இஸ்லாத்தின் பார்வையில் ஷியாக்கள்.- Shiya on View of Islam.

இஸ்லாத்தின் பார்வையில் ஷியாக்கள்.- Shiya on View of Islam.

By Sufi Manzil 0 Comment July 16, 2011

Print Friendly, PDF & Email

தமிழ் பேசும் முஸ்லிம்கள் சுன்னி என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் ஆணிவேரான ஈமானைப் பாதிக்கும் கொள்கையுடைய பல்வேறு புதிய கூட்டங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய சட்டம் மற்றும் இலங்கை சட்டங்கள் முஸ்லிம்களை இரண்டே பிரிவுகளாகத் தான் பிரிக்கிறது. ஒன்று சுன்னி முஸ்லிம் மற்றொன்று ஷியா முஸ்லிம். சுன்னி பிரிவிலிருந்து ஷியா பிரிவு எந்த வகையில் வேறுபடுகிறது. அவர்களின் கொள்கைகள்(அகீதா) என்ன? என்பது பற்றி விரிவாக அலசவே இக் கட்டுரைத் தொகுப்பு.

‘ஷியா’ என்ற பெயர் வந்ததற்கான காரணம்:

ஷியா என்னும் அரபி பதத்திற்கு பின்னால் செல்பவன், உதவியாளன், கூட்டம், பிரிவு மற்றும் தம்மை அஹ்லெ பைத் எனக் கூறிக் கொள்ளும் பிரிவினர் என்பது பொருளாகும். நூல்: அல் காமூஸுல் அன்வார், பக்கம் 319.

ஒருவரைப் பின்தொடர்ந்து உதவி செய்வோருக்கும் ஒரு விஷயத்தில் ஒருங்கிணைந்துள்ள கூட்டத்தாருக்கும் ஷியா எனப்படுகிறது. நூல்: தஹ்தீபுல் துஙா 3:161, தாஜுல் உரூஸ் 4:405.

அல்குர்ஆனிலல் பல்வேறு கருத்துக்களில் ஷியா என்ற பதம் குறிக்கப்பட்டுள்ளது. உம்மத்-கூட்டம் என்றும், பிரிவு என்றும், போன்ற, நிகரான என்றும், பின்தொடர்பவன் என்றும் பல்வேறு கருத்துக்களில் ஷியா என்ற பதம் குர்ஆனில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

வழக்குச் சொல்லில் இதன் அர்த்தமாவது,

ஷியா என்ற பதம் ஸெய்யிதினா அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களையும் அஹ்லெ பைத்தினரையும் தங்களின் அதிகாரிகளாக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் சொந்தமாக்கப்பட்ட பெயராகும். நூல்: அல் காமூஸுல் முஹீத் 3:47.

ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களுக்கு முன்பிருந்த நேர்வழி காட்டும் புனித கலீபாக்கள் அனைவரையும் விட உயர்வு படுத்தியதுடன், கலீபாவாக இருப்பதற்கு அஹ்லெ பைத்தினரே மிகவும் தகுதியானவர்கள் என்றும், அவர்களல்லாத ஏனைய கலீபாக்களின் ஆட்சியனைத்தும் பாத்திலானவை என்று எண்ணுகிற அனைவரும் ஷியாக்கள் என்பதாக அழைக்கப்படுகின்றனர்.

ஷியாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது குடும்பத்தினரது அன்பைப் பறிமுதல் செய்தவர்கள். உண்மை இதுவல்ல. இவர்கள் செய்யிதினா ஹஸன், ஹுஸைன், அலி, ஜைனுல் ஆபிதீன், ஸைத் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரைப் பின்தொடர்வோர் என விழிப்பிலே கனவு காண்போராகும். அபூபக்கர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு தோழர்களையும் ஏளனமாகக் கருதுவது, ஏசுவது இவர்களின் சின்னமாகும் என்பதாக தாரகுத்னியில் பதிவாகியுள்ளதாக ‘அல் அஜ்விபத் தாமிகா’ பக்கம் 142ல் பதிவாகியுள்ளது.

இந்த ஷியாக்கள் ‘ராபிழா’ என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகின்றனர். ராபிழா என்றால் ‘விட்டு விட்டவன்’ என்பது அரபி இலக்கண அர்த்தமாகும்.

இந்த ராபிழா என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணத்தைப் பார்ப்போம்:

செய்யிதினா ஹழ்ரத் ஜைத் பின் அலீ, ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களை இமாமாக ஏற்காது அவர்களை விட்டும் பிரிந்து போனதால் இப்பெயர் இவர்களுக்கு வழங்கப்பட்டது. நூல்: அல்பிதாயா வந்நிகாயா 9:380, பிரக் முஆஸரா 1:206.

ராஃபிழா என்னும் இப்பெயர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, எனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தினர் வருவார்கள் அவர்களுகு;கு ராஃபிழா என்று பெயரிடப்பட்டிருக்கும். அவர்கள் இத்தகைய அடையாளங்களை கொண்டிருப்பர் என்று அறிவிக்கப்படும் ஹதீது முஸ்னத் அஹ்மத் பக்கம் 106, ஹதீது எண் 808, ஷரஹ் உஸூல் இஃதிகாத் பக்கம் 1454, 1456, அல் அஜ்விபத் தாமிகா பக்கம் 142, அகாயித் அத்தலாதி வஸ்ஸப்ஈன் பக்கம் 1:446 லும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸெய்யிதினா ஜைத் பின் அலீ ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கலீபா ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கிலாபத்தை ஏற்றுப் பிரகடனப்படுத்திய பிறகு ஒரு கூட்டத்தார் இவர்களிடம் வருகை தந்து நீங்கள் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற வேண்டுமென்று கேட்டார்கள். அதற்கு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் உங்களை இமாமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றனர்.

அதுபோது இமாம் அவர்கள் அவர்களை நோக்கி, நீங்கள் என்னை விட்டீர்கள். நானும் உங்களை விடுகிறேன் என்று ராஃபிழா என்று பெயரிட்டு, இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ராஃபிழா என்று பெயரிடப்பட்டவர்கள் என்று பிரகடனப்படுத்தினர். -நூல்: குன்யத்துத் தாலிபீன் பக்கம் 148, நாமே வ நஸப் பக் 495, அகாயித் அத்தலாதி வஸ்ஸப்ஈன் பக் 1:446

ஷியாக்களின் அகீதா:

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையேத் தகர்க்கக் கூடிய கொள்கைகளைக் கொண்டவர்கள்தான் இந்த ஷியாக்கள். அவர்களின் கொள்கைகள் இங்கு விபரமாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் அறிவுக்கு சற்றும்; பொருத்தம் இல்லாததாகவும், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். பொய், புரட்டு, கட்டுக்கதைகளை தம் மனம் போனபோக்கில் பெரும் பாக்கியசாலிகளின் மீது இட்டுக் கட்டியுள்ளனர்.

ஷியாக்களின் கொள்கை
சுன்னத் வல் ஜமாஅத்தினர் கொள்கை

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் பற்றிய கொள்கை:

செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்மால் ஒன்று சேர்க்கப்பட்ட குர்ஆனை காண்பிக்க தோழர்களை ஒன்று சேர்த்த போது உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களுக்கு உங்களின் அவசியமோ உங்களால் ஒன்று திரட்டப்பட்ட குர்ஆனோ தேவையில்லை. எங்களிடமும் குர்ஆன் உண்டென்றார். இதனைச் செவியுற்ற அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்க் தமது தோழர்களை விளித்து, இன்றைய தினத்திலிருந்து எனது மைந்தர் வரும்வரை நீங்கள் குர்ஆனை காணமாட்டீர்கள் என்று கூறினார்.
-அன்வார் நுஃமானிய்யா 2:360

ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் குர்ஆனை முறைப் படுத்தியவர்கள். இன்று நம்மிடம் காணப்படும் குர்ஆன் அம் முறைப்படுத்தலுக்கு மாற்றமானதாகும்.

நமது குர்ஆன் திரிக்கப்பட்டதாகும்.

நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது இறங்கிய குர்ஆன் வசனங்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ஒன்று திரட்டப்பட்டன. அவைகள் தற்போது நம்மிடையே இருக்கும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இமாம்கள் சம்பந்தமான வசனங்கள் நீக்கப்பட்டு விட்டன.

ரிஸாலாத் பற்றிய கொள்கை:

இமாம் மஹ்தி சூரிய வெளிச்சத்தில் ஆடையற்றவராக உதயமானதும் அமீருல் முஃமினீன் மீண்டும் வந்து விட்டார் என்று அறிவிப்பர். அவர் வந்ததும் முதன் முதல் அவர் கரம் பற்றி பைஅத்து செய்பவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் (நவூது வில்லாஹ்)
-நூல் ஹக்குல் யகீன் 2:347.

எமது இமாம்களின் அந்தஸ்த்தை முர்ஸலான நபியோ அல்லது முகர்ரபான வானவரோ எவராலும் கூட அடைய முடியாது.
நூல்: விலாயத் பிக்ஹிய்யா பக்கம் 58.

குமைனி கூறுகிறார்:
பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும் நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில் பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும் பன்னிரெண்டு இமாம்களும் மலக்குகளும் நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
–விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே.
இஸ்லாமி தஹ்ரான் வெளியீடு பக்கம்58

நபித் தோழர்கள் பற்றிய கொள்கை

நபி (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தார் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 245

அபூபக்கரும் உமரும் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
–கிதாபுர்ரவ்லா மினல் காபிஇ பக்கம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
–கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு.

மேற்கண்ட இரு கலீபாக்களும், இரு பெண்மணிகளும் சேர்ந்து நபியவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள்’- ஹயாத்துல் குலூப் 2:610.

கலீபா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதாக பொய்யாக எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

‘எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல் எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல் என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்’ என்று அலி (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.
–அல்உஸுலுல் காபி பாகம் 1 பக்கம் 197 198.

அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்கள்.
–காஷானியின் கிதாபுஸ்ஸாபிஇ பாகம் 1, பக்கம் 347

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 2 பக்கம் 108

முத்ஆ பற்றிய கொள்கை

ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ‘முத்ஆ’ செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்ட போது ‘செய்யலாம்’ என்றார்;.
–அல்புரூவு மினல் காபி பாகம் 5 பக்கம் 460

இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்ட போது ‘ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில் இவர்கள் கூலிக்காரர்கள்’ என்றார்களாம்.
–தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 259

‘ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது’ என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியதுதான்’ என்று பதிலளித்தார்களாம்.
–அல்புரூவு மினல் காபி பாகம் 5 பக்கம் 462

‘மஜூஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்’ என்று ஜஃபர் சாதிக் கூறினார்கள்.

‘யூத கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்’ என்று அபுல் ஹஸன் (8வது இமாம்) கூறினார்.

‘விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்கும்.’
–தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 256
மூன்று முறை முத்ஆ செய்தவன் கண்டிப்பாக சுவனத்தில் நுழைவதோடு நாதர் நபியவர்களையும் தரிசிப்பான்.

முத்ஆ செய்யாதவன் இறுதிநாளில் மூக்கு, காது வெட்டப்பட்டவனாக காட்சியளிப்பான்.

முத்ஆ செய்து குளிக்கும் போது அதிலிருந்து விழும் ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் ஒரு வானவர் பிறந்து யுக முடிவுநாள் வரை திக்ரும், தஸ்பீஹும் செய்கிறார். அதற்குரிய நன்மைகள் அனைத்தும் முத்ஆ செய்தவருக்கு வழங்கப்படும்.

முத்ஆ செய்தவர் ஒருமுறை முத்தமிட்டால் அவர் ஹஜ், உம்ரா செய்ததற்குரிய நன்மையைப் பெறுகிறார்.

முத்ஆ செய்வது மார்க்கத்தின் ஒரு பகுதியாகும். அதை வெறுப்பவர் மார்க்கத்தை விட்டும் வெளியேறியவாராவார்.

-மன்ஹஜுல் ஸாதிகீன் பக்கம் 2:480, 481,482.

முத்ஆ திருமணத்திற்கு சாட்சியோ அல்லது அதனை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமோ எதுவும் தேவையில்லை. அதை முறிப்பதற்கு தலாக்கோ, இத்தாவோ இருக்க வேண்டியத் தேவையில்லை.

ஒருவர் ஒரே நேரத்தில் எழுபது பெண்களுடனும் முத்ஆ செய்யலாம்.
இதேபோன்று ஒரு பெண் ஆயிரம் ஆண்களுடனும் முத்ஆ செய்யலாம்.

மணம் செய்து கொள்ள விலக்கப்பட்ட பெண்களையும், பரிசுத்தமான பெண்களையும் முத்ஆ செய்யலாம்.
-‘தஃப்ஸீல் அஹ்காம், அந்நிகாஹ் போன்ற எண்ணற்ற நூல்கள்.

தகிய்யா – அவசியமானதில் பொய்யுரைப்பது.

தன் தேவை நிறைவேற எந்த நிலையிலும் பொய் சொல்லலாம் என்பதும், அது வாஜிபு ஆனது கூட. இதற்கு தர்மசங்கடம் என்பது எல்லாம் ஷர்த்தல்ல. தேவையுமில்லை.

இன்னும் இதனை நபிமார்கள் உட்பட் அனைவரும் கையாளலாம். இது உன்னத அமல்களில் ஒன்று எனவும் கருதுகிறார்கள். இதனை மறுப்பவர் முர்தத், காபிர் என்பது இவர்களின் தீர்ப்பாகும். இமாம் மஹ்தியவர்களின் வருகை வரை செல்லத்தக்க ஒன்றாகும்.

இப்றாஹிம் நபி அவர்கள் பேரில் குற்றச்சாட்டு: ஹழ்ரத் நபி இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது வாழ்க்கைத் துணைவியோடு பயணம் செய்து ஒரு நகரத்தை அடையவே அந்நகரின் அரசன் கொடியவனாக இருந்தான். அவன் நபியவர்களின் துணைவியாரைக் காட்டி யார் இவர்? என்று கேட்க, நபியவர்கள் ‘சகோதரி’ என்று பதிலளித்தார்கள். எனவே அத்தியாவசியமான சமயங்களில் பொய் பேசலாம் என்பது ஷியாக்களின் கொள்கை.

‘உஸுல் காஃபி’ என்னும் நூலில் 2:217இ218 ஈமானும் குப்ரும் என்று தலைப் பிரிவில் ‘தகிய்யாவின் பாடம்’ என்னுமட் தலைப்பின் கீழ் ஹழ்ரத் நபி யூசுப், ஹழ்ரத் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாமும், கஹ்பு குகைவாசிகளும் தகிய்யாவின் நோக்கத்தில் பொய் பேசினர் என்று ஸெய்யிதினா ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

தகிய்யா தெளிவான பொய்யுரைத்தல் எங்களின் அடையாளமாகும். இதுவே எங்களின் எதிரிகளான சுன்னிகளுக்கும் எங்களுக்கிடையே உள்ள வித்தியாசமாகும் என்று இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஜாமிவுல் அக்பார் பக்கம் 108ல் காணப்படுகிறது.

எங்களது இமாம்கள் மற்றும் பெரியோர்களின் உயர்நிலையில்  தகிய்யா-பொய்யுரைப்பது மேலான ஒன்றாகும் என்று இமாம் முஹம்மது பாக்கர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் சொன்னதாக ஜாமிவுல் அக்பார் பக்கம் 108 ல் உள்ளது.

தகிய்யாவானது ஸகாத் ஹஜ் தர்மம் போன்ற எல்லாவற்றையும் விட மிக உன்னதமான ஒன்றாகும்.

தகிய்யாவை செயல்படுத்தாதவன் எங்களைச் சார்ந்தவன் அல்ல என்று ஸெய்யிதினா ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதாக அமாலி ஷெய்க் தூஸி 1:299 கும் பதிப்பகம், புதிய பிரதியில் காணப்படுகிறது.

ஹஜ் பற்றிய கொள்கை:

இமாம் அபூ அப்தில்லாஹ் கூறினார்கள், எவரொருவர் ‘அரஃபா’ நாளன்று ஹுசைன் அவர்களின் கப்ரை தரிசிக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நன்மைகளை எழுதி திருப்தி அடைகிறான். இந்த நன்மைகளில் 10 லட்சம் ஹாஜிகள் நன்மை, ஆயிரம் அடிமைகளை விடுவித்த நன்மை. அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்யும் ஆயிரம் குதிரைகளின் எடைக்கு எடை நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். அவ்வடியானை மலக்குகள் புகழ்ந்து ‘நீங்கள் நேர்வழி சென்றவர்கள்’ என்று வாழ்த்துகிறார்கள். இதற்கும் மேலாக அவர்களை அல்லாஹ் தன் அர்ஷுக்கு மேல் உயர்த்தி அவர்களை தூய்மைப் படுத்துவான். இதை ‘கரோபியா’ என்று பூமியில் அழைக்கப்படும். வஸாஇல் அல்ஷியா 10ஃ360

ஆயத்துல்லாஹ் அப்துல் ஹுசைன் கூறுகிறார்கள், அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையினால், ஹுசைன் அவர்கள் கபுரை கஃபத்துல்லாஹ்விற்கு மாற்றாக அல்லாஹ் கட்டியுள்ளான். எவர்கள் மக்கா வந்து அமல் செய்ய சக்தி பெறாத மக்களுக்காக ஹுசைன் அவர்களின் கர்பலா கப்ர் உள்ளது. இங்கு ஜியாரத் செய்யும் மக்களுக்கு கூலி ஹஜ் செய்யும் ஹாஜிகளின் நன்மையைக் காட்டிலும் அதிகமாக எழுதப் படுகிறது. ( அல் தவ்ரா அல் ஹுஸைனீயரீ 51)

‘ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.’
–அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252

‘யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்களாம்.
–அல் இர்ஷாத் பக்கம் 252

‘யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்களாம்.
–அல் இர்ஷாத் பக்கம் 252

‘அல்லாஹ் தன் அருள் கண்களைக் கொண்டு ஹுசைன்(அலை) அவர்களின் கப்ரை தரிசிக்க வந்த அடியார்களை முதலில் பார்க்கின்றான். அதன் பின்பு அரபா ஹாஜிகளை நோக்குகிறான். ஏனெனில் நாமெல்லாம் விபச்சாரத்தில் பிறந்த வர்களல்ல. ஆனால் அரஃபாவில் நிற்கும் ஹாஜிகளோ விபச்சாரத்தின் சந்ததிகள். ஆகவே அல்லாஹ் அரஃபா நாளன்று நம்மை முதலில் பார்ப்பது’ (வஸா இல் அல்ஷியா10ஃ361)

ஷியா முகமது சாதிக் அல்சத்ர் கூறுகிறார். ‘காஃபத்துல்லாஹ்வை விட அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்த்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்காவில் செய்யும் வணக்க வழிபாடுகளைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹுசைன்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விடச் சிறந்தவர்கள், அதாவது கர்பலா காஃபாவை விடச் சிறந்தது என்பது போல்’.
(அல்மஸ்அலா(9) பக் 5 மின் கஸரத், அல் மஸாயீல்)

கர்பலா மகிமை இன்னும் முடியவில்லை. இமாம் அபூ அப்தில்லாஹ் சொன்னதாக அல்கலீனி அறிவிக்கிறார்.

‘எவரொருவர் அரஃபா நாளன்று ஹுசைன் அவர்களின் கபுரடிக்கு செல்கிறார்களோ அவர்கள் மீது புராத் நதியின் நீர் பொழியப்படுகிறது. அவர்களின் ஒவ்வொரு காலடி சுவடுகளுக்கும் கணக்கற்ற ஹாஜிகள் நன்மை கொடுக்கப்படுகிறது. இவர்களே வெற்றி பெற்றவர்கள்.
-ஃபுரு அல்காஃபி 4ஃ580

ஷியா முகமது சாதிக் அல்சத்ர் கூறுகிறார். ‘காஃபத்துல்லாஹ்வை விட அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்த்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்காவில் செய்யும் வணக்க வழிபாடுகளைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் {ஹசைன்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விடச் சிறந்தவர்கள், அதாவது கர்பலா காஃபாவை விடச் சிறந்தது என்பது போல்’.
(அல்மஸ்அலா(9) 5 மின் கஸரத், அல் மஸாயீல்)

இமாம் அல் கூஃபீ தனது ‘மின்ஹஜ் அல் ஸாலீஹீன்’ நூலில் கூறுகிறார். ‘அலீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் பள்ளியில் தொழுவது இரண்டு லட்சம் நன்மைகள் பெற்றுத்தரும்; நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பள்ளியில் தொழுதால் பத்தாயிரம் நன்மைகள் மட்டும் கிடைக்கும்.


அல் அக்ஸா பள்ளி பற்றிய கருத்து:

அல் அக்ஸா என்ற பள்ளி ஒன்றே இவ்வுலகில் இல்லை என்ற கொள்கையைக் கொண்டவர்கள் ஷியாக்கள்.

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் ‘நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் இரவுப் பயணத்தின்போது சுவனத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளி வந்தார்கள். இந்தப் பள்ளியை சூழ உள்ளதை அல்லாஹ் பாக்கியமுள்ளதாக ஆக்கினான்’ -அல் அமலீ 3ஃ106.

‘உமர் பின் கத்தாப்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாலஸ்தீனுக்கு விஜயம் செய்த பொழுது அன்று ‘அல்அக்ஸா’ என்ற பள்ளியே இருக்கவில்லை. குறிப்பாக ஜெருசலத்தில் ‘அல்அக்ஸா’ என்று எதுவுமே அழைக்கப்படவில்லை’

அல்அமலீயின் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) வாழ்க்கை வரலாறு’ (3ஃ137-2006 ஐளடயஅiஉ ஐளெவவைரவந ழக ளுவரனநைள)

மற்றொரு ஈரான் இமாம் அல் மஜ்லீஸி ஒரு செய்தியை தனது நூலில் குறிப்பிடுகிறார். அபூ அப்தில்லாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள் ‘அல்லாஹ்வுடைய பள்ளிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது என்று கேட்டதற்கு மக்காவின் ஹரம் ஷரீப், மற்றும் நபியின் பள்ளி’ என்று பதிலளித்தார்கள், ‘நான் உங்களுக்கு என்னை அர்ப்பணம் செய்கிறேன், சிலர் ‘அல் அக்ஸா’ பள்ளியும் சிறப்பானது என்று கூறுகிறார்களே!’ என்று கேட்டேன். அதற்கு இமாம் அவர்கள், ‘ஆம்! சிறப்பானது தான் அது சுவனத்தில் உள்ளது. இதைத்தான் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் பார்த்தனர் என்று பதிலளித்தனர். நான் மீண்டும் சிலர் ‘அல் அக்ஸா பள்ளி பாலஸ்தீனில் ஜெருசலத்தில் இருக்கிறது என்கிறார்களே?’ என்று கேட்டவுடன் இமாம் கூறினார் ‘இங்குள்ள கூஃபா (முரகய) பள்ளி அதைவிட எவ்வளவோ சிறந்தது’
-அல்மஜ்லீஸின் ‘பிகார் அல் அன்வார்-90ஃ22

பொதுவாக மூன்று இடங்களை மட்டுமே சிறப்பானதாக கருதுகிறவர்கள் ஷியாக்கள்.

1. அல்லாஹ்வின் கஃபா, 2.மஸ்ஜிது நபவீ, 3.கர்பலா, நேர்ச்சை செய்து போகக்கூடிய மூன்றாவது பள்ளி கர்பலா மட்டுமே. இதுதான் ஷியா முஸ்லிம் இமாம்களின் கருத்து.

 

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் பற்றிய கொள்கை:
‘நாமே குர்ஆனை இறக்கி வைத்தோம். நாமே அதனைப் பாதுகாக்க கூடியவனாக இருக்கிறோம்.’
-அல்குர்ஆன்

அல்லாஹ்வின் திருமறையான திருக்குர்ஆன் நம்மிடையே காணப்படும் வடிவில் அக்காலத்தில் தொகுக்கப்படவில்லை என்றாலும் அதன் ஸூராக்கள், வசனங்களின் வரிசைத் தொடர்’கள் போன்றவை அண்ணலார் காலத்தில் தொகுக்கப்பட்டிருந்தவாறே அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் நூல் வடிவமாக்கினார்களே அன்றி அதில் எள்ளவும் மாற்றம் செய்யப்படவில்லை என்பதே இஸ்லாமியக் கொள்கை. இதைப் பற்றி, திர்மிதீ, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத் போன்ற ஹதீது கிரந்தங்களிலும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீதுகள் காணக் கிடக்கின்றன.

ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிலபோது பல ஸூராக்களில் இணைக்கப்பட வேண்டிய பல வசனங்கள் ஒரே நேரத்தில் இறங்குவதுண்டு. அப்போதெல்லாம் அண்ணல் நபி அவர்கள் வஹியை எழுதக் கூடிய தோழர்களை அழைக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அது போது அத்தோழர்களிடம், இந்த ஸூராவில் இன்னின்ன வசனங்களையும், இன்ன வசனங்களை இந்த ஸூராவிலும் பதிந்து கொள்ளுங்கள் என கட்டளையிடுவார்கள் என்பதாக உதுமானுல் கனீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினர்.
நூல்: மிஷ்காத், கிதாப்: பளுலுல் குர்ஆன்.

ரிஸாலாத் பற்றிய கொள்கை:

நபிமார்கள் எல்லா சிருஷ்டிகளிலும் மேலானவர்கள். அவர்கள் எல்லோர்களிலும் எங்கள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் வரிசையானவர்கள்.

நிச்சயமாக அல்லாஹுத் தஆலா ஆதமையும், நூஹையும், இப்றாஹிமையும், அவர்களின் சந்ததிகளையும் முழு உலகாத்தார் களிலும் உயர்வானதாக தெரிந்து கொண்டான்.- குர்ஆன் 3:33
நிச்சயமாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வானவர்களைக் காணவும், சகல நபிமார்களைக் காணவும் வரிசையாக்கி வைத்திருக்கிறான். -முல்லா அலீ காரி, ஷரஹு பிக்ஹுல் அக்பர் பக்கம் 136.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசினவன், அவர்கள் பேரில் குறை சொன்னவன் அல்லது அவர்கள் அளவிலோ, அவர்களின் வமிசத்திலோ, அல்லது அவர்கள் மார்க்கத்திலோ அல்லது அவர்களின் குணங்களிலேயாயினும் குறைபாட்டைச் சேர்த்தவன் அல்லது அவர்களை ஏசுவதற்காக, ஏளனம் செய்வதற்காக சாடை செய்தவன், அவர்களின் கண்ணியத்தைக் குறைத்துப் பேசினவன் அத்தனை பேர்களும் அவர்களை ஏசியவர்களேயாவார்கள். இவர்களுக்கு மார்க்கத் தீர்ப்பாகிறது  காபிர் என்பதாகும். அவர்களுக்கு கொடிய வேதனை உண்டு. இவர்களை வெட்ட வேண்டும் என்பதே. இவர்கள் காபிர் என்பதிலோ இவர்களுக்கு வேதனை உண்டு என்பதிலோ சந்தேகித்தவனும் காபிராவான்.’- கிதாபுஷ் ஷிபா பாகம் 2 பக்கம் 233, 234.

நபித் தோழர்கள் பற்றிய கொள்கை

‘உங்களில் யாராவது என் காலத்திற்குப் பின் வாழந்திருந்தால் மார்க்கத்தில் ஏராளமான அபிப்பிராய வேற்றுமைகளைப் பார்க்க வேண்டியது ஏற்படும். அந்நேரத்தில் என்னுடைய சுன்னத்தையும், குலபாஉர் ராஸிதீன்களுடைய சுன்னத்தையும் பலமாகப் பற்றிப் பிடியுங்கள்.’
(திர்மிதி, அபூதாவூது, அஹ்மது, இப்னுமாஜா, மிஷ்காத் பக்கம் 30)

மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள், ‘என்னுடைய தோழர்கள் நட்சத்திரங்களுக்கு சமமானவர்கள். அவர்களில் யாரை நீங்கள் தொடர்ந்தாலும் நேர்வழியைப் பெற்று விட்டீர்கள்.’
(ரஸீன்-மிஷ்காத் பக்கம் 554)

‘என்னுடைய ஸஹாபாக்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எனக்குப் பின்னால் உங்களுடைய தாக்குதலுக்கு இலக்காக அவர்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள். எனவே யார் அவர்களை நேசித்தார்களோ அவர் என்மீதுள்ள நேசத்தின் காரணமாகவே அவர்களை நேசித்திருப்பார்கள். யர் அவர்களை வெறுத்தார்களோ அவர்கள் என் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே அவர்களை வெறுத்திருப்பார்கள். அவர்களை வேதனை படுத்தியவர்கள் என்ளை வேதனைப் படுத்தியவர்களாவார்கள்.

என்னை வேதனைப் படுத்தியவர்கள் அல்லாஹ்வை வேதனைப் படுத்தியவர்களாவார்கள். அல்லாஹ்வை வேதனைப் படுத்தினால் அல்லாஹ் அவரை வெகு சீக்கிரமே பிடித்து வேதனை செய்வான்’.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு முஅப்பல் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.

எனக்குப் பின் ஸித்தீகுல் அக்பரையும், உமர் பாரூக்கையும் பின்பற்றுங்கள் (திர்மிதீ, மிர்காத் 10:423)

நான் எனது தந்தை இமாம் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மூத்த சகோதரர் இமாம் பாகர் ஆகியோரது கொள்கையுடையவன் எனப் பிரகடனப் படுத்தியதுடன், நான் உங்களை(ராபிஃழிகளை) விட்டும் நீங்கியவன் -ஹழ்ரத் ஸைத் பின் அலீ ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: அயிம்மா அல் பிக்ஹ் அத்திஸ்னா பக்கம் 16.

ஸெய்யிதினா ஸித்தீகுல் அக்பர் மற்றும் உமர் பாரூக்கையும் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் சிறப்பையும் உணராதவனும் அறியாதவனும் நபிவழியை உணராதவனே, தெரியாதவனே.
-ஸெய்யிதினா ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு நூல்: அயிம்மா அல் பிக்ஹ் அத்திஸ்னா பக்கம்40.

பாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் மக்களனைவர்களுமே ஷைகைன்களின் ( அபூபக்கர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்களின் விஷயத்தில் நல்ல வார்த்தைகளையே உபயோகித்துள்ளனர்.- முஹம்மது பாக்கர் ரலியல்லாஹு அன்ஹு.

கூபாவாசிகளே! ஸித்தீகுல் அக்பர் மற்றும் உமர் பாருக் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரது விஷயத்திலும் தகாத வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள்.
– ஹுஸைன் பின் முஹம்மத் பின் அல் ஹனபிய்யா ரலியல்லாஹு அன்ஹு.

ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் ஏற்காதவர்களின் தவ்பாவை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
-அப்துல்லாஹ் பின் அல் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு.

ஸித்தீக் எனப் பெயரிட்டவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகும். அவர்களை சித்தீக் என சொல்லாதவர்களின் பேச்சை அல்லாஹ் இரு உலகிலும் உண்மையாக்கி வைக்க மாட்டான்.
-இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு.

என்னுடைய நேசமும், ஸித்தீகுல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹுமாவின் விரோதமும் ஒரு உண்மை விசுவாசியின் உள்ளத்தில் ஒன்று சேராது.
– அலி ரலியல்லாஹு அன்ஹு.

முத்ஆ பற்றிய கொள்கை

முத்ஆ என்பது சாட்சி, ஈஜால் கபூல் (மணமக்களின் ஒப்புதல்) மஹர் போன்றவை எதுவுமில்லாமல் ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் ஒரு குறிப்பிட்டத் தொகையை கொடுத்து, சில நாட்களுக்கு அல்லது சில மணித்துளிகள் வரை உறவு வைத்துக் கொள்வதற்கு முத்ஆ என்று சொல்லப்படுகிறது. இதில் நிர்ணயிக்கப்பட்ட காலம், நேரம் முடிந்து விட்டால் முத்ஆ தானாக முறிந்து விடும்.
ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதனை ஹராம் என்று மிம்பரின் மீதிருந்து உத்தரவிட்டதும், மீறி செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரகடனப்படுத்தியதும் இந்த முத்ஆ ஹராமாக்கப்பட்டு விட்டது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அபிப்பிராயத்திற்கு ஏற்ப நிறைய குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

எனக்குப் பின்னால் சித்தீகுல் அக்பரையும், உமர் பாரூக்கையும் பின்பற்றுங்கள் (திர்மிதி, மிர்காத் 10:423)

எனக்குப் பின் நபி இருப்பின் அவர் உமராக இருப்பார் (திர்மிதி, மிர்காத் 10:403)

உமருடைய நாவிலிருந்து அல்லாஹ் பேசுகிறான் என்றும்

உமர் ஒரு வழியே வந்தால் ஷைத்தான் மறுவழியே விரண்டோடுகிறான் என்றும்  கூறிய ஹதீதுகள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய சிறப்புகளையும், அவர்களின் தீர்க்கமான முடிவுகள் மார்க்கத்திற்கு உட்பட்டது தான் என்பதையும் காட்டுகிறது. ஆகவே உமது கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தடுத்த முத்ஆ எனும் செயல் மார்க்கச் சட்டமாகிவிட்டது என்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையாகும்.

தகிய்யா – அவசியமானதில் பொய்யுரைப்பது.

உயிருக்கே ஆபத்தான நிலையில் அல்லது மிக மிக தர்மசங்கடமான அத்தியாவசியமான சந்தர்ப்பங்களின் போது இஸ்லாம் ஹராமென்று தீர்ப்பளித்துள்ள சில காரியங்களை செய்து கொள்ளலாமென்று ஷரீஅத் அனுமதியளிக்கிறது. ஏனெனில் உயிரைக் காத்துக் கொள்ளல் அதை விட அவசியமானதாகும். இல்லையேல் அவர் குற்றவாளி ஆகிவிடுவார். இன்னும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சத்தியத்தை மறைத்து அசத்தியத்தையம், உண்மைக்கு மாறாக பொய் சொல்லவும் அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே நேரம் அவனது உள்ளம் உண்மையை உண்மை என மெய்ப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். இது பாமரர்களுக்கு மட்டுமேயன்றி நபிமார்களுக்கு அல்ல.

நபிமார்கள் நுபுவ்வத்திற்கு முன்பும், பின்பும்  குப்ரு, ஷிர்க்கு, கெட்ட கொள்கை, பெரும் பாவம், சிறுபாவம் முதலியவற்றை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்கள். அல்லாஹ் சொல்கிறான்: ‘(ஏ இபுலீசே) என்னுடைய சொந்த அடியார்களின் பேரில் உனக்கு அதிகாரமில்லை.’ -அல்குர்ஆன்.

எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஹி வருவதற்கு முன்னும் பின்னும் ஒருக் கணமும் கூட பெரும் பாவம், சிறுபாவம் செய்யவில்லை என்பதில் ஒருவருக்கும் ஆட்சேபணை(கிலாபு) இல்லை என்று இமாம் அபூஹனிபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் பிக்ஹுல் அக்பர் எனும் நூலில் சொன்னார்கள்-தப்ஸீர் அஹ்மதிய்யா.

இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதில்: நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மனைவியை சகோதரி என்று கூறியதற்கு அதாரமும் இல்லை நபியவர்கள் பொய் சொன்னதும் இல்லை. (அல் பிதாயா வன் நிஹாயா’ 1:150, ஹிஜ்ரத்துல் கலீலி இலா அஷ்ஷாம் (பெய்ரூத் ரியாழ் பதிப்பகம்) என்று கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் சகோதரி என்று சொன்னது  பொய் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல. மாறாக தௌரிய்யா(அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்ட ஒரு வாக்கியத்தை கேட்பவரது நிலைமைக் கேற்றவாறு தாம் அந்த அர்தத்தை நாடாது உபயோகிப்பதாகும். இது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது) என்கின்ற அடிபடையில்தான் என்று கூறுகின்றனர். உக்துன்’ என்பது உடன் பிறந்த , பால்குடி முறையிலுள்ள, மார்க்க நம்பிக்கையுடைய இணைப்பின் உள்ள சகோதரி என்னும் பல அர்த்தங்களை கொண்ட வாக்கியமாகும். ஆனால் அரசன் உடன் பிறந்தவள் என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டான். ஏனெனில் உக்துன் என்னும் பதம் உடன் பிறந்தவள் என்ற அர்த்தத்தையும் கொண்டிருப்பதாலேயே.

ஹஜ் பற்றிய கொள்கை:

இறைவனின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) போரிட தேவையில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமை என்று கூறி அதுதான் ஹஜ்ஜும் -உம்ராவும் என்றார்கள். – ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) அஹ்மத் இப்னுமாஜா.

எவர்கள் அங்கு யாத்திரை செய்ய சக்தியுடையவர்களாகஇருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தா(ர் அனைவ)ரை விட்டும் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3:97)

இஸ்லாம் ஐந்து காரியங்களின்மீது நிறுவப்பட்டுள்ளது. அவை: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னுஉமர் -ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ,முஸ்லிம்)

ஹஜ்ஜை நிறைவேற்ற சக்திபெற்றிருந்தும் அதனை -நிறை வேற்றாது- விட்டுவிட்டவன் யூதனாகவோ கிருத்துவனாகவோ மரணிப்பதில் ஆச்சரியமில்லை என அலி (ரலியல்லாஹு அன்ஹு) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகள்: என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட நன்மையுடையதாகும்.

(அறிவிப்பவர் : அபுஹுரைரா -ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது என்னுடைய இந்தப் பள்ளியில் நூறு தொழுகையைத் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சுபைர் – ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹமத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)

என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது அது தவிர உள்ள பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹமத், இப்னுமாஜா)

என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது – ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)

மதீனா மஸ்ஜிது நபவிய்யில் தொழுத பிறகு அவர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரையும் அவர்களின் தோழர்களான அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்வார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்களின் கப்ருக்கு எதிரே ஒழுக்கத்துடன் நின்று, பணிவான சப்தத்துடன்(அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்!) என்று ஸலாம் கூறவேண்டும்.

(என் மீது யாரேனும் ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக என்னுடைய ரூஹை அல்லாஹ் மீட்டுத் தருகிறான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பகீஃயின் கப்ர்களையும் ஷுஹதாக்களின் கப்ர்களையும் ஹம்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) கப்ரையும் ஜியாரத் செய்து, அவர்களுக்காக துஆச் செய்துள்ளதால் அவைகளை ஜியாரத் செய்வது சுன்னத்தாகும்.

‘மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!’ என்று இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தாரகள்;.
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 29, எண் 1869

‘பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!’
என அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.
புஹாரி, பாகம் 2, அத்தியாயம் 29, எண் 1876

ஒரு கிராமவாசி நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதி மொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். ‘(இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள்!’ என்று கேட்டார். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். ‘மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும்! அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்!’ என்று என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்’
என்று  ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.

‘இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!’என அனஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தாரகள்;.
புஹாரி பாகம் 2 ஹதீது அத்தியாயம் 29, எண்1885

மக்காவின் சிறப்புகள்: நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57) அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ‘துஆ’வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள், ‘இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) -புகாரி.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

‘இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” (அல்குர்ஆன் 2:126) அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

ஏக இறைவனை) மறுத்தோருக்கும்,
அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

யார் ஹஜ் செய்து, என்னை ஜியாரத் செய்யவில்லையோ நிச்சயமாக அவர் என்னை வெறுத்துவிட்டார்.

ஜியாரத் செய்பவர் நான் உயிருடன் இருக்கும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

என்னுடைய கப்ரை ஜியாரத் செய்தவருக்காக என்னுடைய பரிந்துரை கடமையாகிவிட்டது என்ற நபி மொழிகளும் இவர்களுக்கு மறுப்பாக அமைந்துள்ளது.

அல் அக்ஸா பள்ளி பற்றிய கருத்து:

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள ‘கஅபா’ ஆலயமாகும். அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

‘கஅபா’ ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) ஆவார்கள். ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ”மஸ்ஜிதுல் அக்ஸா”வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ”பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ என்று கூறினார்கள். ‘இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)’ என்று கேட்டேன். ‘நாற்பது வருடங்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) புகாரி 3366

மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -நன்மையை நாடி (தொழுவதற்காக) – பயணம் மேற்கொள்ளக் கூடாது. அவை : மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸா என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அறிவிப்பாளர் : அபூஸயீத் -ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தினர்கள்தான் இந்த ஷியாக்களுக்கு எதிரியாகத் திகழ்பவர்கள். அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு ஸினான் என்பவர் ஹழ்ரத் செய்யிதினா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு கிடைத்ததாக தெரிவிப்பது என்னவெனில், எனது தந்தை இமாமவர்களிடம் யூத, கிறித்துவர்களின் பெண்களை திருமணம் செய்வது சம்பந்தமாக வினவியபோது (நான் அப்போது அங்கே அமர்ந்திருந்தேன்) இமாமவர்களே! அவ்விரு கூட்டத்தாரின் பெண்களை திருமணம் செய்வது ‘நாஸிபிய்யா’க்களின் (சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின்) பெண்களை திருமணம் செய்வதை விட மேலானதாகும். இருப்பினும் நான் அதை விரும்ப மாட்டேன் என்று கூறினர். நூல்: ஃபுரூஃவுல் காஃபி 5:351, கிதாபுன் நிகாஹ், தெஹ்ரான் பதிப்பகம்)

ஹழ்ரத் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கப்பலில் நாய், பன்றி போன்றவற்றையெல்லாம் ஏற்றிக் கொண்டு பயணம் செய்தனர். ஆனால் விபச்சாரத்தில் பிறந்த ஹராமிகளை மட்டும் ஏற்றவில்லை. இதில் இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹராமிகளை விட மிகக் கெட்;டவர்கள். நூல்: ஜாமிஉல் அக்பார் பக்கம் 158, நஜப் அஷ்ரஃப் பதிப்பகம்.

சுன்னத் வல் ஜமாஅத்தினரது பெண்களை மணம் முடிக்காதீர். அவர்கள் அறுத்ததை புசிக்காதீர்கள். இன்னும் அவர்களோடு சேர்ந்து வசிக்காதீர்கள். நூல்: அல் இஸ்திப்ஸார் 3:184, தெஹ்ரான் அச்சகம், தஹ்தீபுல் அஹ்காம் 7:303 தெஹ்ரான் அச்சகம்.

‘நாஸிபிய்யா’ என்பது சுன்னத் வல் ஜமாஅத்தினரைத்தான் குறிக்கிறது என்பதை ராபிழிகளின் அன்வார் நுஃமானிய்யா 2:307, ஹக்குல் யக்கீன் 2:516 என்ற நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.

பிக்ஹ் ஜஃபரிய்யா என்னும் ஷியாக்களின் சட்ட நூலானாது இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் உருவாக்கப்பட்டதாக ஷியாக்களால் கூறப்பட்டுள்ளது.

இது முற்றிலும் அஹ்லெ சுன்னத்திற்கு மாற்றமான ஒன்றாகும். இந்த ஷியாக்களைப் பற்றியும் அவர்களின் பிக்ஹ் ஜஃபரிய்யா நூற்களைப் பற்றியும் அஹ்லெ பைத்துகளின் இமாம்கள் கூறியிருப்பதாவது:

1. எனது பாட்டனார் ஸெய்யிதினா ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலம் முதல் எனது காலம் வரை ஷியாக்களின் அறிவிப்பாளர்கள் அவர்களது பெயரில் பொய்களையே தந்துள்ளனர்.

2. அஹ்லெ பைத்தினர்களின் இமாம்கள் இப்பொய்யர்கள் மீது சூடான இரும்பினால் வேதனை செய்தும் பிரார்த்தனை புரிந்துமுள்ளனர்.

3. இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் பெயாரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்களை ஷியாக்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்

4. அஹ்லெ பைத்தினர்களான எங்களின் மீது பழி சுமத்தும் ஷியாக்களின் சிரசுகளைத் துண்டிப்பவர் இமாம் மஹ்தியாகும் என்கின்றனர் இமாம் ரிழா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘உங்கள் தந்தை மூன்று கலீபாக்களின் பின்னால் தொழுதவைகளை வீட்டில் திருப்பித் தொழுகிறவர்களாக இருந்தார்களா?’ என்று வினவப்பட்டபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை’ என்றார்கள். -நூல்: பிஹாருல் அன்வார் 10:140 பழைய பிரதி.

ஆக இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூன்று கலீபாக்களையும் ஒரு மனதாகப் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதும், இவர்களின் பெயரால் ஷியாக்கள் எழுதியிருப்பது கட்டுக்கதை என்பதும் நிரூபணமாகிறது.

உங்கள் முன் நமூனாவாக -எடுத்துக் காட்டாக இங்கு ஷியாக்களின் கொள்கைள் நம்முடைய சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலிருந்து எவ்வகையில் மாறுபட்டது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இனி,

ஷியாக்களைப் பற்றி நமது இமாம்கள், மார்க்க அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்.

அஹ்லெ பைத் குடும்பத்தைச் சார்ந்த ஸெய்யிதினா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது ‘குன்யத்துத்தாலிபீன்’ என்ற நூலில் பக்கம் 147 ல் சொல்லியிருக்கிறார்கள், ‘ஷியாக்களின் மத்ஹப் யூதர்களின் மத்ஹபுக்கு ஒப்பானது ஆகும். இன்னும் ஹஜ்ரத் ஷஃபி அவர்கள், ராஃபிழிகளை நேசிப்பது யூதர்களை நேசிப்பது போலாகும் என்கின்றனர். இனி ராபிழிகளுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையினை ஒப்பு நோக்கலைப் பாருங்கள்:

யூதர்கள்: தாவூதின் குடும்பத்தாரை தவிர வேறு யாரும் இமாமாக இருக்கத் தகுதியில்லை.

ராபிழிகள்: இமாம் அலியின் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் இமாமாக இருக்கத் தகுதியில்லை.

யூதர்கள்: மஸீஹ் தஜ்ஜாலும், வானத்திலிருந்தும் நபி ஈஸாவும் இறங்கும் வரை ஜிஹாத் என்பதில்லை.

ராபிழிகள்: இமாம் மஹ்தி வெளிப்பட்டு இவர்தான் மஹ்தி என அல்லாஹ்வைக் கொண்டு தெரிவிக்கப்படும் வரை ஜிஹாத் என்பதில்லை.

யூதர்கள்: இவர்கள் மஃரிப் வணக்கத்தை நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று பிண்ணிக் கொள்ளும் வரை பிற்படுத்துவர்.

ராஃபிழிகள்: இவர்களும் மஃரிப் வணக்கத்தை பிற்படுத்துவோரேயாகும்.

யூதர்கள்: கிப்லாவின் திசையை விட்டு சற்று விலகியே வணங்குவர். ஷியாக்களும் இப்படித்தான். யூதர்கள் வணங்கும்போது ஆடி அசைந்து வணங்குவர். ஷியாக்களும் இப்படித்தான் வணங்குகின்றனர். யூதர்கள் ஆடைகளை தொங்கவிட்டு வணங்குவதைப் போலவே ஷியாக்களும் வணங்குகின்றனர். யூதர்கள் முஸ்லிம்களது இரத்தத்தை ஹலால் எனக் கருதுவது போலவே ராஃபிழிகள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் இரத்தத்தை ஹலாலென் கருதுகின்றனர். யூதர்கள் பெண்களின் இத்தா காலத்தை கணக்கில் கொள்ளாதது போன்று இவர்களும் கணக்கில் கொள்வதில்லை. யூதர்கள் முத்தலாக்கை மதிக்காதது போன்று ஷியாக்களும் மதிப்பதில்லை. யூதர்கள் தௌராத்தில் இடைச் சொருகல் செய்ததை போன்று இவர்கள் குர்ஆனில் செய்துள்ளனர். யூதர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிரியாகக் கணித்திருப்பதைப் போன்று ஷியாக்களில் ஒரு பிரிவாhர் ஜிப்ரீலவர்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்க வேண்டிய வஹியை தவறாக இன்னொருவருக்கு வழங்கிவிட்டார் என கூறுகின்றனர். இவர்கள் நாசமாகட்டும். அழிந்து போகட்டும்’ என்று கூறுகின்றனர்.

கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் தகுதியான கலீபாக்களென்போர் ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக், உத்மான் கனீ, அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரே. அஹ்லு சுன்னாவின் கொள்கை தோழர்களனைவரையும் பரிசுத்தப்படுத்தி அல்லாஹ் ரஸூலின் பொருத்தத்தைப் பெறுவதுதான். – இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு ரலியல்லாஹு அன்ஹு.

செய்யிதினா ஸித்தீகுல் அக்பர், உமர் பாரூக், உத்மான் கனீ, அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் போன்றோரின் கிலாபத் ஆட்சியை உண்மைபடுத்துவதே உனது அகீதா ஈடேற்றமடைய போதுமானதாகும். -ஷிஹாபுத்தீன் சுஹரவர்தீ ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு.

முதல் கலீபா ஸித்தீகுல் அக்பர், இரண்டாம் கலீபா உமர் பாரூக், மூன்றாம் கலீபா உத்மான் கனீ, நான்காம் கலீபா அலி முர்தழா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களாகும். – இமாம் கமால் இப்னு ஹுகாம் ஹனபி ரலியல்லாஹு அன்ஹு.

நபித்தோழர்களில் நான்கு கலீபாக்களும், பின்னர் சுபச் செய்தி வழங்கப்பட்ட தோழர்களும், அதன்பின் அஹ்லெ பத்ர், பின்பு அஹ்லெ உஹத்;, அதையடுத்து பைத்துர் ரிழ்வான் ரலியல்லாஹு அன்ஹும் என்பதே எனது அகீதாவாகும்.
– இமாம் நவவி ஷாபிஇ ரலியல்லாஹு அன்ஹு.

இன்னும் இது போன்ற மகான்கள் சொன்ன சொற்கள் நமக்கு நமது அகீதாவை படிப்பினையாக்கி போதித்துக் கொண்டிருக்கிறது.

மார்க்கத் தீர்ப்பு:

புனித கண்மணி நாயகத் தோழர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டவர்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். -அல்குர்ஆன்.

எனது தோழர்களை நேசிப்பவன் என்னை நேசித்தவன். அவர்கள் மீது கோபம் கொள்வோர் என்னைக் கோபித்தவராவார். -நபிமொழி

இஆனத்துத்தாலிபீன் நூலின் 4:159ல் ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஸஹாபி என்பதை பொய்யாக்குவதும், ஸெய்யிததுனா ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இழித்துரைப்பதும் ‘குப்ராகும்’ என்றும் , அதே நூல் பக்கம் 4:149 ல் குர்ஆனில் உள்ள ஒரு அட்சரத்தையேனும் சந்தேகிப்பது குப்ரை ஏற்படுத்துவதாகும்.

ஹழ்ரத் சித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் மறுப்பது ‘குப்ராகும்’ -நூல்: பத்ஹுல் கதீர் 1:304

மூன்று தோழர்களை விட அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சிறந்தவர் என்று எண்ணுவது பித்அத்தாகும். இதுபோன்றே ஸித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் கிலாபத்தை – ஆட்சியை மறுப்பது குப்ராகும். நூல்: ஹாஸயத்துஷ் ஷிப்லி அலா திப்யீகில் ஹகாயிக் 1:135.

ஸித்தீகுல் அக்பர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் வர்ணிப்பதும், அவர்களை குறை கூறுவதும் ‘குப்ராகும்’ நூல்: பஹ்ருல் ராயிக்  5:126.

ஷைகைன் ஆகிய இருவரின் கிலாபத்தை பொய்யாக்குவதும், மறுப்பதும் குப்ராகும்.
நூல்: பதாவா பஸ்ஸாஸிய்யா 6:318.

ஸெய்யிதினா ஸித்தீகுல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின் கிலாபத்தை மறுப்பது குப்ராகும். நூல்: hஷியத்துத் தஹாவி அலா மராகில் ஃபலாஹ். பக்கம் 181.

இதுவரை மேற்கூறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு நபித் தோழர்களை ஏசுவதும், அவர்களை இழித்துரைப்பதும், சாபமிடுவதும் குப்ரு என்னும் நிபந்தனைக்கு உட்படுகின்றது. அதாவது இப்படிப்பட்ட காரியங்களை செய்தால் குப்ரு ஏற்படும் என்று தெரிய வருகிறது. ஆக இவ்விஷயங்களை செய்த ஷியாக்களின் நிலை குப்ரான ஒன்றாகிறது.

அல்லாஹ் நம் அனைவர்களையும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஸீலாவைக் கொண்டு பாதுகாப்பானாக! ஆமீன்.

ஸல்லல்லாஹு  அலா முஹம்மது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.