Qasim Bin Muhammed Bin Abubacker-காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு.

Qasim Bin Muhammed Bin Abubacker-காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

 

Short Histroy-Hazrath Qasim bin Muhammed bin Abu-Bakar

 4 th Sheikh in NAQSAHABANDI OOLA and NAQSHABANDI MUJJADIDI THAREKS.

 

He  was grand son of Hazrath Abu Bakar Siddique .

 

He was also one of  Ulma-e-Tabbyen.

 

He  was Aalim , Muttaqi , Zahid , Abid .

 

He was passed away to Rafiq-e-Aala at the age of 70 years in Madina in 25 th Jamathul Awwal 107 Hijri.

 

காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு.

    ஸெய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முஹம்மது அவர்களின் மகனாவார். சிறந்த தாபிஈனாகவும், மதீனாவின் ஏழு மார்க்க அறிஞர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார்கள். இக்காலத்தில் இவருக்கு நிகர் எவருமில்லை. நபித் தோழர்களிடமிருந்து ஹதீதுகளைப் பயின்ற இவர் பலருக்கும் அவற்றைப் போதித்தார்.

முஸ்லிம்களின் மாபெரும் சட்ட வல்லுனர்களில் இவரும் ஒருவர் என்று இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். இவரின் அன்னை பாரசீகத்தின் கடைசி மன்னர் யஸ்திஜாதின் மகள் என்று கூறப்படுகிறது.

இறப்புப் படுக்கையில் வைத்து, 'நான் தொழும்போது அணியும் உடையாகிய சட்டை,இஸார், ரிதா ஆகியவற்றாலேயே என்னை கபனிடுங்கள்' என்று கூறிய போது, 'அதிகமாக இரண்டு ஆடைகளை நாங்கள் சேர்த்துக்  கொள்ளக் கூடாதா? என்று இவர்களின் பெண்மக்கள் வினவிய போது, ' இவ்வாறே அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கஃபனிட்டார்கள். இறந்தோரை விட உயிருள்ளவருக்கே அதிக துணி வேண்டும்' என்றனர். இவர்கள் தம் 72 ம் வயதில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள குதைதில் ஹிஜ்ரி 101 ல் மறைந்தார்கள்.