது அவர்களுக்கு சாத்தியமாகாது. குணத்திலும், செய்கையிலும் மிக மோசமானவர்களாயிருப்பார்கள்.அவர்கள் ஜனங்களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் தீனுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. யார் அவர்களுடன் போர் புரிவார்களோ, அவர்கள் இறைவனுடன் மிக நெருங்கியவர்களாகயிருப்பார்கள் என்று நபிகளார் சொல்ல அதற்கு தோழர்கள்,….. நாயகமே! அவர்களின் முக்கிய அடையாளமென்ன? என்று வினவிட,…. அதற்கு நபிகளார் அவர்களின் அடையாளம் மொட்டையடிப்பதாகும் என்று நவின்றனர்.

(ஆதாரம்: மிஷ்காத், பக்கம் 308)

ஹதீஸ் நிர் பதிமூன்று:

இந்த ஹதீஸை ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர், இந்த ஹதீஸிலுள்ள ஓர் விசேசம் யாதெனில், இதனை அறிவிக்கும் ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! சொல்கிறேன். வானத்திலிருந்து பூமியைநோக்கி குதிப்பது எனக்கு சுலபமான ஒன்று. ஆனால் அண்ணல் நபியவர்கள் சொன்னதாக ஏதாவதொன்றை அவர்கள்பால் இட்டுக்கட்டுதல் அதைவிட எனக்குக் கடினமான ஒன்றாகும் எனக்கூறி முடித்தபின் கீழ்வரும் ஹதீஸை அறிவிக்கின்றனர்.

நபிகளார் நவின்றதை நான் செவியேற்றுள்ளேன், இறுதிகாலத்தில் சிறுவர்களும், அறிவற்றவர்களும் இணைந்த கூட்டமொன்று வெளியாகும். வெளித்தோற்றத்தில் நல்லதையே கூறுவார்கள். ஆனால் ஈமான் அவர்களின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. இலக்கை நோக்கிப் பாயும் அம்பைப் போல் அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியேறிவிடுவார்கள்.

(ஆதாரம்: புகாரி பாகம் 2, பக்கம் 1024)

ஹதீஸ் நிர் பதினான்கு:

ஹஜ்ரத் அபூநயீம் அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஹுல்யா என்னும் நூலில் இமாம் பாஹில் ரஹிமஹீல்லாஹ்வைக் கொண்டு கீழ்வரும் ஹதீஸை அறிவிக்கின்றனர்,

உன் உம்மத்தில் இறுதிகாலத்தில் புழுப் பூச்சிகளைப் போல் பிரிவுகள் உண்டாகும். உங்களில் எவர் அக்காலத்தை அடைவீரோ, அவர்கள் அவர்களை விட்டுத் தூர விலகியிருக்க துஆ கேட்டு இறைஞ்சுங்கள் என நபிகளார் நவின்றனர்.

(ஆதாரம்: ஹுல்யா)

மேற்கண்ட ஹதீஸுடன் கீழ்காணும் இந்த ஹதீஸையும் பார்த்துக் கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரஹிமஹீல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றனர்,

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களை நோக்கி, ஓ! ஜனங்களே! இப்படியும் ஒரு காலம் வரும். மக்கள் பள்ளிவாசல்களில் உலகப் பேச்சுக்களை பேசுவார்கள். அத்தகைய ஓர் காலம் வரும்போது அவர்கள் மத்தியிலே நீங்கள் அமராதீர்கள். அல்லாஹ் அவர்களை விரும்ப மாட்டான் என்று கூறினர்.

ஹதீஸ் நிர் பதினைந்து:

முஹத்திஸுல் கபீர் இமாம் அபூலைலா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு தமது இப்ரீஸ் என்னும் நூலில் அறிவிக்கின்றனர்,

மதீனாவில் அதிகமான இறையச்சமும், மார்க்கத்தின் பால் மிகத் தீவிரமான பேணுதலும் கொண்ட இளைஞன் ஒருவன் இருந்து வந்தான். ஒரு நாள் அவனைப் பற்றி நபிகளாரிடம் கூறினோம். அவன் யார் என்பது நபிகளாருக்குத் தெளிவாகவில்லை. பின்னர் அவனைப் பற்றிய அடையாளங்களும், தன்மைகளும் கூறப்பட்டும் நபிகளார் யூகிக்கவில்லை. பிரிதொரு நாள் எதிரில் அவன் வந்தபோது, எந்த நிமிஷம் நாங்கள் அவனைக் கண்டோமோ, உடனே நபிகளாரிடம், யாரஸூலல்லாஹ்! இவனைப் பற்றித்தான் அன்றொரு நாள் நாங்கள் சிலாகித்துச் சொன்னோம் என்று கூற…… அவனைப் பார்த்த நபிகளார்,…….iஷத்தானின் Nசுஷ;டைகளை அவன் முகத்தில் நான் பார்க்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அருகில் வந்த அவன் நபிகளாரை நோக்கி ஸலாம் சொல்லிட, அதற்கு நபிகளார் அவனைப் பார்த்து,…. தற்போது இங்கு என்னை விடச் சிறந்தவர் யாருமில்லையென உன் மனதில் நீ நினைக்கின்றாய் அல்லவா? என்று வினவ, அதற்கவன் ஆம், என்று பதிலளித்து விட்டு பள்ளிக்குள் சென்று விட்டான்.

அதன்பின் நபிகளார்  தம் தோழர்களை நோக்கி, உங்களில் அவனை வெட்டுபவர் யார்? என்று கேட்க,…. ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்' எழுந்து, நான் வெட்டுகிறேன் என்று கூறிவிட்டு, அவனை கொன்றுவிடும் நோக்கத்துடன் பள்ளிக்குள் சென்றபோது, அவன் தொழுது கொண்டிருப்பதைக் கண்டு வெட்டக் கூடாதென நபிகளார் நமக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்களே, என்றெண்ணியவர்களாக அவர்கள் திரும்பி வந்து விட்டனர். பின்னர் மீண்டும் நபிகளார் தம் தோழர்களை நோக்கி, உங்களை அவனை வெட்டுபவர் யார்? என்று கேட்க, ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து நாயகமே! நான் அவனை வெட்டுகிறேன் என்று கூறிவிட்டு, அவனை கொல்லும் நோக்கத்துடன் பள்ளிக்குள் சென்றபோது,… அவன் ஸஜ்தாவில் இருப்பதைக் கண்டு அவர்களும் திரும்பி வந்து விட, ….இறுதியாக ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனை நான் வெட்டுகிறேன் என்று கிளம்பியபோது,….. நபிகளார், அலியைப் பார்த்து, ….. அலியே! நீர் அவனை நிச்சயம் வெட்டிவிடுவீர். அவன் உமக்கு கிடைத்துவிட்டால்,…. என்று கூறினர். அலீயவர்கள் பள்ளிக்குள் சென்று பார்த்தபோது, அவன் அங்கிருந்து போய் விட்டிருந்தான். அவனைக் கொல்லாமல் திரும்பி வந்த அலீயவர்களைப் பார்த்து,….அலியே! நீர் அவனை கொன்'றிருந்தால் என் உம்மத்தில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை கொன்றொழிக்கப்பட்டிருக்கும். எனது உம்மத்தில் தோன்றவிருக்கும் குழப்பங்களின் துவக்கமும், இறுதியும் அவன்தான் என்று கூறினர்.

(ஆதாரம்: இப்ரீஸ், பக்கம் 277)

இதுவரை வந்த நபிமொழியின் ஒளியில்,…

இதுவரை உங்கள் முன் நான் உலகக் குழப்பங்களின் வித்தை உடைத்துத் தோலுரித்துக் காட்டும்படியான நபிகள் நாதரின் வாய்மொழியான பதினைந்து ஹதீஸ்களை எடுத்து வைத்திருக்கிறேன். அருள் கூர்ந்து அவற்றைத் திரும்ப ஒருமுறை கவனமாகப் படியுங்கள்.  அவையனைத்தும் நபிகளாருக்குப்பின் இவ்வையகத்தில் உதயமாகப் போகும் அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், குழப்பங்கள், வேடதாரிகளின் வேஷங்கள், மார்க்கத்தின்பெயரால் நடக்கப்போகும் சர்;ச்சைகள், சண்டைகள், கருத்து வேறுபாடுகள், பிளவுகள் அனைத்தும் நபிமொழியின் ஒளியில் தெளிவாக்கப்பட்டுள்ளன.

ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கே மறையும் சூரியன் ஒருவேளை கிழக்கில் மறைந்தாலும் மறைந்து விடலாம். ஆனால் நாயகத்தின் மணிவாக்கு ஒருக்காலும் பொய்க்காது. இறைவன் மீதாணையிட்டுச் சொல்கிறேன். இதுவரை விபரிக்கப்பட்டுவந்த நபிமொழிகளின் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டிருந்தால் தீர்ப்பு செய்யும் தராசை உங்கள் கரத்தில் ஏந்துங்கள். நீதியென்னும் ஒளியின் வெளிச்சத்தைக் கொண்டு உலகின் நான்கு புறங்களிலும் உங்களின் விசாலமான அறிவைச் செலுத்திப் பாருங்கள். இறுதி காலத்தில் வரும் எந்தக் கூட்டத்தைப் பற்றி நபிகளார் இத்துணை அடையாளங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திச் சொன்னார்கள்? அண்ணல் நபிகளார் சுட்டிக் காட்டிய அடையாளங்களைக் கொண்ட அக்கூட்டம் உலகில் இன்று எங்கே இருக்கிறது?

இறைவனின் திருவருளால் ஹதீஸ்களாகிய அறிவிப்பு அனைத்திலும் பல்வேறு வகையான அடையாளங்களும் ஒன்றுவிடாமல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அவ்வடையாளச் சின்னங்களை தாங்கியுள்ளோர் நபிமொழியின் ஒளி முன்னே சிக்குண்டிருக்கின்றனர். தீனை (மார்க்கத்தை)யும், ஈமானை(விசுவாசத்தை)யும், சுக்கல் நூறாக நொறுக்கி தமது கால்களுக்கு கீழே போட்டுப் புதைத்துக் கொண்டுள்ள அவர்களை நாம் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் பற்றிய அடையாளங்கள் அனைத்தையம அதியற்புதமாகக் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. நாயகத் திருமேனியின் நல்லாசியைத் தேடும் யாராயிருப்பினும் அவர் தனது சுயநலமொன்றை மட்டும் கருத்தில் கொண்டு இக்குழப்பங்களை எல்லாம் கண்மு; காணாது போன்று  செல்ல மாட்டாரென நான் திண்ணமாக நம்புகிறேன்.

நான் அறுதியிட்டு இறுதியாகச் சொல்கிறேன். மேற்கண்ட பதினைந்து ஹதீஸ்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு கோர்வையாக கோர்த்து ஒன்றுபடுத்தினால் சரித்திரச் சான்றுகளாலும், ஒன்று கண்முன்னே நடக்கும் காட்சிகளாலும் நஜ்து கூட்டமென வர்ணிக்கப்படும் 'வஹ்ஹாபிய இயக்கத்தின்' உருவமும், 'தப்லீக் ஜமாஅத்' என்று அழைக்கப்படுவோரின் உருவமும் அசாத்திய ஒற்றுமை வாய்ந்ததாயிருப்பதை நீங்கள் காணலாம்.

சிரமம் பாராது எனது எழுதுகோலுக்கும், அது வடிவமைக்கும் வார்த்தை கோலத்திலிருக்கும் உங்களின் பார்வையை அகற்றாமல் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். நான் ஹதீஸ்களது குவியல்களிலிருந்து ஒவ்வொரு அடையாளமாக எடுத்து வைத்துக் கொண்டே வருகிறேன். நீங்கள் அவற்றை வரிசையாக தொடுத்து சேகரித்துக் கொண்டே வாருங்கள். ஒரு சில அடையாளங்களை கோர்வை செய்யும்போதே தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம் அவ்வடையாளங்களுக்குரிய ஒன்றாக உங்கள் முன் காட்சி தரவில்லையெனில், என் எழுத்தின் மீது நீங்கள் வைத்;துள்ள உங்களது நம்பிக்கை எனும் பார்வையை அகற்றி விலகிக் கொள்ளுங்கள்.

நபிமொழி ஒளியில் சில அடையாளங்கள்:

முதலாம் ஹதீதிலிருந்து எட்டாவது ஹதீஸ்வரை குப்ரு (இறை நிராகரிப்பும், ஷைத்தானின் பித்னாவாகிய குழப்பத்தின் ஆட்சியும் மதீனாவின் கிழக்குத் திசையிலுள்ள நஜ்து தேசத்திலிருந்துதான் உதயமாகும். அங்கிருந்து நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்று சொல்லும் ஒரு கூட்டம் உருவாகும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. அக்கூட்டம் தீனி(மார்க்கத்தி)ன் பாலும், குர்ஆனின் பக்கமும் மக்களை அழைக்கும். ஆனால் அக்கூட்டத்திற்கு மார்க்கத்தைப் பற்றிய அறிவு அறவே இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இனி இப்போதுள்ள நடைமுறைகளை உற்று நோக்கினால் இத்தனை அடையாளங்களும் குறிப்பிடப்பட்ட அக்கூட்டம் என்பது 'தப்லீக் ஜமாஅத'தைத் தவிர வேறு எந்தக் கூட்டமாக இருக்க முடியும்? அதன் ஒரு முனை டெல்லியில் இருக்கிறதென்றால் அதன் மறுகோடி நஜ்து தேசத்தின் தலை நகரான 'ரியாத்'துடன் தொடர்பு கொண்டுள்ளது.

ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய ஹதீஸ்களில் 'துல்குவைஸரா' என்னும் முனாபிக்கை (நயவஞ்சகனை) பற்றி விபரிக்கபட்டுள்ளதோ, அவன் 'பனூ தமீம்' உடைய வம்சக் கிளையைச் சார்ந்தவன். இறுதிக் காலத்தில் தோன்றும் கூட்டத்தார்கள் அவனது சந்ததியினரே. இதைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.

அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது நூலில் …. அதியற்புதம் வாய்ந்த ஓர் ஒற்றுமை என்னவெனில், 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் வம்சமானது 'பனூ தமீமுடைய' வம்சத்தை சார்ந்த ஒன்று என்பது வெள்ளிடைமலை. ஆகையால், அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ துல்குவைஸரா தமீமி என்பவனது குடும்பத்தில்தான் பிறந்தான் என்பது ஏற்புடைய கருத்து மட்டுமின்றி, அறிவித்த நபிமொழியே அதற்குப் போதுமான சான்றாகும்.
 

(ஆதாரம்: அததுரருஸ் ஸனிய்யா, பக்கம் 51)

இதன்றி இந்த ஹதீஸ் காரிஜிய்யாக்கள் என்ற ஓர் பிரிவாரைப் பற்றி  சொல்லப்பட்ட ஒன்றா என்று பார்த்தால், இதைப் பற்றி 'அஷ;அத்துல் லம்ஆத்' என்னும் தமது நூலில் மௌலவி அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி' அவர்கள்….

அவர்க(காரிஜிய்யாக்க)ளில் பனூதமீமுடைய வம்சத்தைச் சார்ந்த ஒருவர் கூட இல்லை என்று கூறுகின்றனர்.

(ஆதாரம்: அஷ்அத்துல் லம்ஆத் பக்கம் 535)

எனவே ஹதீஸில் குறிப்புக் காட்டப்படும் கூட்டம் நஜ்திகளின் கூட்டமான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கூட்டம்தான் என்பது உண்மையிலும் மிகப்பட்டவர்த்தனமான உண்மையாகும்.

3. பனிரெண்டாம் ஹதீஸில் இனங்காட்டப்படும் அடையாளங்களில் ஒன்றான 'அவர்கள் ஜனங்'களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மார்க்கத்தில் ஒரு சிறிதளவு கூட தொடர்பு இருக்காது' என்னும் இவ்வடையாளத்தை தக்க ஆதாரத்தோடு தெரிந்து கொள்ள வேண்டுமாயின்…..தப்லீக் ஜமாஅத்தில் ஹல்கா, தர்ஸே குர்ஆன், மற்றும் அவர்கள் நடத்தும்' இஜ்திமா போன்றவற்றை சென்று பாருங்கள். ஜனங்களை தீனின்பாலும், குர்ஆனின் பக்கமும் தப்லீக் ஜமாஅத்தினர் அழைக்கும் சப்தம் அவர்களின்தொண்டையை வரண்டு போகச் செய்து விட்டன. அவர்களின் நாக்குகள் வரண்டு விட்டன. ஆனால் இதையே சற்று வேறு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் இவைகளனைத்தும் மார்க்கத்தில் குழப்பங்களையும், பிளவையும் தோற்றுவிப்பதேயாகும்.

4. பன்னிரெண்டு, பதிமூன்றாவது ஹதீஸ்களில் வரும் அடையாளக் குறிப்பில் அவர்கள் வாய்ப்பேச்சிலத்தான் வீரர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் அந்தரங்களம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாயிருக்கும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் வாய்ப்பேச்சில் எவ்வளவு நேசம் கொண்ட, மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களாய், பண்பாளர்களாய் காட்சித் தருகின்றனர். அந்தோ!…. தங்களின் மனத்துவேஷத்தால் எத்தனை அப்பாவி முஸ்லிம்களது நல்ல நல்ல அகீதாவாகிய கொள்கைகளையெல்லாம் குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். தௌஹீத் என்ற  பெயரில் போர்வையை போர்த்திக் கொண்டு அண்ணல் நபி நாதரை ஏசுவதும், தூஷிப்பதுமே இக்கூட்டத்தினரின் கூட்டு முறையாகிவிட்டது.

5. பத்தாம் ஹதீஸில் இக்கூட்டத்தாரின் அடையாளங்களில் ஒன்றான…..'இவர்கள் முஸ்லிம்களை மட்டுமே கொன்றொழிப்பார்கள். விக்கிரஹத் தொழும்பர் பக்கம் ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள்' என்னும் இவ்வடையாளத்திற்கு ஆதாரம் வேண்டுமாயின், இந் நஜ்துக் கும்பலைப் பற்றி 'மௌலானா முஹம்மத் அலி ஜௌஹரின்' வார்த்தையைப் பாருங்கள்.

நஜ்தும், நஜ்து தேச விஷமிகளும் முஸ்லிம்களை மட்டுமே கொன்றொழித்து தங்களின் கரங்களை இரத்தங் கொண்டு கழுவியுள்ளனர். தற்போது அத்துவேஷதாரிகள் யமன் நாட்டு உண்மை முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க தயாராகிக் கொண்டுள்ளனர். ஹரம் என்றழைக்கப்படும் எல்லைகளில் நஜ்துக்காரர்கள் பிரிட்டானிய ஆங்கிலேய அரசுடன், ஆங்கிலேய அரசுக்குட்பட்ட பிரிட்டானிய எல்லைக்குள் நுழைய மாட்டோமென்று ஒப்பந்தம் செய்துள்ளனர்.

(ஆதாரம்: முகாலாத்தே முஹம்மத் அலி பக்கம் 37)

இதன்மூலம் தப்லீகு ஜமாஅத்தினர்களுக்கும், நஜ்துக் கூட்டத்தாருக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்;. நஜ்துவாசிகள் முஸ்லிம்களை காபிர்கள், முஷ;ரிக்குகளென்று கூறி அவர்களைக் கொன்றொழித்தனர். தப்லீகு; ஜமாஅத்தினர்கள் முஸ்லிம்களை முஷ;ரிக் காபிரென்று வாய்திறந்து சொல்லாமலேயே அவர்'களுக்கு கலிமா சொல்லிக் கொமுக்கின்றனர். இவ்'விரு கூட்டத்தினரின் மனக்கருத்தும் ஒரே மாதிரியாக ஒன்றுபோல் ஒத்திருப்பதைப் பாருங்கள்.

6. ஐந்து, பதினொன்று, பனிரெண்டு ஆகிய ஹதீஸ்களில் இவர்களது முக்கியமான அடையாளங்களில் ஒன்று: மொட்டையடிப்பதை முக்கிய பணியாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதுவே அவர்களின் கொள்கை குறிக்கோளாகவும் மாறியுள்ளதென்பது ஆதாரத்தை புகழ் வாய்ந்த அரபி வரலாற்று நூலான 'அல்புதுஹாத்துல் இஸ்லாமிய்யா' என்னும் நூல் கூறுவதைப் பாருங்கள்:

அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மொட்டை அடித்தல் என்னும் நபிகளாரது வாக்கு நஜ்து தேசத்திற்கே முற்றிலும் பொருந்தும். ஏனெனில் அவர்கள் தம்பை; பின்பற்றுவோரை மொட்டையடிக்கும்படி கூறுகின்றனர். நபிகளாரின் இவ்வடையாளக் குறிப்பு காரிஜிய்யாக்களிடமோ, வேறு எந்த கீழ்மட்டத்தரிடமும் காணப்படவில்லை. இப்பழக்கம் வஹ்ஹாபிய நஜ்திகளிடம் மட்டுமே குறிக்கோளாக காணப்படுகிறது.

(ஆதாரம்: அல்புதுஹாதுல் இஸ்லாமிய்யா, பாகம் 2, பக்கம் 268)

ஒரு அதிசயப் புள்ளி விபரம்: 'தஹ்லீக்' என்னும் அரபிச் சொல்லுக்கு சாதாரணமாக நாம் 'மொட்டையடித்தல்' என்றுதான் அர்த்தம் சொல்வோம். ஆனால் தப்லீக் ஜமாஅத்தினர்களான தேவ்பந்த்pகளின் நம்பிக்கைக்குரிய அரபி அகராதி நூலான 'மிஸ்பாஹுல் லுகாத்'தின் 48-வது பக்கத்தில் தஹ்லீக் என்பதற்கு 'சுற்'றி வருதல்', வட்டமாக அமருதல்' என்று அர்த்தம் கொ:டுக்கப்பட்டுள்ளது. சுய சிந்தனை கொண்டு சிறிது சிந்தித்துப் பார்ப்பீர்களேயானால் இவ்விரு அர்த்தங்களும் தப்லீக் ஜமாஅத்திற்கு கொஞ்சங்கூட பிசகாமல் பொருந்தி வருவதை புரிந்து கொள்வீர்கள். ஒரு அர்த்தமானது தெருதெருவாய் சுற்றி வந்து அழைப்பதைக் குறித்தால், இன்னோர் அர்த்தம் அவர்கள் வட்டமாய் அமர்ந்து தஃலீம் செய்வதையம், இஜ்திமா நடத்துவதையும் அம்பலப்படுத்துவதை அறியலாம்.

7. ஒன்பதாவது ஹதீஸில் அவர்களின் மற்றுமோர் அடையாளமாகிய, அவர்கள் போலித்தனமாகவும் மற்றவர் காண்பதற்காகவும் விழுந்து விழுந்து தொழுவார்கள் என்பதோடு மற்றவர்கள்  அவர்களது தொழுகை போன்ற வணக்கங்களைக் கண்டு தங்களின் வணக்கத்தை மிக அற்பமாக நினைப்பார்கள் என்பதில் தப்லீக்வாதிகளின் தொழுகை போன்ற வணக்கத்தைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அவர்களில் இவ்வடையாளம் அத்துனை உலகப்பிரசித்தம் பெற்ற ஒன்றாகும்.

உதாரணமாக நாற்பது ஐம்பது வருடங்களாகத் தொழக் கூடிய ஒருவரைப் பாருங்கள். அவரது நெற்றியில் ஸஜ்தா செய்த அடையாளத்தையே பார்க்க முடியாது. ஆனால் தப்லீக் ஜமாஅத்தில் இணைந்து தொழத் துவங்கி ஒரு கறுப்பு வில்லையே ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காரணம் என்ன தெரியுமா? உண்மையில் இவர்கள் ஸஜ்தா செய்யவில்லை. ஸஜ்தாவின் மூலம் தங்களது நெற்றியில் இவர்கள் சூடு போட்டுக் கொள்கின்றனர். இதன்மூலம் இஸ்லாமியர்களிடையே தம்மை மிகப்பெரும் வணக்கஸ்தர் என்பதாக காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
 

8. ஒன்பது, பத்து, பதினைந்து ஆகிய ஹதீஸ்களில் அக்கூட்டத்தினரின் அடையாளங்களில் மற்றுமோர் அடையாளமாக, அவர்கள் தமது தொழுகை போன்ற வணக்கத்தால் தம்மைத்  தவிரவுள்ள மற்ற அனைவரையும் மிக இழிவாகக் கருதுவார்கள். தம்மிலம் பெரியோர்களான தகைசார்ந்த நன்மக்களை கூட ஆணவத்தோடு பழி சுமத்தி தூற்றுவார்கள். நபிமார்களையும், நாதாக்களானவலிமார்களையும் கூட குறைகூறுதல் தப்லீக் வாதிகளின் அன்றாட அலுவல்களின் ஒன்றாக இன்று ஆகிப்போய் விட்டது. நான் சொல்லும் இவ்வடையாளத்திற்கு ஆதாரம் தேவையெனில் தப்லீக் ஜமாஅத்தின் மிகத் தீவிரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான மௌல்வி அப்துற்றஹீம் தேவ்பந்தியின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள்:

நான் மௌலானா முஹம்மத் யூசுப் ஸாஹிப் அவர்களிடம் ஒவ்வொரு வெள்ளிதோறும் தவறாமல் சென்று வருவது வழக்கம். அப்போது ஜமாஅத்திலுள்ள அடிப்படைக் கூடத்தெரியாத பேச்சாளர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தேன். அவர்கள் மேன்மைக்குளரிய உலமாக்களையும், மத்ரஸாக்களையும் மிக அற்பமாக எண்ணி இளக்காரம் செய்கின்றனர் என்பதை நானே பலமுறை செவியேற்றிருக்கிறேன். மிக விரைவில் அவர்களை நாம் திருத்த வேண்டும். உலமாக்களெல்லாம் மிகுந்த வருத்தத்துடன் முறையிடுகின்றனர் என்று சொன்னேன்.

(ஆதாரம்: உஸூலே தஃவத் தப்லீக் பக்கம் 43)

பிறிதோரிடத்தில் அவனே மனம் புண்படும்படியான செய்தியைக் கூறி பலத்த கண்டனம் செய்வதைப் பாருங்கள்.

மிகப்பெரும் ஆச்சரியமான விஷயம் யாதெனில், யார் தப்லீக் ஜமாஅத்தை எவ்வளவு நெருங்கி வந்து விடுகின்றானோ, அவன் அவ்வளவு தூரம் உலமாக்களை விட்டும் பிரிந்து விலகிச் சென்று விடுகிறான். ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? அதிலம் இரண்டு, மூன்று சில்லா சென்று வந்து விட்டால் அவனைப் பற்றிச் சொல்லத் தேவையேயில்லை. பலபடிகள் மற்றவர்களை விட தான் உயர்ந்து விட்டதாகக் கருதத் துவங்கி விடுகிறான். பிறகென்ன? ஆலிம்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதுமில்லை. மதிப்பதுமில்லை.

(ஆதாரம்: உஸூலே தஃவத் தப்லீக், பக்கம் 50)

தப்லீக் ஜமாத்தினர் நபிமார்களை குறைகூறும் வழக்கத்தை, கிளர்ச்சியை நெருப்பிட்டு வளர்க்கும் அவர்களின் மிகத் தீவிரமான முயற்சியை காண வேண்டுமாயின் அவ்வியக்கத்தை உருவாக்கிய மௌலவி இல்யாஸ் ஸாஹிபவர்களின் கடிதத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள். தப்லீக் இயக்கச் சேவை புரிவோரைப் பற்றி அவர் இவ்வாறு எழுதுகிறார்,….

இறைவன் ஒரு வேலையை வாங்க நாடாவிட்டால் நபிமார்கள் போன்றோர் கூட எத்துணை முயன்றாலும் ஒரு சிறு பொருளைக் கூட அவர்களால் அசைக்கக் கூட முடியாது. இனி இறைவன் அதே வேலையை வாங்க நாடி விட்டால் நபிமார்காளல் கூட முடியாத அவ்வேலையை உங்களைக் கொண்டு வாங்கி விடுவான்.

(ஆதாரம்: மகாதீபே இல்யாஸ், பக்கம் 107)

9. பதிமூன்றாம் ஹதீஸில் இக்கூட்டத்தார்களது அடையாளங்களை நபிகளார் சொல்லும்போது, இளவயதுடைய வாலிபர்கள் அறிவிற் தேறாதவர்கள், ஒன்றும் தெரியாத பாமர மக்கள் போன்றோரைக் கொண்டதாக அக்கூட்டமிருக்கும் என்றார்கள். இவ்வடையாளத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால், இவர்கள் நடத்தும் ஒரு இஜ்திமாவுக்கு சென்று வாருங்கள். கல்வியறிவற்றவர்கள் ஒரு பகுதியாகவும், ஒன்றும் புரியாத முஸ்லிமகள் ஒரு பகுதியாகவும் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். தவிரவும் இந்த ஜமாஅததில் சேருவதுதான் தாம் தனது தீனுக்கு செய்யும் மிகப் பெரும் உபகாரம் என்றெண்ணி  சேர்ந்தவர்களது கூட்டம் ஒருபுறமும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முஸ்லிமக்ள் கணிசமாக வசிக்கின்ற இடங்களைச் சேர்ந்த தீவிர எண்ணங்கொண்ட இளைஞர்களின் கூட்டம் மறுபுறமும், நாம் மார்க்கத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பெரும் புனிதமிக்க பணி இதுதான் என நினைத்து தப்லீக் ஜமாஅத்தில் இணைந்திருப்போரை உங்கள் கண்ணுக்கெதிரே நீங்கள் காணலாம். அப்பாவித்தனத்தாலும், மார்க்கத்தை பற்றிய கல்வியறிவின்மையாலும் துரோகத்ததிற்கு துணைபோய்விட்டனர் பலர். சிறுபிள்ளைத் தனத்தாலும், அனுபவின்மையாலும் மார்க்கமற்ற மடமைச் சேற்றில் மூழ்கிவிட்டனர் வேறு பலர்.

தப்லீக் ஜமாஅத்தில் மறைந்துள்ள நஜ்து தேச வஹ்ஹாபியக் கொள்கையை விளக்கிக் காட்ட யாரும் முன் வராததன் விளைவுதான் இது.

10 பதினான்காம் ஹதீஸில் இறுதி காலத்தில் புழுப்பூச்சிகளைப் போல் எங்கு பார்த்தாலம் (ஆலிம்கள்போல் வேடம் தரித்த) முல்லாக்கள்தான்  தெரிய வருவார்கள். பள்ளிவாசல்களை படுக்கறையாக்கிக் கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அனுபவ ரீதியாகவம், நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளையும், கண்டால் நபிகளார் அறிவித்துள்ள அடையாளங்களனைத்தும் உச்சிவேளை சூரியனைப்போல் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர் தான் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியும். எண்ணிலடங்காதோர் இன்று பெரும் பெரும் உலமாக்களாக, ஆலிம்களாக, முல்லாக்களாகத் தெருத்  தெருவாக அலைந்து கொண்டிருக்கின்றனர். தப்லீக் இயக்கத்தார் எழுதிய நூல்களில் இரண்டொன்றை படித்துவிட்டால் மாபெரும் மௌலானாவாகி விடுகிறார்கள். கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்களையும், இவர்கள் கண்டு கொள்வதில்லை. இம்மாnரும் தவறை அந்த ஜமாஅத்தின் உலமாக்களே செய்யத் துவங்கி விட்டனர். அவர்களின் பிரசங்கப் பீரங்கியான மௌலவி அப்துற்றஹீம் தேவ்பந்தி தொடுக்கும் புகாரைப் பாருங்கள்:

மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவலநிலை என்னவெனில் சான்றிதழ் இன்றி ஒருவன் கம்பௌண்டாகக் கூட முடியாது. ஆனால் அவர்கள் (தப்லீக்கர்கள்) எவ்வளவு கேவலமாக எண்ணிக் கொண்டார்கள் பாருங்கள். எவனெல்லாம் நினைக்கிறானோ அவனெல்லாம் சொற்பொழிவாற்றவும், பிரசங்கம் செய்யவும், எழுந்து நின்று விடுகின்றான். இ.ந்நிலைக்கு கீழ்கண்ட உவமானம் மிகப் பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன். அதாவது, (நீம் ஹகீம் கத்ரயே ஜான் நீம் முல்லா கத்ரயே ஈமான்) அரைகுறை வைத்தியன் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பான். அரைகுறை ஆலிம் ஈமானுக்கே உலை வைத்து விடுவான் என்பதே.

(ஆதாரம்: உஸூலே தஃவத் தப்லீக், பக்கம் 54)

இதனை இன்னும் விளக்கி கூறும் வகையில் அமைந்த அவரது உரையின் மற்றோர் வாசகத்தைப் பாருங்கள்:

அருமை பெரியோர்களே! ஒன்றும தெரியாதவர்களும், லாயக்கற்றவர்களும் குத்பா பயான் செய்ய வருவார்களேயானால் எதைக் கூற வேண்டுமோ, அதன் அடிப்படையையே சொல்ல மாட்டார்கள். தன்னிச்சையாய் புதுமாதிரியானவற்றையே கூறிக் கொண்டு போவார்கள். உலமாக்களைNயு எச்சரிக்கை செய்யுமளவிற்கு இப்போது அவர்கள் துணிந்து விட்டார்கள்.

பள்ளிவாசல்களின் நிலைமையைப் பற்றி கேட்கத் தேவையேயில்லை. இந்த நாடோடிக் கும்பலான தப்லீகுவாதிகள் உண்மையான தொழுகையைப் தவிர மற்றெல்லா வசதிக்காகவும் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். உணவு சமைக்க சமையல் அறையாகவும், உட்கார்ந்து சாப்பி;ட டைனிங்ஹாலாகவும், தூங்கி எழ படுக்கையறையாகவும், உலக விஷயங்களைப் பற்றி பேசசந்தையாகவும், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் உறைவிடமாகவம் உண்மையைச் சொல்வதானால் பள்ளிவாசல் என்பது போர்டிங் லாட்ஜிங் ஆகத் திகழ்கிறது. இவைகளைத் திவர பள்ளிவாசலின் மகத்துவத்தை கேவலப்படுத்தும் பல சம்பவங்கள் நம் இதயமே வெடித்து விடுமளவிற்கு நம் காதில் விழுகின்றன.

11. இரண்டு, பனிரெண்டாம் ஹதீஸ்களில் பல்வேறு வேடம் பூண்டு பற்பல பெயர்களையத் தாங்கி ஒரு கூட்டம் எல்லாக் காலங்களிலும்  வெளிவரும் என்றும் இறுதிநாள்வரை வந்து கொண்டிருக்கும் இக்கூட்டம் முடிவில் தஜ்ஜாலுடன் சென்று சேர்ந்து கொள்ளுமென்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரு ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படும் இவ்வடையாளம் தப்லீக் ஜமாஅத்தின் கூட்டத்தினருக்கே மிகச் சரியாகப் பொருந்தும். ஏனெனில், தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மக்களிடையே பரப்ப முனைந்துள்ள விஷயங்கள் அனைத்தும் 'இப்னு தைமிய்யா, இப்னுல் கையூம், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ' முஃதஸிலா, காரிஜிய்யா போன்ற பெயர்களை சுமந்து காலத்திற்கேற்றப பெயர்தாங்கி வந்த கூட்டங்கள் எந்தக் கொள்கையை, எந்த விஷயங்களை முஸ்லிம்களிடையே பரப்பியதோ, அதேக்கொள்கையைத்தான் தப்லீக் ஜமாஅத்தும் இன்று இஸ்லாமியர்களிடையே பரப்புகின்றது. இதில் தப்லீக் ஜமாஅத் என்ற பெயர்தான் புதியதேயொழிய கருத்துக்கள் அனைத்தும் ஒன்றுதான்.

இதன்மூலம் மற்ற எல்லா சந்தேகத்தின் கதவுகளும் இழுத்து மூடப்பட்டுவிடுகின்றன. காரணம், நபிகளார் எந்த ஜமாஅத்தைப் பற்றிஅ ன்றே சொன்னார்களோ, அந்த ஜமாஅத் காரிஜியாக்கள் அல்ல. அவர்கள் என்றோ அழிந்தொழிந்து போய்விட்டனர். பின்னும்  ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலைக்கின்ற கூட்டத்தைக் குறித்து நபிகளார் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தஜ்ஜால் வரை சென்றடையும் கூட்டத்தைக் குறித்தே நபிகளார் சொன்னதால், அன்றும் தங்களின் மனிதில் குப்ராகிய இறை மறுப்பையும், நாயகத்தின் மீது துவேஷ எண்ணத்தையும் மறைத்'து வைத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்தனர். அவர்கள்தான் இன்றும் பலப்பல புதிய பெயர்களை சூட்டிக் கொண்டு இஸ்லாமியர்களிடையே உலவுகின்றனர். வாழையடி வாழையாக தஜ்ஜால் வரும்வரை இவர்களும் வந்து கொண்டேதானிருப்பர்.

12. பதினொன்று, பணிரெண்டு ஆகிய ஹதீஸ்கள் குறிப்பிடும் அடையாங்களில் இன்னொன்று, குண நலன்களிலும், நடத்தையிலம் மிக மிகக் கீழ்த்தரமானவர்களாயிருப்பார்கள் என்பதாகும். இதற்குரிய ஆதாரத்தை என்னிடம்  கேட்டால், தப்லீக் ஜமாஅத்தில் மிகத் தீவிரமான பற்றுதல் கொண்டோரைத் தேடி அவரிடம் நெருங்கிப் பழகி பாருங்கள். காட்டுத்தனமும், இறைவனைப் பற்றிய அச்சமின்மையும், நல்லோரை தூஷpக்கும் இழிகுணமும், ஆணவம் கொண்டவராகவும், உலக இச்சையின் பால் அதிக வேட்கை கொண்டவராகவும் இருப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

பின்னும் இந்த இழிநிலைக்கு மாற்றமான இயற்கைத் தன்மை வாய்ந்த இரக்க குணமும் பாசமாகப் பேசும் இளகிய மனமும், நல்லொழுக்கப் பண்பாடு முதலான நற் குணங்களை விட்டு வெகு தொலைவில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். பின்னும் நஜ்து கூட்டத்தினரான வஹ்ஹாபியர்களைக் குறித்து எத்தனை ஹதீஸ்கள் அவர்களது இழிந்த தன்மைகளை அடையாளமாக்கிக் கூறுகின்றதோ அவையனைத்தையும் தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கு பொருத்தமாகக் கொள்ளலாம்.

13. ஐந்து, பனிரெண்டு ஆகிய ஹதீஸ்களில் இனங்காட்டப்படும் மற்றுமோர் அடையாளம்: ஒருமுறை அவர்கள் நேரான பாதையை விட்டும் விலகிச் சென்ற பின்னர் மறுபடியும் அப்பாதைக்குத் திரும்புவது அவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தப்லீக் ஜமாஅத்தில் மிக அதிகமாக ஈடுபாடு கொண்டுள்ள ஒருவரை அணுகி மேலே சொல்லப்பட்ட ஹதீஸின் அடையாளாத்தை அவருடன் பொருத்திப் பாருங்கள்! அவரிடம் ஆயிரம்முறை நீஞ்கள் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் காட்டி அவரது அத்தீயக் கொள்கையை விட்டும் அவரை நேரான பாதைக்கு வந்து சேருமாறு வற்புறுத்தினாலும் நபிமார்களை ஏளனமாகப் பேசாதீர்கள், வலிமார்களை வசை பாடாதீர்கள் என்று எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அவர் ஒருபோதும் நேர்பாதைக்கு வரமாட்டார் என்பதை மிகத் தெளிவாகக் கண்டு கொள்வீர்கள்.

உங்கள் சிந்தனைக்கு ஒரு சில கேள்விகள்

இதுவரை தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி நபிமொழியின் ஒளியில் நான் கோர்வையாக தொகுத்துத் தந்த அடையாளங்களைக் கொண்டு மேற்படி இயக்கத்தைப் பற்றி நீஞ்கள் நியாயமான முடிவெடுக்கும் முன் சிறிது எனக்கு அவகாசம் தாருங்கள். உங்களின் தெளிவான சிந்தனைக்கு இன்னும் ஒரு சில கேள்விகளை நான் உங்கள் முன் வைத்து விடுகிறேன். அதன்பின் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதமே.

தப்லீகு ஜமாஅத்தைக் குறித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாதவாறு உங்களுக்குள்ளேயே மாபெரும் சிக்கலொன்று உருவெடுத்து உங்களின்  தெளிந்த சிந்தனையைக் குழப்பத் துவங்கியிருப்பதை நான் உணர்கிறேன். ஒரு அற்புதமான ஜமாஅத்தொன்று இஸ்லாமிய மக்களை குர்ஆனின் பாலும், மார்க்கத்தின் பாலும் அழைக்கின்றது. தொழுகை, நோன்பு போன்றவற்றை தானம் நடைமுறைப்படுத்துவதுடன் மற்றவர்களையும் நடைமுறைப்படுத்தத் தூண்:டுகிறது. மக்களிடையே நன்மையானதை எடுத்துச் சொல்லும் ஒரு கூட்டத்தையா வழி தவறிய கூட்டம், தீனற்ற இயக்கம் என்பது? இப்படி மார்க்கத்தை அல்லும பகலும் வளர்க்கின்ற ஒரு கூட்டத்தைப் போலியானதென்றால், பின்னர் உலகில் யார்தான் உண்மையான மார்க்கப் பிடிப்பாளர் என்றெல்லாம் உங்களுக்கு என்னைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறதல்லவா?

நான் மிகுந்த தயையுடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போன்ற சர்ச்சைதான் அன்று ஹஜ்ரத் அபூபக்கர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா போன்ற நாயகத் தோழர்களுக்கு பள்ளிக்குள்  சென்று தொழுது கொண்டிருந்த தொழுகையாளியான அவ்விளைஞனைப் பற்றி எழுந்தது. எவனை நபிகளார் வெட்டிக்கொன்று விடுமாறு கட்டளையிட்டார்களோ, வெட்டச் சென்ற நபித் தோழர்கள்  தொழும் நிலையிலுள்ள ஒருபனை எப்படி வெட்டுவது எனத் தயங்கிப்' பின்னர் வெட்டாமலேயே திரும்பி வந்தார்களோ…. அவனைக் குறித்து நபிகளார், இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் வரும். குர்ஆனை ஓதும், நன்மையை ஏவும், தொழுகை, நோன்பு போன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறை காட்டும். இருந்தாலம் மார்க்கத்தில் அக்கூட்டத்திற்கு எவ்வித தொடர்பும் இருக்காது என்று விபரித்த போது…..

நாயகத் தோழர்கள் தங்கள் மனதில், ஒருவனை மார்க்கப் பற்றுதலுடையவன் என்பதை அறிந்துகொள்ள வெளிப்படையான அடையாளங்கள் இவைதானே! ஒவ்வொரு மனிதனுடைய மனதிற்குள்ளும் இறங்கியா நாம் பார்க்க முடியும்,? ஆனால் முக்காலத்தையும் முற்றும் அறிந்த நபிகளார் இத்தகைய அடையாளம் உள்ளவனையே தீனற்றவன், வஞ்சிப்பவன் என்று சொன்னால் மார்க்கப்பற்றுள்ளவனையும், மார்க்கத்தை பிழைப்பாக்கிக் கொள்பவனையும் நாம் எப்படி பிரித்தறிய முடியும்? அநேகமாக இத்தகைய மனோநிலைக்கு உந்தப்பட்டதால்தான்,….

தொழுகையும், குர்ஆன் ஓதுதலும், நோன்பு நோற்குதலும், நன்மையை ஏவுதலம் ஒரு சிறந்த மார்க்கப் பற்றுவன் என்பதற்குரிய அடையாளமில்லை எனில், இறைவனின் இனிய திருத்தூதரே! அக்கூட்டத்தினரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றையாவது எங்களுக்குச் சொல்லுங்கள். அவ்வடையாளத்தைக் கொண்டேனும் நாங்கள் அத்தகைய மதியீனர்களைக் கண்டு கொள்கிறோமென்று வினவியபோது,….

அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று 'மொட்டை' அடித்துக் கொள்வதாகம் என்று நபிகளார் நவின்றார்கள்.
நான் உங்களுக்கு சொல்ல விரும்பும் விஷயம் யாதெனில் எந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் தப்லீக் ஜமாஅத்தினரை விரும்புகின்றீர்களோ, அஸலில் அவையனைத்தும் இறுதிக் காலத்தில் உதயமாகும் கூட்டத்தினரைப் பற்றிய அடையாளமாக அல்லவா இருக்கிறது? அத்துடன் எந்தத் தப்லீக்கை நீங்கள் நன்மை பயக்கும் கூட்டமென சொல்கிறீர்களோ, அக் கூட்டத்தினரிடம் தானே நபிகளார் சுட்டிக் காட்டிய அடையாளங்கள் அனைத்தும் ஒருசேரக் குடிகொண்டுள்ளன. அதுமட்டுமா? இவ்வடையாளங்களைத் தாங்கிய எந்தக் கூட்டம், எந்தப் பெயரைத் தாங்கி வந்தாலும் அதை விட்டும் விலகி இருங்கள் என்றல்லவா நபிகளார் நவின்றுள்ளனர். இனி நபிகள் நாதரால் சுட்டிக் காட்டப்பட்ட அடையாளங்கள் தப்லீகு; ஜமாஅத் கூட்டத்தினருக்கு கொஞ்சங்கூட பொருந்தாத ஒன்றாக இருக்குமேயானால் அவர்களை குறித்து சந்தேகிக்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காதே! மாறாக அவ்வடையாளங்கள் அனைத்தும் இவர்கள் மீது முற்ற முழுக்கப் பொருந்தி வருவதால்தான் நாம் இதை இத்தனை வன்மையாகக் கூறுகிறோம்.

அறிவுணர்த்தும் அருள் மருந்து!

இதுவரை நாம் சொல்லி வந்தவை அனைத்தையும் ஒரு மூலைக்குள் தூக்கி ஒதுக்கி வைத்து விடுங்கள். இப்போது  உங்களது வாதத்திற்காக நான் சொன்னவையனைத்தும் பொய்யாகவே இருந்தாலும், இறுதியாக நீங்கள் அண்ணல் நபியின் அருள்மொழியான ஹதீஸின் மீதுள்ள உங்களது நம்பிக்கையை முன்னிருத்திக் கேட்கிறேன். இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் வரும். அவற்றிடம் மேற்கூறிய அடையாங்களனைத்தும் அப்பட்டமாகத் தெரியவரும் என்று இனங்காட்டப்பட்ட் அடையாளங்கழைத் தாங்கியுள்ள கூட்டம் எதுதான் என்று தயை கூர்;ந்து நீங்களே கூறுங்களேன்!

எனவேதான் தப்லீகு ஜமாஅத்தை எவரும் வெறும் தொழுகை நோன்பு போன்ற வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு முடிவெடுக்காதீர்கள். ஹதீஸ்களில் இனங்காட்டப்பட்ட அடையாளங்கள், அதற்கு எவ்வளவு தூரம்  பொருந்தி வருகின்றதென்பதை நோட்டமிடுங்கள். அதன்பின்னர் ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்.

இன்னும் இவர்களின் தொழுகை, மார்க்கப்பற்று என்பதெல்லாம் செல்லாத காசின் ஒரு பக்கத் தோற்றம்தானே தவிர மறுபக்கத்தையம் அருள்கூர்ந்து பார்த்தபின் முடிவெடுங்கள். செல்லாக் காசின் ஒரு பக்கத்தை மட்டும் கண்டு தீர்ப்புச் சொல்லி விடலாகாது.

மனசாட்சியின் இறுதித் தீர்ப்பு

திடுக்கமும், அதிர்ச்சியும், குழப்பங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சூறாவளிக் காற்றுபோல் மனித இனத்தை சூழ்ந்து கொண்டேவரும் இக்காலக்கட்டத்தில் ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளரின் (முஃமின்) மனசாட்சி அளிக்கும் தீர்ப்பே உண்மையான தீர்ப்பென்று சொல்லலாம்.

இதில் இறைவனே இறுமாந்துப் போற்றிப் புகழும் இறைத்தூதரின் மகிழ்ச்சியும், திருப்தியும் தப்லீக்கில் சென்று இணைவதில் உள்ளதா? அல்லதுஅவர்களை விட்டும் விலகி இருப்பதில் உள்ளதா? என்பதை இறைவன் மற்றும் இறைத்தூதரின் திருப்திக்காக தப்லீக்கில் இணைந்து சேவை செய்கிறேன் என்று கூறும் ஒன்றுமறியா அப்பாவி முஸ்லிம்களை தான் கேட்க விரும்புகிறேன்.

மற்றபடி பணத்தின்மீதுள்ள மோகத்தால் சந்தர்ப்பவாதிகளாக மாறி மார்க்கத்தை துண்டாட தப்லீக்கில் இணைந்துள்ளவர்களை நோக்கி ஒரேயொரு வார்த்தை மட்'டும் சொல்ல ஆசைப்படுகிறேன். அவர்கள் தன்  இச்சைக் காட்டும் வழியில் எவ்வளவு தூரம்  வேண்டுமானாலும் செல்லட்டும். நபிகளாருக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும். ஆனால் ஒன்று தமது மன இச்சைக்காகக செய்யும் வேலையை அல்லாஹ்வுக்காக என்று மட்டும் சொல்லி ஏமாற்ற வேண்டாம்.

தப்லீகு ஜமாஅத்தின் நூலொன்றில்……

எப்படிப் பார்த்தாலும் மனிதன் எத்தனை பாவங்களை  செய்கிறான். அவையனைத்தும் பாவம் என்று ஒப்புக் கொள்ளவே செய்கிறான். இன்னும் அப்பாவத்தை நன்மையென ஒருக்காலும் நினைப்பதேயில்லை. இந்நிலையில் அவன் என்றாவது ஒருநாள் நிச்சயம் திருந்தி விடுவான் என்று நம்பிக்கை கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது.

ஆனால் எவர்கள் -பாவத்தை புண்ணியமென்றும், நபி துவேஷத்தை-தௌஹீதென்றும், வலிமார்களை நிந்திப்பதை ஈமான் என்றும் நினைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் உண்மையான மார்க்கத்தின் பக்கம் திரும்பி வருவதென்பது கடினம் மட்டுமல்ல. முடியவே முடியாத ஒன்றாகிவிடும். நபிகளார் சுட்டிக் காட்டிய அடையாளங்களில் ஒன்றான…. அவர்கள் (தப்லீகு வாதிகள் தீனை விட்டு வெளியேறி விட்ட பின், பின்னர் மீண்டும் தீனை நோக்கி திரும்பமாட்டார்கள் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

எவ்வாறாயினும் இப்பரச்சனையை முடிக்கம் இத்தருணத்தில் எந்தக் காரணங்களை மையமாக வைத்து தப்லீகை விரும்புகின்றனரோ, அதே காரணங்கள் தான் வேறு கோணத்தில் அக்கூட்டத்தின் அடையாளமெனத் தெளிவாக்கப்பட்டுள்ளது. அவ்வடையாளங்களை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு உணர்த்தியதுடன், தாம் இனங்காட்டிய அடையாளங்களை கொண்ட கூட்டம் எங்கிருந்து, எந்தப் பெயரில் வந்தாலும் அவர்களை விட்டும் இஸ்லாமிய மக்கள் விலகியிருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இக்காலத்தில் யாருக்கு நபிகளாரின் நல்லாசி வேண்டுமென நினைக்கின்றனரோ, அவர்கள் தப்லீக் ஜமாஅத்தை விட்டு விலகுவதில்தான் கிடைக்க முடியும். இனி யார் தன் மன இச்சைக்கு அடிமையாகி விடுகின்றாரோ அவரை நபிகளாரின் மீது நன்றியுள்ளவனாய் நடந்து கொள்ள எனக் கட்டாயப்படுத்த முடியாது.

இறுதியாக ஒரு வார்த்தை

இச்சிறு நூல் நிறைவுபெறும் இவ்வேளையில் இறுதியாக ஒரு வார்த்தையை உங்களின் சிந்தனைக்கு வேண்டி விட்டுச் செல்கிறேன். எனக்குத் தெரிந்தவரை என் அறிவுக்கு எட்டியவரை நபிமொழியின் ஒளியில் தப்லீகு ஜமாஅத்தைப் பற்றிய எத்தனை உண்மைகள் உள்ளனவோ, அவையனைத்தையும் உங்கள் முன் சமர்ப்பித்து விட்டேன். அவற்றை நீதியான பார்வையைக் கொண்டு அணுகுங்கள். நன்மையை நாடி நீங்கள் தப்லீகில் இணைந்திருப்பீர்களேயானால் நான் உங்களின் அந்த நல்லெண்ணத்தை ஒருபோதும் குறை சொல்ல மாட்டேன். மறுமையின் கொடும்வேதனையைக் கேள்வியுற்று அதிலிருந்து விடுபடுவதற்காக உங்கள் மனம் ஈர்க்கப்பட்டு நீங்கள் தப்லீகில் இணைந்திருக்கலாம். ஆனால்…என்ன? ஒரு நிமிட நேரத்திற்கேனும் நீங்கள் அருள் கூர்ந்து சிந்திக்க முன்வர மாட்டீர்களா? நான் இதுவரை சொல்லி வந்த அனைத்துக் குறிப்புகள், அடையாளங்கள், நியாய உணர்வுடன் கூடிய உண்மைகள் எல்லாமே பொய்யா? ஒரேடியாக அவையனைத்துமே ஆதாரமற்றவைகளா?

சரி! அப்படி உங்கள் வாதத்திற்காக அவையனைத்தையும் பொய்யென்று வைத்துக் கொண்டாலும் நான் அவர்கள் மீது (தப்லீக்) கூறும் குற்றச்சாட்டுகுகள் தவறானவை என்றாலும் அண்ணல் எம்பெருமானார் அறிவித்த அந்தப் பதினைந்து ஹதீஸ்களையுமா பொய்யென்று சொல்வீர்கள்? தப்லீக் ஜமாஅத்தை விடடும் விலகியிருங்கள் என்று நபிகளாரால் சொல்லப்பட்ட அவ்வாக்கியத்தின் நடைமுறையில்தானே நபிகள் நாதரின் மகிழ்வும், திருப்தியும் அடங்கியுள்ளது.

நீங்கள் சொல்வதைப் போல் தப்லீகில் நல்லது இருக்கின்றதென வைத்துக் கொண்டாலம், நடுநிலையுடன் நின்று சிந்திப்பீர்களேயானால் அதில் நல்லதை விட தீயவையே அதிகமாக இருப்பதை நீங்களே கண்டு கொள்வீர்களே! ஒரு சிறு நன்மை பெறுவதற்காக மாபெரும் தீமையில் சென்று சிக்கிக்க கொள்ளுமாறு இஸ்லாம் என்றைக்குமே சொன்னதில்லையே. அறிவும் இதனை சரியான ஒன்றெனச் சொல்லாதே!
இன்னும் தப்லீகில் சென்று சேர்வதால் அதனால் மறுமை வாழ்வு பாதிக்கப்படுவதில்லையென்று சொல்லப்பட்டால், நான் கேட்கிறேன்! அண்ணல் நபி நாதரவர்கள் தப்லீகின் ஒவ்வொரு அடையாளக் குறிப்பையும் எடுத்துக்காட்டி அதில் சேரவேண்டாமென்று தடுத்துள்ளபோது,….. அதில் சென்று ஏன் சேர்ந்தாய் என்று இறைவன் கேட்கும்  கேள்வியிலிருந்து நாம் தப்பத்தான் முடியுமா? மாறாக அவர்களை விட்டுப் பிரிந்திருப்போமாயின் ஏன் அதில் சேரவில்லையென்றோ, அல்லது ஏன் சேர்ந்தாய் என்ற கேள்வியோ இறைவனிடமிருந்து எழ வழியில்லாமற் போய் விடுமெனபதைக் கவனியுங்கள். அன்றி, தப்லீகில் சேராது ஒதுங்கி நிற்பதால் நமக்கு எவ்வித நஷ்டமும் விளைந்துவிடப்போவதில்லையல்லவா?

இந்நூலின் கடைசி வரிகளை எழுதும்போது எனது ஆன்மாவிற்கு ஏற்படும் நிம்மதியை நான் உணர்கிறேன். ஒரு மாபெரும் விபத்திலிருந்து ஹதீஸ்களது அறிவிப்பின் அடையாளங்களை நபிகள் நாதரின் உம்மத்துக்களிடம் ஒன்று சேர்ப்பித்த வகையில் என் பணியினது பாரத்தை இறக்கி வைத்து விட்டேனென்றும் எண்ணுகிறேன். இறுதியாக இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு இந்நூல் எவரது கரங்களில் தவழ்கிறதோ அவர்கள் மீதேயுள்ளது.

இச்சிறுநூலில் மூலம் வழி தவறி தடம் மாறிச் செல்லும் முஸ்லிம்கள் நேரான பாதையில் நடக்கவும், செல்லவும் ஏக இறைவன் நேர்வழி காட்டுவானாக. ஆமீன். வஸல்லல்லாஹு தஆலா ஸையிதினா முஹம்மதின் வ ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன்.

முற்றும்.

1 Comment found

User

Sultan, Porur, Chennai

Pls. arrange the books in PDF format to download
 
wasalam
sultan