Sihabuden Suharawardi-ஷிஹாபுத்தீன் சுஹரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு.

Sihabuden Suharawardi-ஷிஹாபுத்தீன் சுஹரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

ஷிஹாபுத்தீன் சுஹரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு.

இவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். தந்தையின் பெயர் முஹம்மது. ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசவழியில் வந்துதித்த இவர்கள் சுகரவர்தீ என்று பெயர் பெற்றிருந்தனர். மார்க்கத்தின் ஜுவாலை எனப் பொருள்படும் ஷிஹாபுத்தீன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

தம்முடைய சிறிய தந்தை அபூநஜீப் சுகரவர்தீயிடமும், ஷைகு அப்துல்காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் ஆன்மீகக் கல்வி கற்றார்கள். பஸராவில் ஷெய்கு  அபூ முஹம்மது இப்னு அப்திடமும் மற்றும் பல ஷெய்குமார்களிடமும் ஆன்மீகக் கல்விகளைக் கற்றார்.

பகுதாதில் அமர்ந்து மக்களுக்கு அறவுரை வழங்கிக் கொண்டிருந்த இவர்கள் ஒரு தடவை, 'இறைவனே! நீ எனக்கு மட்டும் பேரின்ப மதுவை வார்த்துவிட்டு மற்றவர்களுக்கு வார்க்காது நிறுத்திக் கொள்ளாதே! அதனை எனது தோழர்களுக்கும் வார்க்காதிருக்குமாறு என்னைபப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. நீயோ உண்மையில் மிகவும் தாராளத்தன்மை வாய்ந்தவன். எனவே பேரின்ப மதுக்கிண்ணத்தை மற்றவர்களுக்கும் கொடுப்பதுதானே உன் தாராளத் தன்மைக்குப் பொருந்தும்' என்று கவிதை பாடியபோது, மக்கள் இறைக்காதலினால் ஆவேசப்பட்டு தங்கள் தலைமயிரை பிய்த்துக் கொண்டனர் என்றும், அக்கணத்திலிருந்து பலர் உலகைத் துறந்து ஆன்மீக வழியை மேற்பொண்டனர் என்றும் சரித்திரங்கள் கூறுகின்றன.

இவர்கள் பலமுறை ஹஜ் செய்துள்ளனர். இவர்களும் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பக்தாதில் முதன்முறையாக சந்தித்தபோது, இருவரும் வாய்திறந்து ஒருவார்த்தை பேசவில்லை. தலையை குனிந்து எதிரும்புதிருமாக ஒரு மணிநேரம் அமர்ந்திருந்தனர். அதன்பின் பிரிந்தனர்.

அதன்பின் ஒருவர் இவர்களிடம் 'இப்னு அரபி அவர்களைப் பற்றி உங்கள் கருத்து யாது?' என்று வினவியபோது, 'அவர்கள் தெய்வீக உண்மைகளின் கடல்' என்றனர். இப்னு அரபி அவர்களிடம், 'சுகரவர்தி அவர்களபை; பற்றி தங்கள் கருத்து யாது?' என்று கேட்டபோது, 'அவர்கள் தலை முதல் கால் வரை அண்ணல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை(சுன்னத்)யால் நிரம்பப் பெற்றுள்ளனா'; என்றனர்.

இவர்கள் எழுதிய சிறந்த நூல் 'அவாரிஃபுல் மஆரிஃப்'. அதில் 'இறைவனே! நான் உன்னை தியானிக்கும்போது என் உடல் முழுவதும் கண்களாகி விடுகிறது. நான் உன்னை நினைக்கும் போது என் உடல் முழுவதும் இதயமாகிவிடுகின்றது' என்று ஒரு கவிதையில் கூறுகின்றனர்.

இவர்கள் ஹிஜ்ரி 632 முஹர்ரம் பிறை 1 அன்று பக்தாரில் காலமாகி அங்கு ஸூபியாக்களின் அடக்கவிடமாகிய வர்தியா (ரோஜாத' தோட்டம்) என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.