குத்பிய்யா ஆகும் பத்வா-Quthbiya is Permissible Fatwa

குத்பிய்யா ஆகும் பத்வா-Quthbiya is Permissible Fatwa

By Sufi Manzil 0 Comment March 31, 2011

Print Friendly, PDF & Email

சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் 'குத்பியத்' கூடும் ஈசால் தவாபு ஆகும்.

பத்வா

வெளியீடு:

மஹ்லறத்துல் காதிரிய்யா சபை
மஹ்லறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரி
காயல்பட்டணம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.

பேரன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

உண்மை முஃமின்களாகவும், முத்தகீன்களாகவும், இறைநேசச் செல்வர்களாகவும் இறையருள்  ஞானமேதைகளாகவும் விளங்கி நமது முன்னோர்களால் செயல்படுத்தப்பட்டு வந்ததும் நமது சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களாலும் உலமாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட 'வசீலாவின்' பாற்பட்டதுமான 'குத்பிய்யா குறித்து சமீபகாலமாக வஹ்ஹாபிகளும், மௌதூதிகளும் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் 'இருட்டு திக்ரு' என்று ஏளனம் செய்து வருவதையும் ஷிர்க்க என்றும் கூட கூறி வருவதையும் நாம் அறிவோம்.

வஹ்ஹாபிய்யத்தினுடையவும் அதன் சார்பு இயக்கமான மௌதூதிய்யத்தினுடையவும் அடிப்படைக் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாத சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாக்களில் தெளிவு இல்லாத பொது மக்களில் சிலர் இவ்வஹ்ஹாபிய-மௌதூதிய்யப் பிரச்சாரங்களினால் 'மயக்கம்' கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் குத்பிய்யத்தைப் பற்றி தமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியாத் சாலிஹாத் அரபிக்கல்லூரியிலிருந்தும் கேரளத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப் பெரிய மத்ரஸாவான பைஜாபாத் (பட்டிக்காடு) ஜாமியா நூரிய்யா அரபிக்கல்லூரியிலிருந்தும் பத்வாக்களைப் பெற்று, அத்துடன் கோயமுத்தூர் இம்தாதுல் உலூம் அரபிக்கல்லூரியினுடையவும் எங்கள் மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியினுடையவும் பத்வாக்களையும் இணைத்து இதில் வெளியிட்டுள்ளோம்.

பொதுமக்கள் உண்மை நிலையைத் தெரிந்து, காமிலான முஃமின்களான நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய 'குத்பிய்யத்' ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் உடன்பாடானதும் அங்கீகரிக்கப்பட்டதுமாகும் என்பதைத் தெளிந்து செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

தலைவர், செயலர், மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.
மஹ்லறா,
காயல்பட்டணம்.
24-04-1406 (1-8-1986)

தமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் மார்க்கத் தீர்ப்பு.

பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தின் சங்கைக்குரிய முப்தி மற்றும் கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்காணும் கேள்விக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டுகிறோம்.

கேள்வி: யாஷைகு முஹ்யித்தீன் என ஆயிரம் தடைவ அழைக்கும் (குத்பிய்யத்) கூடுமா? கூடாதா?

இப்படிக்கு,

மௌலவி சாகிப் தம்பி ஆலிம் மஹ்லரி

மௌலவி கலந்தர் மஸ்தான் ரஹ்மானி
காயல்பட்டணம்.

விடை: வினா உண்மையெனில் யாஷைகு அப்துல் காதிர் ஜீலானி ஷைஅன்லில்லாஹ் என்று சொல்பவர் ஒன்று அவர்களை நேரடியாகப் பார்க்கக் கூடியவராக இருக்கலாம் அல்லது அவர்களை நேரடியாகப் பார்க்காதவராகவும் இருக்கலாம். கௌதுல் அஃலம் அவர்களை  நேரடியாகப் பார்த்து கேட்டால் அது கூடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்களை நேரடியாகப் பார்க்காமல் கேட்டால் அது வீணானதாகும். அவ்வாறே அந்த விர்தும் வீணானதாகும் என்றாலும் துஆ என்கிற அடிப்படையில் மேற்கூறிய வாசகத்தின் கருத்து 'யா இலாஹி அஃதினீ ஷைஅன்பிவஸீலத்திஷ் ஷைகு அப்துல் காதிரில் ஜீலானி' (இறைவனே! ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பொருட்டால் எனது வேண்டுகோளை நிறைவேற்றுவாயாக!) இவ்வாறு என்று மனதில் நம்பிக்கை கொண்டு ஆயிரம் தடவை சொன்னாலும் சந்தேகமில்லாமல் கூடும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

அப்துல் வஹ்ஹாப்
அபல்லாஹு அன்ஹு

முப்தி மத்ரஸா பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்,

வேலூர் 29-1-86.

கேரள மாநிலம் மலப்புரம் ஜில்லா (பட்டிக்காடு) பைஜாபாத் ஜாமிய்யா நூரிய்யா அரபிக் கல்லூரி உலமாக்களின் மார்க்கத் தீர்ப்பு

குத்பிய்யத் என்பது முதலில் ஹாஜத் நபில் தொழுது ஹலரத் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கோர்வை செய்த கஸிதாவை ஓதி, ஹலரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருநாமத்தைச் சொல்லி 1000 தடவை அழைத்து உதவி கோருதல் ஆகிய அம்சங்களைக் கொண்டதாகும்.

இதில் குத்பு என்று மிகப் பிரபலமான மிகப்பெரும் வலியுல்லாஹ் என்று தெளிவான பல கராமத்துக்களை நிகழ்த்தியவர்கள் என நிரூபணமான ஹலரத் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு வசீலா தேடுவதும் அவர்களைப் புகழும் அம்சங்களும் அடங்கி உள்ளன.

இந்த குத்பிய்யத் ஜாயிஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறை மதியாளர்கள்தான் இதை ஷிர்க் என்பர். அறிவாளர்கள் அவ்வாறு எண்ணமாட்டார்கள். இந்தக் குத்பிய்யத்தைச் செயல்படுத்துபவர் இஸ்லாமிய புனித ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரைப் பின்பற்றித் தொழுவதும் ஆகுமானதாகும். அவரைப் பின்பற்றித் தொழுவதன் மூலம் ஜமாஅத்துடைய தவாபும் கிடைக்கும்.

இதில் குறிக்கப்படும் 'கல்வத்' என்பது மற்றவர்களைவ மட்டும் தனித்திருப்பது என்பதாகும்.

நபிமார்களைக் கொண்டும் வலிமார்களைக் கொண்டும் ஸாலிஹீனு;களைக் கெணர்டும், அவர்களின் ஹயாத்திலும் வபாத்திற்குப் பின்னரும் வசீலா தேடுவதும் ஆகும் எனடபதை மறுப்பவர் 'பித்அத்' காரராவார். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டும் அப்பாற்பட்டவரும் ஆவார். இத்தகைய பித்அதகாரர்களை பின் தொடர்வது மக்ரூஹ் என்பதுடன் அவ்வாறு தொழுதால் அவர்களுக்கு ஜமாஅத்தின் தவாபும் கிடைக்காது. அவர்களை நியமிப்பதும் கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்!

T. அபூபக்கர் முஸலியார்,

முதல்வர், ஜாமியா நூரிய்யா அரபிக் கல்லூரி,
பைஜாபாத், பட்டிக்காடு, கேரளா.

பத்வாவை சரிகண்டு ஒப்பமிட்டவர்கள்:

அல்ஹாஜ் மௌலானா மௌலவி K.K. அபூபக்கர் முஸலியார் (பாஜில் பாகவி பாஜில் தேவ்பந்த்)
மௌலானா மௌலவி M.T. அப்துல்லாஹ் முஸலியார்
மௌலானா மௌலவி M.K. முஹ்யித்தீன் குட்டி முஸலியார்
மௌலானா மௌலவி K. அலிகுட்டி முஸலியார்
மௌலானா மௌலானா P.K. குஞ்சு முஸ்லியார்.

காயல்பட்டணம் மஹ்லறதுல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் பத்வா

நடைமுறையில் 'குத்பிய்யத்' என்று சொல்வது எதார்த்தத்தில் 'இஸ்திகாதா' என்று கூறப்படும் வசீலாவின் வகைகளில் ஒன்றாகும். நபிமார்கள், வலிமார்கள் ஆகியோரைக் கொண்டு அவர்கள் உலகத்தில் வாழும் காலத்திலும், அவர்களின் வபாத்திற்குப் பின்னரும் 'வசீலா' என்னும் உதவி தேடுதல் நமது மார்'க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.

இதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு அல்லது பிற நபிமார்கள், வலிமார்களைக் கொண்டு வசீலா தேடுதல் (தவஸ்ஸுல்) அபயதம் தேடுதல் (இஸ்திகாதா) மன்றாட்டம் தேடுதல் (தஷப்புஃ) அவர்களை முன்னிட்டு கோரிக்கை செய்தல்(தவஜ்ஜுஹ்) போன்ற இவற்றிற்கு இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இதில் எல்லாமே கூடும்.

சிக்கலில் மாட்டிக் கொண்ட ஒருவர் 'யா நபி' அல்லது 'யா வலி' எனக்கு உதவுங்கள் என விளித்து வேண்டுவதும் வசீலாவின் பாற்பட்டதே! இது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வதுதான் குறிப்பிட்ட அவர்களை அழைத்து வேண்டுதல் செய்தது 'ஹகீகத்' என்னும் யதார்த்தத்தின் நேர் எதிரிடையான 'மஜாஸ்' என்னும் உருவகமாகும். 'இன்ன நபியை அல்லது வலியை வசீலாவாக வைத்து என் கஷ்டங்களை நீக்க வேண்டுமென்று என் இறைவனே உன்னை வேண்டுகிறேன் என்பதுதான் யதார்த்தத்தில் அவர் கூறிய வாசகத்தின் கருத்தாகும். நபியையோ அல்லது வலியையோ அவர் குறிப்பிட்டது மஜாஸின் பாற்பட்டதாகும். நமது ஷெய்குமார்களிடம் இருந்து நாம் கற்றதும் அவர்கள் தங்களின் மகான்களான ஆசான்களிடமிருந்து கற்றதும் இவ்வாறே பரம்பரைபரம்பரையாக சன்மார்க்கத்தில் தேர்ச்சியும் தெளிவும் மகிக பெரியோர் வாயிலாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளதுமான இந்த வசீலா என்னும் நடைமுறை ஆகுமானது என்பது பல்வேறு நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பெருமக்கள் நான் இந்த புனிதமான ஷரீஅத்தை பாதுகாத்து நமக்குத் தந்தவர்கள். அவர்களின் போதனையின் வாயிலாக இந்த ஷரீஅத்தை நாம் புரிந்து கொண்டோம். இந்நிலையில் வசீலா இஸ்திகாதா போன்றவை கூடாது ஷிர்;க் என்றெல்லாம் கூறும் குறைமதியாளர்கள் கருத்துப்படி அந்த வசீலா ஆகுமானது என்னும் அறிவித்:துச் சென்ற இந்த மகான்கள் எல்லாம் காபிர்கள் என்றால் இந்த 'ஷரீஅத்' எப்போதோ இல்லாமலாகியிருக்குமே! மேலும்,

குத்பிய்யத்தில் குறிக்கப்படும் கல்வத் என்பதற்கு மற்ற ஜனங்களைவ pட்டும் ஒதுங்கித் தனித்திருத்தல் என்ற பொருளும் உண்டு. ஏனெனில் இந்தத் தனிமை இக்லாஸுக்கு மிக நெருக்கமானதாக முகஸ்துதியை விட்டும் மிகத் தூரமானதாகவும் இருக்கிறது.

ஒரு கூட்டத்தில் இருந்தாலும் பிறரின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் 'கல்வத்' என்று சொல்வதுண்டு. இது இரு கண்களை மூடுவதன் மூலமோ இருட்டில் இருப்பதன் மூலமாகவும் கூட அமையலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

இப்படிக்கு,

அல்ஹாஜ் S.N. சாகிப் தம்பி ஆலிம் மஹ்லரி,

முதல்வர்,

பத்வாவை கரி கண்டு ஒப்பமிட்டவர்கள்

S.S.K. மஸ்தான் ரஹ்மானி

மௌலானா மௌலவி
S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி

மௌலானா மௌலவி M.M. செய்யது முகம்மது பாகவி

மௌலானா மௌலவி ஹாபிஸ்
V.A. மீரான் முஹியித்தீன் பாஜில் பாகவி

மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா
M. ரபீக் அகமது உலவிய்யு பாஜில் பாகவி

மௌலானா மௌலவி
S.M. முகம்மது பாரூக் பாசி

மௌலானா மௌலவி SM.B. செய்யிது ஹாமித் சிராஜி.

கோயமுத்தூர் இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியின் பத்வா

ஆரம்பத்தில் தனது நாட்டம் நிறைவேற்றுவதற்காக 12 ரக்அத்துகள் ஹாஜத்து நபில் தொழுது யாகௌது யாமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்று அழைக்கும் 'குத்பிய்யா' என்னும் இந்த முறை அல்லாஹ்வின் நேயர்களான நல்லடியார்களைக் கொண்டு அபயம் தேடும் 'இஸ்திகாதா' என்பதின் பாற்பட்டதாகும். வழிகேடர்களான புதிய கோட்பாட்டுக்காரர்கள் தான் இதை ஆகாது என்று மறுப்பார்கள். இம்மாதிரி அபயம் தேடி அழைப்பது ஆகும் என்பது குர்ஆன், ஹதீது ஆகியவற்றின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் நம்முடைய மார்க்கத்தில் தேர்ச்சியும், தெளிவும், திறனும் மிக்க உண்மை முஃமின்களான-முத்தகீன்களான நம்முடைய ஷெய்குமார்களிடமிருந்து நாம் கற்றதும், அவர்கள் தங்களின் ஆசான்களான மகான்களிடமிருந்து கற்றதும் இவ்வாறே பரம்பரை பரம்பரையாக சன்மார்க்கத்தில் தேர்ச்சியும், தெளிவும் மிக்க பெரியோர்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுள்ளதுமான இந்த இஸ்திகாதா ஆகுமானது என்ற விஷயம் உலகெங்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெரும்மக்களை பின்பற்றுவதே நமக்குப் போதுமானதாகும்.

குத்பிய்யத்தின் ஓர் அங்கமாக முதலில் நிறைவேற்றப்படும் 12 ரக்அத் ஹாஜத்து நபில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போது இமாம் கஸ்ஸாலி அவர்கள் 'யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டு மார்க்க சம்பந்தமான மற்றும் உலக சம்பந்தமான தேவை ஏற்பட்டால்ள இதே 12 ரக்அத் நபில் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும் என்று தனது 'இஹ்யா உலூமுத்தீனில் குறிப்பிட்டுள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 206)

இந்த 12 ரக்அத் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 'நிஹாயா' என்னும் நூலில் (பாகம் 1 பக்கம் 501) ல் குறிக்கப்பட்டுள்ளது. நிஹாயாவின் விளக்க நூலான ஹாசியா 'ஷப்ராமல்சி' (பாகம் 1 பக்கம் 501)ல் அந்த தேவையை கேட்கத் துவங்கும் போது இந்த 12 ரக்அத்துகளை தொழுவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.

அல்லாமா அஷ்ஷெய்கு யூசுபுன் நபஹானி அவர்கள் இமாம் ஸுபுகீ அவர்கள் கூறுவதாக தனது 'ஷவாஹிதுல் ஹக்' எனும் நூல் பக்கம் 20ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு 'தவஸ்ஸுல், தஷப்புஃ, இஸ்திகாதா' எனும் இரட்சிப்புத் தேடுதல் ஆகுமான நல்ல அமலாகும். இது ஆகும் என்பது நபிமார், ரஸூல்மார்கள்செயல்முறைகளிலிருந்தும் ஸாலிஹீன்கள் உலமாக்கள் ஆகயிவர்களின் வரலாற்றில் இருந்தும் அறியப்பட்ட தெரிந்த விசயம்தான்.

இமாம் ரமலி அவர்களிடத்தில் சிரமமான சந்தர்ப்பங்களில் யாரேனும் நபியையோ அல்லது வலியையோ அழைத்து அபயம் தேடுவம் முஸ்லிம் பொதுமக்களின் நடைமுறைகளைப் பற்றி கேட்கப்பட்டபோது, நபிமார்கள், ரசூல்மார்கள், ஒலிமார்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரைக் கொண்டு 'இஸ்திகாதா' என்னும் அபயம் தேடுதல் ஜாயிஸாகும். ரசூல்மார்களுக்கும், நபிமார்களுக்கும் அவ்லியாக்களுக்கும் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அபயம் அளிக்கக் கூடிய ஆற்றல் இறைவன் அருளால் உண்டு.

ஏனெனில் நபிமார்களின் முஃஜிஸாவும் வலிமார்களின் கராமத்தும் அவர்களுடைய வபாத்திற்குப் பின்னரும் நின்று விடாது தொடரும். ஏனென்றால் நபிமார்கள் தங்களுடைய கப்றுகளிலே ஜீவனுடன் இருக்கிறார்கள். தொழுகிறார்கள். ஹஜ்ஜும் செய்கிறார்கள் என்று ஹதீதுகள் வந்துள்ளன. எனவே நபிமார்களின் மூலம் ஏற்படும் இந்த இரட்சிப்பு அவர்களைப் பொறுத்தவரை 'முஃஜிஸா' என்று ஆகும். அவ்லியாக்களுக்கு இது 'கராமத்' என்று ஆகும் என்று இமாம் ரமலி அவர்கள் பதிலளித்துள்ளார்கள். எனவே வினாவில் குறிக்கப்பட்டுள்ள 'குத்பிய்யத்' ஆகுமானதாகும்.

இப்படிக்கு

மௌலவி அமானுல்லாஹ் நூரி

பத்வாவை சரிகண்டு ஒப்பமிட்டவர்கள்:

மௌலவி முஹம்மது அலி இம்தாதி
மௌலவி காஜா முஹ்யித்தீன் இம்தாதி
மௌலவி முஹம்மது இல்யாஸ்
மௌலவி முஹம்மது அலி
மௌலவி முஹம்மது லியாகத் அலி
மௌலவி முஹம்மது மன்ஸுர் சிராஜி