அல்-ஹகீகா- Alhakeekah-part 2
By Sufi Manzil
இதன் முந்திய பகுதியைப் பார்க்க:
அதில் இரண்டாவது:-மர்த்தபா ஆகிறது மர்த்தபத்துல் வாஹிதிய்யா ஆகும். இது முதலாவது வெளிப்பாட்டின் நிலையில் இரண்டாவது வெளியாகுதல் ஆகும். இங்கு அஸ்மாக்கள் அனைத்தும் இந்த மர்த்தபாவில் ஷுஊனாத் எனும் உடையில் தாத்து வெளியாவது கொண்டு எல்லாம் வெளியாகிவிட்டது. எவ்வாறு எனில், பிரிந்ததாகவும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவும் அவை வெளியாகிவிட்டது.
தாத்தில் மறைந்திருக்கும் எல்லா ஷஃனுகளும் ஒரு சொந்தமான கோலத்தின் பெயரில் இந்த மர்த்தபாவில் வெளியாகிவிட்டது. அதாவது மற்ற ஷஃனுகளுடைய கோலத்தை விட்டும் வேறுபட்டதாக வெளியாகிவிட்டது.
வஹ்தத் என்னும் மர்த்தபாவில் ஒவ்வொரு ஷஃனும் மற்ற ஷஃனின் ஐனாகவே இருந்தது. இன்னும் அது தாத்துடைய ஐனாகவும் இருந்தது. இந்த மர்த்தபாவில் ஷுஊனுகளுக்கிடையில் தம்முள் வேறுபிரிதல் உண்டாகிவிட்டன. அவைகளுக்கிடையிலும் ஒருவனான தாத்துக்கிடையிலும் வேறுபாடு உருவாகிவிட்டது.
உதாரணமாக:
ஒருவித்து அதன் உள்ளில் மறைந்திருக்கும் மரத்தின் பாகங்களின் கோலங்களின் பேரில் வெளியாவது போலவும்,மெழுகு தன்னில் உள்ளில் மறைந்திருக்கும் இடம்பாடான எல்லா கோலங்களையும் அவை தத்தமக்குள் பிரிந்ததாகவும் மெழுகைவிட்டும் வேறானதாகவும் இருப்பதை பெற்றுக் கொண்டது போல.
இதுவே மர்த்தபத்துல் வாஹிதிய்யாவாகும். அப்போது இந்த மர்த்தபத்துல் வாஹிதிய்யாவாகிறது எல்லா கோலங்களுக்கும் பெட்டகமாக (கஸானாவாக) ஆகிவிட்டது. ஆதியிலிருந்து அந்தம் வரை என்ன என்ன கோலம் வெளிவருமோ அத்தனை கோலங்களுக்கும் கஸானாவாக இந்த மர்த்தபத்துல் வாஹிதிய்யா ஆகிவிட்டது.
ஹக்கின் தாத்தின் உள்ளிருந்து வெளியாகவரும் எல்லா வஸ்த்துக்களும் ஆதியிலிருந்து அந்தம் வரை மற்றதை விட்டும் பிரிந்ததான நிலைமையிலும் ஹக்கை விட்டும் வேறான நிலைமையிலும் வாஹிதிய்யா என்னும் மர்த்தபாவில் ஒவ்வொரு தனித்தனி கோலமாக இருந்தே ஒழிய அவைகளில்லை.என்றாலும் இந்தக் கோலங்களுக்கு தன்னைப் பற்றியோ, தான் அல்லாத்ததைப் பற்றியே, தன்னை உண்டாக்கியவனைப் பற்றியோ, தன்னை நிலைக்கச் செய்தவனைப் பற்றியோ ஒரு உணர்வும் இல்லை.
இந்த மர்த்தபாவாகிறது சமட்டியானதும், வியட்டியானதும் சாதிகள், இனங்கள் போன்று குல்லியத்து எனும் நிலைமைகளில் அநேக மர்த்தபாக்களையும் சேகரமாக்கி கொண்டது ஆகும். ரஹ்மானிய்யத்தான, தெய்வீகத்தன்மையான, வளர்க்கும் தன்மையான மர்த்தபாக்களைப் போன்று.
இந்த மர்த்தபாவுக்கு அனேக நாமங்கள் உண்டு. ஏனெனில் இதற்கு அதிகமான நிலைமைகள் இருப்பதற்காக. எதுபோலவெனில் விரிவான அறிவைப் போன்று, சூறத்துல் முஹம்மதிய்யாவைப் போன்று, ஹகீகத்துல் இன்ஸானிய்யா போன்று, அஸ்மாக்களின் மர்த்தபா போன்று, இவைகள் அல்லாத்ததைப் போன்றும்.
இந்த மர்த்தபாவில்தான்,உஜூது ஹயாத்து என்னும் கோலத்தில் வெளியாகிவிட்டது.
தொகுப்பான அறிவு வகுப்பான அறிவு எனும் கோலத்தில் வெளியாகிவிட்டது.
ஷுஹூது என்பது குத்ரத் எனும் கோலத்தில் வெளியாகிவிட்டது.
நூரு என்பது இராதத் என்னும் கோலத்தில் வெளியாகிவிட்டது.
மீண்டும் இந்த வாஹிதிய்யத்து எனும் மர்த்தபாவில் கேள்வி, பார்வை, பேச்சு…..என்பவைகளும் வெளியாகிவிட்டது. மீண்டும் சேர்க்கப்பட்ட வர்ணிப்புகளும் இதில் வெளியாகிவிட்டது. உதாரணம் ஈகை, கிருபை, அடக்கி ஆளுதல், பொருத்துதல் போன்று.
உம்மஹாத்து ஸிபத்தான ஏழு ஸிபத்துக்களின் பொருட்டினால் இந்த முறக்கபான ஸிபத்துகளும் வெளியாகிவிட்டது. இவைகள் தனித்து கூறப்பட்ட ஏழு நாமங்கள் ஆகும். உண்மையில் இவைகள் அனைத்தும் அஸ்மாக்களின் மர்த்தபா ஆகும். இது எல்லா வஸ்த்துக்களுக்கும் உள்ளுடமைகளாகும். (حقائق الاشياء)
அஃயானு தாபிதாத்தான் ஹகாயிகுல் அஸ்யாஊ என்று சொல்லுகிற கூட்டம் அஃயானுத்தாபிதாவுடைய நப்ஸை நாடவில்லை. என்றாலும் அவர்கள் அது எதில் விசயமாகுமோ (சேருமோ) அதை நாடினார்கள். அல்லது அந்த வஸ்த்துக்கள் உண்டாகும் இடத்தை நாடினார்கள். (அவைகள்) அஸ்மாக்கள் ஆகும். ஏனெனில் அஃயானுத் தாபிதாவானது அறவே இல்லாது ஆகும்.
எப்படி ஒரு மர்த்தபாவிலும் தரிபாடாகாத மஃதூமான பொருள் வெளியில் மவ்ஜூதான (உண்மையான) ஒரு விசயத்திற்கு ஹகீகத்தாக முடியும்? (ஆக முடியாது).
நீ அறிந்திருக்கிறாய், அஃயானுத்தாபிதாவாகிறது அது தரிபடுவதில் அதன் தரஜாவாகிறது திஹ்னில் உண்டாக்கப்பட்ட தரிபாடான வஸ்த்துக்களிலிருந்து ரொம்ப பலவீனமானதாகும். திஹ்னிய்யத்தான மவ்ஜூதாத்துக்கள் திஹ்ன் என்னும் மர்த்தபாவைக் கொண்டு திஹ்னில் நிலைபட்டதாகும். அஃயானுத்தாபிதாவாகிறது அதற்கு தன் தாத்தைக் கொண்டோ, தன் தாத்து அல்லாத்ததைக் கொண்டோ ஒரு நிலை கிடையாது.எந்த ஒரு இடத்திலும் அதற்கு ஓர் அடையாளமும் இல்லை. என்றாலும் விளங்குவதற்கும், விளக்குவதற்குமாகவே அவர்கள் (ஸூபிகள்) இதைக் கூறுகிறார்கள். அதாவது நிச்சயமாக அஃயானுத்தாபித்தாவாகிறது ஹக்காயிக்குல் அஷ்யாவாகும் என்று கூறுகிறார். அந்தக் கூற்றைக் கொண்டு அவர்கள் அவற்றின் மசாதீக்கையும் (مصاديق)(பொருந்துமிடத்தையும்) அது உண்டாகும் இடத்தையும் நாடுகிறார்கள். அது மர்த்தபத்துல் வாஹிதிய்யாவில் ஷுஊனாத்துத் தாத்திய்யா என்னும் கோலங்கள் ஆகும்.
எப்படிப்பட்ட நாமங்கள் கோலங்களெனில் அதற்கு இலாஹிய்யான கௌனிய்யான நாமங்கள் என்று சொல்லப்படுமோ அத்தகைய நாமங்களும் கோலங்களும் ஆகும்.
இதுவே ஆதியிலிருந்து அந்தம் வரையில் உலகத்தில் வெளியானதும், வெளியாகக் கூடியதுமான எல்லா வஸ்த்துக்களினதும் ஹகாயிக்குகளாகும்.
கண்காட்சியைக் கொண்டும், அனுபவ அறிவைக் கொண்டும், மூடலில்லாத கஷ்பைக் கொண்டும் விஜ்தானைக் கொண்டும், இர்பானைக் கொண்டும் உள்பார்வையுடைய முஹக்கிகீன்கள் உண்மைப்படுத்தி வைத்தது போன்று.
இந்த வாஹிதிய்யா என்னும் மர்த்தபாவாகிறது எல்லா ஷுஊனாத்துக்கள் எனும் கோலங்கள் அனைத்தையும் சேகரித்துக் கொண்ட மர்த்தபாவாகும். இந்த ஷுஊனாத்துகள் வெளியில் வெளியாவதை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி.
3. அதில் நின்றும் மூன்றாவது இறக்கமாகிறது மர்த்தபத்துல் அர்வாஹ் ஆகும்.
அல்லாஹுத்தஆலா வெளியானான், நீ நாடினால் அல்லாஹுத்தஆலா இறங்கினான் என்றும் சொல்லலாம். ஸூபிகளிடத்தில் தஜல்லி எனும் வார்த்தை ஒரு வஸ்த்து ஒரு மர்த்தபாவில் இருந்து இன்னொரு மர்தபாவிற்கு இறங்குவதாகும் என்ற கருத்துக்கு வைக்கப்பட்டதாகும்.
மெழுகின் எண்ணெய்யைப் போல, எண்ணெய் எனும் மர்த்தபாவிலிருந்து மெழுகு என்னும் மர்த்தபாவிற்கு அது உறைவது கொண்டு இறங்குவது போல அல்லது பால் போல. பால் என்னும் மர்த்தபாவிலிருந்து தயிர் என்னும் மர்த்தபாவிற்கு இறங்கினது போல.
இனி விசயத்திற்கு வருவோம். நாம் கூறுவோம். அல்லாஹுத் தஆலா வாஹிதிய்யா என்னும் மர்த்தபாவிற்கு வெளியான பின் வாஹிதிய்யா என்னும் மர்த்தபாவில் வெளியானது போல அர்வாஹ் என்னும் மர்த்தபாவிற்கு வெளியானான்.
அதைக் கொண்டு உத்தேசமாகிறது, அதில் எந்த ஒரு ஸூரத்தும் அதிகமாகவில்லை. வாஹிதிய்யாவில் உண்டாகி இருந்த கோலங்கள் அனைத்தும் (வெளியாகிறதை ஏற்றுக் கொள்ளக் கூடிய) அர்வாஹு என்னும் மர்த்தபாவில் வெளியாகிவிட்டது.
வாஹிதிய்யா என்னும் மர்த்தபாவில் உள்ளதைவிட பிரகாசமாகவும், தெளிவானதாகவும், வெளியானதாகவும் அர்வாஹ் உடைய மர்த்தபாவில் வெளியாகிவிட்டது.
அஹதிய்யா என்னும் மர்த்தபாவாகிறது ஒரு மிருதுவான முகமூடி அணிந்தபிறகு வஹ்தத்துடைய மர்த்தபாவிற்கு ஆனது. பின்னர் இன்னொரு முகமூடியை அணிந்தபிறகு வாஹிதிய்யா உடைய மர்த்தபாவிற்கு ஆனது. பின்னர் மூன்றாம் முகமூடியை அணிந்தபிறகு அர்வாஹ் உடைய மர்த்தபாவிற்கு ஆனது. இது வாஹிதிய்யா உடைய மர்த்தபாவைவிட மிக பிரகாசமாக ஆகிவிட்டது. இந்த மூன்றாம் இறக்கம் இரண்டு விசயத்தை பூர்த்தியானதாக ஆக்கிவிட்டது.
1ம் விசயம்: முன்னுள்ள மர்த்தபாவை விட ஆலமுல் அர்வாஹில் வெளியான அஸ்மாக்கள் ரொம்ப பிரகாசமுடையதாக ஆகிவிட்டது. ஆகையால் அர்வாஹ்கள் என்பது அஸ்மாக்களே அல்லாது இல்லை. அஸ்மாக்கள் ஷுஊனே அல்லாது இல்லை. ஷுஊன் ஹக்குடைய தாத்தல்லாது இல்லை.
2ம் விசயம்: அஸ்மாக்கள் என்னும் கோலத்திற்கு உணர்வைக் கொடுத்தான். அர்வாஹ் என்னும் மர்த்தபாவில் அஸ்மாக்கள் ஆகிறது அறிவையும் தன் தாத்தைக் கொண்ட உணர்வையும் பொதிந்து கொண்டது. இது குன் என்ற நிலைக்குப் பிறகே ஆகிவிட்டது. இதற்கு அர்வாஹ் என்று பெயரும் சூட்டப்பட்;டது. இவ்விடத்தில் புதியது என்ற வாசல் திறந்து விட்டது. இந்த மர்த்தபாவாகிறது உஜூதுக்கு வெளியிலான மர்த்தபாவாகும். இங்குதான் பண்புகளும், தீர்ப்புகளும் ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் உண்டான இரண்டு மர்த்தபாக்களும் (வஹ்தத், வாஹிதிய்யத்) உஜூதுக்கு உள்ளான மர்த்தபாவாகும். குன் என்ற ஏவலுக்கு முன் உண்டான மர்த்தபாவாகும். இங்கு றூஹ்கள் எல்லாம் அஸ்மாக்களை விட்டும் வேறு பிரிந்து விட்டது. உணர்வு கொண்டும், அறிவு கொண்டும் வேறாகிவிட்டது.
4. அதில் நின்றும் நான்காவது மர்த்தபாவாகிறது மர்த்தபத்துல் மிதாலாகும்(அர்வாஹ்களின் தடிப்பம்)
அர்வாஹ்கள் அஸ்மாக்களுக்கு தடிப்பானது போல இஸ்முகள் ஷுஊன்களுக்கு தடிப்பானது போல இங்கும் தடிப்பம் கூடிவிட்டது. அதாவது அர்வாஹ் என்னும் மர்த்தபாவில் உள்ள தடிப்பத்தை விட.
மிதாலுடைய மர்த்தபாவில் அது கோலத்தையும் தாத்தையும் பெற்றுக் கொண்டது, எடையில்லாமலும் நிற்கும் இடமில்லாமலும்.
5. அதில் நின்றும் ஐந்தாவது மர்த்தபாவாகிறது ஆலமுஷ்ஷஹாதா ஆகும்.
இந்த நான்காம் மர்த்தபாவாகிறது (ஆலமுல் மிதாலாகிறது) கண்கூடாக பார்ப்பதற்கும் காட்சி காண்பதற்கும், வெளிப்பாட்டில் போதுமானதாக இல்லாத போது (அஸ்மாக்களை வெளியாக்கி கண்ணுக்குத் தெரியக் கூடியதாக ஆக்குவதற்கு) வெளியில் அது காண வேண்டும் என்பது தேட்டமாகவும் இருக்க, மறை பொருளான மஹ்பூபான தாத்தை அறி;யும் அறிவை உண்டாக்குவதற்கும், அது போதாமல் இருந்த பொழுதம் பரிபூரணத்துவம் உள்ளில் மறைந்திருக்கும் மறைபொருளான தாத் என்னும் மஹ்பூபை அறியும் அறிவை உண்டாக்குவதற்கும் அந்த நான்காம் மர்த்தபா போதாமல் இருந்த பொழுதும், அவன் தன் நப்ஸை தொட்டும் அறிவித்தது போல,
كنت كنزا مّخفياّ فا حببت ان اعرف فخلقت الخلق
(நான் மறைபொருளாக இருந்தேன். என்னை அறியப்படுவதை ஆசித்தேன். ஆகவே படைப்பினங்களைப் படைத்தேன்). அவன் மிதால் என்னும் மர்த்தபாவில் வெளியானது போல ஐந்தாவது விடுத்தம் தஜல்லியானான். இதைக் கொண்டு நான் ஐந்தாவது முகமூடியை அணிந்தான் என்று நாடுகின்றேன். இந்த அஸ்மாக்கள் காட்சியுலகில் பூரணமாக வெளியாகுவது வரை அவன் வெளியானான். அப்படி வெளியானவுடன் அவனுடைய நாட்டப் பொருள் வெளியில் உண்டாயிற்று.
மிதால் என்னும் கோலமாகிறது ஷாஹிதிய்யா என்னும் கோலத்தை விட்டும் வேறு பிரிந்து விட்டது. எவ்வாறெனில் மேவுவதையும், கிழிப்பதையும் ஏற்றுக் கொள்வது கொண்டு.
ஏனெனில் இந்த காட்சி உலகிலுள்ள கோலங்களாகிறது நிறைவையும், இடத்தையும், மேவுவதையும், கிழிப்பதையும் ஏற்றுக் கொள்ளும்.
காட்சி உலகிலுள்ள கோலங்களாகிறது ஆலமுல் மிதாலுக்கு தடிப்பமாகும்.
உடையணிகிறவன் ஒருவனாகும். உடைகள் அனேகமாகும். ஒவ்வொரு உடையிலும் அவனுக்கு சொந்தமான ஒரு பெயர் உண்டு. உண்மையில், இஸ்முமில்லை, றஸ்முமில்லை, நஃதும் இல்லை, வஸ்பும் இல்லை உடைகளின் பக்கம் சேர்த்துப் பார்ப்பது கொண்டே ஒழிய. உடைகள் ஆகிறது, அவனின் நிலைகளும் சுற்றுகளுமே அன்றி வேறில்லை. அலைகள் எனும் கோலத்தில் கடலின் சுற்றுகள் உண்டானது போன்று. லாயிலாஹ இல்லல்லாஹ்.
இந்த ஐந்து மர்த்தபாக்களையும் (வஹ்தத், வாஹிதிய்யத், ஆலமுல் அர்வாஹ், ஆலமுல் மிதால், ஆலமுஷ் ஷஹாதா) ஒன்று சேர்த்துக்கொண்ட மர்த்தபாவாகிறது மர்த்தபத்துல் இன்ஸானிய்யா என்னும் மர்த்தபாவாகும். அந்த அல்லாஹுத்தஆலா முன்கூறப்பட்ட எல்லா தஜல்லியாத்துக்களை கொண்டும் தஜல்லியானதற்குப் பிறகு அவனின் ஒன்றன்பின் ஒன்றான தொடரப்பட்ட தஜல்லியாத்துக்கள் அனைத்துமுடைய கோலங்களையும் சேகரித்துக் கொண்டு இன்ஸானுடைய கோலத்தில் வெளியானான்.
இவை அடங்கலையும் ஒருங்கே சேகரிப்பது கொண்ட கோலத்திலானதும், (صورية) கருத்தியலினாலானதும் (معنوية)ஆன எல்லா வெளிப்பாடுகளையும் சேகரிப்பது கொண்டு அவனுக்கு இன்ஸான் என்னும் கோலம் உருவாகிவிட்டது. இதனால் அந்த கோலத்தை தனது கலீபாவாக ஆக்கினான். அவனுடைய அமானத்தை சுமந்தவனாகவும் ஆக்கினான். இதையும் இதன் உள்ரங்கத்தையும் அல்லாஹ் நாடினால் இதற்கென்று சொந்தமான பாடத்தில் பின்னர் அறிவாய்.
சகோதரனே, இவைகள் சுருக்கமாக ஸூபிகளிடத்தில் தரிபடுத்தப்பட்ட ஆறு இறக்கம் என்னும் தொகுப்பான ஹகீகத்தாகும். இதற்கு உனக்கு விரிவுரை வேண்டுமென்றால் இது சம்பந்தமாக விரிவாக எழுதிய பெரியார்களின் நூற்களை பார்வையிடுக.
அறிந்து கொள் சோதரா! இவ்வுலகிலுள்ள அணுக்களினின்றும் ஒவ்வொரு அணுக்களும் மேற்கூறப்பட்ட ஆறு மர்த்தபாக்களை சேகரித்துக் கொண்டவைகளாகும்.
அஹதிய்யத்து என்னும் மர்த்தபாவுக்கு பல உடைகள் உண்டு. அஹதிய்யத்து என்னும் மர்த்தபா எல்லா அணுக்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் நிலைக்களம் அந்த அஹதிய்யத்தேதான். என்றாலும் அது, அதுவென்றவிதத்தில் அதைத் தவிர வேறு உஜூது இல்லை. (لاموجود الاّهي)
நீ நாடினால் ஒருவனான ஹக்கான அல்லாஹ்வின் உஜூதுதான் அதுவாகும் என்று சொல்லுவாய். அவன் எல்லா கோலங்களினதும் கஜானாவாகும். எல்லா வெளிப்பாட்டினதும், சுற்றுகளினதும், நிலைகளினதும், ஷுஊன்களினதும், சிபத்துகளினதும், நஃதுகளினதும் கஜானாவாகும்.
கலப்பற்ற அல்லாஹ் என்னும் உஜூது முதலாவதாக வஹ்தத் என்னும் உடை, பின்னர் வாஹிதிய்யத் எனும் உடை, பின்னர் றூஹிய்யத் என்னும் உடை, பின்னர் மிதாலிய்யத் எனும் உடை, பின்னர் ஷஹாதா என்னும் உடைகளை அணிந்தான். ஆகவே உடைகள் ஐந்தாக ஆகிவிட்டது. ஆனால் உடைகளை அணிந்தவன் ஒருவனேதான்.
இந்த உடைகள் என்பது கொண்டு அதற்கு நாம் இருளினாலானதும், ஒளியிலானாலானதுமான திரைகள் என்று சொல்கிறோம். அவனுடைய பரிசுத்தமாக்கப்பட்ட முகத்தின் பேரில் உள்ள திரை என்று நாம் கூறுகிறோம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி அறிவித்தது போல, ஹதீதுடைய கடைசியில் அவர்கள் சொன்னார்கள், இந்த திரைகளை உயர்த்துவானேயானால் அவனின் முகத்தின் பிரகாசம் அவன் பார்வை எட்டுமிடமெல்லாம் நிச்சயம் எரித்து விடும்.
திரையை உயர்த்துவது என்பது கொண்டு கருத்து ஆலம் எரிவதுதான். ஆலமாவது மேலான அல்லாஹ்வுடைய முகத்தில் உண்டான திரைகளாகும்.
அதை உயர்த்துவது என்பது அதை அழிப்பதாகும். வஸ்த்துக்கள் அனைத்தும் அவன் முகத்தைத் தவிர அழிந்தவைகளாகும். வகுல்லு செய்யின் ஹாலிக்குன் இல்லா வஜ்ஹஹு.
நான் உனக்கு இந்த மூடலான விசயத்தை மேலைக்கு விரிவுபடுத்துகிறேன். மிகவிரைவில் அதை கவனத்திற் கொள்ள, மதிமறந்த கூட்டத்தில் சேர்ந்து விடாதே.
ஜதுபு, இஜ்திபாஊ உடைய கூட்டத்தினரிடத்தில் இந்த படித்தரங்கள் நாலாகும். இவர்களிடத்தில்,
1வது மர்த்தபாவாகிறது தாத்துல் பஹ்து ஆகும்.
அஹதிய்யா எனும் மர்த்தபாவைக் கொண்டு கூறப்பட்ட மர்த்தபாவாகும். மற்றைய ஸூபிகளோடு ஏகோபித்ததாக.
தாத்துல் பஹ்து எனும் மர்த்தபாவாகிறது அதற்கு கீழ் உண்டான மர்த்தபாக்கள் அனைத்தும் அதிலிருந்து உண்டானது ஆகும். இன்னும் வேறொன்றிலிருந்து உண்டாவதிலிருந்து பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அதற்கு மேலே ஒரு மர்த்தபாவும் இல்லை. அதில் மறைந்திருக்கும் ஷுஊனாத்துக்களாகிறது அதன் ஐனேயாகும்.
2வது மர்த்தபாவாகிறது அஸ்மாக்கள் எனும் மர்த்தபாவாகும். இந்த அஸ்மாக்கள் என்பது ஷுஊனாத்துகள் எனும் உடைகளின் கோலங்களாகும். ஆதியான அறிவில் அந்த தாத்து அந்த ஷுஊணைக் கொண்டு உடை அணிந்தால் உண்டாகும் கோலமே அந்த அஸ்மாவாகும். நீ தவ்ஹீதுல் அஸ்மா எனும் பாடத்தில் விரிவுரையிலிருந்து அறிந்தது போல.
ஷுஊனாத்து என்னும் உடைகளை கொண்டு உடை அணிந்ததன் பிறகு அவனது அறிவில் வரக்கூடிய கோலத்திற்கு இஸ்மு என்று பெயர் வைக்கப்படும். றஸ்ஸாக்கிய்யா – உணவளிப்பவன் என்ற கோலத்தைப் போன்று, அது ஒரு தெய்வீக நாமமாகும். உணவு அளிக்கப்படுகிறவன் என்ற கோலம் போன்றும், இது கௌனிய்யான நாமமாகும். றஸ்ஸாக்கியாவும், மர்ஸூக்கிய்யாவும் எனும் இரண்டு கோலமும் தாத்தில் மறைந்திருந்த ஷஃனு ஆகியிருந்தது. இவை இரண்டையும் கொண்டு உடை அணிந்த பொழுது இவை இரண்டும் இரண்டு நாமங்களாக ஆகிவிட்டது. முஸம்மாதானான பாகத்திலுள்ள இரண்டு இஸ்மாக ஆகிவிட்டது.
இதுபோன்று வெளியில் உண்டான உன்னுடைய கோலத்தையும் இதன்பேரில் ஒழுங்குப் பிடிப்பாயாக. உன்னுடைய கோலம் தாத்தில் மறைந்திருந்த ஷுஊனாக இந்த உடையைக் கொண்டு உடையணிவதற்கு முன் ஆகியிருந்தது.
அவனது இல்மில் உன்னுடைய கோலம் எனும் உடையைக் கொண்டு உடை அணிந்த பொழுது அல்லாஹ்வின் அறிவில் கௌனிய்யான நாமம் ஆகிவிட்டது. எனவே நீ ளாஹிரானதும் பாத்தினானதுமான கோலத்தைக் கொண்டு தாத்துடைய மர்த்தபாவில் நீ ஷஃனாக இருந்தாய். அறிவு எனும் மர்த்தபாவில் கௌனீயான இஸ்மாக ஆகிவிட்டாய்.
3வது மர்த்தபாவாகிறது செயல்களின் மர்த்தபாவாகும்.
செயல்கள் என்பது அஸ்மாக்களை உள்ளிருந்து வெளிக் கொணருவதற்கு தாத்திலிருந்து உண்டாகும் ஒரு உசும்புதல் ஆகும். அதாவது அல்லாஹ்வின் அறிவிலிருந்து காட்சி உலகுக்கு வெளிப்படுத்துவதற்கு உண்டாகும் உசும்புதலாகும்.
எல்லா அணுக்களும் தாத்துடைய உசும்புதலுக்குப் பிறகே ஒழிய தற்போது வெளியில் வராது.
அந்த உசும்புதலுக்கு நாட்டம் என்று பெயர் வைப்பது குற்றமில்லை. இந்த உசும்புதல்களுக்குதான் செயல் என்று கூறப்படும். தவ்ஹீதுல் அப்ஆலுடைய பாடத்தில் அறிந்தது போல. தேவையானால் அதைப் புரட்டிப் பார்.
4வது மர்த்தபாவாகிறது குணபாடுகளின் மர்த்தபாவாகும்.
வெளியில் உண்டாக்கப்பட்ட கோலங்களாகும் வெளியில் உண்டாக்கப்பட்ட உன்னுடைய கோலமாகிறது தாத்தின் உசும்புதலின் குணபாடாகும். எவ்விதமான உசும்புதல் எனில் அதைக் கொண்டுதான் உள்ளிருந்து வெளியே வந்தாயே அந்த உசும்புதலின் குணபாடே ஆகும்.
இஜ்திபாஊ எனும் கூட்டத்தாரிடத்தில் உலகம் என்பது குணபாடு என்று பெயர் வைக்கப்பட்டது.
என் சோதரா! இந்த 4 மர்த்தபாக்கள் என்னும் ஹகீகத்தில் நீ உற்று நோக்கினால், சமட்டியானதும், வியட்டியானதுமான இறக்கங்களின் ஹகீகத்தை நீ விளங்குவாய். இன்ஷாஅல்லாஹ்.
விரிவான முறையில் உலகிலுள்ள எல்லா அணுக்களின் ஹகீகத்து வரையும் நீ விளங்குவாய்.
நீ அறிந்து கொண்டாய். வெளியில் வெளியில் உண்டாக்கப்பட்ட எல்லா அணுக்களும் தாத்துடைய மர்த்தபாவில் அது ஷஃனாக இருந்தது. அல்லாஹ்வின் இல்முடைய மர்த்தபாவில் இல்மாகவும் இருந்தது. வெளியில் குணபாடாகவும் ஆகிவிட்டது. ஏனெனில் உன்னுடைய அறிவில் உன்னுடைய கோலம் தரித்திருப்பதனாலாகும்.
அறிவெனும் கோலத்தை விட்டும் நீ அழிந்து விட்டால் நீ ஷுஊனாத்தைக் கவனித்தால் அல்லாஹ்வின் ஷுஊனாத்துக்களிலிருந்தும் ஒரு ஷஃனாக ஆகிவிட்டாய்.
இக்கவனிப்பையும் நீ உன்னை விட்டும் உரிந்து விட்டால் தாத்தில் பனாவானவனாகி விட்டாய்.
தாத்துடைய தஜல்லியாத்துக்களின் பேரில் எல்லா ஹிம்மத்துக்களையும் ஒருங்கு குவித்து கூடுதலான முறாக்கபாக்களின் பிறகே ஒழிய தாத்தில் பனாவாவது உண்டாக மாட்டாது. இது முறாக்கபாவின் கோலமாகும். சோதரா! உன் மீது கடமை உன் வெளிரங்கமான எல்லா புலன்களின் வாசல்களையும் நீ அடைப்பது உன் மீது கடமை. எப்படியெனில் حتي تكون من الّذين هم صمّ بكم عمي فهم لا يرجعون என்ற கூட்டத்தில் ஆகின்றவரையில் நீ அடைக்க வேண்டும். மேலான அல்லாஹுத்தஆலா அல்லாத ஒருவன் பேரிலும் பேசவோ, பார்க்கவோ, கேட்கவோ மாட்டார்கள்.
இந்'த விசயத்தில் கூடுதலான தெண்டிப்புகள்ள செய்ய வேண்டும். எதுவரையnனில் பார்க்கப்படக் கூடிய வஸ்த்துக்களின் ஒன்றையும் நீ பார்க்க மாட்டாய். கேட்கப்படக் கூடிய வஸ்த்துக்களில் எதையும் நீ கேட்க மாட்டாய். சுவைத்தறிவில் ஒன்றையும் நீ சுவைத்தறிய மாட்டாய். நுகர்ந்த அறிவில் ஒன்றையும் நீ நுகரமாட்டாய், தொட்டறிவில் ஒன்றையும் நீ தொட்டறிய மாட்டாய அதுவரையில்.
இவ்வாறு வெளியான எல்லாப் புலன்களும் உன்னை விட்டும் மறைந்துவ pட்டால், நீயும் இவைகளை விட்டும் மறைந்து விட்டாய். அப்போது நீ நாஸ்தியானவனாக ஆகிவிட்டாய். வெளிரங்கத்தில் புலப்படக் கூடிய எல்லா கோலங்களை பார்ப்பதை விட்டும் நீ பனாவாகி விட்டாய். அப்பொழுது அஸ்மாக்கள் எனும் மர்த்தபாவில் சேர்ந்து விட்டாய்.
அப்போது நீ அல்லாஹ்வின் இஸ்மாகவும் அவனைக் கொண்டு பாக்கியானவனாகவும் ஆகிவிட்டாய். ஏனெனில் உன்னைக் கொண்டுள்ள அறிவு உனக்கு உண்டாவதனால் ஆகும்.எப்படி உண்டாகிறது ஏனெனில் உள்ளரங்கமான புலன்கள் எனும் வாசல் திறந்து இருப்பதுனாலேயே ஆகும்.
செவிடன் போல், குருடன் போல், ஊமையன் போல் எதையும் கேட்கவும் பார்க்கவும், பேசவும் மாட்டாய். என்றாலும் நீ உன்னை அறிகிறாய், விளங்குகிறாய், சிந்திக்கிறாய், உற்று நோக்குகிறாய் உன்னுடைய உள்ளரங்கம் என்னும் புலன்களெனும் செயலினால்.
இதன்பிறகு, சோதரா! மீண்டும் பாத்தினிய்யத்தான புலன்களின் வாசல்களை அடைப்பதில் நீ கூடுதலான தெண்டிப்பைக் கொண்டு செயற்பட வேண்டும். எதுவரையெனில் ஒரு கூட்டத்தில் நீ சேரும்வரையில்
அக்கூட்டம் யார் எனில்,
لا يعلمون شيئا ولا يعقلون ولايفقهون ولايتدبرون ولا يتفكرون ஆகும். எதையும் அறியவோ, விளங்கவோ, யோசிக்கவோ,சிந்திக்கவோ செய்ய மாட்டார்கள்.
மறைவான உள்ளிலுள்ள புலன்களின் வாசல்களை அடைப்பது கொண்டு இக்கூட்டத்தில் சேரும்வரையில் தெண்டிக்க வேண்டும்.
எதுவரையில் அக்லிய்யத்தான சிந்தனையான, கற்பனையான, பிரமையான வஸ்த்துக்களை எட்டுவதை விட்டும் நீ மறையும் வரை தெண்டிக்க வேண்டும்.
அப்போது நீ இவை அடங்கலை விட்டும் மறைந்து விடுவாய். இஸ்மு எனும் கோலத்தை விட்டும் நீ அழிந்து விடுவாய். உண்மையான ஒருவனான ஹக்கின் தாத்தில் அழிந்து விடுவாய். இது பக்ரு பரிபூரணமானால் அவன்தான் அல்லாஹ் என்பதின் கருத்தாகும்اذاتم الفقر فهو الله தேவை என்பது வெளியில் உண்டாக்கப்பட்ட கோலங்களுக்கு நிர்ப்பந்தமானது போல, இஸ்மிய்யா என்னும் மர்த்தபாவிலும் அது தேவையாகும். எதற்குத் தேவையெனில் அது நிலைப்பதின் பேரிலும் அதை நிலைக்கச் செய்பவன் பேரிலும் தேவையாகும். எதுபோலவெனில் அலைகள் நிலைத்திருப்பதற்கு கடல் தேவையானது போல இல்மிலும் வெளியிலும்.
வெளிரங்கத்திலும், இல்மிலும் அக்கோலங்கள் அழிந்தால் அதற்கு ஒரு தேவை பாக்கியாகாது.. ஒரு தேவையும் இல்லை. இதுதான் பக்ரு பூர்த்தியாகுதல் என்பதன் கருத்தாகும். இந்த பக்ரு என்பது ஐசுவரியத்திற்கு நிகரானது என்று எண்ணி விடாதே. அப்திய்யத்து எனும்கோலம் ருபூபிய்யத்து கொண்டு மாற்றப்பட்டு விட்டது என்றும் எண்ணி விடாதே. மீண்டும் மீண்டும் இவ்வாறு எண்ணிவிடாதே என்று எச்சரிக்கிறேன். ஏனெனில் ஆதேயம் ஆகிறது அறவே உஜூது எனும் வாடையைக் கூட நுகரவில்லை.
வெளிரங்கமான கோலமாகிறது இஸ்மிய்யத்தான உள்ளிலான கோலத்தைப்போல், ஹக்குடைய தாத்துடைய நிலைகளில் நின்றும் ஒரு நிலைதான், சுற்றுகளில் நின்றும் ஒரு சுற்றுதான். அதற்கு ஆதேயமும்தான். அது அழிவதற்கும் மாறுவதற்கும் அதற்கு ஒரு தனித்த உஜூது இல்லை. இவற்றின் நிலை கானல் நீரின் நிலை போல் ஆகும்.
காணப்படும், ஆனால் வெளியில் அறியப்பட மாட்டாது. அதன் அழிவும் நிலையும் கற்பனையிலும் பிரமையிலும்தான், உண்மையில் இல்லை. பலவிடுத்தம் இவ்விசயத்தை இந்த புத்தகத்தில் இதற்கு முன் நீ அறிந்தது போல்.
உன் பெயரில் குற்றம் இல்லை. அடிமையெனும் கோலம் அழிந்து விட்டது என்றும், ஒரு விசயம் அதன் அசலுக்கு திரும்பி விட்டது என்றும் நீ தீர்ப்பு செய்தால் உனக்கு அது குற்றமில்லை. அந்த அசல் மேலான ஹக்கின் தாத்தே ஆகும். ருபூபிய்யத் எனும் பெயரைக் கொண்டு பெயர் வைப்பதை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்ட தாத்தாகும். ஏனெனில் ருபூபிய்யத் என்பது உபூதிய்யத்துக்கு நேர்பாடானதாகும். உபூதிய்யத் எனும் சூறத்து அழிந்து விட்டால் ருபூபிய்யத் என்னும் கண்ணாடியும் உடைந்து விடும். அப்போது ருபூபிய்யத்தும் இல்லை, உபூபிய்யத்தும் இல்லை.
அப்தானது றப்பாகிவிட்டது என்ற கருத்துக்கல்ல. றப்பு ஒரு போதும் அப்தாகவும் மாட்டான். அப்து ஒருபோதும் றப்பாகவும் மாட்டான். எனினும் அப்து, றப்பு என்ற இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பார்க்கக் கூடிய இஸ்முகளாக ஆனபொழுது ஒன்றோடு ஒன்று சேர்த்தலில் ஒன்று பாக்கியாகாவிட்டால் மற்றதும் பாக்கியாகாது.
அந்த இரண்டு கோலங்களும் உயர்ந்து விட்டால் அங்கு ருபூபிய்யத்து என்ற கோலமும், உபூதிய்யத்து என்ற கோலமும் இல்லை. இது போலவே அடிமையும் இல்லை, எஜமானும் இல்லை. எனவே ஸூபிகளின் சொல்லின் கருத்தை நீ விளங்கு. அது எதுவெனில்العبد عبدوان ترقي எவ்வளவு ஏறினாலும் அப்து அப்துதான், எவ்வளவு இறங்கினாலும் ரப்பு ரப்புதான்الربّ ربّ وان تنزل எனும் சொல்லாகும்.
இந்த கட்டுப்பாடு (அடியான், றப்பு) உயர்த்தப்பட்ட பின் அங்கு றப்பும் இல்லை, அடியானும் இல்லை) பனா என்பதற்கு மூன்று மர்த்தபாக்கள் உண்டு. அதில் இரண்டு ஏறுதலுடையது. மற்றதான மூன்றாவதானது படைப்பினங்களின்பேரில் திரும்புவதாகும்.
அதில் முதலாவதாகிறது தாத்தின் ஐன் அழியும் மர்த்தபாவாகும்.
அதில் இரண்டாவதாகிறது குணபாட்டு அழியும் மர்த்தபாவாகும்.
சோதரா! நீ அறியவில்லையா? ஒவ்வொரு வஸ்த்துவுக்கும் ஒவ்வொரு ஐனும் அதறும் உண்டு என்று. உதாரணம் ஐஸ் போல். இதற்கு ஒரு ஐன் உண்டு. அது அந்த உறைந்த கோலம் ஆகும். அதற்கு குணபாடும் உண்டு. அதாவது குறிப்பான குளிர்த்தன்மை ஆகும். அந்த உறைந்த கோலம் அழிந்துவிட்டால் ஐஸின் ஐன் அழிந்து விட்டது. ஆயினும் அதனுடைய குணபாடு பாக்கியாக இருக்கும். சற்று நேரத்தின் பிறகு ஐஸின் குணபாடும் அழிந்து விடும். அந்த குளிர்த்தன்மை நீங்குவது கொண்டு.
இப்பொழுது ஐஸ் எனும் ஐனும் அதனுடைய குணபாடும் அழிந்து விடும். நாஸ்த்தியான ஸாலிக் என்பவனும் இவ்வாறுதான் அழிந்து விட்டான்.
முதலாவது அவனுடைய ஐன் அழியும். அவனது குணபாடு பாக்கியாகும். தன் நப்ஸை அழிந்ததாகவே ஒழிய காண மாட்டான். அப்போது அவனுடைய குணபாடுகளான கவலை, சந்தோசம், இரக்கம், அடக்கியாளுதல், பசி, தாகம் என்பது போல அல்லது சுகம், நெருக்கடி, கஷ்டம் போல. இவை அழியவில்லை. இவை இவனுடன் நிலைத்திருக்கிறது, குணபாடும் செய்கிறது. இக்குணபாட்டை ஸாலிக் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறான். ஐன் அழிந்த மர்த்தபாவில் தன் நப்ஸை தொட்டும் அவன் 'அனல் ஹக்கு' என்று சொல்லுவான். காரணம் தனக்கும் ஹக்குக்கும் இடையில் இரண்டு இருப்பது பாக்கியாக இருப்பதற்காக (அவனுடைய குணபாடுகள் பாக்கியாக இருந்ததற்காக) ஹக்கு என்ற வார்த்தையை சேர்க்கிறான். அவ்வாறு சேர்த்து 'அனல் ஹக்கு' என்று மொழிகிறான்.
'அன' என்பது கொண்டு தன் நப்ஸை மொழிகிறான். 'ஹக்கு' என்பது கொண்டு அல்லாஹ்வின் தாத்தை மொழிகிறான்.
இதற்குப் பின்னால் அல்லாஹுத்தஆலா அவனுடைய குணபாடுகளை அழிப்பது கொண்டு உதவி செய்தால், (ஐஸ் அழிந்தபின் ஐஸின் குளிரை அழிப்பது கொண்டு உதவி செய்தால்) தாத்தில் அழிந்தவனாக மாறுகிறான். இப்போது இவனுக்கு 'மஜ்தூபு' என்றும், 'முஸ்தஹ்லக்' என்றும் கூறப்படும். இப்பொழுது தன் நப்ஸைத் தொட்டும் ஹக்கு என்ற வார்த்தையைச் சேர்;க்காமல் 'அன' என்று மாட்டும் சொல்லுவான். ஹகீகத்திலே இந்த வார்த்தை அவனில் நின்றும் வெளியாகவில்லை. இங்கே மொழிகிறவனும், மொழியப்பட்டதும், மொழிவதும் மேலான ஹக்கான தாத்தில் இருந்துதான் வருகிறது.
மூன்றாவது மர்த்தபா திரும்புதலின் மர்த்தபாவாகும். ஏறுதல் என்னும் மர்த்தபா அல்ல. அந்த ஹக்குதஆலா அவனுக்கு, அவனது உதவி வரிசைகளைக் கொண்டு பூரணத்துவமான எல்லா சிபாத்துக்களை கொண்டும் ஜலாலிய்யா, ஜமாலிய்யா எனும் எல்லா நஃதுகளுடைய உடைகளை அணிவிப்பது கொண்டு உபகாரம் செய்தால், அடியான் என்னும் கோலம் உரியப்பட்ட பிறகு, அந்த அடியான் எனும் இடத்தில் ஒரு ரப்பானிய்யாவான லத்தீபாவை நிற்பாட்டியதன் பிறகு, அவனின் மஸ்த்தை விட்டும் தெளிந்ததன் பிறகும் பூரணமான தெளிவை கொடுத்ததன் பிறகும், அவனை திருப்பி மக்களின் பக்கம் அனுப்புகிறான். அதாவது மக்களை நேர்வழிப்படுத்துவதற்காக மக்களின் பக்கம் திருப்பி அனுப்புகிறான்.
அப்போது கலப்பற்ற ஹகீகிய்யாவான சொந்தமான அடியானாகவும அந்த மர்த்தபாவின் நிலைத்தவனாகவும் ஆகிறான். அப்போது தன் நப்ஸைத் தொட்டும் அவன் பேசுகிறான். அதாவது நான் அடிமை என்று பேசுகிறான்.
தாத்தில் நாஸ்தி ஆவதற்கு முன்னால் அவன் ஹகீகிய்யான சொந்தமான அடிமையாக அல்லாஹ்வுக்கு ஆகவில்லை.
என்றாலும், ஒரு நேரத்தில் தங்கம், வெள்ளிகளுக்கு அடிமையாகிறான். வயிற்றுத் தேவைக்கு அடிமையாகிறான். தன் நப்ஸுக்கும், அவன் இச்சைக்கும் அடிமையாகிறான். அவன் 'தல்வீன்' எனும் மகாமில் ஆகியிருந்தான். 'தம்கீன்' உடைய மகாமுக்கு மாற்றமாக, இப்பொழுது (பனாவுக்குப் பிறகு) அவளிலிருந்து தல்வீனுடைய மகாமு நீங்கி விட்டது. அவனுக்கு தம்கீனுடைய மகாம் உண்டாகிவிட்டது.
இப்பொழுது அவன் அல்லாஹ்வின் கலப்பற்ற அடிமையாக ஆகிவிடுகிறான். இப்படி அவன் திரும்பி வந்தபிறகு ஒவ்வொரு ஹக்குடையவனுக்கும் அததன் ஹக்கை கொடுப்பான்(அதாவது எந்த வஸ்த்துவை எதிலே வைக்க வேண்டுமோ அதிலே வைப்பான்)
எல்லா வஸ்த்துக்களிலும் ஆட்சி அதிகாரத்தை அவற்றின் அருகதையை அனுசரித்து ஆட்சி அதிகாரம் செலுத்துகிறான். ஒவ்வொரு வஸ்த்துவினுடைய குணபாடுகளையும், தீர்ப்புகளையும் பின்பற்றுகிறான். அல்லாஹ்வுக்காக நேசிப்பான், அல்லாஹ்வுக்காக கோபிப்பான், அல்லாஹ்வுக்காக தர்க்கிப்பான், அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வைக் கொண்டு, அல்லாஹ்வுக்காகன்றி வேறொன்றையும் தன் நப்சுக்காக காண மாட்டான். அவன் வலியாக இருந்தாலும் சரி.
என்றாலும் அவன் நுபுவ்வத் எனும் மர்த்தபாவுக்கு கண்ணாடி ஆகிறான். அவனில் இருந்து நுபுவத்தின் பிரகாசம் வெளிப்படும். சூரிய ஒளி அதற்கு நேர்பாடான கண்ணாடிக்குள் பிரகாசிப்பது போல.
ஒரு நபி எப்படி ஒரு உம்மத்துக்கு நபியோ அப்படி ஒரு ஷெய்கு அவரின் கூட்டத்துக்கு ஷெயகாகும்الشيخ في فومه كالنّبيّ في امّتهஎன்று சொல்லப்பட்டது போல.
எல்லாம் சுமந்த சுமக்கப்பட்ட சம்பூரண மனிதன்
الانسان الكامل المحمول الحامل
சோதரா! அறிந்து கொள்! அல்லாஹுத்தஆலா அவனுடைய விரிவான அறிவின் மர்த்தபாவில் தாத்தில் மறைந்திருக்கும் எல்லா ஷுஊனாத்துக்களையும் சுமந்து சேகரித்துக் கொண்ட ஒரு ஷஃனைக் கொண்டு வெளியான போது, அந்த இல்மு எனும் மர்த்தபாவில் உல்லா ஷுஊன்களுடைய கோலம் அனைத்தையும் ஒருங்கே சேகரித்துக் கொண்ட ஒரு கோலம் உண்டாகிவிட்டது. இது 'இஸ்முல் அஃலமாக' ஆகிவிட்டது.
எப்படிப்பட்ட இஸ்முல் அஃலம் எனில் மர்த்தபத்துல் வாஹிதிய்யா என்பது கொண்டும் ஹகீகத்துல் இன்ஸானிய்யா என்பது கொண்டும் சூறத்துல் முஹம்மதிய்யா என்பது கொண்டும் மர்த்தபத்துல் அஸ்மாயிய்யா என்பது கொண்டும் மர்த்தபத்துல் உலூஹிய்யா என்பது கொண்டும் இவை அல்லாத்தது கொண்டும் அதிகமான இபாரத்துகளைக் கொண்டு இபாரத்து இடப்பட்ட ஒரு இஸ்மின் கோலம் உண்டாகிவிட்டது. எதற்காகவெனில் அதிகமான வகைகள் அதில் உண்டாகியிருப்பதற்காக.
இந்த இஸ்முல் அஃலமாகிறது அஸ்மாஉல் ஹுஸ்னாவுடைய ஹளறாத்துகள் எல்லாலற்றையும் ஒருமித்து சேகரித்துக்கொண்டதாகும். உதாரணம் ரஹ்மானிய்யத்து, றுபூபிய்யத்து, இவை அல்லாத்தது போல.
வஹ்தத் எனும் மர்த்தபாவாகிறது ஹகீகத்துல் முகம்மதிய்யாவின் மர்த்தபாவாக ஆகியிருந்தது. இந்த வாஹிதிய்யா என்னும் மர்த்தபாவாகிறது முஹம்மதிய்யாவின் கோலங்களாக ஆகிவிட்டது. இதுவே இஸ்முல் அஃலம் ஆகும். அதைக் கொண்டு உதவித் தேடப்படும் இஸ்மாகவும் ஆகிவிட்டது. இது முஸம்மாவின் ஐனாகும். எல்லா பரிபூரணத்துவங்களும், சிபாத்துகளும், இலாஹிய்யாவான நாமங்'களும், கௌனிய்யாவான நாமங்களும் விளையும் இடமாகவும் ஆகிவிட்டது. எல்லா சாதிகளினதும் வகைகளினதும், தனிப்பிரதிகளினதும் கோலங்களை அதன் குணபாடுகளுடனும், தீர்ப்புகளுடனும் ஆதியிலிருந்து அந்தம் வரை சுமந்து கொண்ட ஒரு கோலமாக ஆகிவிட்டது.
ஆதியிலிருந்து அந்தம் வரை உலகத்திலுள்ள எல்லா அணுக்களும் சேகரித்துக் கொண்ட கோலங்களைக் கொண்டு அது முஹம்மதிய்யாவின் கோலத்தின் பரிபூரணத்துவத்தைக் காட்டும் கண்ணாடிகளாகவும் அது வெளியாகும் இடமாகவும் ஆகிவிட்டது. இவ்வாறு எல்லா அணுக்களும் தனித்த கோலத்தைக் கொண்டு சூறத்து முஹம்மதிய்யாவின் பரிபூரணத்துவத்துக்கு கண்ணாடியாக ஆகிவிட்டது. எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு கமாலும் ஆதியிலிருந்து அந்தம் வரை சூறத்துல் முஹம்மதிய்யாவில் இருந்து ஒழிய வெளியாக மாட்டாது. இடங்களும் இதிலிருந்துதான் வெளியாகிறது.
ஆலத்திலுள்ள ஒவ்வொரு அணுக்களும் அதன் சூறத்தைக் கொண்டும் இடத்தைக் கொண்டும் குணபாடுகளைக் கொண்டும் தீர்ப்புகளைக் கொண்டும் சூறத்துல் முஹம்மதிய்யாவிலிருந்து உண்டாகிறது. சூறத்துல் முஹம்திய்யாவாகிறது எந்த ஒரு அணுவிலும் வெளியாவதில்லை. அதன் ஏற்புத்தன்மை அருகதை விஸ்தீரணம் என்பதற்கமைவாகவே ஒழிய.
சிலநேரம் ஒரு அணுவில், அதின் கமாலியத்திலிருந்து ஒரு கமால் வெளியாகும். இன்னொரு அணுவில் இரண்டு கமாலாத்துகள் வெளியாகும். இன்னொரு அணுவில் இவை இரண்டையும் விட கூடுதலாகவும் வெளியாகும். எந்த ஒரு அணுவிலாவது அது அல்லாத்ததைச் சேர்த்துப் பார்ப்பதைக் கொண்டு கூடுதல் கமாலாத்துகள் வெளிப்படுமோ அந்த கூடுதல் வெளியான அணு குறைவாக வெளியான அணுவை விட மேலானதாகும்.
அணுக்கள் அனைத்தும் ஹகீகத்துல் முஹம்மதிய்யாவின் கண்ணாடிகளாகும். எந்த அணுவும் அதன் கமாலாத்திலிருந்து ஒரு கமாலுக்கு நேர்படுகிறதோ அந்தக் கமால் அதில்(அணுவில்) பதிந்து விடும்.
உன்னுடைய வெளியான கோலத்ததுகு;கு எதிரிடையான ஒரு கண்ணாடியைப் போல, அக்கண்ணாடிக்கு எதிரிடையாக நீ இருந்தாலே ஒழிய, உன் உருவத்திலுள்ள அவயங்களை நீ காண மாட்டாய். மூக்குக்கு நேரான கண்ணாடியில் மூக்கைப் பார்ப்பாய், இதுபோன்று கண்ணுக்கு நேரான கண்ணாடியில் கண்ணைப் பார்ப்பாய். இதுபோன்று காதையும், கன்னத்தையும், முன்நெற்றியையும், உதட்டையும், தொண்டைக்குழியையும், தலையையும், கையையும், முதுகையும், பாதத்தையும் இவை அல்லாத்ததையும் அதற்கு எதிரான கண்ணாடியில் நீ காண்பாய்.
சிலவேளை ஒரு கண்ணாடியில் மூக்கையும் ஒரு கண்களையும் எட்டிக் கொள்வாய். காரணம் அக்கண்ணாடி அவை இரண்டுக்கும் நேர்பாடானதாக இருப்பதால், சிலவேளை மூக்கையும், கண்ணையும், முன்னெற்றியையும் ஒரு கண்ணாடியில் பார்ப்பாய். இதுபோல இன்னொரு கண்ணாடியில் இதற்கு அதிகமான அவையங்களையும் காண்பாய். காரணம் அவைகளுக்கெல்லாம் நேர் எதிராக அக்கண்ணாடி ஆகியிருந்ததற்காக.
இதுபோன்று முஹம்மதிய்யாவின் பரிபூரணத்துவம் என்ற கோலங்கள் கண்ணாடிகளில் கூடுதலாகவும் குறைவாகவும் வெளியாவதை ஒழுங்கு பிடித்துக் கொள்.
சிலவேளை நீ ஒரு கண்ணாடியில் உனது பரிபூரண கோலத்தை எட்டிக் கொள்வாய். காணரம் அந்த சூறத்து அந்தக் கண்ணாடிக்கு முழுவதுமே எதிரிடையானதற்காக.
இக்கண்ணாடி ஆகிறது மற்ற குறைவாகக் காட்டும் கண்ணாடியை விட மேலானதாகும். ஏனெனில் கோலம் அடங்கலையும் அது சேகரித்ததற்காக.
அப்போது ஆலம் பூராவும் அதன் எல்லா அணுக்களைக் கொண்டும் சூறத்து முஹம்மதிய்யாவின் கமாலாத்தைக் காட்டும் கண்ணாடிகளாகும்.
உலகத்தின் மறைந்த பாகமானது சூறத்து முஹம்மதிய்யாவின் மறைந்த பாகத்தின் கண்ணாடியாகும். உலகத்திலுள்ள வெளிரங்கமான பாகமாகிறது சூறத்து முஹம்மதிய்யாவின் வெளியான பாகத்தின் கண்ணாடியாகும். சேகரித்துக் கொண்ட கோலங்களைக் கொண்டும் தனித்ததாக உள்ள கோலங்களைக் கொண்டும் அதனுடைய கண்ணாடி ஆகும்.
ஆலத்திலுள்ள எல்'லா அணுக்களும் ஒரு வேளை ஒரு கமாலாத்துக்கு கண்ணாடியாகும். அல்லது பல கமாலாத்துகளுக்கு கண்ணாடிகளாகும். அதாவது கண்ணாடியின் அருகதையையும் விஸ்தீரணத்தையும் அனுசரித்து ஆகும்.
அப்போது ஹிகாயத்து செய்யப்படுகிறது, அதாவது எல்லா அனுக்களும் அவற்றின் அருகதையையும் விஸ்தீரணத்தையும் பொறுத்து சூறத்து முஹம்மதிய்யாவின் பரிபூரணத்தை வெளியாக்கும் கண்ணாடிகளாகும் என்று.
நபிமார்களாகிறவர்கள் (எமது நபி பேரிலும் மற்ற நபிமார்கள் பேரிலும் அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் உண்டாவதாக!) முஹம்மதிய்யாவின் நபித்துவத்தின் கமாலாத்துகளுகு;கு எதிரிடையான கண்ணாடிகளாக ஆகியிருந்தார்கள்.
அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் அவர்களுடைய அருகதையையும் விஸ்தீரணத்தையும் பொறுத்து தரிபட்டிருந்தது.
தத்துவ ஞானிகளும் சூறத்துல் முஹம்மதிய்யாவின் கண்ணாடிகளாக இருந்தார்கள். அந்த தத்துவ ஞானங்கள் எனும் கமாலாத்துக்கு எதிரிடையான கண்ணாடிகளாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கிடையேயும் ஏற்றத்தாழ்வு எனும் வாசல் திறக்கப்பட்டிருந்தது. இதுபோலத்தான் உம்மத்திலுள்ள அவ்லியாக்களுமாகும். இவர்கள் விலாயத் எனும் கமாலாத்துக்குரிய எதிரிடையான கண்ணாடிகளாக ஆகுகின்றார்கள். அவர்களுடைய அருகதை விஸ்தீரணத்துக்கு அமைவாக ஏற்றத்தாழ்வு உடையவர்களாகவும் ஆகியிருந்தார்கள்.
அவர்களின் சிலர், சிலரை விட உயர்ந்தவர்களாகவும், மேலானவர்களாகவும் சிலர் சிலரை விட குறைந்தவர்களாகவும் கியாமநாள் வரைக்கும் ஆகியிருப்பார்கள்.
இதே போன்றே அறிவை உடையவர்களும், கலைகளை உடையவர்களும், தொழில் திறன் உடையவர்களும் இவர்கள் அனைவர்களும் அந்த சூறத்து முஹம்மதிய்யாவின் எதிரிடையான கண்ணாடிகளாகும். இதே போன்ற விசயம் ஆதியிலிருந்து அந்தம் வரையில் சங்கிலித் தொடராக ஆகிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலமும் முறிபட்டுப்போகாது. துன்யாவிலும் சரி, ஆகிரத்திலும் சரி.
ஆகிறத்துடைய அறிவுடையவர்கள் இதனோடு சம்பந்தமான அறிவுகளை சூறத்து முஹம்மதிய்யாவின் கமாலாத்துக்களிலிருந்து எடுக்கிறார்கள். இப்படி எடுப்பவர் மலக்காக அல்லது மலக்கல்லாதவர்களாக இருந்தாலும் சரி. ஆதாரமாக இருந்தாலும் சரி, ஆதேயமாக இருந்தாலும் சரி. குர்சியாக இருந்தாலும் சரி, அர்ஷாக இருந்தாலும் சரி அந்த சூறத்து முஹம்மதிய்யாவிலிருந்து இந்த அறிவைப் பெறுகிறார்கள்.
சூறத்துல் மு ஹம்மதிய்யா எனும் கமாலாத்துகளாகிறது அவை அனைத்தும் வெளியில் ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் தற்பொழுது உண்;டானவைகளாகும். ஆனால் அது உலகில் வெளியாவது காலங்களைக் கொண்டும், இடங்களைக் கொண்டும், ஷர்த்தாக்கப்பட்டதாகும். மேலான ஒருவனான ஹக்கானவனின் ஹிக்மத்தைக் கொண்டு.
அப்பொழுது இன்ஸான் காமிலானவன் தாத்தியான ஷுஊனாத்துகளின் எல்லா கோலங்களையும் சுமந்தவனாவான். நீ நாடினால் காயினாத்துகள் (உண்டாக்கபட்ட பொருள்கள்) அனைத்தையும் அவற்றின் அதறுகளுடனும் ஹுக்முகளுடனும் அந்தக் கோலங்களை சுமந்தவனாவான் என்று சொல்லலாம். அவன் ஹக்கான ஒருவனான தாத்தால் சுமக்கப்பட்டவனுமாவான். 'லாஇலாஹ இல்லல்லாஹி முஹம்மதுர்ரஸூலுல்லாஹி'.
சூறத்து முஹம்மதிய்யாவின் பாத்தினாகிறது அல்லாஹ்வாகும். ளாஹிறாகிறது இன்ஸான் காமிலாகும். இதுபோலத்தான் ஆரம்பம் அல்லாஹ்வுக்கு உள்ளதாகும். கடைசி என்பது இன்ஸான் காமிலுக்கு உள்ளதாகும். உண்மையில்,ஆரம்பமானவனும், கடைசியானவனும், வெளியானவனும் அவனே. அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்.
حقبقة تنولات الخوئية التي بها تظهر كل ذرة من البطون الي الظهور
வியட்டிகளின் இறக்கங்களின் ஹக்கீகத்து, எவ்வாறானதெனில் அதைக்கொண்டு (அந்த தனஸ்ஸுலாத்தைக் கொண்டு) உள்ளிருந்து வெளிக்கு ஒவ்வவொரு அணுவும் வெளியாகிறதே அவ்வாறான ஹக்கீகத்தாகும்.
நீ அறி சோதரா! இந்தப் பாடமாகிறது, இர்பானுடைய عرفانகஷ்புடைய كشفதௌகு ذوقஉடைய وخدانவிஜிதானுடைய வாசல்களுக்கு திறவு கோலாகும். பாதுகாத்துக் கொள். மனனம் செய்து கொள். அதை விட்டும் மருட்சியாய் இருக்காதே, எல்லாக் கணமும், எல்லா நேரமும் உன்னுடைய பார்வையை அதன் பக்கம் ஆகு;கு. நான் உனக்கு உதாரணம் சொல்கிறேன். உன்னிலிருந்து உன்னிNலு உண்மைக்கு நேர்பாடான ஒரு உதாரணத்தை சொல்ல போகிறேன். நீ அதைக் கொண்டு உன்னுடைய ஹகீகத்தை விளங்குவதற்காக.
அப்படியானால், நீ யார், நீ என்ன சாமான், நீ எங்கிருந்து வந்தாய் எதுவரைக்கும் போதகிறாய் என்பதையும் அறிந்து கொள்வாய். அப்படி அறிந்தால் அதைக் கெiமாண்டு உன் நப்சை நீ அறிவாய். அந்த அறிவைக் கொண்டு நீ உன்னுடைய றப்பை அறிவாய். من عرف نفسه فقد عرف ربه. யார் தன்னை அறிந்தானோ அவன் தன் நாயனை அறிந்தான் என்ற ஹதீதில் வந்தது போல்.
என் சோதரனே! உன்னுடைய ஆரம்ப உண்டாகுதலை நீ உற்றுப் பார். நீ என்பது தனித்த இந்திரியத் துளியைத் தவிர வேறில்லை. இது (இந்திரியம்) உஜூது என்னும் கசானாவிலிருந்து உண்டாயிற்று. உஜூது என்பது எல்லா விசயங்களுக்கும் கசானாவாகும். அந்த வஸ்த்து ஆதாரமாக இருந்தாலும் சரி ஆதேயமாக இருந்தாலும் சரி كنت كنزا مّخفياّ فا حببت ان اعرف فخلقت الخلق(நான் மறைபொருளாக இருந்தேன். என்னை அறியப்பட ஆசித்தேன். கல்க்குகளை படைத்தேன்.)
படைப்பினங்கள் அனைத்தும் அது வெளியாவதை ஏற்றுக் கொண்டாலம் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி உஜூது எனும் கசானாவில் பாதுகாக்கப்பட்டது. ஆதியில் இருந்து அந்தம் வரை அவனுடைய இல்மில் தரிபடுத்தப்பட்ட நேரங்களில் அந்த கன்சில் இருந்து வெளியாகும் ஆச்சரியமான தொடரான கோர்வையை அனுசரித்து.
இந்தரியம் எனும் சூறத்தாகிறது உஜூதின் சுற்றுகளில் இருந்து ஒரு சுற்றாக ஆகியிருந்தது. இதன் பேரில்தான் உன்னுடைய ஆரம்ப உண்டாகுதல் ஆரம்பமாயிற்று. பல சுற்றுகளில் பல தஜல்லிய்யாத்திற்குப் பிறகு உஜூது வெளியாயிற்று. அந்த உஜூது உணவு எனும் கோலமாக அனேக தொடரப்பட்ட தஜல்லியாத்துக்களுக்குப் பிறகு தொடர்ந்த தஜல்லியாகும்.
வித்தின் கோலம் போல, பல பாகங்களைக் கொண்டு பாகமாக்கப்பட்ட மரத்தைப் போல, அதிலுள்ள ஒவ்வொரு பாகமும் அதனுடைய சொந்தமான தஜல்லியாகும். ஒருவகையில் தொடர்ந்த தஜல்லியாகவும், இன்னொரு வகையில் தொடரப்பட்ட தஜல்லியுமாகும்.
ஆகவே அந்த உஜூதாகிறது மணிக் கோதுமை எனும் கோலத்தில் தஜல்லியாயிற்று. பின்னர் மாவாக்குதல் என்னும் பெயரில் அது தஜல்லியாயிற்று. அது மீண்டும் தொடர்ந்ததும்,தொடரப்பட்டதுமான அனேக தஜல்லியாத்துக்களுக்குப் பிறகு மாவெனும் கோலத்தில் வெளியாயிற்று. பின்பு அது ரொட்டி எனும் கோலத்தில் வெளியானது. பின்பு விழுங்குதல் எனும் கோலத்தில் வெளியானது. உடலில் புகுந்தபின் சமித்தல் எனும் கோலத்தில் வெளியானது. பின்பு சாறும் சக்கையும் எனும் கோலத்தில் வெளியானது. பின்பு அது இரத்தம் எனும் கோலத்தில் வெளியானது. பின்பு அது ஒவ்வொரு பாகங்களுக்கும் பங்கிடுதல் எனும் கோலத்தில் வெளியானது. பின்பு இரத்தம் இந்திரியமாக மாறும் கோலத்தில் ஆகிவிட்டது. பின்பு அதை இந்திரியப்பையில் இருந்து வெளியாக்குதல் எனும் கோலத்தில் ஆயிற்று. பின்பு அதை கற்பப்பையினுள் புகுத்தும் கோலத்திலும் ஆயிற்று. அதன்பிறகு இந்திரியம் கற்பப் பையில் இரத்தம் எனும் கோலத்தில் ஆயிற்று. அதாவது இந்திரியம் இரத்தமெனம் கோலமாக மாறிற்று. அதன்பின்பு சதைக்கட்டி எனும் கோலத்தில் வெளியாயிற்று. பின் அது கல்கு எனும் கோலத்தில் வெளியாயிற்று. பின்பு காலபை சரீரத்தை சமமாக்கும் கோலத்தில் வெளியாயிற்று.
பின்பு கண்ணு, மூக்கு, காது, முன்னெற்றி, புரவம், கன்னம், கண்ணிமை, கண் வட்டம், கட்குழி, தலை, முடி, பிடரி, தொண்டை, புயம், கணங்கை, முன்கை, விரல்கள் என்னும் கோலங்களில் உன்னுடைய القالب)காலபை அல்லாஹ் சமமாக்கியபோது தாத்தின் தேட்;டத்தை அனுசரித்து அதனுள் ரூஹை ஊதினான். இந்தக் கருத்தைக் கொண்டு உன்னுடைய காலபின் பாகங்கள் என்னும் கோலத்தின் பெயரில் வெளியான பிறகும், அதை சமப்படுத்திய பிறகும் ரூஹ் என்னும் கோலத்தில் தஜல்லியானான். ரூஹுக்கும் காலபுக்கும் உஜூதுடன் ஒரே தொடர்புதான் உண்டு. இவை இரண்டும் (ரூஹு, காலபு) உஜூதின் ஐனே ஆகும். உஜூது இவை இரண்டினதும் ஐன் ஆகும். அல்லாஹுத்தஆலா சொல்லுகிறான்
انما امرنا لشيئي اذاردناه ان تقول له كن فيكون(நாங்கள் ஒரு வஸ்த்துவுக்கு எங்களுடைய ஏவல் என்பது நாம் அதை குன் என்ற சொல்லை நாடுவோமேயானால் அது உண்டாகிவிடும்.)
அதிலிருந்து வெளியாகிறது அதாவது ஏவல் என்பது அல்லாஹ்வின் நாட்டத்தின் குணபாடாகும். ஏவல் என்பது அவனுடைய வெளிப்பாட்டின் கோலமே அன்றி வேறில்லை. றூஹு, காலபைப் போல அதனுடைய வெளிப்பாட்டின் கோலமாகும். இதிலிருந்து ஸ்திரப்படுகிறது அதாவது றூஹும் காலபும் அல்லாஹ்வுடைய ஏவலில் நின்றும் உள்ளது. மற்றும் அது உஜூதின் ஐனுமாகும். இதற்'காகத்தான் அந்த ஸூபியாக்கள் சொன்னார்கள் ‚ எங்களுடைய றூஹாகிறது எங்கள் சரீரமேதான். சரீரம் என்பது எங்களுடைய றூஹேதான்جسادنا ارواحنا) ;(ارواحنا اجسادنا ا
இவைகள் இரண்டும் றப்பின் ஏவலில் நின்றும் உள்ளதற்காகவும், உஜூதின் ஐன் ஆனதற்காகவும் இந்த ஸூபியாக்கள் வெளியில் உண்டான மனிதனை இரண்டு பாகங்களாக்கினார்கள்.
1.அவனின் வெளிப்பாகம் அது காலபு.(القالب)
2.அவனின் உள்பாகம். அது ரூஹு.الروح)
இந்த ஸூபிகள் ஒவ்வொரு வஸ்த்துகளுக்கும் உள்ளரங்கத்தையும் வெளிரங்கத்தையும் (சரீரத்தையும், ரூஹையும்) ஆக்கினார்கள்.
சரீரத்தை ஆலமுல் கல்க்கில் ஆக்கினார்கள்.
றூஹை அவர்கள் ஆலமுல் அம்றில் ஆக்கினார்கள்.
அங்கே அவர்கள் உலகை இரு உலகமாக ஆக்கினார்கள். அவர்கள் ளாஹிரையும், பாதினையும் பார்த்து ஒரு உலகை ஆக்கினார்கள். உண்மையில் அங்கு ஒரு ஆலமோ இரு ஆலமோ அல்ல. ஆனால் அNநுக ஆலமத்கள் உண்'டு. அதனுடைய எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் கணக்கிட முடியாது. நீ அறிந்தது போல,
எதற்காகவென்றால், தஜல்லியாத்துக்கள் கணக்கிடப்பட முடியாதது ஆகும். ஆலம்களையும் கணக்கிட முடியாது. ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கு கீழும் அநேக ஆலம்கள் இருக்கின்றன. அதில் ஒன்று மற்றொன்றுக்கு சமமாகாது என்பதற்காக. அல்லாஹ் எல்லா தஜல்லிகளிலும் பரிபூரணமானவனும, பரிபூரணமாக்கபட்டவனும் ஒருவனானவனும் தனித்தவனும் நிகரில்லாதவனும் ஆவான்.
றூஹுக்கு அம்று என்'றும் காலபுக்கு கல்கு என்றும் பெயர் வைத்ததாகிறது, அந்த ஸூபிகளிடத்தில் ஸ்திரப்பட்ட அடிப்படையின் பேரில் எடுத்ததற்காகும். ஏனெனில் அவ்வாஹ்வின் வழக்கத்தின் பேரில் வெளியாகக் கூடிய விசயங்களை வேறுபிரித்தரிவதற்காக, அல்லாஹ்வுடைய வழக்கமாகிறது முதலில் அவன் ஒரு சொந்தமான கோலத்தின் பேரில் வெளியாகிறான். இதன் பொருள் தனித்த ஒரு ஷஃனைக் கொண்டு உடை அணிகிறான். அதன் பேரில் ஸ்திரப்பட்டு நிற்கிறான். அதன் கோலம் பேதகமாகாது. இன்nனோர் தஜல்லியத்தின் கோலத்துடன் சேர்ப்பது கொண்டு அது மாற்றமடையவும் செய்யாது. அதன்பிறுகு அதைத் தொடர்ந்து அநேக தஜல்லியாத்துக்களைக் கொண்டு தஜல்லியானாலும் சரி. (இது போதகமாகவும் செய்யாது, மாறவும் செய்யாது) இந்த தஜல்லியாத்தை அதன் குணபாடாகவும் அதன் தீhப்;பாகவும் அந்த தஜல்லியாத்தை தொடர்ந்ததாகவும் ஆக்கினார்கள். என்றாலும் முந்தின கோலம் பேதகமாகவும் இல்லை. மாறவும் இல்லை. இக் கோலத்திற்கு ‚றப்புடைய ஏவல்' என்றும் பெயர் வைத்தார்கள். இதுபோன்ற மொத்தத்துக்கு ‚ஆலமுல் அம்று' என்று பெயர் வைத்தார்கள். உதாரணம் பரிந்த ஆலம்களைப் போல, அர்வாஹுகளைப் போல, உயர்ந்த மலக்கூத்தைப் போல, தாட்ழந்த மலக்கூத்தைப் போல, அது அல்லாத்தது போலவும்.
இது போன்றுதான் ஜாரியத்தான அவனின் வழக்கத்தில் நின்றும் உள்ளதாகிறது எண்ணிக்கையான தனித்த கோலத்தின் பேரில் அவன் தஜல்லியாவதும் இதில் நின்றுமுள்ளதாகும். அதன்பிறகு இணைப்பது எனும் கோலத்தின் பேரில் தஜல்லியாகிறான். சிலதை சிலதில் சேர்ப்பது கொண்டு அதன் முந்தின கோலம் மாறும் வரையும் தஜல்லியாகிறான். அதை ஒன்றோடு ஒன்று இணைப்பது கொண்டும் சேர்ப்பது கொண்டும் தனிப்பட்ட ஒரு கோலம் உண்டாகிறது. உதாரணம் உணவு எனும் கோலம் போல. அதிலிருநு;து உண்டாகும் இரத்தம் எனும் கோலம் போலும், இந்திரியத்தின் கோலம் போலவும் சற்றுமுன் சொல்லப்பட்ட அதிகமான தஜல்லியாத்துக்களைக் கொண்டும் சோக்;கப்பட்ட காலபின் கோலம் போலவும், பூமயின் கோலம் போலவும், வானத்தின் கோலம் போலவும், நிரசப் பொருள்களின் கோலம் போலவும், இவைகள் அனைத்தும் ளாஹிரான புலனைக் கொண்டு அறியப்பட்டவைகளாகும்.
அதனுடைய மறைவான பாகமாகிறது (அதைக் கொண்டு மலக்கூத்தை நாடுகிறேன். அல்லாஹ் சுப்ஹானஹுவத்தஆலா சொன்னது போல் -'فسبحان الذي بيده ملكوت كل شيئ (அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறேன். எல்லா மறைவான சங்கதிகளும் அவன் கைவசம் உண்டு. ஆலமுல் அம்றிலிருந்து) என்று சொன்னது போல அதன் கோலங்கள் பேதகமாகவும் இல்லை மாறவும் இல்லை. என்றாலும் அந்தக் கோலத்துக்கு அதைத்துயர்ந்த தஜல்லியாத்துக்கள் உண்டு. இந்த துயர்ந்த தஜல்லியாத்துக்களுக்கு குணபாடுகள் என்ளும் தீர்ப்புகள் என்றும் கூறப்படும்.
இன்னொரு கோலமாகிறது அதாவது மற்றக் கோலத்துடன் சேர்ப்பது கொண்டு உண்டாகக் கூடிய கோலமாகிறது அது பேதகமாவதுடன் மாற்றப்படுவதுடனும் அது ஆலமுல் கல்கு ஆகும்.
ஆரம்பத்தில் உண்டான கோலத்தை விட்டும் பேதகமாகாத மாற்றப்படாத கோலங்களாகிறது அவைகளுக்கு ஆதாறுகள், அஹ்காமுகள் பேரில் துயர்ந்த தஜல்லியாத்து இருந்தாலும் சரி இல்லாமல் இருந்தாலும் சரி. அதுவாகிறது ஆலமுல் அம்றைச் சார்ந்ததாகும்.
உதாரணம்: இன்சானுடைய றூஹைப் போல.
மீண்டும் எமது நாட்டத்துக்கு திரும்புவோம். ஹக்கான ஒருவனான வாஹிதான உஜூது காலபை சமமப்படுத்துதல் எனும் கோலத்தின் பேரில் வெளியான பிறகு காலபின் உள்ளிருந்து றூஹு எனும் கோலத்தில் வெளியானது, அந்த றூஹை இன்சானின் மறைவான பகுதி என்று அதை ஆக்கினான். ஆகNவு இன்சான் என்பவன் இரண்டு கோலங்களால் சேர்க்கப்பட்டவன் ஆகும்.
1.பாதினான றூஹிய்யான கோலம்.
2.காலபிய்யான வெளிரங்கமான கோலம்.
இவ்விரண்டு கோலங்களைக் கொண்டும் சோக்கப்பட்டவனே இன்சான் ஆகும். காலபிய்யா எனும் கோலம் ஆகிறது அது பேதகமாகவும் செய்யும், மாறுபடவும் செய்யும், அழியவம் செய்யும் பனாவாகவும் செய்யும். றூஹிய்யா என்னும் கோலமாகிறது அது பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது பேதகமாவதை விட்டும் மாறுவதை விட்டும் அழிவதை விட்டும், நீங்குவதை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது நீடூடி காலம் நிற்கின்றதுமாகும். ஆனால் அஸல்லியத்து அல்லாத்ததது ஆகும். அது படைக்கப்பட்து ஆகம். காலபை படைத்ததன் பிறகு இதுவே தஹ்கீகு உடையவர்களின் கொள்கை ஆகும். ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அல் கஸ்ஸாலி, செய்குல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹுமா என்பவர்கள் போன்று,
ஜிஸ்முகளுக்கு முன்பதாக அர்வாஹுகளைப் படைத்தான் என்ற ஹதீதாகிறது இந்த அக்ரகண்ணியர்களிடத்தில் வலிந்துரை செய்யப்பட்டதாகும். அவர்களிடத்தில் இந்த ஹதீதுக்கு அநேக வலிந்துரைகள் உள்ளன. ஸ்திரப்படுத்தப்பட்ட அவர்களின் உசூலை (علي اصولهم المقررة)அனுசரித்து.
மேல் விபரிக்கப்பட் விரிவுரைகளிலிருந்து அறிந்திருக்கப் போதும், நிச்சயமாக ஒரு கோலம் பல தஜல்லியாத்துகள் எனும் கோலங்களை சேர்த்ததன் பிறகு உண்டான கோலமாகிறது அதற்கு கல்கு என்று அழைக்கப்படும்.
ஒரு சூறத்துடனும் சேர்க்கப்படாத கோலத்திற்கு அதறு என்று கூறப்படும். உனது காலபாகிறது ஆலமுல் கல்க்கை சேர்ந்ததாகும். அதை சேர்க்கப்டுவதற்கு முன் வெளியான பல எண்ணிக்கையான கோலங்களை கொண்டு சேர்க்கப்பட்டது போல.
இந்திரியம் எனும் கோலம் ஒரு அம்ராகும். இரத்தக் கட்டி எனும் கோலம் ஒரு அம்ராகும். சதக்கட்டி எனும் கோலம் ஒரு அம்ராகும். உன் காலபிலுள்ள ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அம்ராகும். மூக்கு, காது, கண்ணு இவைகள் போல.
இவைகளை தனித்தனியாகப் பார்ப்பாயானால் அது எண்ணிக்கையாக்கப்பட்டதாகும். அது எல்லாம் சேர்ந்த கோலத்தை ஒரே கோலத்தில் நீ பார்ப்பாயானால் அதற்கு காலபு என்று சொல்லப்படும். இக்காலபாகிறது அது பலதாயிருப்பதுடன் ஒன்றாகும். ஒன்றாய் இருப்பதுடன் பலதுமாகும்.
இவ்வாறுதான் உனது றூஹும் ரப்பின் அம்றில் இருந்து ஒரு அம்றாகும். இது ஆலுமுல் அம்றை சார்ந்ததாகும். ஹகீகத்திலே அது வெளியான உஜூதாகும். அதாவது குறிப்பான றூஹு எனும் கோலத்தின் பேரில் வெளியான உஜூதாகும். றூஹு என்பது உஜூதில் நின்றும் ஒரு சுற்றாகும். அதன் நிலைகளில் நின்றும் ஒரு நிலையுமாகும். ஆலத்திலுள்ள அணுக்கள் அனைத்தையும் போல, அது மேலானதாக, தாழ்ந்ததாக, மிருதுவானதாக, திண்ணமானதாக இருந்தாலும் சரி.
இந்த றூஹு எனும் கோலமாகிறது உன்னுடைய காலபுக்கு ஒப்பானதாகும். அதன் பேரில் ஒவ்வொரு அணுஅணுவாக அச்சாக்கப்பட்டதாகும். காலபானது அதனுடைய எல்லா பகுதிகளைக் கொண்டும் றூஹானது அதனுடைய எல்லா ஆதாறுகள், அஹ்காமுகளைக் கொண்டும் ஹக்கான ஒருவனான உஜூதுக்கு வேறானதல்ல. (லாயிலாஹ இல்லல்லாஹு)
இந்த உஜூது றூஹு எனும் கோலத்தின் பேரில் தஜல்லியானதன் பிறகு அதனுடைய அஹ்காமுகள் ஆதாறுகள் எனும் கோலத்தில் வெளியாயிற்று. ஒருவனான தாத்து தேடின ஒழுங்கின் பேரில் தொடர்ந்ததும் தொடரப்பட்டதுமான தஜல்லியாத்துக்களைக் கொண்டு உஜூதுடைய கஸானாவிலிருந்து அது வெளியாயிற்று. அந்த உஜூது காலபைக் கொண்டு சூழ்ந்ததாகும். காலபின் வெளியில் அல்ல. ஆனால் அதன் உள்ளிலிருந்து, அது உஜூதாகும். அது உசும்புதல் எனும் கோலத்தின் பேரில் வெளியானது போல,
நீ இந்த றூஹுதான் காலபை இயக்குகிறது என்று எண்ணிவிடாதே. உசும்புதல், உசுப்பப்படுதல் எல்லாம் சுயமான றூஹைக் கொண்டுதான் என்று எண்ணி விடாதே. ஆனால் இவை அனைத்தும் உஜூதின் தஜல்லியாத்துக்கள் ஆகும். றூஹு எனும் கோலத்தின் பேரிலுள்ள தஜல்லியாகிறது உசும்புதல், உசுப்புகிறவன் எனும் கோலத்தின் பேரில் வெளியாவதற்கு ஷர்த்தாக ஆகியிருந்தது.
இங்கு பல தஜல்லியாத்துக்கள் உண்டு. உசும்புதல், உசுப்புதல், உசுப்புகிறவன், உசுப்'பப்பட்டது எனும் கோலத்தைப் போல இவை அனைத்தும் றூஹின் குணபாடு என்று பெயர் சொல்லப்படும். உசும்புதல் எனும் கோலத்தின் பேரில் தஜல்லியான பிறகு ஹக்குடைய உஜூது வெளிப்புலன்கள் எனும் கோலத்தில் வெளியாயிற்று.
வெளியான புலன்கள் 5 வகைகளாக ஆனபோது அதன் எல்லா வெளிப்புலன்களுக்கும் நேர்பாடாக ஒரு சொந்தமான புலன் எனும் கோலத்தின் பேரில் வெளியானான்.
கேள்வி எனும் கோலம்போல்,
பார்வை எனும் கோலம் போல,
ருசி எனும் கோலம் போல,
மணம் எனும் கோலம் போல,
தொட்டறிவு எனும் கோலம் போல
இந்த ஐந்து தஜல்லியாத்துக்களின் கோலத்தின் பேரிலும் வெளியான பிறகு கூட்டான புலன் எனும் கோலத்தில் வெளியானான். கற்பனை, பிரமை, மனனம், அதிகாரம், ஞாபகம், சிந்தனை எனும் கோலங்களில் வெளியானான்.
இவை அனைத்தும் உஜூதின் வெளிப்பாடுகள் ஆகும். இவை அனைத்திற்குமு; உஜூதுடன் ஒரே தொடர்புதான் உள்ளது. இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் றூஹின் குணபாடுகளும் அஹ்காமுகளுமாகும். இந்த றூஹாகிறது ஒரு வெளிப்பாட்டிற்கு கண்ணாடியாகும். அதாவது றூஹுன' அதர் என்றும் அஹ்காம் என்றும் எண்ணப்படக் கூடிய அந்த தஜல்லியாத்துக்களின் கண்ணாடியாகும். நீ நாடினால் நீ சொல்லுவாய், அந்த றூஹின் சிபாத்திலும் அதன் நஃதுகளிலும் நின்றுமுள்ளதாகும் என்று நீ சொல்லுவாய்.
சிபாத்துகளாகிறது மௌசூபைப் போலவே அந்த உஜூதின் தஜல்லியாத்துக்களும சுற்றுகளுமாகும். அப்போது ‚ஹயாத்து' என்பது சொந்தமான றூஹுடைய சிபத்து எனும் கோலத்தின் பேரில் தஜல்லியான ஒரு கோலமாகும். றூஹு என்பது சுயமாக ஜிஸ்முக்கு ஹயாத்தல்ல என்றாலும் ஹயாத்து என்பது உஜூதின் தஜல்லியாத்தில் நின்றுமுள்ளதாகும். நாட்டத்தைக் கொண்டு உசும்புதல், உணர்தல், எட்டிக் கொள்ளல், ளாஹிறான பாத்தினான புலன்கள் எனும் கருவிகளும் சரீரத்துக்கு ஹயாத்து எனும் சக்தியைக் கொண்ட கோலத்தின் பேரில் வெளியான வெளிப்பாட்டை தொடாந்த தஜல்லியாகும்.
றூஹாகிறது இந்த வர்ணிப்புகளைக் கொண்டு வர்ணிப்புப் பெறுவதைக் கொண்டும் அது சரீரத்தில் அதிகாரம் செய்வது கொண்டும் அதற்கு ஹயவானியத்தான றூஹு என்றும் சொல்லப்படும். இதற்கு நப்சு என்றும் பெயர் சொல்லப்படும். இந்த சக்திகள் திரும்பி விடுமேயானால், றூஹுக்கு சிபத்தான, குணபாடான உடம்பிலுள்ள உசும்புதலுக்கு காரணமான ஹயாத்து எனும் சக்தி வெளியிலிருந்து உள்ளபக்கம் திரும்பிவிடுமேயானால் (அதாவது செயலிலிருந்து அதன் தன்மைக்கு திரும்புதல் எனும் தஜல்லியைக் கொண்டு திரும்பிவிடுமேயானால்) ஹயாத்து எனும் சக்தி திரும்பிவிடுவது கொண்டு அந்த சரீரம் மைய்யித்தாக ஆகிவிடும்.
தற்பொழுது உள்ள ஹயாத்து எனும் சக்தி வெளியிலிருந்து உள்ளுக்கு திரும்பிவிடுமானால் அது றூஹுல் ஹயவானுக்குரிய மௌத்து என்று சொல்லப்படும். ஹயாத்து எனும் சக்தியின் ஐனாகவே ஒழிய றூஹுல் ஹைiவான் என்பது இல்லை.
இந்த றூஹுல் ஹயவானாகிறது தூக்கத்தினிடத்தில் அது மரணிப்பதில்லை. சரீரத்தை விட்டும் வெளியேறுவதும் இல்லை. வெளிரங்கத்தில் இருந்து உள்ரங்கத்திற்கு திரும்புதல் என்ற அர்த்தத்துக்காக.
தூங்குமிடத்தில் சரீரத்தை விட்டும் வெளியானதும், முழிக்கும் போது சரீரத்தில் உட்புகுவதுமான அந்த றூஹாகிறது அது பிரித்தறியும் றூஹாகும். மீண்டும் அதுவும் உஜூதுடைய தஜல்லியிலிருந்து ஒரு தஜல்லிதான். றூஹுடைய பண்பிலிருந்து ஒரு பண்புதான். றூஹின் சிபாத்துகளுடைய சிபாத்துக்களிலிருந்தும் ஒரு சிபாத்தும் அதன் அதறுகளிலிருந்து ஒரு அதறும் ஆகும். அதன் கமாலிலிருந்து ஒரு கமாலும் ஆகும். ஹகீகத்திலே றூஹு என்பது உஜூதுடைய ஷுஊனாத்துக்களிலுள்ள ஒரு ஷுஊனாகும். அப்போது உஜூது அந்த ஷுஊனைக் கொண்டு உடை அணிந்ததாக, றூஹு எனும் கண்ணாடியிலிருந்து வெளியாயிற்று.
நான் நிச்சயமாக ஒரு சூறத்துடைய உள்ளிலிருந்து வெளியாகும் தஜல்லியாத்துக்கள் அது எந்த சூறத்தாக இருந்தாலும் சரி, அதற்'கு அந்த சூறத்துக்குரிய அஹ்காம் என்றும் அதர் என்றும் பெயர் வைக்கப்படும் என்று உனக்கு பல விடுத்தம் ஓர்மைப்படுத்தியிருக்கிறேன்.
பிரித்தறியும் றூஹாகிறது (روح المميز)இந்த ஸ்திரப்படுத்தப்பட்ட அசலின் (اصل المقررة)பேரில் றூஹுடைய சிபாத்துக்களிலிருந்தும் ஒரு சிபத்தாகும். இன்னும் பிரித்தறியும் றூஹாகிறது அது மரணிக்காது. ஆனாலும் அது சரீரம் மரணித்ததன் பிறகு, அது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் உள்ள ஒரு நிலையில் ஆகிவிடும்.
தாவரங்களின் றூஹும் இதுபோல்தான். இவற்றின் றூஹும் றூஹுடைய ஒரு சிபத்திலிருந்து ஒரு சிபத்துதான். உஜூதின் தஜல்லியாத்திலிருந்து ஒரு தஜல்லிதான். தாவரங்களின் றூஹின் ஷஃனைக் கொண்டு உடை அணிந்த உஜூதுடைய தஜல்லியாத்துகளிலிருந்து ஒரு தஜல்லியாத்துமாகும். தாவரங்களின் றூஹுக்கு ஆதாறுகளும், அஹ்காமுகளும் உண்டு. அதுவாகிறது தாவரங்களின் றூஹுடைய கோலத்தின் பேரிலுள்ள தஜல்லியாத்தை தொடந்த ஒரு தஜல்லியாகும். றூஹுல் ஹயவானுக்கு இருந்த ஆதாறும், அஹ்காமும் போல, அந்த ஆதாறும் அஹ்காமும் ளாஹிர், பாத்தின் உடைய புலன்கள் எனும் கோலத்தின்பேரில் வெளியான தொடர்ந்த தஜல்லியாகும். நாட்டத்தைக் கொண்டு உசும்புதல், ஜீவன் இவை அல்லாத பண்புகளையும் போல.
தாவரங்களின் றூஹின் ஆதாறிலிருந்தும் உள்ளதுதான் வளத்தை இழுப்பது. வளத்தை தடுத்து வைக்கும் சக்தி, வளத்தை செமிக்க வைக்கும் சக்தி, அதனுடைய திண்ணமானதையும், மிருதுவானதையும் வேறு பிரித்தறியும் சக்தி இவைகளெல்லாம் தாவர றூஹின் ஆதாறுகளாகும்..
இந்த உணவின் சாரத்தை மிருதுவான பாகம் என்றும் திண்ணமான பாகம் என்றும் பிரித்தறியும் சக்தியும், கைலூஸ், லைலூஸ் (الكيلوس والليلوس)இருந்து ஜிஸ்முடைய பாகங்களுக்கு கோலமாக்கும் சக்தியும், அந்த ஜிஸ்மிலிருந்து திண்ணமான பாகத்தை கழிக்கும் சக்தியும், சரீரத்தில் மிருதுவான பகுதியிலிருந்து சேமிக்கப்பட்டு வித்துடைய கோலத்தில் வெளியாகும் சக்தியும் இவைகள் அனைத்தும் அத்தாவர றூஹின் ஆதாறுகளில் நின்றும் உள்ளதாகும்.
இதற்குப் பின், றூஹுக்கு உஜூதுடைய வெளிப்பாட்டிலிருந்து கிடைத்திருக்கும் வசபுகளை(الاوصاف) (தன்மைகளை) அனுசரித்து பல பெயர்கள உண்டு.
றூஹு எனும் கண்ணாடியிலிருந்து உஜூது பொதுவான அறிவு எனும் கோலத்தில் வெளியானால் அதற்கு றூஹு என்று பெயர் வைக்கப்படும். தனித்த சமட்டிகளின் அறிவைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு அக்லு என்று சொல்லப்படும்.
சமட்டி, வியட்டிகளைக் கொண்டு அந்த இல்மின் கொழுகுதல் இருக்குமானால் அதற்கு கல்பு என்று சொல்லப்படும். அது தனித்த வியட்டியைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு நப்சு என்று சொல்லப்படும். இந்த சொல்லப்பட்ட கொழுகுதல்கள் எல்லாம் உஜூதுடைய வெளிப்பாடுகளிலிருந்து உள்ள கோலங்களாகும். அந்த கொழுகுதல் எனும் ஷுஊனாத்துக்களைக் கொண்டு உடை அணிந்த பின், ஹக்குடைய தாத்தில் மறைந்திருந்த கொழுகுதல் எனும் ஷுஊனைக் கொண்டு உடை அணிந்ததன் பின் தஜல்லியாத்துகளுடைய கோலங்கள் ஆகும்.
மனிதனாகிறவன் இரண்டு வகை உண்டாகுதலில் சேகரமாகும்.
முதல் உண்டாகுதல்: காலபிய்யத்தான நஷ்அத் (النشأة القلبية)ஆகும். அதாவது காலபை (உடலை) செம்மைப்படுத்துதல் எனும் கோலமாகும். அந்த உஜூது பல சுற்றுகளில் பேரில் வெளியானதன் பின், எதுபோவெனில் களிமண்ணிலிருந்து உண்டான கலாலத் எனும் வஸ்த்துவைப் போல இந்த கலாலத்தை கற்பவறையில் இடம் பிடித்த இந்திரியமாக ஆக்கினான். இந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாக ஆக்கினான். அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாக ஆக்கினான். சதைக்கட்டியை எலும்புக் கூடாக ஆக்கினான். எலும்புக் கூட்டிற்கு மேல் சதையை அணிய வைத்தான். இவ்வாறு காலபை செவ்வைப்படுத்துவது பூரணமாயிற்று. செவ்வையாக்கப்பட்ட காலபின் கோலம் உண்டாயிற்று. இதுதான் மனிதனுக்குரிய முதல் உண்டாகுதல் ஆகும். இதன்பிறகு அல்லாஹுத்தஆலா சொன்னான்.
ثم انشأناه خلقاآخر فتبارك الله احسن الخالقين( பிறகு நாம் இன்னொரு படைப்பபை உண்டாக்கினோம். அல்லாஹ்வை பரிசுத்தப்படுத்துகிறேன். படைக்கிறவனில் அழகானவன்) இதுதான் ரூஹானிய்யத்தான நஷ்அத் ஆகும். ரூஹை உண்டாக்கியதன் பின் துயரப்பட்;ட தஜல்லியில் இருந்து உண்டான ரூஹு எனும் கோலத்தை துயர்ந்ததாக பல தஜல்லியாத்துக்கள் உண்டானது. அவைகள் அனைத்தும் அந்த ரூஹுக்கு ஆதாறுகள், அஹ்காமுகள் என்றும் வஸ்புகள், நஃதுகள் என்றும் பெயர் வைக்கப்பட்டது.
ரூஹ் எனும் கோலமாகிறது அதைத்துயர்ந்து வரக்கூடிய தஜல்லியாத்துகளுக்கு கண்ணாடியாகும். அப்பொழுது முதல் உண்டாகுதல் ஆகிறது (காலபு ஆகிறது) அது அழியும். மற்ற ரூஹிய்யத்தான நஷ்அத்தாகிறது நிரந்தரமானது ஆகும். அதற்கு நீங்குதல் மழிதல் என்ப இல்லை. அதன் சில ஆதாறுகளையும், அஹ்காமுகளையும் தவிர, முதல் உண்டாகுதல் ஆகிறது அது அழிவது கொண்டு ஹுக்மு செய்தோம் என்றாலும் அதற்கு ஹகீகத்தில் அழிவில்லை என்றாலும் அதனுடைய தாத்தில் மறைந்திருக்கும் மர்த்தபா எனும் அஸ்லுக்கு திரும்பி விடும். திரும்புதலாகிறது இணைப்புகள் உருக்குலைந்ததன்; பின்னர் அதன் பாகங்களிலுள்ள ஒவ்வொரு கோலமும் அதன் உள்ளமைக்கு திரும்பி விடுதல் ஆகும். அந்த உள்ளமையாகிறது ஹக்கான ஒருவனான தாத்தாகும்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தஹிய்யத்தின் கோலத்திலும், அவர் அல்லாத்தவர் கோலத்திலும் கோலமெடுத்து வந்த பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்களின் றூஹானிய்யத்தான கோலம் அசலுக்கு திரும்பியது போல.
அவனுடைய மற்ற உண்டாகுதல் என்னும் பாகமாகிறது அது பாக்கியானதாகவும், நிரந்தரமானதாகவும் ஆகிவிட்டது. ஒருக்காலமும் அது அழியாது. நிரந்தரமானதாகவும் ஆனால் ஆரம்பமானதல்லாதத்ததாகவும், வெளியில் உண்டாக்கப்பட்ட வெளியான கோலங்களின் பேரில் அது அசலிய்யத்தல்லாதது ஆகும்.
இன்சானுடைய வெளிப்பாகம் ஆகிறது அது முதல் உண்டாகுதல் ஆகும். அதனுடைய உள்பாகம் ஆகிறது அது மற்றைய உண்டாகுதல் ஆகும்.
இன்சானாகிறவன் அவனது காலபையும் றூஹையும் இரண்டையும் சேர்ப்பது கொண்டு காயினாத் அடங்கலுக்கும் ரூஹு ஆகும்.
இன்சானுடைய ளாஹிறாகிறது அந்த காயினாத்துகளின் வெளிப்பாகத்திற்கு றூஹு ஆகும். இன்சானுடைய பாத்தினாகிறது அந்த காயினாத்துகளுடைய பாத்தினுக்கு றூஹு ஆகும். அப்போது ஆலமாகிறது இன்சானுடைய சரீரம் ஆகும். இன்சான் அதனுடைய றூஹு ஆகும்.
இரண்டாவது உண்டாகுதல்: அதாவது இன்சானுடைய றூஹு உண்டாகுதல். இது அதனுடைய காலபை விட ரொம்ப மிருதுவானதாகும். காலப் ஆகிறது றூஹுடைய மிருதுவைக் கவனிப்பது கொண்டு அது ரொம்ப தடிப்பமானது ஆகும். றூஹின் மிருதுவுக்கும் காலபின் தடிப்பத்துக்குமிடையில் ஒரு தொடர்பும் இருந்தது இல்லை. ஆனால் றூஹு என்னும் கண்ணாடியில் கல்பு எனும் கோலத்தில் ஹக்கு தஜல்லியானான்.
அந்த கல்பை இரண்டு முகம் உள்ளதாக ஆக்கினான்.
1.மிருதுவான பாகம் அது றூஹுடன் இணைகிறது.
2.திண்ணமான பாகம் அது காலபோடு இணைகிறது.
எனவே கல்பை காலபுக்கும் றூஹுகு;கும் இடையே சேகரித்த பர்ஸக் ஆக ஆக்கினான்.
றூஹு கல்பின் மிருதுவான பாகத்துடனும் காலபு கல்பின் திண்ணமான பாகத்துடனும் இணைந்தது. ஆகையால் றூஹுக்கம் காலபுக்கும் இடையே கல்பின் மத்தியஸ்தத்தைக் கொண்டு சேருதல் உண்டாகிவிட்டது.
காலபாகிறது றூஹின் ஒளியிலிருந்து கல்பின் தொடர்பைக் கொண்டு ஒளிபெற்றதாக ஆகிவிட்டது. அதாவது இலங்கிவிட்டதுواشرقت الا رض بنور ربها(றப்புடைய ஒளியைக் கொண்டு பூமி ஒளி பெற்றதாக ஆகிவிட்டது) நான் இங்கு காலபு எனும் பூமி றூஹின் பிரகாசத்தைக் கொண்டு, பிரகாசித்து விட்டது என்பதை நாடுகிறேன். எப்படிப்பட்டி றூஹு எனில் அது காலபை வளர்க்கிறது. அதை நிலைக்கச் செய்கிறது. றூஹுடைய ஒளி சங்கிலித் தொடராக பிரகாசிப்பதிலிருந்து அந்த காலபுடைய இருள் நீங்குமானால் காலபின் திண்ணம் எனும் இருள் நீங்கியதன் பின் அது கல்பாக ஆகிவிடும்.
அதுபோலதான் அந்த கல்பாகிறது றூஹுடைய ஒளியைக் கொண்டு பிரகாசித்தல் அது றூஹாக ஆகிவிடும். இன்னும் றூஹாகிறது காலபில் அது ஆட்சி பண்ணுவதிலிருந்து பராக்கானதன் பின் அதாவது காலபை கல்பாக ஆக்கினதன் பின் அது றூஹுக்கு றூஹாக ஆகிறது. அல்லாஹ்வின் ரகசியத்தில் நின்றும் ஒரு ரகசியமாகவும் ஒளிகளிலிருந்து ஒரு ஒளியாகவும் ஆகிவிடுகின்றது.
றூஹாகிறது காலபின் பண்புகளை எடுக்குமானால் அது நப்சு என்று கூறப்படும். அந்த நப்சு( இந்த காலபை உண்டாக்கிற மண், தண்ணீர், காற்று, நெருப்பு என்பவற்றிலிருந்து) நெருப்பின் குணத்தை எடுக்குமானால் நப்சுல் அம்மாரா
(انفس الامارة)என்று சொல்லப்படும். அந்த அம்மாறாவின் குணங்களாகிறது, பெருமையடித்தல், அகப் பெருமை, முகஸ்துதி, கெட்ட குணங்களில் மூழ்குதல், அனானியத்து போன்ற கெட்ட குணங்களும், இவை அல்லாத்தவைகளும் ஆகும். இந்த குணங்களை உடைய நப்சு ஷைத்தானுடைய ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகி விடும்.
இனி அந்த நப்சு காற்றின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் லவ்வாமா (انفس اللوامة) என்று கூறப்படும். இந்த நப்சாகிறது அதிலிருந்து கெட்டவைகள் உண்டானதன் பின் அதன் நப்ஸை பழிக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடவும் செய்யும். இந்த நப்சுல் லவ்வாமா ஆகிறது நப்சானியத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகும்.
இனி அந்த நப்சு தண்ணீரின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் முல்ஹிமா (انفس الملهمة) என்று சொல்லப்படும். அப்போது அந்த நப்சு நன்மைகள் அடங்கலும் உண்டாகும் இடமாக ஆகிவிடும். அவனுக்கு அல்லாஹ்வின் திக்று (الذكر), பிக்று, (الفكر)தஸ்பிஹ்(التسبيح) , உலகை வெறுத்தல் (الزهد), பேணுதல்(الورع) , பொறுமை, (الصبر)பரஞ்சாட்டுதல் (التسليم) , பொருத்தம் (الرضي)இவை போன்ற நல்ல விசயங்களில் ஆசை அதிகமாகும். அப்போது இந்த நப்சு மலக்குகளின் ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகிவிடும்.
இனி அந்த நப்சு இம் மண்ணின் குணங்களை ஏற்றுக் கொள்ளுமானால் அந்த நப்சு கீழ் குறிப்பிடும் குணங்களை கொண்டதாக ஆகிவிடும். பணிதல், மனம் உடைதல், இடங்குதல், கண்ணியம், வணக்கம் எனும் பாரங்களை சுமத்துதல், எக்காலமும் தான் அழிந்தவன் றப்பு பாக்கியானவன் எனும் பார்வையுடையவனாகவும் ஆகுதல் ஆகும். அப்போது இந்த நப்சு றஹ்மானிய்யத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகிவிடும். இந்த நப்சுக்கு நப்சுல் முத்யின்னா (انفس المطمئنة) என்று கூறப்படும். இந்த நப்சுல் முத்மயின்னாவுக்கு வேறு பல குணங்களும் உண்டு. அவற்றை விபரிக்க இந்த சுரக்கமான ரிசாலா விஸ்தீரணமாகாது.
ஒட்டு மொத்தமாக சோதரா! நீ இதற்கு முன் நான் பலவிடுத்தம் சொன்னவற்றை விட்டும் மருட்சியாளனாக ஆகிவிடாதே! இதைக் கொண்டு நான் உத்தேசிக்கிறேன். அதாவது ஒரு செயலையோ, ஏவலையோ, ஒரு அசைவையோ, ஒரு ஒடுங்குதலையோ அது எந்த இடத்தில் வெளியானாலும் சரி, ஹக்கின் உஜூதிலே ஒழிய சேர்க்காமல் இருப்பதாகும். ஏனெனில் பூரணமான நம்பிக்கையான அறிவை அறிவதற்காகவும் பூரணமான அனுபவ அறிவை பெற்றுக் கொள்வதற்காகவும் இவைகள் அனைத்தும் உஜூதின் தஜல்லியாத்துகள் ஆகும் என்பதை பெற்றுக் கொள்வதற்காகவும் ஆகும்.
மேற்கூறப்பட்ட நப்சுகளும் அதன் சுற்றுகளும் அவனுடைய தாத்தில் மறைந்திருக்கும் ஷுஊனாத்துகளின் உடைகளில் வெளியான ஒரு வெளிப்பாடே அன்றி வேறில்லை.
நீ விளங்குவாயாக! சிந்திப்பாயாக! உணர்ந்து கொள்ளுவாயாக! மதிமறந்தவர்களில் நின்றும் நீ ஆகிவிடாதே. எதுவரையில் எனில் அக்ரகண்ணியர்களான அத்துவைதிகளான நேசர்களான கூட்டத்தில் சேர்கின்றவரை இதை நீ விளங்கிக் கொள்.
நிச்சயமாக கல்பாகிறது அதற்கு 7 சுற்றுகள் உண்டு. உண்மையில் அந்த சுற்றுகளாகிறதுமு கல்பு எனும் கோலத்திலும் அதன் ஆதாறுகள், அஹ்காமுகள், பண்புகள் என்னும் கோலத்திலும் வெளியான வெளிப்பாட்டைத் தொடர்ந்த 7 வெளிப்பாடுகள் ஆகும்.
இதன்பேரில் பலவிடுத்தம் உனக்கு நான் உணர்த்தியது போல, ஏனெனில் மருட்ச எனும் தூக்கத்தை விட்டும் நீ விழிப்பதற்கும் ஹகீகத்துல் ஹக்காயிக்கின் பக்கம் திரும்புவதற்காகவும் ஆகும்.
1.கல்பின் சுற்றுகளில் இருந்து முதலாவதாகிறது:
நெஞ்சைக் கொண்டு கொழுகினதாகும். அதாவது கல்பின் தோலாகும். அது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் வஸ்வாசுக்கு இடமாகும். கெட்டவைகள் இதை அடக்கி ஆளுமானால அவனுக்கு காபிர் என்று ஹுக்மு செய்யப்படும். இனி அவன் அவனுடைய கெட்டவைகளெல்லாம் நன்மைகளைக் கொண்டு மாற்றுவானானால் கடுமையான தெண்டிப்பு கொண்டு தீமைகளை நன்மைகளாக மாற்றுவானானால் அப்போது அவன் இஸ்லாத்தின்பேரில் நெஞ்சு விசாலமாக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் ஆகிவிடுவான். அவன் றப்புடைய அத்தாட்சியின் பேரில் இருக்கிறான். இந்த சுற்று சட உலகோடு கொழுகினதாகும். இந்த சட கலகமாகிறது வெளிப்புலன்களைக் கொண்டு அறிப்பட்க் கூடியதாகும்.
2.கல்பின் சுற்றுகளில் இருந்தும் இரண்டாவதாகிறது:
கல்பின் உள்பார்வை ஆகும். இந்த உள்பார்வை அல்லாஹ் அல்லாத்ததைக் கொண்டு கொழுகுமானால் அவன் ஒரு கூட்டத்தில் ஆகிவிடுவான். அவனது ஹக்கில் குர்ஆனில் வந்திருக்கிறது ولكن تعمي القلوب التي في الصدور(என்றாலும் அவர்களின் நெஞ்சுகளில் உள்ள கல்பு குருடானவர்கள்) அந்தக் கூட்டத்தில் ஆகி விடுவான். இனி அவனது உட்பார்வை அல்லாஹ்வைக் கொண்டு கொழுகுமானால் அது ஈமானுடைய இடமாகும்.اولئك كتب في قلوبهم الايمان அவர்களுடைய இருதயத்தில், அல்லாஹ் ஈமானை எழுதினானே! அந்தக் கூட்டத்த்தினர்) இந்த சுற்றாகிறது நப்சானிய்யா என்னும் ஊசாட்டம் என்பது கொண்டு சொல்லப்படக் கூடிய நப்சானிய்யத்தான உலகைக் கொண்டு கொழுகினதாகும்.
3.கல்பின் சுற்றுகளில் மூன்றாவதாகிறது:
மஹப்பத்தின் சுற்றாகும். அதற்கு வெளிரங்கமும் உள்ரங்கமும் உண்டு. அதன் வெளிரங்கமானது சுவர்க்கத்தின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். அதன் உள்ரங்கமாகிறது சுவர்க்கத்தின் றப்பின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். இந்தச் சுற்றின் கொழுகுதல் ஆகிறது கல்பின் உலகமாகும். (عالم القلب)கல்புடைய ஊசாட்டம் என்பது கல்புடைய ஆலத்தைக் கொண்டு கொழுகினதாகும். ஏனெனில் மஹப்பத்தை உண்டாக்குவது கல்பு என்றதினாலாகும்.
4.கல்பின் சுற்றுகளில் இருந்து நாலாவதாகிறது:
தாத்தையும் ஜமாலிய்யத்து ஜலாலிய்யத்து எனும் சிபத்துக்களையும் அதன் குணபாடுகளையும் காட்சியாக காணும் இடமாகும். அதன் கொழுகுதல் ஆகிறது ஆலமுர் றூஹானிய்யா ஆகும். ஆலமுல் றூஹானிய்யா ஆகிறது அது தெண்டிப்பு, சிந்தனை, கஷ்டம் போன்றவைகள் இல்லாமல் மஃரிபாவை பெற்றுக் கொண்டதற்காக ஆலமுல் றூஹானிய்யா என்று சொல்லப்படும். எதுவரையில் பெற்றுக் கொண்டான் என்றால் மஃரிபா எனும் ஒளி அவனது உள்ளும் வெளியும் சூழ்ந்து கொள்ளும் வரை. ஆகவே அவன் ஹக்கின் தாத்தையும் சிபாத்தையும் அல்லாது காணமாட்டான். (அதுவரையில் மஃரிபா உண்டாயிற்று அதற்காக) ஆலமுல் றூஹானிய்யி என்று சொல்லப்பட்டது. ஆகவே அல்லாஹ்வின் பேரில் அவனுக்கு ஒவ்வொரு வெளிப்பாட்டில் ஆசை அதிகமாகும். றூஹாகிறது இந்த வெளிப்பாடுகள் அனைத்தையும் சுமந்ததாகும்.
5.கல்பின் சுற்றுகளில் இருந்தும் ஐந்தாவதாகறிது:
இரகசிய உலகோடு கொழுவினதாகும். இரகசிய உலகம் என்பது வெளியாகிறவனையும், வெளியாகிறதையும் மேலான ஒருவனான தாத்தை அன்றி வேறொன்றையும் காண மாட்டானே அந்த உலகமாகும். அவன் எல்லாவற்றையும் விட்டும் மறைந்து விடுகிறான். அவனுடைய நப்ஸை விட்டும் முற்றிலும் மறைந்து விடுகிறான். அவன் கூறப்பட்ட ஒரு வஸ்த்துவாக ஆகவில்லை என்றும் ஆகும் வரையில் முற்றிலும் மறைந்து விடுகிறான். இதுதான் ஹல்லாஜின் (ரஹிமஹுல்லாஹ்) மகாமாகும். இவர் அவரின் மஸ்த்தில் அனல் ஹக்கு' என்று சொன்னார். இந்த பனாவை அல்லாஹ்வின் சிர்ரை கொண்டே ஒழிய முற்றிலும் அனுபவிக்க மாட்டார்கள்.
6.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஆறாவதாகிறது:
இலாஹிய்யத்தான நாமங்களை அறிவதாகும். இதுவாகிறது அல்லாஹ்வுடைய குணங்களைக் கொண்டு குணம் பெறுதல் எனும் மர்த்தபாவாகும். அதாவது என்னைக் கொண்டே பார்ப்பான், என்னைக் கொண்டே கேட்பான் என்ற மர்த்தபாவாகும். அதனுடைய கொழுகுதல் ஆலமுன்னூர் ஆகும். புதமை நீங்கி பழமை என்னும் சிபாத்துல் அழியும் ஆலமாகும். இந்த மர்த்தபாவில் இருந்துதான் சொல்லுகிறவர் சொல்லுவார்‚ (قم بادني)என் உத்தரவைக் கொண்டு எழும்பு' என்று சொல்லுவார். எவனந் ஒருவன் அல்லாஹ்வுடைய சிபத்துக்களைக் கொண்டு பரிசு பெறுவானேயானால் அவன் தனித்த ஒளியைத் தவிர வேறில்லை.
7.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஏழாவதாகிறது:
பக்று ஆகும். அவன் தாத்தின் தஜல்லியை சுமந்தவனாவான். பக்ரு பரிபூரணமானால் அல்லாஹ் அல்லாத்தது ஒன்றும் பாக்கியில்லை என்றாகும். இந்த சுற்றின் கொழுகு;காகிறது தாத்தாகும். அவனுடைய எல்லா இறக்கங்கள் எனும் மர்த்தபாக்களுடனான தாத்தாகும். இந்த வண்ணமான மர்த்தபாவின் பேரில் ஸாலிக் ஜெயம் பெற்றால் ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் இணைந்து விடுகிறான். இந்த ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் சேர்ப்பது கொண்டு உஜூபு இம்கான் என்பவை இரண்டும் சரிசமமாக ஆகியிருந்தது போ. இது போன்று இந்த மர்த்தபாவுடையவனிடத்தில் ஹக்கும் ஹல்கும் சரிசமமானதாகும். அதாவது ஹக்கை காட்சி காண்பவனுக்கு கல்கை காட்சி காண்பது திரையாக ஆகாது. கல்கை காட்சி காண்பது ஹக்கை காட்சி காண்பதற்கு திரையாக மாட்டாது. ஹகீகத்துல் இன்சானிய்யாவாகிறது, அது ஹகீகத்துல் முஹம்மதிய்யா வெளியாகும் இடமாகும்.
அப்போது கல்புக்கு ஐந்து ஹளராத்துக்களின் எதிர் முகத்தில் ஐந்து முகங்கள் உள்ளன.
அந்த முகங்களில் நின்றும் ஒருமுகம் ஆகிறது ஆலமுல் மிதாலுக்கு எதிர் முகமாகும். மிதாலுடைய உலகத்தின் உதவியைக் கொண்டு அந்த கல்புடைய முகம் ‚பைளுகள்' எடுக்கிறது. சில இஸ்முகளில் இருந்து அதாவது சடத்துக்கு தொடர்புபட்ட தரிபாடான அஸ்மாக்களில் இருந்து பைளுகள் எடுக்கிறது.
அதிலிருந்து ஒரு முகமாகிறது ஆலமுஸ்ஷஹாதத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் காலபில் அதிகாரம் நடத்துவதற்கும் பைளுகளைச் சேர்ப்பதற்கும் அதனுடைய ஏற்புத்தன்மையின் நிலையை அனுசரித்து இவ்வாறான பைளுகளை சேர்க்கிறது.
அதில் நின்றும் ஒரு முகமாகிறது அர்வாஹுடைய ஆலத்தை எதிர்நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு அது இலாஹிய்யான அஸ்மாக்களில் இருந்து பைளுகளை எடுக்கிறது.
அதில் நின்றும் ஒரு முகமாகிறது தெய்வீகத் தன்மை எனும் ஹழறத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு தெய்வீகத் தன்மையின் பைளை எடுப்பதற்காக.
அதில் நின்றும் ஒரு முகமாகிறது தாத்தின் வஹ்தத்தை முன்நோக்குகிறது. ஏனெனில் அதில் வெளியாவதும், உள்ளாவதும் சரிசமமான வஹ்தத்து தாத்தை முன்னோக்குகிறது.
ஒட்டு மொத்தமாக, இன்சானுக்கு மட்டிலடங்காத அனேக முகங்கள் உள்ளன. எண்ணிக்கையில் அடங்காத அனேக சுற்றுகளும் உண்ணன. அந்த இன்சானுக்கு ஒவ்வொரு முகத்திலும், ஒவ்வொரு சுற்றிலும் சொந்தமான இஸ்முகள் உண்டு.
இன்சானுடைய பெயர்கள் ஆகிறது அல்லாஹ்வுடைய பெயர்களைப் போல மட்டிலடங்காததாகும். ஏனெனில் நிச்சயமாக அந்த இன்சானாகிறது தாத்துல் ஹக்குக்கு கண்ணாடியாகவும் அதன் சிபத்துகளுக்கு கண்ணாடியாகவும், கமாலாத்துகளுக்கும், எல்லா ஷுஊனாத்துகளுக்கும் கண்ணாடிகளாகவும் ஆனதற்காக.
அல்லாஹ்வுடைய அஸ்மாக்களுக்கும் ஷுஊனாத்துகளுக்கும் வரையறை இல்லாதது போல இன்சான் என்னும் கண்ணாடியில் வெளியாகக் கூடிய அல்லாஹ்வின் கமாலாத்துகளுக்கும் வரையறை இல்லை. இன்சான் ஆகிறவன் கண்ணாடியாகும். அந்தக் கண்ணாடியில் வெளியாகக் கூடிய கமாலாத்துகள் ஆகிறது நிழல்கள் (எதிர் பிம்பம்) ஆகும். இல்மெனும் மர்த்தபாவில் தாத்தில் மறைந்திருக்கும் தாத்துடைய ஷுஊன்களாகிறது அதாவது அவை ஷுஊனாத்துகள் என்னும் உடையைக் கொண்டு உடையணிந்த பின் வெளியான ஷுஊன்களாகிறது அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருவம் ஆகும். அதுதான் அஸ்மாக்கள் என்பதுமாகும். ஆகவே உருவங்கள் மட்டிலடங்காமல் இருப்பதும் நிர்ப்பந்தமாகும். ஏனெனில் எதிர் பிம்பங்களுக்கு வரையறை இல்லாமல் இருப்பதற்காக.
விளங்கிக் கொள் சோதரா. நீ யாரென்றும், நீ என்ன பொருள் என்றும் விளங்கிக் கொள். உன்னுடைய நப்ஸையும் விளங்கிக் கொள். அப்போது நீ உன் றப்பை விளங்கிக் கொள்வாய். அறிந்து கொள் சோதரா! நிச்சயமாக அல்லாஹ் ஆகிறவன் உன்னுடைய இரண்டு உண்டாக்குதலையும் உண்டாக்கின பிறகு (அதாவது காலபையும், ரூஹையும்) அவை இரண்டுக்கும் இடையில் உதவி கொண்டு சேர்த்து வைத்த போது அவை இரண்டுக்குமிடையில் கல்யாணம் உண்டாகிவிட்டது. அப்போது அவை இரண்டில் நின்றும் ‚நீ' பிறந்துண்டானாய். அப்போது ‚நீ' என்பது அந்த அன்னியத்தில் இருந்து ‚நான்' என்று உணரக்கூடிய எட்டுதலேயன்றி வேறில்லை.
உன் நப்ஸைத் தொட்டும் நீ 'அன' (நான்) என்று சொல்வதெல்லாம் அது இவை இரண்டும் இணைந்த தன்மையில் இருந்து உண்டானதினாலாகும். அப்போ நீ என்பது வெறும் அறிந்துக் கொள்ளுதலேயன்றி வேறில்லை. நீ நாடினால், துன்யாவில் நிலைத்திருக்கும் போதெல்லாம் அந்த இரண்டு உண்டாகுதலின் இணைப்பின் கைபிய்யத்தே ‚நீ' என்பதாகும். உன்னுடைய இரண்டு உண்டாகுதலும் பிரிந்து விட்டால் – குறிக்கப்பட்ட உன்னுடைய தவணை முடிந்த பின் பிரிந்து விட்டால் – உன்னுடைய முதல் உண்டாகுதல் (காலபு) அதை ஒருங்கிணைந்த இணைப்பு உருக்குலைந்ததன் பிறகு அந்த காலபாகிறது அதன் அசலுக்குத் திருமப்பிவிடும்.
அதன் மற்ற உண்டாகுதல் (ரூஹு) ஆகிறது அது எக்காலமும் அழியாது. அது எப்போதும் நிலைத்திருக்கும். அப்போது நீ உன்னை அறிந்து கொள்வது முதல் உண்டாகுதல் அழிந்ததன் பிறகு, தனித்ததாக மற்ற ரூஹிய்யான உண்டாகுதலைக் கொண்டு கொழுகினதாகும். உன்னுடைய நான் என்பதுஅல்லாஹ்வின் அன்னயத்தில் அழியாமல் இருந்தால்தான் இந்த ரூஹோடு மட்டும் தொடர்புபட்டதாக இருக்கும்.
நீ பனாவை எட்டியவனாக இருந்தால் இந்த இரண்டு உண்டாகுதலும் உண்டாவதற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே இருப்பாய்.
தெய்வீகத் தன்மை என்பது வித்துப் போலவும், உலகம் என்பது மரம் போலவும், இன்சான் என்பது அதன் பழம் போலவும் ஆகும்.
நீ அறிந்து கொண்டாய். மரத்தின் எல்லாப் பாகங்களும் பழத்துடனே அது ஷுஊன்களைப் போல வித்தில் மறைந்திருந்தது மரத்தின் கோலத்தில் வெளியாவதற்கு முன்.
பழம் என்பது உண்மையில் வித்தின் பூரணத்துவங்களாகும். (கமாலாத்துகளாகும்.) வித்தாகிறது மரத்தின் பாகங்கள் என்னும் கோலங்களில் வெளியாயிற்று. அதனுடைய ஒவ்வொரு பாகங்களையும் அந்த மரத்தின் சொந்தமான, கமாலிய்யத்திற்கு சொந்தமான கண்ணாடிகளாகி விட்டது. அந்த மறைந்திருக்கும் கமாலாத்துகளில் இருந்து தனித்தனியாக அவைகள் ஒருமிப்பது கொண்டு மரத்தின் கோலம் பூரணமாவது வரை அவை வெளியாயிற்று. அதன்பின் எல்லாப் பாகங்களையும் சேகரித்துக் கொண்ட ஒரு ஷஃனைக் கொண்டு பழம் எனும் கோலத்தில் வெளியாயிற்று. பழம் என்பது மரத்தின் எல்லாப் பாகங்களுக்கும் பிந்தினதாக வித்தெனும் கோலத்தில் வெளியாயிற்று.
வித்தென்பது முதல் பரிபூரணமாகும்.
பழம் என்பது கடைசியானதாகும்.
இதுபோல வித்தென்பது உள்ளரங்கமானது.
பழம் என்பது வெளிரங்கமானது.
ஆகவே வித்து என்பது பழத்தின் ஐனே அன்றி வேறில்லை. இது போன்று பழம் என்பது வித்தின் ஐனே அன்றி வேறில்லை. ஆகவே هوالاوّل والآخر والضاهر والباطنஆகும்.
இதுபோன்று அல்லாஹ்தஆலாவின் தெய்வீகத்தன்மை என்னும் கமாலிய்யத்தின் வெளிப்பாடுகளை இதன்பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
தெய்வீகத் தன்மை என்பதுஉலகத்திலுள்ள தனித்தனி அணுக்களின்கோலத்தில் தனித்தனியாக வெளியாயிற்று. மரம் என்னும் கோலத்தில் கௌனுகள் வெளியாகிறவரை. இந்த வெளிப்பாடுகள் உல்லாம் சமமாக்கப்பட்ட காலபாக ஆகிவிட்டது. ரூஹை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், அதற்கு அருகதையுடையதாகவும் ஆகிவிட்டது. அப்போது அந்த ரூஹை அந்த காலபில் ஊதினான். இதுதான் இன்சானாகும். இதுதான் கௌனைக் கொண்ட தேட்டமாகும். இதுதான் கௌ; எனும் மரத்திற்கு பழமுமாகும்.
இன்சான் என்பவன் உலூஹிய்யத்தின் கோலத்தில் கடைசியாக வெளியானான். கொனுடைய பகுதிகளில் இருந்து ஒவ்வொரு பகுதிகளின் பேரிலும் வெளியானதன் பிறகு, தெய்வீகத்தின் கமாலாத்துகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்ட ஒரு ஷஃனைக் கொண்டு இந்த இன்ஸான் வெளியானான். அது தெய்வீகத் தன்மை என்னும் கோலமாகும்.
தெய்வீகத் தன்மையின் கோலமாகிறது அதனுடைய செயல்களும் நாமங்களுமாகும். ஒரு வஸ்துவின் செயல்களும் நாமங்களும் கோலம் என்று கூறப்படும்.
தெய்வீக நாமங்கள் செயல்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு இன்சான் ஆகிறவன் தெய்வீகத் தன்மை எனும் கோலத்தில் வெளியானான்.
தெய்வீகத் தன்மை என்பது இன்ஸானின் ஐனே ஆகும்.
இன்சான் என்பது தெய்வீகத் தன்மையின் ஐனே ஆகும்.
எனவே هوالاوّل والآخر والضاهر والباطن
இன்னும் ان الله خلق آدم علي صورته என்ற ஹதீதின் கருத்தையும் இதுபோன்று விளங்கிக்கொள்வாயாக.
நிச்சயமாக அல்லாஹ் ஆதமை தன் கோலத்தில் படைத்தான். அதாவது தெய்வீகத்தன்மையின் கோலத்தில் படைத்தான். சோதரா! இரவும் பகலும் சிந்திப்பது உன் மீது கடமை. நான் உனக்கு இப்பாடத்தில் கற்றுத் தந்ததை அனுசரித்து அந்த அறிவை உன்னுடைய செயல்களுக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள். ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், உசும்புதலிலும், அடக்கத்திலும் இவைகள் உன்னில் இருந்து வந்தாலும் நீ அல்லாத்தவனில் இருந்து வந்தாலும் உன்னிலே நிகழ்ந்தாலும் நீ அல்லாத்தவனிலே நிகழ்ந்தாலும்ள ஆலத்தில் உள்ள அணுக்களில்ள இருந்துமுள்ள ஒவ்வொரு அணுக்களும் ஹக்கை காணும் கண்ணாடியாக ஆகும்வரையில் நீ சிந்தி. தெண்டி.
அப்போது நீ உன்னிலோ அல்லது நீ அல்லாத்தவனிலோ ஒரு பண்பையோ, நஃதையோ, கமாலையோ, இல்மையோ, கலையையோ, தொழிலையோ, வேலையையோ, அடக்கத்தையோ, உசும்புதலையோ ஹக்கின் தஜல்லியாத்தில் சேர்த்தே ஒழிய நீ காண மாட்டாய். அந்த தஜல்லியாத்து துயர்ந்ததானாலும் சரி, துயரப்பட்டதானாலும் சரி.
இந்த உயர் பதவியில் பாக்கியம் பெறும் வரையில் நீ சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்துவைதிகளின் மர்த்தபாவில் சேர்ந்து பாக்கியம் பெறும்வரையில் நீ சிந்தித்து செயல்பட வேண்டும்.
கட்டளைகளையும் குணபாடுகளையும் பின்பற்றுதல்
اتبا الاحكام والاثار
சோதரா! நீ அறி! கட்டளைகளையும் குணபாடுகளையும் பின்பற்றுதல் எனும் மஸ்அலாவாகிறது ரொம்ப நுட்பமானதாகும். எத்தனையோ கால்கள் இதில் சறுகி விட்டது. எத்தனையோ புத்திகள், எத்தனையோ விளக்கங்கள் இதில் தடுமாற்றம் பெற்றது. ஏனெனில் அவனுடைய முகத்தில் இருந்து வஹ்மு எனும் திண்ணமான திரை நீங்காததற்காக. எவ்வாறான பிரமையெனில் அறிவுக்கு மேல் அறிவுடைய சிறப்பான அல்லாஹ்வுடைய தௌபீக்கை கொண்டே அல்லாது கிழிக்க முடியாதே அத்தகைய பிரம்மை.
நீ அறி! நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் அவனுடைய பூர்வீக தேட்டதை;தைக் கொண்டு ஒவ்வொரு கோலங்களுக்கும் ஒரு ஹுக்மையும், குணப்பண்பையும் ஆக்கினான். இவை ஒரு காலமும் இவற்றை விட்டு பிரியாது. வழமைக்கு மாற்றமாக வரக்கூடிய வழியை அல்லாஹ் நாடினாலே ஒழிய. அவனின் மிகைப்பான ஹிக்மத்துடைய தேட்டத்தைக் கொண்டும், அவனின் பரிபூரண சக்தியைக் கொண்டும் அல்லாஹ் நாடினாலே ஒழிய.
நீ பலமுறை அறிந்திருக்கிறாய். நிச்சயமாக ஆதாறுகளும், அஹ்காமுகளும் ஆகிறது அவனது குத்றத்துக்குக் கீழே அடக்கியாளப்பட்டதாகும். என்றாலும் மேலான அல்லாஹ் அவனது வழமையில் அவன் தன் நப்ஸில் நிர்ப்பந்தமாக்கிக் கொண்டான். தொடர்ந்த ஒரு வெளியாகுதல் ஆதாறு அஹ்காமு எனும் கோலங்களின் பேரில் ஒரு சொந்தமான கோலம் என்னும் கண்ணாடியில் இருந்து வெளியாகுதலை வாஜிபாக்கிக் கொண்டான்.
இந்த சொந்தமான சூறத்தாகிறது குணப்பண்புகளும் கட்டளைகளும் வெளியாகும் இடமாகும். நீ நாடினால் குணபாடுகளின் வெளிப்பாட்டை வெளியாக்கும் இடம் என்று சொல்லுவாய். நிச்சயமாக ஒருவனான ஹக்கின் உஜூதுக்கு ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஒரு சொந்தமான கோலம் உண்டு. இந்த கோலங்களுக்குச் சொந்தமான சில குணப்பண்புகளும் தீர்ப்புகளும் உண்டு. அந்த ஆதாறுகளையும் அஹ்காமுகளையும் நீ அந்த குறிப்பான கோலத்துடனே ஒழிய அறிந்து கொள்ள மாட்டாய்.
ஆகவே கோலங்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று தேவையாகுதல் எனும் வாசல் திறக்கப்பட்டு விட்டது. எல்லா ஒவ்வொரு கோலமும் ஒரு விதத்தில் தேவையானதும் மற்றொரு விதத்தில் தேவையாக்கப்பட்டதுமாகும். ஏனெனில் கௌனிய்யத்தான ஒவ்வொரு அணுக்களிலும் தெய்வீகத்தன்மை ஓடிக் கொண்டிருக்கும் இரகசியத்தினால்.
தெய்வீகத் தன்மையின் இரகசியம் ஆகிறது (المولوهية)மஃலூஹிய்யாவைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா ஒவ்வொரு வஸ்த்துக்களும் ஒரு வகையில் இலாஹாகவும் இன்னொரு வகையில் மஃலூஹ் (المألوه)ஆகவும் இருக்கிறது. எவ்வாறெனில் குளிர் பிடித்த ஒருவன் நெருப்பின் சூட்டின் பேரில் தேவையாகிறது போல, அறிவு தேடக்கூடியவன் ஆசிரியரின் பேரில் தேவைப்படுவது போல, இல்மிய்யான கமாலாத்துகளை பெற்றுக் கொள்வதற்காக ஆசிரியரின் அறிவு, அமல், எனும் பைளுகளை கொடுக்க மாணவன் பக்கம் தேவைப்படுவது போல. பரம ஏழை, கொடையாளியான, பணக்'காரன் பக்கம் தேவையாவது போல. கொடையாளியான பணக்காரன் ஏழையின் பக்கம் தேவையாவது போல ஐஸ்வர்யம் எனும் கொடைப்பண்புகளை வெளியாக்குவதற்கு.
அல்லாஹுத்தஆலா பகீருக்கு இலாஹாகிறான் பணக்காரன் எனும் கோலத்தில்.
மாணவனுக்கு ஆசிரியனின் கோலத்தில் இலாஹாகிறான்.
குளிர்பிடித்தவனுக்கு நெருப்பின் சூட்டின் கோலத்தில் இலாஹாகிறான்.
உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுக்களுமாகிறது தெய்வீகத்தன்மை எனும் பூரணத்துவத்தை வெளியாக்கும் இடமாகும். எவ்விதமான, கமாலாத்துகளெனில் எண்ணிக்கையில் அதை சூழ்ந்து கொள்ள முடியாது. அவன் எல்லா கோலத்திலும் ஒரு சொந்தமான கமாலாத்தைக் கொண்டு ஒரு சொந்தமான இலாஹாகிறான். தெய்வீகத்தன்மை எனும் கமாலாத்துக்களில் இருந்து ஆலத்தில் இருந்து ஒருவனும் இந்த சொந்தமான கோலத்தில் இருந்தே ஒழிய இந்த கமாலாத்தைக் கொண்டு பைளு எடுத்துக் கொள்ள மாட்டான்.
இந்த சொந்தமான கமாலியத்துடைய பைளை கொடுக்க மாட்டான் இந்த சூறத்தின் ஊடாகவே ஒழிய. அது அல்லாஹ்வின் வழமயில் உள்ளதாகும். எவ்வாறான வழமை எனில் அதற்கு மாறுதல் இல்லை அதன் வழமையைக் கீறிக் கிழிக்கும் வழியிலேயே ஒழிய.
அந்த இறைவன் ஒரு சொந்தமான பண்பைக் கொண்டும் சொந்தமான கமாலாத்தைக் கொண்டும் வானத்தின் இலாஹாகிறான். அந்த சொந்தமான பண்புகளைக் கொண்டு வானவாசிகள் பைளு அடைகிறார்கள். அவன் பூமிக்கும் இலாஹாகிறான். ஒரு சொந்தமான சிபாத்தைக் கொண்டும் ஒரு சொந்தமான கமாலாத்தைக் கொண்டும் அவன் பூமியில் வெளியாகிறான். அந்த சொந்தமான பண்புகளைக் கொண்டு பூமிவாசிகள் பைளு பெறுகிறார்கள். உலூஹிய்யத்தின் கோலத்தில் இருந்து வானத்தில் இலாஹாக இருக்கிற அந்த சூறத்தைக் கொண்N;ட ஒழிய, வானவாசிகள் பயன் அடைவதில்லை.பூமியில் இலாஹாக இருக்கும் உலூஹிய்யத்தின் கோலத்தில் இருந்தே ஒழிய பூமிவாசிகள் பயன் பெற மாட்டார்கள்.
சங்கையான நபியின் பேரில் இறக்கப்பட்ட கதீமான வேதத்தில் சொன்னது போல அந்த நபியின் பேரிலும் அவர்களின் ஆலின் பேரிலும் சலாத்திலும் சலாமிலும் இருந்து வருசையானது உண்டாவதாக. வஹுவல்லதி ஃபிசமாயி லஹு வஃபில் அர்ளி லஹு وهو الذي في السماء اله وفي الا رض اله(அவன் வானத்திலும் இலாஹாக இருக்கிறான். பூமியிலும் இலாஹாக இருக்கிறான்.) இந்த சங்கையான ஆயத்தில் இருந்து தரிபட்டுவிட்டது. அதாவது நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவனது எல்லா கோலங்களிலும் ஒரு சொந்தமான கமாலிய்யத்து உண்டு. இந்த சொந்தமான கமாலிய்யத்து அவனில் இருந்து இந்த சொந்தமான கோலத்தின் வழியாகவே ஒழிய வெளியாகாது.
சொந்தமான ஒரு கமாலைத் தேடக் கூடியவனுக்கு அந்த கமால் எந்த சூறத்தூடாக வெளியேறுகிறதோ அந்த சூறத்தின் பக்கம் திரும்புவது நிர்பந்தமாகும். இந்த கமாலுக்கு அந்த சூறத்து றப்புமாகும். உதாரணம் ஒன்றும் இல்லாத பகீருக்கு அவனது தேவையைத் தேடாமலிருப்பது ஒரு கொடுக்கும் பணக்காரனிடமே ஒழிய.
ஒரு நோயாளி ஒரு நல்ல நுட்பமான வைத்தியனிடம் தேவைப்படுவது நிர்ப்பந்தமாகும். ஒரு பசித்தவன் தங்கம் வெள்ளியின் பக்கம் தேவையாகாமல் ரொட்டியின் பக்கம் தேவையாகுவது நிர்ப்பந்தமாகும். அவன் ஜீவித்திருப்பதை நாடினால், நஞ்சான உணவுகளைத் தவித்துக் கொள்வதும் நிர்ப்பந்தமாகும்.
நீ அறிந்து கொள்! நிச்சயமாக ஜீவியம் இரண்டு விதமாகும்.
• அந்தரங்கமான ஜீவியம் – இது ஆகிறத்தின் ஜீவியம்.
• வெளிரங்கமான ஜீவியம் – இது துனியாவின் ஜீவியம்.
அந்தரங்கமான ஜீவியத்திற்கு வெளிரங்கமான ஜீவியத்துக்கு உள்ளது போல சொந்தமான சில உணவுகள் உண்டு. அந்த சொந்தமான உணவு உனக்கு கிடைக்காது அதற்கென்ற சொந்தமான கோலத்தின் பக்கம் திரும்புவது கொண்டே ஒழிய. மீண்டும் இந்த அந்தரங்கமான சீவியத்திற்கு சொந்தமான ஒரு கோலத்தில் நஞ்சுகளும் உண்டு. அதைத் தொட்டும் தவிர்ந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளக் கூடிய நஞ்சுகளும் உண்டு.
அவனது பொதுவான் ரஹ்மத்துடைய தேட்டத்தில் இருந்து அல்லாஹ் முர்சலான நபிமார்களையும் மற்றும் அன்பியாக்களையும் அனுப்பினான். அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் அவர்கள் மீது உண்டாவதாக. அவர்களுக்கு வேதங்களையும், ஹிக்மத்துகளையும் படிப்பித்துக் கொடுத்தான். அவர்களை வெளிவைத்தியர்களாகவும், பாத்தினிற்கு தத்துவ ஞானிகளாகவும் ஆக்கினான். இன்சானும் தீனுகளின் அறிவுகளையும் சரீரங்களின் அறிவுகளையும் அவர்களுக்குப் படித்துக் கொடுத்தான்.
அவர்கள் தெளிவான போதுமான பயான் பண்ணினார்கள். ஆலத்துடைய ஒவ்வொரு அணுக்களின் நிலைகளையும் அதன் அஹ்காம்ஆதாறுகளையும் பற்றி தெளிவானதும் போதுமானதுமான பயானைச் செய்து கொடுத்தார்கள். இன்னும் அவர்கள் கொல்லக் கூடிய நஞ்சுக்கிடையிலும் சக்தி கொடுக்கக் கூடிய உணவுக்கிடையிலும் ஒருலு பிரிக்கக் கூடிய எல்லையையும் ஆக்கினார்கள். சக்தி கிடைக்கக் கூடிய உணவுகளை ஹலாலாக ஆக்கினார்கள். கொல்லக் கூடிய நஞ்சை ஹராமாக ஆக்கினார்கள். அவைகளின் ஹுக்முகள், ஏவல் விலக்கல்களுக்கிடையிலும் ஹராம் ஹலாலுக்கிடையிலும் ஆகிவிட்டது.
மருந்து என்பது சுயமே நோய்களை குணப்படுத்துவதே இல்லையென்றாலும் அவன்தான் சுயமாக நோய்களை குணப்படுத்துகிறான். அவன் மருந்து எனும் கோலத்தின் பெயரில் குணமாக்குவது கொண்டு வெளியாகிறான். அப்போது குணம் என்பது மருந்தின் குணபாடாகும்;. அந்த குணப்பாட்டைப் பெற்றுக் கொள்ள மாட்டாய் அதற்குரிய மருந்து என்னும் கோலத்தின் பெயரில் திரும்புவது கொண்டே ஒழிய.
மருந்தின் கோலமும் அதனுடைய குணபாடு எனும் கோலமும் அதனுடைய வெளிப்பாட்டில் இருந்தும் உள்ளதுதான். அது அவனுடைய ஐனேதான். அவன் அவை இரண்டினுடைய ஐனாகாவும் இருக்கிறான். நீ اياك نعبد واياك نستعين
இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் என்பதன் பொருளை விளங்கிக் கொள். இதற்காகத்தான் செய்யிதுல் அன்பியா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மருந்தின்பக்கம் திரும்புவதோடயும் வைத்தியர்கள் பக்கம் திரும்புவதோடயும் மேற்கூறிய ஆயத்தைக் கூறினார்கள்.
பணக்காரனைக் கொண்டு உதவிதேடுவதுடனும் அவர்களுடைய சரீரத்தையும் பொருளையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது கொண்டு சஹாபாக்களிடம் உதவி தேடுவதுடனும் றப்புக்கு முன்னிலையில் தொழும்போது இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் اياك نعبد واياك نستعين என்றும் ஓதினார்கள்.அவர்கள் ஆரிபுகளுக்கெல்லாம் தலைவராக இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு கோலத்திலும் ரப்பைக் கண்டார்கள். அந்த றப்பிடத்தில் அந்த சூறத்தின் பக்கம் திரும்புவது கொண்டு உதவி தேடினார்கள். அவனல்லாதவைகளிடம் உதவி தேடவில்லை.
அவர்கள் அறிந்தார்கள், நிச்சயமாக கோலங்களும் அதன் குணபாடுகளும், அதன் தீர்ப்புகளும் அவனேயன்றி வேறில்லை. இவ்வாறு அவர்கள் அறிந்து தொழுகையில் இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன் اياك نعبد واياك نستعين என்று கூறினார்கள். உண்மையிலே நுணுக்கமான கஷ்பைக் கொண்டும் அனுபவ அறிவைக் கொண்டும் ஒவ்வொரு கோலத்தைக் கொண்டும் சொந்தமாக்கப்பட்ட கமாலாத்தாகிறது, அந்த சொந்தமான கோலத்தின் பேரில் திரும்புவது கொண்டே ஒழிய ஒருவனுக்கும் வாய்க்காது என்று அறிந்தார்கள். ஆகவே விலக்கப்பட்ட வஸ்த்துக்களை விலக்குவதும் ஏவப்பட்ட வஸ்த்துக்களுக்கு வழிப்படுவதும் இர்பானுடைய ஹகீகத்துடைய குணபாடுகளாகும்.
எவன் ஒருவன் ஏவலுக்கு வழிப்படாமலும் விலக்கல்களுக்கு விலகாமலும் ஆகிறானோ அவன் றப்பில் இருந்து உள்பார்வை உடையவனல்ல. அவன் கஷ்பு கொண்டும், தௌகு கொண்டும் அறிந்த இர்பானுடைய தஹ்கீக்குடையவர்களின் கூட்டத்தில் சேர்ந்தவனும் அல்லன்.
நீ அறியவில்லையா? சோதரா! நிச்சயமாக சிவப்பு மிளகாய் ஆகிறது கறுத்த மிளகின் உறைப்பை உன் நாவில் இருந்து நீக்காது. ஆகவே மிளகு திண்டவனுக்கு அந்த மிளகின் உளைப்பை நீக்குவதற்கு நாடினால் சீனியின் பக்கம் திரும்புவது நிர்ப்பந்தமாகும்.
நீ நீடித்த வாழ்நாளை விரும்பினால் சிங்கங்'கள், பாம்புகளை விட்டும் விரண்டோடுவது உன்மீது கடமையாகும். நீ இவ்வாறு அறிந்திருப்பதுடன் சிங்கமும் பாம்பும் அவனது ஷுஊனாத்திலும் அவனது நிலையிலும் உள்ளதுதான் என்ற அறிவுடன் நீ விரண்டோடுவது நிர்பந்தமாகும். இதுவே இர்பானுடைய அறிவும் மஃரிபா எனும் உண்மையான தௌஹீதும் ஆகும்.
நிச்சயமாக அல்லாஹ்தஆலா அவனின் பேரில் ஒவ்வொரு கோலத்தினுடைய வெளிப்பாட்டிலும் ஒரு குறிப்பான குணபாடு கொண்டு ஒரு மாற்றமும் இல்லாமல் எக்காலமும் வெளியாவதை நிர்பந்தமாக்கிக் கொண்டான். இப்படி வெளியாவதை ஆதியில் இருந்து அந்தம் வரை அவனது வழமையாகவும் ஆக்கிக் கொண்டான்.
கள்ளு என்பது ஹறாமாகும். மறு உலக வாழ்க்கையின் விசயத்தில் இது நஞ்சாகும். சிர்கா ஹலாலாகும். ஆனால் இவை இரண்டும் முந்திரிச் சாறில் நின்றும் உள்ளதாகும். இந்த பாடத்தில் நின்றும் உள்ளதுதான் அநேக சிர்றுகளைக் கொண்டு கொழுகப்பட்ட அறிவுகள். அதில் நின்றும் உள்ளதுதான் அவனுடைய அசலிய்யான தேட்டத்தைக் கொண்டுள்ள, தீர்ப்பைக் கொண்டுள்ள சிர்ரை அறிவது அதாவது அவன் அல்லாத்ததை வணங்கப்படக் கூடாது என்ற தீர்ப்பின் சிர்றை அறிவதும் இந்த இல்மில் நின்றும் உள்ளதுதான். அல்லாஹ் சொன்னதுபோல وقضي ربك الا تعبدوا الااياه(உன்னுடைய றப்பு அவன் அல்லாத்ததை வணங்கக் கூடாது என்று விதித்திருக்கிறான்).
நிச்சயமாக வணக்கம் என்பது பணிவை வெளியாக்குவதாகும். வணங்கப்படக் கூடியவன் முன்னிலையில் பணிவை வெளியாக்குவது ஆகும். மனிதர்களில் நின்றும் ஒவ்வொருவதும் அவனுடைய தேவையில் அத்தேவையை பூர்த்தி செய்பவனிடத்தில் பணிகிறான். எப்போது பணிகிறான் என்றால் தன்னுடைய நாட்டம் இவனிடத்தில் நிறைவேறும் என்று அறிந்தால் அவனைப் பணிகிறான். உதாரணம் பணக்காரன் முன்னிலையில் பகீரைப் போல, அவனுடைய தாழ்மையை வெளியாக்குவது கொண்டு அந்த பகீருக்கு வணக்கம் புரிபவன் (العابد)என்பதில் ஒரு பங்குண்டு. அந்தப் பணக்காரனுக்கு வணங்கப்படக் கூடியவன் (المعبود)என்பதில் ஒரு பங்குண்டு.
இதுபோல தான் நோயாளியும், நிச்சயமாக அவன் ‚ஆபிது' ஆகிறான். நிச்சயமாக வைத்தியன் ‚மஃபூது' ஆகிறான். இதுபோன்று மற்ற தேவைகளை உடையவனின் நிலையையும் இதின் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
மனிதர்களில் நின்றும் ஒருவனுக்கு முன்னிலையில் எவன் பணிகிறானோ அவன் அவனை வணங்கினான் என்பதாகும். உள்ளமையில் தேவையற்ற ஒருவனான அல்லாஹ்வைத் தவிர அவன் வணங்கவில்லை. அவன் அறிந்தாலும் சரி. அறியாவிட்டாலும் சரி. இதற்கு முன் அதனுடைய உள்ளமையை அறிந்ததுபோல.
அவனுடைய (அல்லாஹ்வுடைய) தீர்ப்பு எல்லா நிலைமைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவன் அறிந்தாலும் சரி அறியாமல் இருந்தாலும் சரி. அல்லாஹ் அல்லாத்தவன் வணங்கப்படவில்லை. உண்மையான விசயத்தை அறியாமல் எவனொருவன் இன்னொரு மனிதனுக்கு முன்னிலையில் பணிகிறானோ அவன் குற்றவாளியாகிறான். இன்னும் அவன் முஷ்ரிக் ஆகிறான்.
எவனொருவன் ஹகீகத்தை அறிந்தவனாகப் பணிகிறானோ அவன், அல்லாஹ்தான் இக்கோலத்தில் வெளியானவன் என்று அறிந்து அப்படி பணிகிறவன் ஆரிபாகவும், அத்துவைதியாகவும் ஆகிறான்.
ஷரிர்க்கும் தௌஹீதும் அவை இரண்டும் மடமையோடும், அறிவோடும் கொழுகினதாகும். இவர்கள் இரண்டு பேரும் (அறிஞனும், அறிவிலியும்) அல்லாஹ் அல்லாத்தவனை வணங்கவில்லை.
இந்த பாடத்தில் நின்றும் உள்ளதுதான் வஸீலாத் தேடுவதின் சிர்ரை அறிவது. கதீமான கிதாபில் ஏவப்பட்ட வஸீலாவுடைய சிர்ரை அறிவது இந்தப் பாடத்தில் நின்றும் உள்ளதுதான். وابتغزا اليه الوسيلة வப்தகு இலைஹில் வஸீலத்த (நீங்கள் அல்லாஹ்விடம் அடைவதற்கு வஸீலாவைத் தேடுங்கள்).
கோடை காலத்தில் கடும் வெயிலில் வேதனையுறும் பிரயாணிக்கு ஆற்றோரம் நிற்கக் கூடிய மரத்தின் குளிர்ந்த நிழலின் பக்கம் ஒதுங்குவது அவனுக்கு அவசியம். ஏனெனில் றாஹத் எனும் கோலத்திலும் உஷ்ணம் எனும் வேதனையை நீக்குதல் எனும் கோலத்திலும் அவனுடைய றப்பு நிழலின் உதவியைக் கொண்டு வெளியாவதற்காக. எவனொருவன் மரத்தை வஸீலாவாகத் தேடாமல் சுட்ட மணலில் படுப்பானேயானால் நிச்சயமாக அவன் பின்னாடி மௌத்தாகிவிடுவான். அழிக்கிறவன் எனும் இஸ்மைக் கொண்டும் மௌத்தாக்கிறவன் எனும் இஸ்மைக் கொண்டும் ஹலாக் எனும் கோலத்தின் பேரில் வெளியானதற்காக. ஏனெனில் ஹலாக்கை தேடக்கூடிய மஹல்லு அங்கே உண்டானதற்காக.
இதுபோன்று பிறந்த பால்குடிக்கும் குழந்தைக்கு ஹயாத்தெனும் பைளை தாயின் பாலின் வஸீலாவைக் கொண்டு கொடுக்கிறான். இலகுவாக சமிக்கக் கூடிய இலேசான பாலுக்கொப்பான உணவுகளைக்' கொண்டும் கொடுக்கிறான். அக்குழந்தை பொறித்த இறைச்சியை சாப்பிடுமானால் அது ஹலாக்காகி விடும். ஏனெனில் ஹலாக்கைத் தேடக் கூடிய மஹல்லு உண்டானதற்காக. இதன்பேரில் வைத்தியர்களைக் கொண்டும், அறிஞர்களைக் கொண்டும், அவுலியாக்களைக் கொண்டும், அஸ்பியாக்களைக் கொண்டும் வஸீலாத் தேடுவதை ஒழுங்கு பிடித்துக் கொள்.
அல்லாஹ்வுடைய வெளிப்பாடு ஒவ்வொரு கோலத்திலும் அதற்குத் தொடர்பான விசயத்தைக் கொண்டு கட்டுப்படுத்தப்பட்டதாகும். இப்படிக் கட்டுப்படுத்தப்பட்ட கமாலாத்துக்கள் அந்த கட்டுண்ட கோலத்தின் வழியாகவே ஒழிய வெளியாகாது.
இப்ப நான் உனக்கு உதாரணங்கள் கூறப்போகிறேன். அதாவது நபுஸுன் நாத்திகாவாகிறது, அது பாகங்களாகாது, துண்டு துண்டாகாது. அது கேட்கிறதாகவும், பார்க்கிறதாகவும், தொடுகிறதாகவும், சுவைக்கிறதாகவும், நுகர்கிறதாகவும் இருக்கிறது. அதனுடைய தாத்து பூராவையும் கொண்டு பொதுப்படை எனும் மர்த்தபாவிலும் தனித்தது எனும் மர்த்தபாவிலும் உணரும். ஆகவே நபுஸுன் நாத்திகா கட்டுப்படுத்தப்பட்டு சரீரத்தோடு கொழுகுமேயானால், அது நிறங்களையும், கோலங்களையும், அளவுகளையும் பார்வையின் வஸீலாவைக் கொண்டே ஒழிய பெற்றுக் கொள்ள மாட்டாது. கண்ணின்' பேரில் ஒரு திரையைப் போட்டால் காதின் வழியாகவோ, நாவின் வழியாகவோ, மூக்கின் வழியாகவோ, கைகால்களின் வழியாகவோ அதை நீ பெற்றுக் கொள்ள மாட்டாய். இதுபொலத்தான் கேட்கப்படக்கூடிய விசயங்களை காதின் வழியாகவே ஒழிய அதை நீ பெற்றுக் கொள்ள மாட்டாய்.
இதேபோன்று வாசனையை மூக்கின் வழியாகவே ஒழிய பெற்றுக் கொள்ள மாட்டாய். சுவைக்கக் கூடிய வஸ்த்துக்களை நாவைக் கொண்டே ஒழிய பெற்றுக் கொள்ள மாட்டாய். இந்த நபுஸுன் நாத்திகாவாகிறது அது கட்டுண்ட மர்த்தபாவில் அதனுடைய வர்ணிப்புகளைக் கொண்டு அது அதற்கு சொந்தமான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டதாகும்.
சப்தங்களை உன்னில் எடுத்துக் காட்டுவதை நீ நாடினால் காதைக் கொண்டு வஸீலாத் தேடுவது உனக்கு நிர்ப்பந்தமாகும். இதுபோன்று பார்க்கக் கூடியவற்றை உனக்கு எடுத்துக் காட்டப்பட்டால் கண்ணைக் கொண்டு வஸீலாத் தேடுவது உனக்கு நிர்ப்பந்தமாகும். மணத்தறியக் கூடியதை உன்பேரில் காட்டப்பட்டால் மூக்கைக் கொண்டு வஸீலாத் தேடுவது நிர்பந்தமாகும். தொட்டறியக் கூடியதை உன் பேரில் காட்டப்பட்டால் உணரும் சக்தியுள்ள அவையங்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது நிர்ப்பந்தமாகும். உதாரணம் கையும் அது அல்லாத்ததும் போல. இதுபோன்று ஹக்கான ஒருவனான தாத்தை இதன்பேரில் ஒழுஞ்கு பிடித்துக் கொள்.
இந்த தாத்துக்கு நிச்சயமாக இரண்டு மர்த்தபாக்கள் உள்ளன.
1.கட்டுப்படுத்தப்பட்ட மர்த்தபா அதாவது தஷ்பீஹிய்யத்தான (التشبيهيّة)மர்த்தபா.
2.பொதுப்படையான மர்த்தபா அதாவது (التنزيه)தன்ஸீஹுடைய மர்த்தபா.
தன்ஸீஹிய்யான மர்த்தபாவுக்கு அதற்கென்று சொந்தமாக்கப்பட்ட தீர்ப்புகளும், குணபாடுகளும் உண்டு. தஷ்பீஹிய்யத்தான மர்த்தபாவுக்கு அதற்கென்று சொந்தமாக்கப்பட்ட தீர்ப்புகளும், குணபாடுகளும் உண்டு. தன்ஸீஹ் என்னும் மர்த்தபாவில் உள்ள பைளுகளை தஷ்பீஹ் உடைய மர்த்தபாவில் இருந்து பெற்றுக் கொள்ள மாட்டாய்.
தஷ்பீஹ் உடைய பைளுகளை தன்ஸீஹில் இருந்து பெற்றுக் கொள்ள மாட்டாய். தஷ்பீஹியத்தான மர்த்தபாவைக் கொண்டு வஸீலா தேடுவது நிர்பந்தமாகும் அந்த தஷ்பீஹைக் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட தாத்தை அடைவதற்கு.
தன்ஸீஹுடைய மர்த்தபாவைக் கொண்டு வஸீலாத் தேடுவது கடமையாகும் கட்டுப்படுத்தப்படாத அவனுடைய கமாலாத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு.
ஒன்றுடைய ஹுக்மை இன்னொன்றுடைய ஹுக்மைக் கொண்டு கலக்கக் கூடாது.
இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் உனக்கு நடப்பது சாத்தியப்படாது. இவை இரண்டிற்கும் இடையில் திரையான ஒருவதைக் கொண்டு சிறப்பாக பின்பற்றுவதைக் கொண்டே ஒழிய. அவர்தான் இன்ஸானுல் காமிலாகும். வழிப்படக்கூடிய தலைவருமாகும். கதீமான அவனுடைய கிதாபில் அவன் சொன்னதுபோல مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان(இரண்டு கடல்களும் சந்திக்குமிடத்து அவைகளுக்கு இடையில் ஒரு திரையுண்டு. இதனால் அவை ஒன்றோடு ஒன்று அடர்ந்தேறாது-கலக்காது)
இதற்காகத்தான் ஆரிபீன்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஸீலா தேடினார்கள். அவர்களின் ஸஹாபாக்களிடத்தில் நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்வீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான ان تنصر وا الله ينصركم என்றும் கூறினார்கள்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை அல்லாஹ்வின் உதவி வெளியாகும் இட்ம் ஆகுவதே ஒழிய அவர்கள் நாடவில்லை. இது தஷ்பிஹிய்யான மர்த்தபாவில் அருகதையும் ஏற்புத்தன்மையும் உண்டாகுவதைக் கொண்டாகும்.
ஆகவே அந்த இடம் உதவி எனும் கோலத்தில் வெளியாகுவதை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதவி என்று சொன்னார்கள். இதுபொலத்தான் அவர்கள் உதவி தேடினார்கள். எதிரிகளின் தீங்கை தட்டுமி;டத்தில், யுத்த ஆயதங்களையும் படைகளையும் ஒழுஞ்குபடுத்துவது கொண்டு வஸீலா தேடினார்கள்.
இவைகள் எதிரிகளின் எதிர்ப்பை தட்டுதல் என்பது இறங்குவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய இடமாகவே ஒழிய இவைகள் ஆகியிருக்கவில்லை. அல்லாஹ் தஆலா கூறுகிறான் يهرج منهماا للؤ لؤ والمؤجان (இந்த இரண்டு கடல்களிலுமிருந்து முத்துக்களும் மரகதங்களும் வெளியாகும்.)
முத்துக்களும் மரகதங்களும் பெறப்படுவதை எப்படி கடலின் பக்கம் சேர்த்திருக்கிறான் என்பதை நீ பார்.
இரண்டு கடல்களிடமும் வஸீலாத் தேடுவதன் பக்கம் உன்னைத் திருப்புகிறான். ஏனெனில் இந்த முத்துக்களும், மரகதங்களும் கிடைப்பதற்காக.
உண்மையில் இவைகள் இரண்டும் கடலில் இருப்பது பெறப்படவில்லை என்றாலும் ஹக்கான ஒருவனான தாத்து எனும் கடலிலிருந்து வெளியாகிறது. அவைகள் இரண்டும் தாத்தில் தாத்துடைய ஐனாகவே ஆகியிருந்தது. ஷுஊனாத்துகளைப் போல.
பின்பு இவை இரண்டையும் தன்ஸீஹ் எனும் மர்த்தபாவிலிருந்தும் தாத்திலிருந்தும் அஸ்மாக்கள் எனும் கடலின் பக்கமும் தஷ்பீஹ் எனும் மர்த்தபாவின் பக்கமும் திருப்பப்பட்டது.
அந்த இரண்டு கடலிலுமிருந்த அந்த இரண்டினுடைய கோலத்தின் பேரில் அவைகள் வெளியானது. பின்பு அவை இரண்டும் குணபாடு எனும் கரைக்கு வெளியில் உண்டாவது கொண்டு புறப்பட்டு விட்டது. அவை இரண்டினுடைய இடங்களிலும், அந்த இடம் எதுவென்றால் அந்த இரண்டு கடலுகளுமாகும். பின்பு அந்த கடலிலுமிருந்து எமது கைகளுக்கு எட்டியது. நீ இரண்டு கடலின் பக்கமும் வஸீலாத் தேடுவது தேவை என்பதைப் பார் கூறுப்பட்ட முத்தும் மரகதமும் கிடைப்பதற்காக.
நிச்சயமாக உன் கண்ணைக் குளிர்ப்பிக்கக் கூடிய பிள்ளையை பெறுவதற்கு நீ நிகாஹ் அளவிலும் தொடுவதளவிலும் இந்தியத்தை கர்ப்பப்பையில் செலுத்துவதன் பேரிலும் குறிக்கப்பட்ட காலம் வரை அதில் தரிபடுவதன் பேரிலும் வஸீலா தேடுவது நிர்ப்பந்தமாகும்.
பின்பு வெளியுலகில் இன்ஸானெனும் கோலத்தில் வெளியாவது கொண்டும் (இந்த இன்ஸான் எனும் கோலம் முத்து மரகதத்தை விட ரொம்ப பிரகாசமுடையதாகவும்) உன் கண் குளிர்மையாவதற்கும் உன் றூஹ் சந்தோசப்படுவதற்கும் இந்த வஸீலாவைத் தேடுவது தேவைப்படுவது போல.
உலகிலுள்ள ஒவ்வொரு அணுக்களும் அவனது சொந்தமான கமாலாத்துக்களைக் காட்டக் கூடிய சொந்தமான கண்ணாடிகளாகும். அந்தக் கமாலாத்துக்களை காண்பது கொண்டு நீ சிறப்புப் பெற்மாட்டாய். அந்த சொந்தமான கமாலாத்துக்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதே கொண்டும் அதன் பக்கம் திரும்புவது கொண்டுமே ஒழிய.
சோதரா! உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நீ நன்றி செலுத்து, அதை நீ எண்ணிக்கையான உன்னுடைய நாட்டங்கள் நிறைவேறுவதற்கும் அதிகமான கமாலாத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் அதைக் கொண்டு வஸீலாத் தேடுவதின் பேரில் கட்டுப்படுத்தப்பட்ட அதிகமான கமாலாத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் முன்னோக்குமிடமாக ஆக்கு.
அல்லாஹ்வுடைய நிஃமத்தைக் கொண்டு நீ காபிராகி விடாதே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதுபோல من يشكر الله من لم يشكر الناس(மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்) இதன் பின்னர் எமது உஜமான், உல்லா ஜின்னு இன்சுகளுக்கும் றஹ்மானான றப்பு சொல்லுகிறான்فباي ألاء ربكما تكذبان (ஏ இன்சு ஜின்னு என்னும் இரு கூட்டமே, உம்முடைய றப்பிடம் உள்ள எந்த நிஃமத்தை பொய்யாக்குகிறீர்கள்)
ஒரு கூட்டமாகிறது வஸீலாத் தேடுவதைத் தடுக்கிறார்கள். அவர்கள் வஸீலாத் தேடுவதின் வாசலையே அடைக்கிறார்கள். தீர்ப்பு குணபாடுகளை அவர்கள் பின்பற்றவும் மாட்டார்கள். அத்தகைய கூட்டம்தான் அவர்களினதும் நம்மினதும் றப்பின் நிஃமத்துக்களை பொய்யாக்கின கூட்டமாகும்.
அவர்கள் அல்லாஹுதஆலா மனிதர்களை வெறுமனே படைத்தான் என்று எண்ணவும் செய்கிறார்கள். அவர்கள் நேர்வழியை விட்டும் வழிகெடவும் வழிகெடுக்கவும் செய்கிறார்கள்.
நீ அறிந்து கொள்!
அல்லாஹ்வுடைய அவ்லியாக்களில் நின்றும் ஒவ்வொரு விலகளுக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக்கப்பட்ட சில கமாலாத்துகள் உண்டு. அவர்கள் அல்லாதவர்களிடத்தில் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது. அந்த சொந்தமான கமாலாத்தை தேடக் கூடியவனுக்கு அந்த கமாலாத்துடைய வலியைக் கொண்டும் வஸீலா தேடுவது நிர்பந்தமாகும். எதற்காகவெனில் அந்த வலி என்னும் கண்ணாடியின் ஊடாக அவரைக் கொண்டு சொந்தமாக்கப்பட்ட கமாலாத்துக்கள் என்னும் கோலத்தில் அல்லாஹ் வெளியாவதற்காகவும் அவரைக் கொண்டு சொந்தமாக்கப்பட்ட பைளுகளை ஊட்டிக் கொடுப்பதற்காகவும் அந்த வலி துன்யாவில் இருந்தாலும் சரி, ஆகிறத்துக்கு திரும்பி இருந்தாலும் சரி.
ஏனெனில் அல்லாஹ்வுடைய தஜல்லியாத்துக்களில் மீண்டு வருவது விலக்கப்பட்தற்காகவே ஆகும். அப்படி மீண்டு வருமானால் அல்லாஹ்வின் மட்டில் அடங்காத, கமாலாத்துக்களில் குறைவு ஏற்பட்டு விடும் என்பதற்காக.
அந்த தஜல்லியாத்து மீணு;டும் வருவதென்பது அல்லாஹ்வின் கமாலாத்துக்கள் வழைரயறுக்கப்பட்டது என்பதன் பெயரில் அறிவிக்கிறது. கமலாத்துக்களை மட்டுப்படுத்துவது குறைபாடாகும். அல்லாஹ் குறைபாடுகளை விட்டும் பரிசுத்தமானவன் ஆகும். இவல்வாறே ஒவ்வொரு வலிகளுக்கும் ஒரு சொந்தமான கமால் உண்டு. அவருக்கு அந்தக் கமாலில் நீளமான கையுண்டு. ஏனெனில் அவருடைய மற்ற கமாலாத்துக்களை விட அது மிகைத்திருப்பதற்காக.
தப்ஸீரடையவருக்கு தப்ஸீருடைய இல்மு மிகைத்திருப்பது போல அதாவது அவர் ஹதீது பிக்ஹு என்பவற்றை அறிந்திருந்தாலும் இந்த இல்மு தப்ஸீர் என்னும் கமால் அவரில் மிகைத்திருப்பதற்காக. ஒருவருக்கு ஹதீதுக்கலை மிகைத்திருப்பது போலவும் இன்னொருவருக்கு சட்டக்கலை மிகைத்திருப்பது போலவும் அவர்களுடைய மற்ற இல்முகளை விட.
ஆகவே எவன் ஒருவன் தப்ஸீருடைய அறிவில் கடலாக ஆக வேண்டும் என்று நாடுகிறானோ அவன் அந்த தப்ஸீரின் ஹகாயிகுகளில் சேரவும், அதன் நுணுக்கங்களில் சேரவும் நாடினால் அவன் தப்ஸீரை உடையவரிம் திரும்பிக் கொள்ளட்டும். அல்லது தப்ஸீர் கலை மிகைத்தவரிடம் திரும்பிக் கொள்ளட்டும்.
எல்லாக் கலைகளையும் தேடக்கூடிய ஒருவனுக்கு ஒவ்வொரு கலையாற்றலுளளவர்களிடமும் போவது நிர்பந்தமாகும். அதாவது தப்ஸீரை நாடுகிறவன் அந்த நிபுணரின் பக்கமும் ஹதீதை நாடுகிறவன் அந்த நிபுணரின் பக்கமும் பிக்ஹை நாடுகிறவன் அந்த நிபுணரின் பக்கமும் சேர்வது நிர்பந்தமாகும். எல்லாக் கலைகளையும் சேர்த்து கடலாக ஆகிறவரை.
இதன்பேரில் அவ்லியாக்களின் நிலைமைகளையும் அவர்களைக் கொண்டு சொந்தமாக்கப்பட்ட கமாலாத்துக்களையும் மேற்கூறப்பட்டவைகளில் இருந்து ஒழுங்கு பிடித்துக் கொள்ளுங்கள். இந்த அவ்லியாக்களில் நின்றும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பான கமாலைக் கொண்டு சொந்தமாக்கப்பட்டவர்களும் அதைக் கொண்டு அறியப்பட்டவர்களுமாவார்.
பெரும் ஷெய்குகளுக்கெல்லாம் ஷெய்கான ஷெய்குல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போல நிச்சயமாக அவர் தப்ஸீர் நிபுணராகவும், ஹதீதுக்கலை நிபுணராகவும், சட்டக்கலை நிபுணராகவும் இருந்தார். இந்த ஒவ்வொரு விசயத்திலும் கமாலில் கமாலாகவும் இருந்தார் என்றாலும் நுணுக்கமான இரகசியமான ஹகாயிகுகளின் இல்மைக் கொண்டு பிரபல்யம் அடைந்தாhட. ஏனெனில் இந்த இல்மு மற்றவைகளை விட அவர்களில் மிகைத்திருந்ததற்காக.
சொந்தமான கமாலாத்துக்களைக் கொண்டு பிரபல்யமான ஏனைய அவ்லியாக்களின் நிஜலைகளையும் இவரின் பேரில் ஒழுங்குப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர்கள் மற்ற கமாலாத்துகளிலும் நிபுணர்களாக இருந்ததுடன்.
இதற்காகத்தான் தாலிகுளில் அனேகர் பல ஷெய்குமார்களிடத்தில் சேர்ந்தார்கள். ஒரு சொந்தமான ஷெய்கிடத்தில் இருந்து கமாலாத்தைப் பெற்றுக் கொண்டதன் பிறகு பல ஷெய்குமார்களிடத்தில் சேர்ந்தார்கள். பிரபல்யமான பரிபூரண அவ்லியாக்களில் நின்றும் ஒருவரையும் அவர்கள் பல ஷெய்குமார்களிடம் தொடர்பு வைத்தவர்களாகவே ஒழிய நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
ஏனெனில் சேகரித்த மர்த்தபாக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தூரமான தேசங்களுகு;கு பிரயாணம் செய்தவர்களாகவுமே ஒழிய அவர்களை பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
தொடர்பு வைப்பது கொண்டு கொழுகுப்பட்ட சிர்றுகளை அறிவதும் இந்தப் பாடத்தில் நின்றும் உள்ளதாகும்.
அல்லாஹுத்தஆலா ஆதியான தாத்தியான தேட்டத்தைக் கொண்டு அவன் வெளியாகுவதை குணபாடுகள், தீர்ப்புகள் எனும் கோலங்களில் ஒரு சொந்தமான காலத்திலும் ஒரு சொந்தமான இடத்திலும் ஒரு சொந்தமான நிலையிலும், கோலத்திலும் வெளியாவதை அவன் பேரில் நிர்பந்தமாக்கிக் கொண்டான். அவன் றூஹு ஊததல் எனும் கோலத்தில் வெளியாகுதலை அவன் நப்ஸில் கடமையாக்கிக் கொண்டது போல, காலப் எனும் உடலை சமப்படுத்துவதின் கோலத்தில் வெளியானதன் பிறகு.
மாரிகாலத்துக்கு அதற்கென்று சொந்தமான சில குணபாடுகளும், தீர்ப்புகளும் உண்டு.
கோடை காலத்துக்கு அதற்கென்று சொந்தமான சில குணபாடுகளும், தீர்ப்புகளும் உண்டு.
இது போன்றுதான் ‚ஹபசு' நாட்டுக்கு சொந்தமான குணபாடுகளும், தீர்ப்புகளும் உண்டு.
ரோம் தேசத்துக்கும் குறிப்பான சில குணபாடுகளும், தீர்ப்புகளும் உண்டு.
எல்லாக் காலங்களையும், எல்லா நேரங்களையும், எல்லா இடங்களையும், எல்லாப் படித்தரங்களையும், இதின் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள். காயினாத்துகளில் உள்ள எல்லா அணுக்களும்ஒரு குணபாடு உடையதாகும்.
உதாரணம் 1. செவ்வையாக்கப்பட்ட உடலைப்போல. அதன் குணபாடாகிறது அதில் ஊதப்பட்ட றூஹு போலாகும்.
உதாரணம் 2. கோடை காலத்துக்கு சூடு போல.
உதாரணம் 3. மாரி காலத்துக்கு குளிர் போல.
மாரிகாலத்தில் மனிதர்கள் குளிரின் குணபாட்டை ஏற்றுக் கொள்கிறார்கள். கோடை காலத்தில் சூட்டின் குணபாட்டை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இதுபோல ரோம் நாட்டவர் ‚ஹபசு' நாட்டுக்குப் புகுந்தால் அங்குள்ள குணபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்கிறார். நீணு;ட காலம் தங்குவலது கொண்டு, அந்த நாட்டு மக்களின் குணம் இவனில் ஏற்படும் வரை எடுத்துக் கொள்கிறான். நிறங்களிலும், கோலங்களிலும் இவை இரண்டு அல்லாத்தலிலும், முற்றிலும் அவர்களின் பண்பை எடுத்துக் கொள்கிறார்.
அங்கே பிறந்து உண்டாகும் பிள்ளை குட்டிகளுக்கு முற்றாக அவர்களின் குணத்தை ஏற்றுக் கொள்வதும் நிர்பந்தமாகும். இது போலத்தான் ‚ஹபசு' நாட்டுக்காரன் ‚ரோம்' நாட்டுக்கு வந்தால் இதே நிலைதான். இதுபோலத்தான் ‚காபூல்' நாட்டுக்காரன் இந்தியாவுக்கு வந்தால், இந்தியர்கள் டாக்காவுக்கு வந்தால் இதே நிலைதான் ஏற்படும்.
நல்ல மனிதன் கெட்ட கூட்டங்களில் சேர்ந்தாலும் கெட்ட மனிதன் நல்ல கூட்டத்தில் சேர்ந்தாலும் இதே நிலைதான். இதேபோல மற்ற விசயங்களையும் முஸாஹபத்துடைய விசயத்தில் ஒழுங்குப் படுத்திக் கொள்.
கிராமவாசிகளின் குணங்களையும் பட்டணவாசிகளின் குணங்களையும் மாடு, ஆடு, ஒட்டகம் மேய்ப்பவனின் குணங்களையும் இதுபோன்று ஒழுங்கு பிடித்துக் கொள். குணம் குணத்திலிருந்து களவெடுக்கும், நமக்கு அறிவித்தது போல, ஆரிபுகளுக்கெல்லாம் தலைவரும் அன்பியாக்களுக்கெல்லாம் முன்னிலையானவருமான நமது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமலவர்கள் அறிவித்தது லோ அதாவது நல்ல மனிதர்களோடு இருப்பதையும் கெட்ட மனிதர்களோடு இருப்பதையும் உதாரணம் காட்டி சொன்னது போல.
‚நல்லவர்களுடன் இருப்பவன் கஸ்த்தூரியைப் போலும்' கெட்டவர்களுடன் இருப்பவன் கொல்லன் உலையில் இருப்பவன் போலும் ஆகிறான்.
கஸ்தூரி உடையானிலிருந்து நோவினை ஏற்படாது. ஒருவேளை கஸ்தூரியை வாங்குவான் அல்லது அதன் மணத்தையாவது பெறுவான்.
கொல்லன் உலையோடு தொடர்புடையவனுக்கு அவனுடைய வீட்டையோ அல்லது அவனின் புடவையோ எரித்துவிடும். அல்லது துர்நாற்றத்தையாவது பெற்றுக் கொள்வான் (ஹதீது புகாரி)
சோதரா! நீ எண்ணிவிடாதே நிச்சயமாக என்னுடைய சொல்லு அஹ்காமுகளையும், ஆதாறுகளையும் சொந்தமாக்குவதில் காலம், இடம், நிலைமை, உலகிலுள்ள ஒவ்வொரு அணுக்களைக் கொண்டும் சொந்தமாக்கின என்னுடைய சொல்லாகிறது இயற்கைவாதிகளின் சொல்லுக்கு ஒப்பாகுதே அல்லது நாஸ்திகனின் சொல்லுக்கு ஒப்பாகுதே என்று எண்ணிவிடாதே.
ஏனெனில் இயற்கைவாதிகள் அதை பரிபூரண காரணகாரியத் தொடராக ஆக்கிவிடுகிறார்கள். அதாவது அஹ்காமுகளும், ஆதாறுகளும் வருவதை நிர்ப்பந்தமாக்கப்பட்டதாக ஆக்குகிறார்கள். நான் தொடரப்பட்ட தஜல்லிகளான கோலங்களையும், இடங்களையும், நிலைகளையும், காலங்களையும், அஹ்காமு, ஆதாறுகளின் கோலங்களில் தொடர்ந்து வெளியாவதற்கு ஷர்த்தாக ஆக்குகிறேன். மிகைப்பான அவனது ஹிக்மத்து தேடுமிடத்து, வழமையைக் கிழிப்பது இடம்பாடாகும் என்று சொன்னதுடனே இவைகளை ஷர்த்துகள் என்று ஆக்கியிருக்கிறேன்.
என்னுடைய சொல்லுக்கும் இயற்கைவாதிகளின் சொல்லுக்கும் இடையில் அதிக தூரம் உண்டு. அந்த இயற்கைவாதிகள் அவைகளை பரிபூரண காரண காரியம் என்றும் அஹ்காமு, ஆதாறு வருவதை நிர்பந்தம் ஆனதாகவும் ஆக்குகிறார்கள். ஆனால் நான் அதை ஷர்த்துகளாக ஆக்குகிறேன். ஏனெனில் சிலவேளை ஷர்த்துகள் எட்டப்படும். ஆனால் ஷர்த்திடப்பட்ட விசயம் எட்டிக் கொள்ளப்படாது. காரணம் இறைவனின் ஒரு தடுப்பின் காரணமாக அதாவது பரிபூரண காரணம் உண்டானால் உடன் காரியம் உண்டாவது நிர்பந்தம் என்று சொன்ன இயற்கைவாதிகளுக்கு மாற்றமாக, மீண்டும் இயற்கைவாதிகள் தவறில் விழுந்து விட்டார்கள். அதாவது காரணத்தைத் தொடர்ந்து காரியம் எக்காலமும் வருவதை காண்பது கொண்டு அவன் தவறில் விழுந்து விட்டான். அதாவது வெப்பமும கரித்தலும் நெருப்பை விட்டும் பிந்துவதுமில்லை,மாறுவதுமில்லை. ஐசை விட்டும் குளிர் மாறுவதுமில்லை. இது போன்று வெப்பம் சூரியனை விட்டும் மாறுவதுமில்லை.
அபினீசியர்களில் அனேகர் கறுப்பாகவே ஒழிய ஆகமாட்டார்கள். ‚ரோம்' வாசிகளில் அநேகர் சிவப்பாகவே ஒழிய ஆகமாட்டார்கள். ஏனெனில் சூரிய வெப்பத்தின் கடுமையான, குறைவான குணபாட்டை ஏற்றுக் கொண்டு அந்த குணபாடுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
இதுபோன்று ஒவ்வொரு அணுக்களிலும் ஒரு சொந்தமான குணபாட்டைக் காண்கிறார்கள். அந்தக் குணபாடு அதைவிட்டும் மாறுவதில்லை. ஆகவே இயற்கைவாதிகள் பார்வை ஒளியாக்கப்படவில்லை. அவனது உட்பார்வையும் அல்லாஹ்வின் நல்லுதவி என்னும் சுர்மாவைக் கொண்டும் பிரகாசமெடுக்கவில்லை. மிஷ்காத்துன் நபவிய்யாயிலிருந்து ஒளியை அவன் எடுக்கவும் இல்லை. எனவே அவர்கள் அறியாத்தனமாக இவைகளின் பேரில் தீர்ப்பு செய்தார்கள். அதாவது ஒரு பூரண காரணம் வந்தால் காரியம் நிர்பந்தமாகும் என்று தீர்ப்பளித்தார்கள். இங்கு நாம் சொல்லுகிறோம் அந்தக் காரியம் வருவதற்கு அவை பூரண காரணமல்ல. என்றாலும் அரவகள் ஷர்த்துகளாகும் என்று சொல்லுகிறோம். இன்னும் நிபந்தனை இடப்பட்ட இக்காரணங்களைப் போல இக்காரியங்களும் அடக்கி ஆளும்படியான இறைவனின் கைகளால் அடக்கி ஆளப்படுவதாகும்.
என்னிடத்தில் இந்த பூரண காரியம் உருவாதற்கு நிர்பந்தமாக்கும் பூரண காரணங்களாகிறது அந்த ஆதியான தாத்தின் தேட்டமாகும். நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் தாத்துடைய தேட்;டம் என்னும் காரணத்தைக் கொண்டு அஹ்காமுகள், ஆதாறுகள் எனும் கோலத்தின் பேரில் வெளியாவதை தன் நப்சில் அந்த தாத்தியான தேட்டத்தின் காரணத்தினால் நிர்பந்தமாக்கிக் கொண்டான்.
நீ, ஷெய்குல் அக்பர் அவர்களுக்கு மாற்றமாக சொல்லிவிட்டீர்கள்களே என்று சொன்னால் அதாவது ஷெய்குல் அக்பர் அவர்கள் அல்லாஹ்வின் இல்மையே பூரண காhரணமாக ஆக்கினார்கள். ஆனால் நீங்களோ தாத்தின் தேட்டத்தையே பூரண காரணம் ஆக்கி அவர்களுக்கு மாற்றம் செய்து விட்டீர்களே! என்று சொல்வாயானால் நான் சொல்கிறேன், சந்தேகமில்லை தாத்திய்யா தேட்டம் என்பது அல்லாஹ்வுடைய ஆதியான அறிவாகும் என்பதில் சந்தேகமில்லை. அந்த ஆதியான அறிவுக்கு மாற்றம் வருவது அல்லாஹ்வுடைய இல்முடைய கமாலில் குறைவை ஏற்படுத்துவதை நிர்ப்பந்தமாக்கும்.
என்றாலும் அவனது ஆதியான அறிவுடைய தேட்டமாவது தாத்தியான தேட்டத்தின் குணபாடாகும். ஆகவே அறிவென்பது தாத்தியான தேட்டத்தின் குணபாடாகும். தாத்தியான தேட்டமாகிறது உண்மையில் பூரண காரணமாகும். இல்மில் அதைச் சேர்ப்பது இரவல் சேர்மானமாகும்.
ஷெய்கு அவர்கள் காரியத்திலிருந்து கிட்டவுள்ளதைப் பேணி இல்மின் பக்கம் சேர்த்தார்கள். நாம் உண்மையான அசலைப் பேணி தாத்தின் தேட்டத்தின் பக்கம் சேர்த்தோம். ஆனால் இது தர்க்கத்துக்குரிய இடமல்ல.
நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் பூர்வீக தீர்ப்பில் நின்றும் உள்ளதாகும்
الخير والشر فهنا من حكمه الازلي
அல்லாஹ் அவனுடைய பூர்வீக தக்தீரைக் கொண்டு அந்த விசயங்கள் அதனுடைய உரிய இடங்களிலே ஒழிய அது வெளியாக மாட்டாது. அந்த விசயங்களின் பேரில் அது நன்மை என்பது கொண்டு தீர்ப்பளித்தான். அதே வேளை உரிய இடமல்லாத்ததில் வெளிப்படக்கூடிய விசயங்களுக்கு கெட்டது என்றும் தீர்ப்பளித்தான்.
ஒரு விசயம் எப்பொழுதாவது அதற்கு உரிய இடத்தில் உண்டாகுமேயானால் அது நல்லதாகும். ஒரு விசயம் எப்பொழுதாவது அதற்கு உரிய இடம் அல்லாத்ததில் வெளியானால் அது தீமையாகும். நன்மை என்பதும் தீமை என்பதும் உரிய இடம், உரிய டமல்லாமல் என்பது கொண்டு கொழுகினதாகும். இவ்விசயங்களை விட்டும் பார்வையை உயர்த்தி விட்டால் அங்கு நல்லதுமில்லை, கெட்டதுமில்லை.
உதாரணம் பழிவாங்குமிடத்தில் உண்டான கொலையைப் போன்று அந்தக் கொலையாகிறது சந்தேகமின்றி புத்தியுடையவர்களுக்கு ஹயாத்தாகும் (நன்மையாகும்.)
உரிய இடம் இல்லாமல் உண்டாகும் கொலையாகிறது பிசகின்றி மனிதர் அனைவர்க்கும் கொலையாகும்(தீமையாகும்.)
கொலை என்பதாகிறது அது உண்டாவதற்கு முன்னால் அது நல்லதுமல்ல கெட்டதுமல்ல. இதற்காகவே ஸூபிகள் சொன்னார்கள், 'நிச்சயமாக உண்டென்பது நன்மை விளையும் இடமாகும். இல்லாமை என்பது கெட்டது விளையும் இடமாகும்.'
‚இல்லாமையை' தீமை விளையும் இடமாக அவர்கள் ஆக்கினது இல்லாமையிலிருந்து தீமை உண்டாகிறது என்ற கருத்துக்கல்ல. ஏனெனில் இல்லாமையிலிருந்து உள்ள விசயம் உண்டாகாது. ஆகவே கெட்டது என்பது நன்மையைப் போலவே தெய்வீக வெளிப்பாட்டின் குணபாடுகளில் நின்றும் உள்ளதாகும். என்றாலும் அந்த ஸூபிகள் கெட்டதை விளக்க சட்ட திட்டங்களை ஆக்கினார்கள். இன்மையின் பக்கம் (அதற்கு உரிய இடம் இல்லாத பக்கம் ) இதைச் சேர்ப்பது கொண்டு.
உரிய இடம் இல்லாமல் நிகழும் கொலையாகிறது தீமையாகும். ஏனெனில் அங்கு கொலையை ஏற்கக் கூடிய இடம் இல்லாததினால் ஆகும். உதாரணமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய இடங்களாவன பழிவாங்கல், ஜிஹாது போன்று.
இன்னும் அந்த ஸூபிகள் கொலைக்கு உரிய இடம் இல்லாமலிருப்பது தீமை விளையும் இடமாக அவர்கள் ஆக்கினார்கள். இதன் பேரில் நன்மை தீமை உள்ள பாக்கி விசயங்களையும் ஒழுங்கு பிடித்துக்கொள். உரிய இடத்தில் வருவது நன்மையாகவும் உரிய இடம் இல்லாமல் வருவது தீமையாகவும் இருக்கும். இடத்தை விட்டும் பார்வையை உயர்த்துவாயானால் அங்கே ந்னமையும் இல்லை, தீமையும் இல்லை. இவை அனைத்தும் பூர்வீகமான தாத்தியான தேட்டத்தில் நின்றும் உள்ளதுதான்.
அல்லாஹ்வுடைய தாத்து ஆதியிலிருந்து அவனுடைய சுற்றுகளில் சிலதை நல்லதாகவும் சிலதை கெட்டதாகவும் தேடியது. ஆகவே சிலதை நன்மை என்பது கொண்டும், சிலதை தீமை என்பது கொண்டும் அல்லாஹ் தீர்ப்பளித்தான். ஆகவே எல்லாம் அவனின் நின்றும் உள்ளதுதான். அது அவனுடைய வெளிப்பாடும்தான்.
நன்மைகளுக்கும் சில நிபந்தனைகள் உண்டு. தீமைகளுக்கும் சில நிபந்தனைகளும் உண்டு. அந்த நிபந்தனைகளாகிறது நிபந்தனையாக்கப்பட்ட கோலங்களின் பேரில் வெளியாவதற்கு முன்னால் வெளியான வெளிப்பாடாகும்.
இந்தப் பாடத்தில் நின்றும் உள்ளதுதான் வஸ்த்துக்களுக்கிடையிலுள்ள ஏற்றத் தாழ்வுகளின் ரகசியங்களை அறிவது. எவ்வாறான ஏற்றத் தாழ்வுகளெனில் மர்த்தபாக்களுக்கிடையில் பிரிப்பதை நிர்ப்பந்தமாக்கும் ஏற்றத் தாழ்வுகளை அறிவதும் இப்பாடத்தில் நின்றும் உள்ளதுதான்.
நிச்சயமாக அல்லாஹ்வுடைய தாத்தியான ஷுஊனாத்துகளில் நின்றும் எல்லா ஷஃன்களுக்கும் ஒரு முகங்கள் உள்ளன.
ஒரு முகமாகிறது தாத்தில் மறைந்திருக்கும் நிலையைக் கொண்டு அந்த ஷஃனு தாத்துடைய ஐனேதான் மற்ற எல்லா ஷுஊன்களுக்கும் ஐனேதான. இந்த வகையில் ஷுஊனாத்துக்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. நிச்சயமாக அந்த ஷுஊனாத்துகள் தாத்துக்கு ஐனாகும். எனவேதான் தாத்தாகிறது நப்சுக்கு நப்சு வரிசையாகாது.
இன்னொரு முகமாகிறது அது ஷஃன் ஆகுதல் என்ற விதத்தைக் கொண்டுள்ள முகமாகும். இந்த முகத்தைக் கொண்டு அந்த ஷுஊனாத்துக்கள் தாத்து அல்லாத்ததும் மற்ற ஷுஊனாத்துகள் அல்லாத்ததுமாகும் ஷஃனாகுதல் என்ற நிலையைக் கொண்டு.
ஷுஊனாத்துகளின் ஐனிய்யத்து என்கிற ஒரு முகமும் ஷுஊனாத்துகளுக்கு வேறானது என்ற ஒரு முகமும் உண்டு என்று விளங்கு. ஷுஊனாத்துகள் அனைத்தும் ஷுஊனாத்துகள் என்ற விதத்தில் சிலது சிலதைவி;ட மேன்மையானதாகும். ஏனெனில் சிலது மற்ற ஷுஊனாத்துக்களை பொதிந்து கொண்டிருப்பதற்காக. சிலது வரிசையில் குறைந்ததுமாகும் மற்றவைகளை விட. ஏனெனில் இந்த வரிசை குறைந்த ஷஃன் ஆகிறது அதைச் சூழந்;து கொண்ட வரிசையுடைய ஷுஊனடைய ஹுக்முக்கு கீழே புகுந்ததற்காக. ஆகவே அது சூழப்பட்டதாகும். எனவே ஷுஊனாத்துகள் சிலது சிலதைச் சூழ்ந்ததாகவும் சிலதைக்கொண்டு சூழப்பட்டதாகவும் ஆனதற்காக.
சூழப்பட்ட ஷுஊனாகிறது அதை சூழ்ந்து கொண்ட ஷுஊனாத்துகளுடைய ஆதாறு, அஹ்காமு என்று சொல்லப்படும்.
நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் அவனுடைய அசலிய்யான தேட்டத்தை அனுசரித்து அவன் எக்காலமும் சூழப்பட்ட ஷுஊனாத்துடைய கோலம் என்றும் கண்ணாடியிலிருந்து எதுபோலவெனில் ஷுஊனாத்துடைய மர்த்தபாவில் உள்ள நெருப்பு எனும் ஷஃனைப் போல. அது வெப்பம், கரித்தல், பிரகாசித்தால் என்ற மூன்று ஷுஊனாத்துகளையும் பொதிந்ததாக அது ஆகியிருந்தது.
மேலான அல்லாஹ்வாகிறவன் ஆதியான தேட்டத்தை அனுசரித்து தொடரப்பட்ட தஜல்'லி எனும் நெருப்பு எனும் கோலத்தில் பேரில் வெளியானான். அதற்குப் பிறகு அவன் நெருப்பு எனும் கோலத்தின் கண்ணாடியிலிருந்து ஒளி, கரித்தல், நெருப்பு எனும் கோலங்களில் தஜல்லியாகிறான். இந்த ஒளி, கரித்தல், வெப்பம் என்ப இந்த நெருப்பின் ஆதாறுகளும், அஹ்காமுகளுமாகும். அவைகள் அந்த நெருப்பைத் தொடர்ந்து வெளியான வெளிப்பாடும் ஆகும். வெப்பத்துடைய உஜூது ஆகிறது நெருப்புடைய கோலத்தின் உஜூதைத் துயர்ந்ததாகும்.
ஆகவே நெருப்பு எனும் கோலமாகிறது தொடரப்பட்டதாகும். வெப்பம் எனும் கோலமாகிறது தொடர்ந்ததும் ஆகும்.ஆகவே தொடரப்பட்டது எப்போதும் தொடர்ந்ததை விட வரிசையாயிருப்பது அவசியமாகும்.
இதுபோன்றே ஹகீகத்துல் இன்சானிய்யா எனும் ஷஃனு ஆகிறது மற்ற ஷஃனுகள் எல்லாவற்றையும் சூழ்ந்து கொண்டதற்காக வரிசையானதாகும். ஆனால் ஹகீகத்துல் முஹம்மதிய்யாவைத் தவிர. ஏனெனில் ஹகீகத்துல் முஹம்மதிய்யாவானது, ஹகீகத்துல் இன்சானிய்யாவையும் சூழ்ந்ததாகும். ஆகவே ஷுஊனாத்துக்களுக்கிடையில் தரிபட்ட ஏற்றத்தாழ்வுகளாகிறது இல்முடைய மர்த்தபாவில் அஸ்மாக்களுக்கிடையில் தரிபட்ட ஏற்றத்தாழ்வுகளின் சுற்றாகும்-சுற்றுமிடமாகும்.
அஸ்மாக்கள் தம்மிலுள்ள ஏற்றத்தாழ்வாகிறது வெளியில் மவ்ஜூதான விசயங்கள் தம்மில் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் சுற்றுமிடமாகும்.
அன்பியாக்களாகிறவர்கள் அவர்கள் தம்முள் உண்டான ஏற்றத் தாழ்வுகளுடன் சித்தீக்கீன்களை விட வரிசையானவர்களாகும்.
சித்தீக்கீன்கள் அவர்களுக்கிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளுடன் ஷுஹதாக்களை விட மேலானவர்களாகும். ஷுஹதாக்கள் சாலிஹீன்களை விட மேலானவர்களாகும்.
வஸ்த்துக்களுக்கிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை இதன் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள். இதிலிருந்து தரிபட்டு விட்டது ஏற்றத்தாழ்வுகளுடைய சுற்றதாகிறது வேறு என்ற முகத்தைக் கொண்டாகும். ஐனிய்யத்து என்ற முகத்தைக் கொண்டல்ல.
சந்தேகமில்லாமல் அறிவைக் கொண்டு நீ அறிந்து கொள், ஹகீகத்தை அறிந்த எல்லா மனிதனும் அவன் தன் நப்சை அது ஹக்குத்தான் என்றறிவான்.
அவன் ஐனுல் யகீன் என்ற மர்த்தபாவுடையவனாக ஆகியிருப்பானேயானால் ‚அனல் ஹக்கு' என்று சொல்லுவான்.
அவன் ஐனும் அதறும் அழிந்த மர்தபாவுடையவனாக இருப்பானே ஆனால் ஹக்குல் யகீன் எனும் மர்த்தபாவுடையவன் ஆகும். அவன் ‚அன' என்று மட்டும் சொல்லுவான். அல்லது لااله الا اناஎன்று சொல்லுவான். என்றாலும் ஹக்குல் யக்கீன் எனும் மர்த்தபாவுடையவன் ஆக இருந்தாலும் சரி அவன் அன நபிய்யி என்று சொல்லுவது அவனுக்கு அவன் நபியல்லாத்தவராயிருந்தால் ஜாயிஸில்லை(ஆகுமாக்கப்படவில்லை).
அல்லது நான் மூஸா, நான் ஈஸா, நான் முஹம்மது, நான் ரஸூல் அல்லது நான் இன்ன வொலி அதாவது நான் செய்கு அப்துல் காதிர் ஜீலானி அல்லது நான் ஷெய்கு முயினுத்தீன் ஜிஸ்தி அல்லது நான் ஷாஹ் பகாவுத்தீன் அன் நக்ஷபந்து, அவர்கள் அல்லாத்தவர்கள் போலும் கூறுவது ஜாயிஸில்லை.
நிச்சயமாக அவனாகிறவன் நான் இன்னான் என்று சொல்லுவானேயானால் அந்த ‚நான்' எனும் சொல்லானது அது ‚வேறு' என்பது கொண்டு கட்டுப்பட்டதாகும். ஒவ்வொரு வஸ்த்துவும் மற்ற வஸ்த்து அல்லாத்தது ஆகும். ‚வேறு' எனும் மர்த்தபாவில் வெளியில் ஒரு ஷஃனும் வெளியில் வெளியாகாது அதனுடைய சொந்தமான ஆதாறுகள், அஹ்காமுகளைக் கொண்டே ஒழிய.
ஒரு நபி அல்லது வலி அவர்களின் வெளியான ஷஃனு எனும் கோலத்தில் அந்தக் கோலத்துக்கு சொந்தமான ஆதாறு அஹ்காமு இருப்பதுடன் என்பேரில் வெளியானார் என்று ஒரு மனிதன் வாதிட்டு நான் இன்னான் என்று சொல்வானேயானால் அந்த ‚நான்' என்பது அவனுடைய வெளியில் உண்டான கோலத்தின் பேரில் சேர்க்கப்பட்டதாகும். அந்த வெளியில் உண்டான கோலமாகிறது நபி, றஸூல், ஈஸா, மூஸா, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாத்த கோலமாகும். இவ்வாறே கௌது சமதானி, ஹாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி, ஷாஹ் பஹாவுத்தீன் நக்ஜபந்து (ரஹிமஹுமுல்லாஹ்) அவர்களுடைய கோலம் அல்லாத்ததுமாகும்.
இவன் தன்னுடைய கோலத்தைக் கொண்டு இவர்கள் எல்லோருக்கும் வேறானவனாகும்.
‚நான் இன்னான்' என்று வாதிட்டதாகிறது அல்லாஹ்விலிருந்து கிடைத்த உட்பார்வை இல்லாமல் இவ்வாறு வாதிட்டது பிழையாகும்.
எல்லா வஸ்த்துக்களும் ஷஃனு எனும் விதத்தில் பாதினில் தாத்துக்கு ஐனானதாகும். வெளியில் உண்டான கோலம் எனும் விதத்தில் தாத்து அல்லாத்ததுவாகும். ஏனை வஸ்த்துக்கள் அடங ;கலுக்கும் வேறுமாகும்-அல்லாத்ததுமாகும்.
இதைப் பாடமாக்கிக் கொள்! ஒவ்வொரு வஸ்த்துவுக்கும் அதன் ஹ க்கைக் கொண்டு அறிவிலிகளின் கூட்டத்தில் ஆகிவிடாதே. நீ, ஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய சீடர்களுக்கு لااله الا الله والشبلي رسول الله
லாஇலாஹ இல்லல்லாஹு வஷிப்லீ ரஸூலுல்லாஹ் என்று சொன்னார் என்று சொல்லுவாயானால், அவர் எப்படி இந்த றிசாலத்தை வாதிட்டார்( அவர்கள் மஃரிபாவிலும், ஹகாயிக்குடைய இல்மிலும் கடலாயிருப்பதுடன்) என்று நீ கேட்பாயானால், நான் சொல்லுகிறேன்,
ஆம் சரிதான் அவர் சொன்னார், அதுவும் ஒரு குறிப்பான நேரத்தில் மட்டும்தான் சொன்னார். வழமையாகச் சொல்லவில்லை. அந்தச் சொல் ஹகீகத்தில் முஹம்மதியாவின் நூறு இவரின் பேரில் மிகைத்த காரத்தாலும் அவரில் அறந்த நூறு முஹம்மதுடைய அதிகாரம் வெளியான காரணத்தினாலும் அவ்வாறு சொன்னார்.
ஒரு சில நேரங்களில் அல்லாஹுத்தஆலா அவனின் அவ்லியாக்களில் சிலரை சிறப்பாக்க நாடுவானேயானால் ஹகீகத்துல் முஹம்மதிய்யாவின் அனுபவத்தை அனுபவிப்பது கொண்டும் ஹகீகத்துல் முஹம்மதிய்யாவின் ஒளியை ஊற்றிக் கொடுப்பது கொண்டும் ஹகீகத்துல் முஹம்மதிய்யா எனும் முகமூடிக்குக் கீழே முற்றிலும் அவர் மறையும் வரை, அப்படி மறைந்தால் அவர் தன் நப்சை ஹகீகத்துல் முஹம்மதிய்யா என்னும் ஐனைத் தவிர காணவே மாட்டார்.ஆகவே அவர் சொல்லுவார் அந்த ஹகீகத்துல் முஹம்மதிய்யாவுடைய நாவைக் கொண்டு (ஆனால் தன்னாவைக் கொண்டல்ல) ‚அன முஹம்மதுர்ரஸூலுல்லாஹி' என்று சொல்லுவார். இன்னும் ‚அன ரஸூலுல்லாஹி' என்றும் சொல்லுவார்.
இதுபோலத்தான், அவ்லியாக்களின் சிலரின் ஒளி அவர்களின் சில முரீதீன்களின் பேரில் மிகைத்துவிடும். அந்த நேரம் அந்த முரீது மீண்டும் மிகைக்கப்பட்டவராக ஆகிறார். அவர் சொல்லுகிறார் ‚நான் செய்கு அப்துல் காதிர் ஜெய்லானி என்றும், ‚ஷெய்குல் அக்பர்' என்றும் சொல்லுகிறார். உண்மையில் அவர் ஜீலானியும் அல்ல, ஷெய்குல் அக்பரும் அல்ல.அவர்கள் இரண்டு பேரின் ஒளியாகிறது அதன் அதிகாரத்தைக் கொண்டு இவரின் பேரில் வெளியாகிவிட்டது. இன்னும் அவரை மிகைக்கப்பட்டவராகவும் ஆக்கிவிட்டது. அவர், அவர் சொன்னதைச் சொன்னார்.
இவ்வாறு ஷெய்கில் நாஸ்தியாகும் மர்த்தபாவையும் றஸூலில் நாஸ்த்தியாகும் மர்த்தபாவையும் இதன் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள். இவைகளில் நின்றும் ஒவ்வொன்றுமமாகிறது மிகைப்புடைய மர்த்தபாவாகும்.
அப்போது அல்லாஹ்வில் நாஸ்தி எனும் மர்த்தபாவாகிறது அது உண்மையான விசயமாகும். அந்த நாஸ்தியானவனுக்கு.
அந்த நாஸ்தியில் இரண்டு முகங்கள் உண்டு.
1.ஐனிய்யத்தான முகம்:- இந்த முகத்தைக் கொண்டு அவன் அவனாக அல்ல, ஆனால் ஹக்காக இருக்கிறான். இந்த மர்த்தபாவில் அவன் ஒருவனைவிட வரிசையானவனுமல்லன். வரிசையாக்கப்பட்டவனுமல்லன். அவன் முற்றிலும் நாஸ்தியானவன் ஆகும். சடத்தாலும், குணபாட்டாலும்.
2.ஷுஊனாத்துகளில் நின்றும் ஒரு ஷஃன் எனும் நிலைமையைக் கொண்டு அது ‚வேறு' என்ற முகமாகும் – வஸ்த்துக்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு உண்டாகிற விசயத்தில் சொல்லப்பட்ட அசலின் பேரில்,
அவன் இந்த நிலைமையில், நீ அறிந்தது போல், ஒரு விதத்தில் வரிசையானவன் ஆகவும், ஒரு விதத்தில் வரிசையாக்கப்பட்டவன் எனவும் ஆகுகிறான்.
ஆகவே, நீ படைப்பின் பக்கம் திரும்பினால் அவனுக்கு அவனுக்கென்று சொந்தமான ஆதாறு,
அஹ்காமுகளைக் கொண்டு திரும்புவது நிர்பந்தமாகும். மீண்டும் அவனாகிறவன் திரும்புதல் எனும் மர்த்தபாவில் ஒரு விதத்தில் வரிசையானவன் ஆகவும், இன்னொரு விதத்தில் வரிசையாக்கப்பட்டவன் ஆகவும் ஆகிறான்.
பைஅத்துக் கொண்டு கொழுகப்பட்ட இல்முடைய சிர்றை அறிவதும், தரீக்காவுடைய ஷெய்குமார்களிடம் பைஅத்துப் பெறுவது நிர்பந்தம் என்பதை அறிவதும் இந்தப் பாடத்தில் நின்றும் உள்ளதாகும்.
ஷெய்குடைய ஷஃனாகிறது, ஷுஊனாத்து எனும் மர்த்தபாவில் முரீதுடைய கமாலாத்துகளெனும் ஷுஊனைக் கொண்டு சூழ்ந்ததாக ஆகியிருந்தது. முரீதுடைய கமாலாடதுகள் எனும் ஷஃன்கள் ஷெய்குடைய சூறத்தை தொடர்ந்த வெளிப்பாட்டில் புகுந்ததாகவும் இருந்தது. ஷெய்குடைய கமாலாத் எனும் மிஷ்காத்திலிருந்து ஷெய்குடைய றூஹு, கல்பு உடைய உதவியைக் கொண்டு வெளிப்பாட்டை ஏற்றுக் கொண்டதாகவும் இருந்தது. அந்த முரீதுடைய ஷஃனின் வெளிப்பாடு ஷெய்குடைய கமாலாத்து எனும் ஆதாரிலும் அஹ்காமிலும் உள்ளதாக ஆகியிருந்தது.
ஒருவரைக் கொண்டு சொந்தமாக்கப்பட்ட அஹ்காம் ஆதாறுகள் அது உடையாரின் வஸீலாவை கொண்டே ஒழிய அது பெற்றுக் கொள்ளப்படாது என்பதை பல விடுத்தம் நீ அறிந்திருக்கிறாய்.
முரீதுக்கு ஒரு காமிலான ஷெய்கில் இருந்து வஸீலா தேடுவது நிர்ப்பந்தமாகும். எப்படியான ஷெய்கு எனில் இந்த முரீதின் கமாலாத்துகள் அந்த ஷெய்கின் ஆதாறுகள், அஹ்காமுகள் எனும் கமாலாத்துள் புகுந்ததாகவும், முரீதின் கமாலாத்துகள் விளையுமிடமாகவும் இருக்கின்ற ஷெய்கிடம் வஸீலா தேடுவது நிர்பந்தமாகும். இந்த இரகசியத்துக்கான அநேக ஷெய்குமார்கள் அவர்களிடம் வந்த தாலிபுகளிடம் ‚பைஅத்து' எடுக்கவில்லை.
அவர்களுக்கு சொன்னாhகள்;, அவர்களின் நுண்ணறிவின் ஒளியைக் கொண்டு அறிந்ததன் பிறகு (விளங்கிய பிறகு) இந்த முரீதுடைய கமாலாத்துகள் நம்முடைய ஆதாறிலும், அஹ்காமிலும் உட்பட்டதல்ல என்று அறிந்ததன் பின், அவர்கள் ‚பைஅத்து' வாங்கவில்லை.
என்றாலும் அந்தக் கமாலாத்துகள் இன்னொரு செய்கின் சூறத்தின் ஹுக்முகளில் உள்ளது என்று அறிந்ததினால் அநேகர்களிடமிருந்து ‚பைஅத்து' பெறவில்லை.
ஒருசில ஷெய்குமார்கள் அந்த தாலிபின் ஷெய்கின் சூறத்தை குறிப்பாக்கி, நீ இன்னாரிடம் போ என்று சொல்லுவார்கள்.
ஒரு சிலர் குளிப்பாக்குவதை விட்டும் அடங்கி விடுவார்கள். இன்னும் நீ உங்களில் உள்ளவனல்ல, உன் நஸீபு எங்'களில் நின்றும் உள்ளதுமல்ல. உன் நஸீபை நாங்'கள் அல்லாதவர்களிடமிருந்து தேடிக் கொள்வாயாக! என்று சொல்லுவார்கள். நீ விளங்கிக் கொள், சங்கையான, வண்ணமான அல்லாஹ்வுக்கு நன்றி செய்.
இந்தப் பாடத்தில் நின்றும் உள்ளதுதான் மொழிதலினாலான இஸ்மை எதின் பேரில் வைக்கப்பட்டதோ அது அல்லாத்ததில் புழங்குவது தடுக்கப்பட்டது என்பது கொண்டு கொழுகின சிர்றை அறிதல்.
கழுதை எனும் பெயரை மாட்டின் பேரில் புழங்குவது தடை என்பது போல,
மாடு எனும் பெயரை குதிரையின் பேரில் புழங்குவதும் குதிரையின் பெயரை மனிதனின் பேரில் புழங்குவதும் தடுக்கப்பட்டதாகும் என்பது போல,
கழுதை, மாடு, குதிரை, மனிதன் இவைகள் அனைத்தும் உயிரினம் எனும் உள்ளரங்கத்தில் ஒரே ஐனாக இருந்தாலும் சரி.
இதுபோன்றுதான் ஷுஊனடைய மர்த்தபாவில் தாத்துக்கு ஐனாக இருந்தாலம் சரி. உஜூது எனும் உள்ளமையில் ஒன்று மற்றதின் ஐனாக இருப்பதும் இதுபோலவேதான்.
அவைகளில் ஒன்று மற்றவைகளின் ஐனாக இருப்பதை நீ அறிந்திருப்பதுடன் அதாவது விலங்கு எனும் உள்ரங்கத்திலும் உஜூது எனும் உள்ரங்கத்திலும் ஒன்று மற்றதுதான் என்று அறிவதுடன், அதில் ஒன்றுடைய பெயரை மற்றதன் பேரில் புழங்குவது உனக்காகாது. ஏனெனில் கூட்டத்தை விட்டும் நீ தனித்துப் போவது நிர்பந்தம் ஆகிவிடும் என்பதற்காக.
குறிப்பாக்கப்படாத கலப்பற்ற உஜூதின் நேர்பாட்டில் வைக்கப்பட்ட ஹக்குடைய இஸ்முகளை கௌனீயான குறிப்பான வஸ்த்துக்களின் பேரில் புழங்குவதாகிறது ஷரீஅத்துடைய ஹுக்மு கொண்டு ஷிர்க்காகும். தரீக்காவுடைய ஹுக்மைக் கொண்டு குப்றுமாகும். இல்மில் யக்கீனைக் கொண்டு அதனுடைய ஹகீகத்தை அறிந்திருந்தால் தரீக்கத்துடைய ஹுக்மில் குப்றுமாகும்.
நீ அதனுடைய ஹகீகத்தைக் கொண்டு அறியாதவனாக இருந்தால் ஷரீஅத்திலும், தரீக்கத்திலும் ஷிர்க்காகும். உன்னுடைய பார்வையைத் தொட்டும், உன் உள்பார்வையைத் தொட்டும் கோலங்கள் எனும் திரையை உயர்த்தப்படுவதற்கு முன்பதாக, அறிந்தோ, அறியாமலோ உன் நப்சையோ மற்றதையோ ‚ஹக்கு' என்று சொல்லக் கூடாது.
வாயால் சொல்லாமல் கல்பைக் கொண்டு அறிவது அதாவது இவைகள் ஹக்குதான் என்று அறிவது உனக்கு குற்றமில்லை. ஏனெனில், நிச்சயமாக கல்பில் உள்ள இருள்களாகிறது அது இல்முல் யகீன் எனும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டு நீங்கிவிட்டது. ஆனால், உன்னுடைய வெளிரங்கமாகிறது அது இருளடைந்ததாகவும், அது ஹகீகத்துடைய பார்வை எனும் ஒளியைக் கொண்டு அது ஒளி பெறாததற்காகவும் ஆகும்.
உன்னுடைய முகமூடி உயர்த்தப்படுமானால் அதாவது ஒளிவாலானதும், இருளாலானதுமான திரைகள் நீக்கப்படுமானால் உன்னுடைய முகம் எனும் கண்ணாடியிலிருந்து வரும் பிரகசாம் உன்னுடைய பார்வை எட்டும் இடமெல்லாம் உள்ள வஸ்த்துக்கள் அனைத்தையும் எரித்துவிடும்.
நான் கௌனீயான குறிப்பான கோலங்கள் அனைத்தையும் பொசுக்கிவிடும் என்று நாடுகிறேன். உலகம் பூராவும் உன் கண் முன்னிலையில் கலப்'பற்ற ஒளியாக ஆகிவிடும். நீ எங்கு திரும்பினாலும் அவன் முகத்தைத் தவிர நீ பார்க்கமாட்டாய். நீ ஐனல் யக்கீன் எனும் மர்த்தபாவைக் கொண்டு பாக்கியம் பெற்றுவி;ட்டாய்.
அந்நேரத்தில் நான் ஹக்கு அல்லது தான் அல்லாத்ததைப் பாhத்;து அ அது ஹக்கு என்று சொல்வது உனக்கு குற்றமில்லை. ஏனெனில் நீ பேனா உயர்த்தப்பட்டவனாக ஆகிவிட்டாய். ஹகீகா என்னும் கோட்டைக்குள் நுழைந்துவிட்டாய். தரீகத்துடையதும், ஷரீயத்துடையதுமான பிடிகளை விட்டும் நீ தப்பித்து விட்டாய்.
நீ முகம் போன போக்கில் செல்லும் மஸ்த்தனாக ஆகிவிட்டாய். ‚ஜலால்', ‚ஜமால்' எனும் காட்சி எனும் கள்ளைக் கொண்டு மஸ்த்துடையவனாக ஆகிவிட்டாய்.
பன்மையில் ஒருமையைக் காணக்கூடியவனுக்கு பல குடிக்குமிடங்கள் உண்டு. அந்த குடிப்பை குடித்தவர்களில் உள்ளவர்களில் சிலர் கௌனிய்யத்தான கோலங்களை காட்சி கண்டதன் பிறகு ஹக்கான ஒருவனின் உஜூதைக் காட்சி காண்கிறார்கள்.
நான் அப்போ ஒரு வஸ்த்துவையும் காணவில்லை அவற்றுக்குப் பின் அல்லாஹ்வைக் கண்டே ஒழிய.ما رأيت شيئا الاورأيت الله بعد .என்று சொல்லுவார்கள்.
அவர்களில் நின்றும் உள்ள சிலர் ஹக்குடைய உஜூதைக் காட்சி காண்பார்கள். கௌனீய்யான கோலங்களைக் காண்பதற்கு முன்னால். அப்போது அவர்கள் .مارأيت شيئا الا ورأيت الله قبلهநான் அப்போ ஒரு வஸ்த்துவையும் காணவில்லை அவற்றுக்கு முன் அல்லாஹ்வைக் கண்டே ஒழிய என்று சொல்லுவார்கள்.
இன்னும் அவர்களின் நின்றும்' உள்ள சிலர் அவர்கள் ஹக்குடைய உஜூதைக் கௌனீயத்தான சூறத்துக்களை காண்பதுடன் காண்பார்கள். அப்போது அவர்கள் ما رأيب شيئا الا ورأيت الله معه நான் அப்போ ஒரு வஸ்த்துவையும் காணவில்லை அவற்றுடன் அல்லாஹ்வைக் கண்டே ஒழிய என்று சொல்லுவார்கள்.
இன்'னும் அவர்களில் நின்றும் உள்ள சிலர் கௌனீயான சூறத்துக்களை கண்ணாடி போலக் காண்பார்கள். அதாவது ஹக்குடைய உஜூதை அதில் வெளியானதாகக் காண்பார்கள். அப்போது அவர்களمارأيت شيئا الا ورأيب الله فيهநான் அப்போ ஒரு வஸ்த்துவையும் காணவில்லை அதில் அல்லாஹ்வைக் கண்டே ஒழிய என்று சொல்லுவார்கள்.
அவர்களில் நின்றும் உள்ள சிலர் தனித்த உஜூதை மட்டும் காட்சி காண்கிறார்கள். கௌனீயான கோலங்களைக் காண்பதில்லை. ஏனெனில் அவன் முகத்தில் உஜூது எனும் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருப்பதினால். இன்னும் அவன் முன்னிலையிலிருந்து கௌனீயான இருள் ஓடிப்போனதாலேயும் கௌனீயான கோலங்களை காண மாட்டான். அப்போது அவர்கள் .مارأيت شيئا الا اللهநான் எந்த ஒரு வஸ்த்துவையும் காணவில்லை அல்லாஹ்வைத் தவிர என்று சொல்லுவார்கள்.
இன்னும் அந்தக் கூட்டத்தில் நின்றும் உள்ள சிலர் அவர்கள் குடிப்புகளில் அதி சிறந்த குடிப்பைக் குடித்தவர்கள். இன்னும் ஆக உயர்ந்த தரத்தைக் கொண்டு பாக்கியம் பெற்றவர்கள்.
அதாவது அவர்களுக்கு நாஸ்த்தி உண்டாகிவிட்டது. அவர்கள் ஐனாலும், அதறாலும் பனாவைப் பெற்றவர்கள். அவர்களிடத்தி;ல் அவரைப் பற்றியோ கௌனுகளைப் பற்றியோ ஒரு செய்தியும் இல்லை. விபரமும் இல்லை. அவர்கள் சொல்லுகிறதாக இருந்தால் مارأي الله الاالله அல்லாஹ் காணவில்லை அல்லாஹ்வைத் தவிர என்று சொல்லுவார்கள். அல்லது لاموجود الاانا -என்னைத் தவிர வேறு மவ்ஜூது இல்லை என்று சொல்லுவார்கள்.
அப்போது இங்கு ஷாஹிது, மஷ்ஹூது, ஷுஹூது என்பன அனைத்தும் ‚நான்' என்று சொல்வார்கள். இந்த ஹகீகத்தின் நிலைமைகள் பற்றிய விளக்கம் மேலும் நெருங்குவதற்காக உனக்கு நான் உதாரணம் கூறுகிறேன்.
அறிந்து கொள் சோதரா! மோதிரம் எனும் கோலமாகிறது அது தங்கத்தின் ஐனாகும். உனக்கு அந்த மோதிரத்தை பார்ப்பதிலும் தங்கத்தைப் பார்ப்பதிலும் பல சுற்றுகள் உள்ளன.
ஆரம்பப் பார்வையில் மோதிரத்தின் கோலத்தை நீ காணுவாயானால் நீ சொல்லுவாய் இம்மோதிரம் செய்தவனுடைய செயல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லுவாய்ما احسن صنعة الصانع இரண்டாம் விடுத்தம் அந்த மோதிரத்தை கூர்ந்து பார்த்ததன் பிறகு நீ தங்கத்தை காண்பாயாகில் அப்போ நீ இந்தத் தங்கத்தின் நிறம் எவ்வளவு அழகாயும், தங்கம் எவ்வளவு சுத்தமாயும் இருக்கிறது என்று சொல்லுவாய். அப்போது مارأيت الخاتم الاورأيت اذهب بعده மோதிரத்தை நான் பார்க்கவில்லை அதற்கு பின்னால் தங்கத்தைப் பார்த்தே ஒழிய என்று சொன்னவன் போல் ஆகிறாய்.
நீ முதல் பார்வையில் தங்கத்தைக் காண்பாய். ஆனால் அதன் நிறமும் அதன் பரிசுத்தமும், உன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு காண்பாய். ஆனால் மோதிரம் எனும் கோலத்தையும் வேலைக்காரனின் திறனையும் தங்கத்தைக் கண்டதன் பிறகு இரண்டாவதாக காண்கிறாய். அப்போது நீ مارأيت الخاتم الاورأيت الذهب قبله மோதிரத்தை நான் பார்க்கவில்லை அதற்குமுன்னால் தங்கத்தைப் பார்த்தே ஒழிய என்று சொன்னவன் போல் ஆகிறாய்.
நீ மோதிரம் எனும் கோலத்தை தங்கத்துடன் காண்பாய். ஆனால் இந்தத் தங்க மோதிரம் எவ்வளவு அழகாய் இருக்கு என்று சொல்லுவாய். அப்போ நீمارأيت الخاتم الاورأيت الذهب معه மோதிரத்தை நீ கண்ணாடியைப் போலும் தங்கத்தை அதில் இரண்டாவதாகவும் காணுவாயாகில் அப்போது நீ.مارأيت الخاتم الاورأيت الذهب معه மோதிரத்தை நான் பார்க்கவில்லை அதில் தங்கத்தைப் பார்த்தே ஒழிய என்று சொன்னவன் போலாகிறாய்.
கலப்பற்ற தங்கத்தை காண்பாய். ஆனால் மோதிரம் எனும் கோலத்தை பார்க்கும் பார்வையை உயர்த்திய பின், மோதிரம் எனும் கோலத்தை நீ கவனிக்கவும் இல்லை. நீ மோதிரம் எனும் கோலம் உன் பார்வையை விட்டும் மறைகிறது வரையும் அதன் கவனிப்பை இல்லாமல் ஆக்குவதிலும் நீ தெண்டித்து தனித்த தங்கத்தை காண்பாய். அப்போது நீ இத்தங்கம்
هذا الذهب خالص ولونه فاقعஎவ்வளவு சுத்தமானது. அதன் நிறம் எவ்வளவு அழகானது என்று சொன்னவன் போலாகிறாய்.
இந்த மோதிர செய்கை பற்றி நீர் திரும்பிப் பார்க்கவில்லையாயின், அப்போ நீ مارأيت الخاتم الاالذهب மோதிரத்தை பார்க்கவில்லை தங்கத்தைத் தவிர என்று சொன்னவன் போலாகிறாய்.
அந்த குடிப்புகளில் ஆகச் சிறப்பான குடிப்பாகிறது அதற்கு உதாரணமாகிறது காப்பு, மோதிரம் ஆகும். இவை இரண்டும் தங்கத்தின் வெளிப்பாடேதான். ஆபரணங்கள் எனும் கோலங்களில் வெளியான தங்கம் அனைத்தும் இதுபோன்றுதான். அப்போது மோதிரம் எனும் கோலமும் வளையல் எனும் கோலமும் இவை இரண்டும் அல்லாத்ததும், ஆபரணம் எனும் கோலமாக வந்தவைகளும் தங்கத்தின் ஆதேயங்களாகும். அதற்கு தாத்திலும் ஹகீகத்திலும் தனித்த ஒரு உஜூது இல்லை என்றாலும் தங்கத்தின் உஜூதுதான் அந்த உஜூதின் ஐனாகும். ஆபரணங்கள் எனும் கோலங்கள் தாத்திலும், சிபாத்திலும் இல்லாததாகும். அதற்கு கேள்வியோ பார்வையோ இல்லை. இது போலதான் மற்ற வெளியான உள்ளான புலன்களும் இல்லை.
வளையல் எனும் கோலமும், மோதிரம் எனும் கோலமும் அதன் நப்சையும், அது அல்லாத்ததையும் அறவே காணவில்லை. இங்கே பார்க்கப்படக் கூடியதும், பார்க்கிறதும் தங்கமேதான். ஆகவே தங்கம் தன்னைக் கொண்டு தன்னைக் காணுகிறது. மோதிரம் எனும் கோலங் கொண்டு அல்லது அவை அல்லாத்த ஆபரணம் எனும் கோலங் கொண்டு கட்டுப்படுத்தப்பட்டாலம் சரி,(உதாரணம்) கடலைப் போல.
அதாவது அலைகள் உள்ள சந்தர்ப்பத்தில் கடல் தன் நப்சைக் கொண்டு தன்னைக் காண்கிறது. எவ்வாறெனில் அலைகள் அடங்கின நேரத்தில் கடல் தன்நப்சைப் பார்ப்பது போல, கடல் தன் நப்சைத் தவிர வேறொன்றையும் அலை உள்ள நேரத்திலும், அலை இல்லாத நேரத்திலும் பார்க்கவும் இல்லை.
ஏனெனில் அலைகள் என்னும் கோலங்களாகிறது இந்தக் கடலின் சுற்றுகளாகும். அந்த அலைகள் தன்னிலே இல்லாத்ததுமாகும். காட்சியையும் காட்சி காணப்படுவதையும் ஏற்றுக் கொள்ளாததுமாகும். இதேபோலத்தான் மோதிரம் எனும் கோலமும் வளையல் எனும் கோலமும் சுயமாக இல்லாததும் பார்வையையும் பார்க்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ளாததுமாகும். ஆகவே தங்கமாகிறது தனது நப்சைக் கொண்டு தன் நப்சைப் பார்ப்பது போல பொதுப்படையான நேரத்திலும், நகைகள் எனும் கோலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நேரத்திலும் தன் நப்சு தன் நப்சைப் பார்க்கும். அப்போது அது لاموجود الا ذاتيலா மவ்ஜூத இல்லா தாத்தி – மவ்ஜூதான பொருள் என் தாத்தை தவிர இல்லை என்று சொல்லும். ஆகவே தங்கம் தங்கத்தை அல்லாது காணவில்லை. இதன் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
ஆக உயர்ந்த குடிப்பைக் குடித்தவர்களின் நாவைக் கொண்டு சொல்லும் சொல்லை இதன்பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள். அவர்கள்
مارأي اهpடி الااه;.அல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர காணவில்லை என்று சொன்னால் இதன்பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
இந்த நேரத்தில் அவர்களுடைய சொல்லாகிறது ஹகீகத்தில் அல்லாஹ்வுடைய சொல்லாகும். அதாவது கட்டுப்படுத்தப்பட்ட மர்த்தபாவில் சொல்லுகிறவனின் கோலத்தின் பேரில் அல்லாஹ் கூறுகிறான். அவனுடைய கதீமான கிதாபில் சங்கையான நபியைத் தொட்டும் அறிவிக்கிறவனாக அவனது கிதாபில் சொன்னது போல அதாவதுوما رميت اذرميت ولكن اه; رمي (நீங்கள் எறிந்த நேரத்தில் நீங்கள் எறியவில்லை அல்லாஹ்தான் எறிந்தான்) அல்லாஹ்வுத்தஆலா தன்ஸீஹு உடையதும், பொதுவானதுமான மர்த்தபாவில் அவன் ஆகியிருந்தது போல. அதாவது தன்னைக் கொண்டு தன் நப்சைப் பார்க்கிறவனாகவும், பார்க்கப்படும் பொருளாகவும் ஆகியிருந்ததுபோல.
அப்படியேதான் அல்லாஹ்வுத்தஆலா தன்ஸீஹ் எனும் பொதுப்படையின் மர்த்பாவில் தன் நப்சைக் கொண்டு தன் நப்சை பார்ப்பவனாக ஆகியிருந்தது போல, தஷ்பீஹ் எனும் கட்டுப்படுத்தப்பட்ட மர்த்தபாவிலும் தன் நப்சைக் கொண்டு தன் நப்சைப் பார்க்கிறான்.
ஆகவே அவன்தான் பாhக்;கிறவன், பார்க்கப்படுபவன், அவன்தான் ஹாமீதும், மஹ்மூதும்.
காயினாத் எனும் கோலங்களாகிறது ஹக்கான ஒருவனான தாத்தின் சுற்றுகளிலிருந்து பிடித்தெடுக்கப்பட்ட விசயங்களாகும். தாத்தைக் கொண்டும் ஹகீகத்தைக் கொண்டும் அதற்கு ஒரு உஜூது இல்லை. இந்த விசயத்தை தரிபடுத்துவதை பல விடுத்தம் நான் கூறியது போல.
கௌனுகள் எனும் அணுக்களிலிருந்து ஒரு அணுவுக்கும் பார்க்கும் தன்மையும் இல்லை. பார்க்கப்படும் தன்மையும் இல்லை ஆதியிலிருந்து அந்தம் வரை.
ஒரு வஸ்த்துவும் ஒரு வஸ்த்துவை பார்;க்கவில்லை, தத்தமக்குள் காணவுமில்லை. ஆயினும் அல்லாஹ் தான் தன் நப்சைக் கொண்டு தன் நப்சைக் காண்கிறான்.
ஆகவே ஆதியிலிருந்து அந்தம் வரை காணும் பொருளும் காணப்படும் பொருளும் அவனேதான் ‚லாயிலாஹ இல்லல்லாஹு‚ விளங்கிக் கொள். மதிமறந்ததவனாக இருக்காதே. நன்றி செலுத்துகிறவர்களில் நின்றும் ஒருவனாய் இரு.
இந்தப் பாடத்தில் நின்றும் உள்ளதுதான் மொழிதலினாலான அஸ்மாக்களைக் கொண்டு வஸீலாத் தேடும் சிர்றுகளின் அறிவும் இதில் உள்ளதுதான். ஆகவே இந்த மொழியப்பட்ட நாமங்கள் இஸ்முக்கு இஸ்மாகும். அதாவது ஐனல் முஸம்மாவான அஸ்மாக்களுக்கு அஸ்மாக்களாகும். அந்த ஐனல் முஸம்மாவான அஸ்மாக்களாகிறது விரிவான அறிவுடைய மர்த்தபாவில் அவனுடைய ஷுஊனாத்துக்கள் எனும் உடைகளின் பேரில் வெளியானவைகளாகும். இதற்கு முன் நீ அறிந்தது போல.
எல்லா மொழிதலிலான இஸ்முகளும் ஹகீகிய்யான இலாஹிய்யா இஸ்முகளின் நேர்பாட்டில் வைக்கப்பட்டதாகும். இஸ்மிய்யான மர்த்தபாவில் ஷஃன் எனும் உடையைக் கொண்டு உடை அணிந்ததன் கோலமாகம். உதாரணம் அல்லாஹ் எனும் ஜலாலத்துடைய இஸ்முபோல இது தெய்வீகத் தன்மை எனும் மர்த்தபாவுக்கு நேர்பாடாக வைக்கப்பட்ட மொழிதலினாலான பெயர் ஆகும்.
உம்மஹாத்து சிபாத்துக்களையும் இதிலிருந்து பிறந்துண்டான ஏனைய சிபாத்துக்களையும் சேகரித்த ஷஃனைக் கொண்டு உடை அணிந்த கோலமாகும். ஏனைய சிபாத்துக்களான கரீமுன், றஹீம், கஹ்ஹார், ஜப்பார் என்பன போல இவைகளுக்கு சொந்தமான ஆதாறுகளும் அஹ்காமுகளும் உண்டு.
இதுபொலதான் ‚அப்வு' எனும் மொழிதலினாலான இஸ்மும் . அப்வு எனும் ஷஃனைக் கொண்டு உடை அணிவதனால் அவனது இல்மில் உண்டான கோலத்திற்கு நேர்பாடாக வைக்கப்பட்ட இஸ்மாகும். இதுதான் உள்ளமையான இஸ்முமாகும். இது ஐனல் முஸம்மாவுமாகும். நீ இதற்கு முன் அறிந்தது போல.
அஷ்ஷாபி எனும் மொழிதலினாலான இஸ்மும் இது போன்று வைக்கப்பட்டதாகும். அதாவது சிபா எனும் ஷஃனைக் கொண்டு உடை அணிந்ததினால் அவனது இல்மில் உண்டான கோலத்திற்கு நேர்பாடாக வைக்கப்பட்ட பெயராகும். இது தான் உள்ளமையான பெயராகும். இது ஐனுல் முஸம்மாவுமாகும்.
இதுபோலவே கஹ்ஹார் எனும் இஸ்மும் அதாவது கஹ்று எனும் ஷஃனைக் கொண்டு உடை அணிந்ததன் பின் அவனது இல்மின் மர்த்தபாவில் அவனுக்கு உண்டான சூறத்துக்கு நேர்பாடாக வைக்கப்பட்ட மொழிதலினாலான இஸ்மாகும். இது உள்ளமையான இஸ்மாகும். இது ஐனுல் முஸம்மாவுமாகும்.
இதன்பேரில் தர்தில் மறைந்திருக்கும் தாத்தியான ஷுஊனாத்துக்களைக் கொண்டு உடை அணிந்ததன் பின் அவனது இல்மில் உண்டான கோலங்களுக்கு நேர்பாடாக வைக்கப்பட்ட மொழிதலினாலான அஸ்மாக்கள் அனைத்தையும் ஒழுங்கு பிடித்துக் கொள்.
நிச்சயமாக அந்த இஸ்முகளின் ஷஃன்களையும், இதைக் கொண்டு கொழுக்கப்பட்ட ஆதாறு என்னும் ஷஃன்களையும் இந்தப் பாடத்தில் நீ அறிந்திருக்கிறாய். தாத்து என்பது ஒவ்வொரு குறிப்பான கோலத்திலும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். அந்த கட்டுப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கோலத்துக்கும் சொந்தமான ஆதாறுகளும் அஹ்காமுகளும் உண்டு. இந்த குறிக்கப்பட்ட கோலம் அல்லாத்த கோலத்தில் அந்த ஆதாறுகளையும், அஹ்காமுகளையும் நீ பெற்றுக் கொள்ள மாட்டாய்.
ஷிபாவைத் தேடும் ஒரு நோயாளிக்கு ஷாபி எனும் ஒரு மொழிதலினாலான பெயரைக் கொண்டு வஸீலாத்தேடுவது அவனுக்கு நிர்பந்தமாகும். அவன் ‚யாஷாபி' என்று அழைப்பது அவனுக்கு நிர்ப்பந்தமாகும். அவனது துஆவை ஏற்றுக் கொள்ளும் வரை.
அப்போது அவனின் பேரில் ஷிபாவைக் கொண்டு அல்லாஹ் வெளியாகிறான். ஹகீகியான இஸ்மின் வழியாக, அந்த ஹகீகியான இஸ்மாகிறது இல்முடைய மர்த்தபாவில் ஷிபா எனும் ஷஃனைக் கொண்டு வெளியான கோலமாகும்.
இதேபோலத்தான் ‚இஸ்ஸலத்' தை தேடுவதின் பேரில் ‚யாமுயிஸ்ஸு‚ எனும் மொழிதலினாலான இஸ்மைக் கொண்டு அழைப்பது நிர்ப்பந்தமாகும். அவனுடைய துஅவை ஏற்றுக் கொள்ளும் வரையில், அப்போது இஸ்ஸத்தைக் கொண்டு துரிதமாக அவன் பேரில் அல்லாஹ் வெளியாகுவான். அவனுடைய முயிஸ்ஸு எனும் ஷஃனைக் கொண்டு உடை அணிந்ததன் பிறகு உண்டான கோலத்தின் வழியாக.
நோயாளிகளின் பேரில் கஹ்ஹார் எனும் மொழிதலினாலான இஸ்மை அவனது துஅவில் இருந்து தவிர்ப்பது அவசியமாகும். கஹ்று எனும் ஷஃனைக் கொண்டு உடை அணிந்ததன் பிறகு அவனுடைய இல்மில் அவனுக்கு உண்டான கோலமான ஹகீகியான இஸ்மின் நேர்பாட்டில் வைக்கப்பட்ட இஸ்மானது ஆகையால் இதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
இதேபோல் இஸ்ஸத்தைத் தேடுபவனுக்கு அவனது துஅவிலிருந்து ‚முதில்லு' எனும் மொழிதலினாலான இஸ்மை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
முதில்லு எனும் இஸ்மாகிறது அவனுடைய தில்லத் எனும் ஷஃனைக் கொண்டு உடை அணிந்ததன் பிறகு அவனது இல்மில் அவனுக்கு உண்டான கோலம் எனும் இஸ்முக்கு இஸ்மாகும் ஆகனதற்காக.
இதன்படி மொழிதலினாலான எல்லா இஸ்முகளையும் இதன்பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள். அந்த மொழிதலினாலான இஸ்மாகிறது அது ஒரு கோலத்தை உசுப்பி வைக்கும். அந்த மொழிதலினாலான இஸ்மு எதற்கு நேர்பாடாக வைக்கப்பட்டதோ அந்த கோலத்தைக் கொண்டு உhழுகப்பட்ட ஆதாறுகளும், அஹ்காமுகளும் இறங்கும் அல்லாஹ்வின் வழமையின் பெயரில் ஒரு மாற்றம் இல்லாமல் அது நடந்தேறும். அவனுடைய மிகைத்த ஹிக்மத்தும் குத்ரத்தும் வழமையை கிழிப்பதை தேடினாலே ஒழிய. நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் அவனது கதிமான கிதாபில் கூறினான் قل ا ادعواهاوادعوا الرحمن اياماتدعوافله الاسماء الحسني
(நபியே நீங்கள் சொல்லுங்கள் அல்லாஹ் அல்லது றஹ்மான் என்று அழையுங்கள். எந்த நாமத்தில் நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு) என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறதே, நீங்கள் ஒவ்வொரு குறிப்பான விசயத்திற்கும் ஒவ்வொரு குறிப்பான இஸ்மை சொந்தப்படுத்துகின்றீர்கள். ஆகவே அது அல்லாஹ்வின் கிதாபில் ஏவப்பட்டதற்கு மாற்றமாக இருக்கிறதே என்று நீ சொல்வாயானால், நான் சொல்லுகிறேன்,
நிச்சயமாக இந்த ஆயத்தில் கூறப்பட்ட ஜலாலத்துடைய இஸ்மாகிறது (அல்லாஹ் எனும் இஸ்மும்) இதேபோல, குர்ஆனில் அநேகமான இடத்தில் பொதுப்படையாக புழங்கப்பட்ட அல்லாஹ் எனும் இஸ்மும் எல்லா ஷுஊனாத்தையும் ஒருமித்துச் சேகரித்த தாத்தின் பெயரில் புழங்கப்பட்டதாகும்.
குர்ஆனடைய பரிபாஷையை அனுசரித்து ஜலாலத் எனும் இஸ்மு வைக்கப்பட்ட முஸம்மாவாகிறது எல்லா ஷுஊனாத்துகளையும் சேகரித்துக் கொண்ட தாத்தாகும். அந்த தாத்து எல்லா அஸ்மாக்களுடைய கருத்தின் பெயரிலும் தீர்ப்புக் கொடுக்கிறதும் ஆகும். அந்த அஸ்மாக்களாகிறது ஷுஊனாத்துகள் ஆகும்.
றஹ்மான் எனும் பெயர் வைக்கப்பட்ட இடமாகிறது அது மர்த்தபத்துல் றஹ்மானியா ஆகும். அந்த றஹ்மானியா எனும் மர்த்தபாவாகிறது அஸ்மாக்கள் எனும் கோலங்களின் பேரில் தீர்ப்பளிப்பதுவாகும். அந்த அஸ்மாக்களின் கோலங்கள் என்பது அவனுடைய இல்முடைய மர்த்தபாவில் அந்த ஷஃன் எனும் உடையைக் கொண்டு உடை அணிந்தபின் ஷுஊனாத்துகளின் கோலங்களாகும்.
அஸ்மாக்கள் அனைத்துமுடைய பொருள்களும் தாத்தின் அதிகாரத்துக்கு கீழே இருக்கிறது. அஸ்மாக்கள் எனும் கோலங்களாகிறது அவை அடங்கலும் றஹ்மானியா எனும் மர்த்தபாவுக்கு கீழே இருக்கிறது. தாத்தாகிறது அஸ்மாக்கள் எனும் கோலத்தின் பேரில் தீர்ப்பளிப்பதுவாகும். அந்த அஸ்மாக்களின் கோலத்தின் கருத்தின் வழியாக.
ஒரு தேட்டமுடையான் இஸ்முல் ஜலாலத்தைக் கொண்டு 'யா அல்லாஹ்' என்று அழைப்பானேயானால் தாத்து அவனுடைய துஆவை ஏற்றுக் கொள்ளும். அவனது நாட்டத்தை நிறைவேற்றவும் செய்யும். அவனுடைய நாட்டம் எந்தக் கோலத்தின் ஆதாறை தேடுகிறதோ அந்தக் கோலம் எனம் கண்ணாடி ஊடாக வெளியாகி அவனது தேவையை நிறைவேற்றுகிறது. அல்லது நிறைவேற்றுகிறான். அவனது அசலிய்யான, தாத்தியான தேட்டத்தைக் கொண்டும் நிறைவேற்றுகிறான். இதுபோன்று றஹ்மான் எனும் மொழிதலினாலான இஸ்மைக் கொண்டு அழைக்கிறவனின் நிலையும் இதுபோலாகும்.
நிச்சயமாக அந்த றஹ்மான் ஆகிறவன் றஹ்மானிய்யா எனும் மர்த்தபாவிலிருந்து அவனது தேட்டத்தை நிறைவேற்றுகிறான். அவன் அவனது தேடுதலை எந்த கோலத்தின் ஆதாறிலிருந்து தேடுகிறானோ அந்த ஆதாறு எனும் கோலம் எனும் கண்ணாடியில் வெளியாவது கொண்டு அவனது தேட்டத்தை நிறைவேற்றுகிறான்.
அவனது தேட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பதைக் கொண்டு கொழுகப்பட்ட இஸ்மின் உதவி கொண்டே ஒழிய தாத்து அவனுக்கு ஜவாப் (விடை) அளிப்பது இல்லை. அவனது தேட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பதுமில்லை.
நீ உன்னுடைய துஆவில் 'யாஅல்லாஹ்' என்று அழைப்பதில் உன்னுடைய ஹாஜத்தை நிறைவேற்றுவது கொண்டு ஆதியிலிருந்தே பொறுப்பேற்ற இஸ்மின் பேரில் தேவையானவனுமாகும். ஏனெனில் உன்னுடைய ஹாஜத்து நிறைவேறுதல் என்பது அந்த இஸ்முடைய ஆதாறில் நின்றும் உள்ளதாகும். ஆகவே குணபாடு எந்தக் கோலத்தின் உதவியைக் கொண்டுள்ளதோ அந்தக் கோலத்தின் உதவியைக் கொண்டேயல்லாது அந்தக் குணபாடு வெளியாகாது. ஆதியான தாத்துடைய தேட்டத்தைக் கொண்டு.
ஒரு நோயாளி ஜலாலத்துடைய இஸ்மைக் கொண்டு 'யா அல்லாஹ்' என்று கூறுவானேயானால் அல்லாஹ் அவனுடைய துஆவை ஏற்றுக் கொள்வதானால், ஷிபா எனும் ஷஃனின் கோலம் எனும் கண்ணாடியின் வழியாக ஷிபா எனும் கோலத்தில் வெளியாகுவான். எப்படிபட்ட ஷிபா எனும் ஷஃனின் கோலம் என்றால் அதுதான் ஷாபி எனும் இஸ்முக்கு முஸம்மாவாகும். நோயாளி ஷாபி என்று அழைத்து துஆ செய்தால் அது விரைவாக விடையளிக்கும் இஜ்முல் ஜலாலத்தைக் கொண்டு அழைப்பதை விட.
இதில் வேறு இரகசியங்களும் உள்ளன. அதுவாகிறது ஒரு நோயாளி அவனுடைய நாவைக் கொண்டு 'யாஅல்லாஹ்' என்று சொல்லுகிறான். அவன் நிலையாகிறது 'யாஷாபி' என்று அவன் நாவைக் கொண்டு சொல்லும் நிலையாகும். அவனுடைய இந்த நிலைமை ஷிபா உண்டாகும் இடம் என்பதைக் குறிப்பாக்கிறது. அது இல்முடைய மர்த்தபாவில் 'ஷாபி' எனும் ஷஃனின் உடையை அணிந்ததன் பின் உண்டான அந்த ஷஃனின் கோலம் ஆகும்.
ஆகவே அவனுடைய தேட்டம் 'யாஅல்லாஹ்' என்று அழைப்பது கொண்டு 'யா ஷாபி' என்பதை குறிப்பாக்கி விட்டது.
நிலைமையின் கோரிக்கையாகிறது சொல்லாலான கோரிக்கையை விட துரிதமாக விடையைப் பெற்றுக்கொள்ளும். நோயாளியின் அழைப்பின் நிலைமைகளை நோய் எனும் நிலையில் 'யாறஹ்மான்' என்றழைத்தாலும் இதே நிலைதான் என்று ஒழுங்கு பிடித்துக் கொள்.இதை நீ அறிவாயானால் அவசர நேரத்தில், உன் நிலையைச் சிந்திப்பதும் உன் தேவையை சிந்திப்பதும் உனக்குக் கடமையாகும்.
எந்த இலாஹிய்யான இஸ்மைக் கொண்டு உன் தேட்டம் கொழுகி இருக்கிறது என்று அறிவது சிந்திப்பது உன் கடமையாகும். அப்படி அறிந்தால் ஒரு இஸ்மை நீ குறிப்பாக்கினால், அந்த மொழிதலினாலான இஸ்மை அழைப்பது உன்மீது கடமை ஆகும். அந்த மொழிதலினாலான இஸ்மு உன்னுடைய தேவையை நிறைவேற்றுவது கொண்டு குறிப்பான இஸ்மின் பேரில் அறிவிப்பதற்காக வைக்கப்பட்டதாகும்.
உதாரணமாக விரோதிகளை அடக்கி ஆளுவதை நீ உத்தேசிக்கிறாய். உன்னுடைய இந்த தேட்டத்தில் சிந்திக்கிறாய். நீ அறிகிறாய் நிச்சயமாக கஹ்று என்பதாகிறது கஹ்ஹார் எனும் இஸ்முடைய ஆதாறுகளில் இருந்தும் ஒரு அதறுதான் என்றும் நீ அறிந்திருக்கிறாய். ஆகவே நீ கஹ்ஹார் எனும் இஸ்மைக் கொண்டு உன்னுடைய விரோதிகளை அடக்கி ஆளுவதன் பேரில் வஸீலாத் தேடுகிறாய். மேலும் கஹ்ஹார் எனும் இஸ்மை இரவும் பகலும் உன்னுடைய தேட்டம் நிறைவேறும்வரை அழைக்கிறாய். அப்போது அல்லாஹுத்தஆலா உன்னுடைய விரோதிகளை அடக்கி ஆளப்பட்டவர்களாகவும், மண் கவ்வியவர்களாகவும் ஆக்குகிறான்.
இவ்வாறு உன்னுடைய எல்லா நாட்டங்களையும் இதன்பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
உம்மால்களில் அநேகமானோர் அல்லாஹ்வை அவர்கள் ஒரு குறிப்பான பெயரைக் கொண்டு அழைக்கிறார்கள். அதில் அவர்கள் கூடுதலாக தெண்டிக்கிறார்கள். அந்த இஸ்மை இரவு பகலாக உச்சாடனம் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஹாஜத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் இல்லை. அவர்கள் விடை கிடைப்பதில் தடுக்கப்பட்டவர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். அதில் அவர்களின் ஆபத்துக்களாகிறது, அவர்களின் அறியாமையாகும். இஸ்முகளின் நிலையைக் கொண்டும் அது கொழுகப்பட்ட இடங்களைக் கொண்டும் அறியாமையாகும். நீ விளங ;கிக் கொள். இன்னும் அல்லாஹ்வுக்கு நன்றி செய். فافهم واشكرله