காத்தான்குடி அப்துர் ரஊப் மௌலவி ஷெய்குனா அவர்களுக்கு செய்த மாறுபாடுகள்:

காத்தான்குடி அப்துர் ரஊப் மௌலவி ஷெய்குனா அவர்களுக்கு செய்த மாறுபாடுகள்:

By Sufi Manzil 0 Comment December 25, 2011

Print Friendly, PDF & Email

இலங்கை நாட்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மார்க்கக் கோட்படுகளைப் பின்பற்றி இறைஞான மகான்களாகத் திகழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. மேலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து ஞானங்களை மக்களுக்குப் போதித்து இஸ்லாமிய தர்பியத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் ஷெய்குமார்கள், தங்கள்மார்கள் என்றால் அது மிகையாகாது.

இலங்கையில் தோன்றிய ஞான மகான்களில் 'அஸ்ராருல் ஆலம்' எழுதிய சித்தி லெவ்வை, அட்டாளச் சேனை வெள்ளி மீரான் ஸூபி ஹஜ்ரத் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வாறே இந்தியாவிலிருந்து வருகை தந்து காதிரிய்யா தரீகை இலங்கைக்குப் பரவச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தென்னிந்தியா காயல்பட்டணம் நகரைச் சார்ந்த அஷ்ஷெய்குல் காமில ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆவார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கொழும்பு குப்பியாவத்தையில் அமைந்துள்ளது. வருடந்தோறும் சிறப்பாக கந்தூரி ரமலான் பிறை 24 அன்று அன்னார் மறைந்த தினத்தில் நடைபெற்று வருகிறது.

அன்னார் இலங்கை வந்து தரீகை பரப்பியதோடு மட்டுமில்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்டவும் அயராது பாடு;பட்டனர். அவர்களிடம் பைஅத் பெற்று ஜெயம் பெற்றோர் ஏராளம். ஏராளம். அவர்களிடம் பைஅத்தையும் வாங்கிவிட்டு அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மறுப்பாகவும், எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இலங்கை காத்தான்குடியைச் சார்;ந்த மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி மற்றும் அவரது மச்சான் மௌலவி பாறூக் பலாஹி ஆகியோர்.

இந்த இருவரும் ஷெய்குக்கு எவ்விதம் மாற்றம் செய்து கேடு கெட்டனர் என்பதையும், குருத்துரோகம் செய்து இஸ்லாமியக் கொள்கைக்கு மாறுபட்டனர் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

மௌலவி அப்துர் ரஊப் எழுதிய 'ஹமவோஸ்த்' என்ற நூலை 1-6-1987 அன்று வெளியிட்டார். அதில் என்னுரை என்பதில் ஞானம் என்பது தனக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு கூட தெரியவில்லை, தனக்கு மட்டும்தான் தெரியும் என்று 'நான்' என்ற மமதை கொண்டு எழுதியிருக்கிறார். இந்த 'நான்' என்ற மமதைதான் அவரை நாசப்படுத்தியது, ஞானத்தை தவறாகப் புரிந்து போதிக்கத் தூண்டியது.

இந்த நூலில் இவரின் தவறான கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்று ஒரு பட்டியலை பக்கம் 96 ல் வெளியிட்டுள்ளார். அதில் முதலாவதாக தனது மச்சான் மௌலவி பாறூக் ஆலிம் அவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஷெய்குனா மறைவிற்குப் பின்னும் பாறூக்கும் இவரின் குப்ரு வலையில் வீழ்ந்துதான் கிடந்தார் என்பது இதன்மூலம் ஆதாரப்பூர்வமாக தெரியவருகிறது.

மௌலவி அப்துர் ரஊப் போதித்த கொள்கைதான், ஞானம்தான் என்ன?

கடந்த 1979 பிப்ரவரி 11 அன்று காத்தான்குடியில் மார்க்கட் சதுக்கத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் ரஊப் மௌலவி உரையாற்றும்போது,

1.    அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்றும், இல்லையென்றும் நம்ப வேண்டும்
2.    மனிதர்களை நல்வழிப் படுத்துவதற்காக அல்லாஹ்தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருதுவத்தில் (உடையில்) வந்தான்.
3.    வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 'வஹீ' எனப்படும் இறைத்தூது கொண்டு வந்த சமயம் ஹிறா மலைக்குகையில் நெற்றியில் கை வைத்துப் படுத்தவர்களாக சாய்ந்து கொண்டிருந்த நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனைக் கண்டார்கள்.

இப்பேச்சைக் கண்ட, கேட்ட இலங்கை ஜம்இய்யத்து உலமாசபை இக்கருத்தைக் கூறிய அப்துர்ரஊப் மௌலவியும் அவரை சரிகாண்பவர்களும் முர்தத்-மதம் மாறியவர்கள் என்று பத்வா வழங்கினார்கள்.
 

   
இவ்வாறு இலங்கை ஜம்இய்யத்து உலமா சபையினரால் முர்தத் பத்வா கொடுக்கப்பட்ட ரஊப் மௌலவி செய்வதறியாது திகைத்தார். அதிலிருந்து தப்பிக்க வழி தேடினார். எனவே தனது ஆன்மீகக் குருவான ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்களுக்கு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடினார். அவர் எழுதிய கடிதத்தின் நகல் இதோ:

 

தம்முடைய பிள்ளைகளை வழிகேட்டிலிருந்தும், சறுகல்களிலிருந்தும் காப்பாற்றுவது காமிலான ஷெய்குமார்களின் கடமையாக அல்லவா இருக்கிறது?! தமது முரீதின் தவறான பேச்சுக்கு அவர் கொடுத்த விளக்கத்தைப் பார்த்து நம்பி, ஜம்இய்யத்துல் உலமா சபை கொடுத்த பத்வா ஆதாரமற்றது, வீண்பழி; சுமத்துவது, காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று ஆணித்தரமான ஆதாரங்களை வைத்து ஷெய்குனா அவர்கள் வெளியிட்ட மறுப்பு அறிக்கை நோட்டீஸாக வந்தது. அதன் பிரதி இதோ:

 
இதன்பின் உலமாசபையினா வாயடைத்துப் போயினர். தமது தவறான பத்வாவைக் கண்டு செய்வதறியாது திகைத்தனர். இத்துடன் இப்பிரச்சனை சரியாக்கப்பட்டது. ஷெய்குனா அவர்கள் தமது  முரீது ரஊப் மௌலவியை சறுகுதலகளிலிருந்து காப்பாற்றி விட்டார்கள். அதன்பிறகு இதுபற்றிய விஷயங்களை பேசக்கூடாது என்று ரஊப் மௌலவிக்கு உத்திரவும் இட்டனர். அதை சரி என்று ஏற்றுக் கொண்ட ரஊப் மௌலவி அந்த வாக்குப்படி நடந்திருக்க வேண்டும்;. அதுதான் உண்மையான முரீதிற்கு அடையாளமாக இருக்கவும் முடியும். ஆனால் இந்த மௌலவி செய்தது என்ன? திரும்பவும் இதுபற்றிய விசயங்களைப் பேசி ஷெய்குனாவின் உத்திரவிற்கு மாற்றமாக நடக்க ஆரம்பித்து வழிகேட்டில் விழ ஆரம்பித்தார் ரஊப் மௌலவி. இதனால் மனம் சஞ்சலமடைந்த ஷெய்குனா அவர்கள் ரஊப் மௌலவியைக் கண்டித்தார்கள். ஆனால் அவர் அதைக் கேட்டபாடில்லை.

அதன்பிறகு தமது முரீதுகளிடம் குப்ரு, ஷிர்க்கைப் பேசித்திரியும் ரஊப் மௌலவியிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள். அவரின் குருத்துரோகத்தால், ஷெய்குக்கு மாற்றமான செயலால் அவர் வாங்கிய பைஅத்தும் முறிந்து போவது இயற்கையே! ஷெய்குனா அவர்கள் ரஊப் மௌலவியிடம் தொடர்பு கொள்ள கூடாது என்று எழுதிய கடிதத்தின் நகல்கள் இதோ:
     

                                           15-6-1982
பேரன்பிற்குரிய ஜெயினுல் ஆப்தீன் ஹாஜியார் அவர்களுக்கு

அல்லாஹ் அருள் புரிவானாக!;

'………………………… உங்களுடைய 12-6-82 தபால் பார்த்து, எனக்குப் பெரும் கவலையானது. பாறூக் மவ்லவி உங்களிடம் வந்து ரஊப் மௌலவி நோன்புக்கு இந்தியா போகிறதாம். நோன்பு ஒரு மாதமும் அவருடைய பத்ரிய்யா ஜும்ஆ பள்ளியில் ஹதீது  சொல்லும்படி சொன்னதாகவும், 2-3 ஆயிரம் தருகிறதாகவும் சொன்னார்' என்றும், 'அது தனக்கு விருப்பம் போலவும் பலமுறையும் கதைத்தார். நமது தகப்பனார் செய்கு வாப்பாவிடம் கேட்டு, உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். அவர் சொல்வது போல் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது, உருவம் இல்லை என்றும், இன்னும் அவருடைய கொள்கைகளையும், அப்துல்லாஹ் பயில்வானுடைய கொள்கைகளையும் பேசக் கூடாது. தரீகத்துப் பற்றியும், தொழுகைநோன்பு பற்றியும்தான் சொல்ல வேண்டும் என்றும் சொன்னேன். அப்படி என்றால், எனக்கும் விருப்பம்தான் என்று சொன்னேன். அப்படி நான் சொல்லக் கூடிய சூழ்நிலை, அவருடைய விருப்பத்தில் நின்றும் எனக்கு விள ங்கினது. அதற்காக வேண்டி வாப்பாவிடமும் கேட்டு செய்யுங்கள் என்று சொன்னேன். கூடிய மறுப்புத் தெரிவிக்க, அவர்முன் எனக்கு சூழ்நிலை இல்லை. அப்படி அவர் பதுரிய்யாவில் ஹதீது சொன்னால் நமக்கு நல்லது இல்லை. நமது பிள்ளைகளுக்கும் மன வெறுப்புத்தான். தாங்கள் சொல்லி நிற்பாட்டிவிட்டால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பாறூக் மௌலவியை கண்டிப்பாக நான் தடுக்க மாட்டேன், அவருடைய வி;ருப்பம் இருக்கிறபடியால் தாங்கள் சொல்வது போல் நான் நடக்க, எனக்கு நல்ல விருப்பம். நான் அதை தடுக்க மாட்டேன் 'என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

றஊப் மவுலவியுடன் நமக்கென்ன வருத்தம்? அவருடைய வேண்டுதலின் பேரில், அவரைக் காப்பாற்றினோம். அந்த உபகாரத்திற்கு நன்றி செய்வதற்காகவோ என்னவோதான், அவர் குப்று, ஷிர்க் சகதியை எல்லோருக்கும் தெரியும்படி தன் முகத்தில் பூசிக் கொண்டு இருக்கிறார். அல்லாஹுக்கு உருவம் இருக்கிறது என்று துணிந்து சொல்கிறார். அல்லாஹுக்கு உருவம் இருக்கிறது என்றும் நம்ப வேண்டும் உருவம் இல்லை என்றும் நம்ப வேண்டும் என்று ஓயாமல் பிரசாரமும் செய்கிறார். தான் பாவித்து வந்த போதையை மேலும் மேலும் துணிச்சலோடு அதிகமாகப் பாவித்துக் கொண்டே போகிறார்.

எல்லா மக்களுடைய ஜும்ஆ தொழுகையையும் பழுதாக்குகிறதற்காக வேண்டி, வேறொரு ஜும்ஆவையும் நடத்துகிறார்.

தான் செய்கிற தவறான போக்கை, தவறென்று உணராமல் தான் செய்வதுதான் சரி என்று, துணிச்சலாக மார்க்கத்தில் விளையாடுகிறார்.

இதனால்தான் நாம் அவரை வெறுக்கிறோம். வேறெந்தக் காரணத்திற்காகவுமில்லை! இது எங்களுடைய கடமை! அவருடன் ஒத்துழைத்தால் மார்க்கத்தை தகர்த்துப் போட உதவி செய்ததாகும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

றஊப் பவுலவிக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்க மாட்டேன் அவருடைய கூட்டங்களிலும் பேச மாட்டேன் என்று, பாறூக் மவுலவி என்னிடம் வாக்குறுதி கொடுத்த பிறகுதான், பாறூக் மவுலவியை தரீகில் சேர்த்தேன். அவர் மார்க்கத்திற்குச் சேவை செய்வார், கெட்ட கொள்கைகளுக்கு மறுப்புக் கொடுத்து, நம் ஸுன்னத் ஜமாஅத்து கொள்கைகளைப் படித்துக் கொடுத்து மக்களை நேரான வழிக்குக் கொண்டு வருவார் என்றுதான் சூபிமன்ஜிலில் மத்றஸா ஆரம்பித்து, அவரை ஓதிக் கொடுக்க வைத்தோம். 2, 3 ஆயிரம் கொடுக்கிறதாக சொன்னதற்காக இவர் விரும்புகிறதானால், இவருக்கு மார்க்கப் பற்றும் பக்தியும் என்ன இருக்கும்? இவரை நம்பி, எப்படி மத்ரஸாவை நடத்துகிறது?

பாறூக் மவுலவி, உங்களிடம் சொன்ன இந்த விசயத்தைப் பார்த்ததும் என் மனம் சோர்வடைந்து விட்டது. நம் பிள்ளைகள் எல்லோருடைய மனமும், சோர்வடைந்து விடும். அவர் பேரிலிருந்த பற்றுதல் அறுந்து விட்டது. 2, 3 ஆயிரத்திற்காக மார்க்கத்திற்கு முரணாக உதவப் போகிறாரே? கொஞ்சம் ரோஷமாவது இருந்தால், தனக்கு இம்சை கொடுத்து, அவமரியாதைப் படுத்தி விரட்டிவிட்டவருடன் மனம் ஒப்பி பேசத்தானும் செய்யலாமா? பாறூக் அப்படிப் போனால், அவருக்கு தீனுக்கும், துன்யாவுக்கம் கஷ்டமாகத்தான் முடியும்.

ஹாஜியார், நீங்கள் ஏ ன் அப்படியானால் எனக்கும் பிரியம்தான் என்று சொல்ல வேண்டும்? எப்படிச் சேர்ந்தாலும் அவருக்கு ஒத்துழைப்புத்தானே! மார்;க்கத்திற்கு முரணான பிரசாரத்திற்கு ஒத்துழைப்பது சரியா? 'என்னுடைய அபிப்பிராயம் அவருடன் எவ்விதத்திலும் ஒத்துழைக்கக் கூடாது. உங்கள் விருப்பம்போல் நீங்கள் எப்படியும் செய்யுங்கள் என்று ஒரே வார்த்தையாகச் சொல்ல வேண்டியதுதானே!

'சேர்ந்து இன்னின்னபடி செய்து கொள்' என்று சொல்லாமல் 'என்னுடைய அபிப்பிராயம் நீ சேரக் கூடாது. உமக்கு சேரவேண்டும் என்று அபிப்பிராயம் இருந்தால் சேர்ந்து கொள்ளும்' என்று துணிந்து சொல்லிவிட்டால் நமக்கென்ன கஷ்டம் வந்துவிடும்?

'அப்படி அவர் பதுரிய்யாவில் ஹதீது சொன்னால் நமக்கு நல்லதில்லை. நம்பிள்ளைகளுக்கும் மன வெறுப்புத்தான். தாங்கள் சொல்லி நிறுத்திவிட்டால், எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்' என்று எழுதியிருந்தீர்கள்.

அவர், உங்களிடம் வந்து சொன்னதுபோல், என்னிடம் வந்து சொல்லவில்லையே? தபால் எழுதியாவது கேட்கவுமில்லையே! அவர் சிறுபிள்ளையா? இதுவும் தெரியாதா? தன்னை மரியாதையில்லாமல் வெளியே துரத்திவிட்டவரிடத்திலேயா போவது என்று. ரோசத்தையும் பொருட்படுத்தாமல் 2,3 ஆயிரம் பணத்திற்காக வேண்டி, தனக்காக வேண்டி ஒரு மத்ரஸாவை உண்டாக்கி, தனக்குப் புகலிடம் அமைத்துக் கொடுத்த மக்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று றஊப்புடன் சேரப்போகிறவரை நான் போகாதே என்று தடுத்து தபால்….


தபால் எண் 2.

30-6-1982

அன்பிற்குரிய ஜெயினுல் ஆபிதீன் ஹாஜியார் அவர்களுக்கு,
அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

பாறூக் மௌலவியை றஊப் மவுலவி அவருடைய மதரஸாவை விட்டும் துரத்திவிட்டபின், பாறூக்குக்கு எங்குமே ஓதிக் கொடுக்க இடம் கிடைக்காமலும், ரஊபுக்கு விரோதமானவர்கள் 'பாறூக் கெட்ட கொள்கைக் காரர்' என்று லிபிய அரசாங்கத்திற்கு பெற்றிசன் போட்டதனால், லிபிய அரசாங்கத்திலும் வேலைவாய்ப்பு இல்லாமலும், பாறூக் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில்,-

அவருக்காகவே, அவரே ஓதிக் கொடுக்க வேண்டுமென்று அவருடைய சம்மதத்தின் பேரில்தான் நம் மத்ரஸாவை ஆரம்பித்தோம்.

மத்றஸா நன்றாக நடந்து கொண்டிருக்கும்போது, மத்றஸா நடக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணமோ, அல்லது பாறூக்கை வேலையில்லாமல் கஷ்டப்பட வைக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலோ றஊப் பாறூக்குக்கு முன் நடந்தவற்றை எல்லாம் மறந்து விட வேண்டும். என் மத்ரஸாவுக்கு வா. கூடுதலான சம்பளம் தருகிறேன் என்று பலமுறை தபால் எழுதியும், நேரில் கண்டும் ஆசை வார்த்தை சொன்னார்.

கடைசியாக 'றமலானில் ஹதீது சொல் 4000 தருகிறோம்' என்று ஆசையூட்டினார். பாறூக்கும் அதில் மருண்ட மாதிரி உங்களிடமும் சொன்னதாக நீங்கள் தபால் எழுதியிருந்தீர்கள். பாறூக் எனக்கும் தபால எழுதினார்.

நீங்கள் எனக்கு எழுதிய தபாலுக்கு நான் பதில் எழுதி, அதை பாறு{க்கிடம் காட்டும்படி எழுதியிருந்தேன். நீங்கள் 17-6-82 இல் எழுதிய தபாலில், 'நீங்கள் எழுதிய தபாலை பாறூக் மௌலவியிடம் காட்டியதும், றஊப் மவுலவிக்கு நான் உங்களுடைய பள்ளியில் ஹதீது சொல்ல மாட்டேன் என்று கடிதம் கொடுத்து விட்டதாகவும் என்குக் கடிதம் எழுதினதாக சொன்னார் என்றும் எழுதியிருந்தீர்கள்.

பாறூக் மன்னிப்புத் தேடி எனக்கு எழுதின தபாலில் 'வாப்பா அவர்களே, றஊபின் மீது கொண்ட அன்பினாலும் நான் ஹதீது சொல்ல முனையவில்லை. பணத்திற்காகவும் நான் விரும்பவில்லை. எனக்குத் தங்களைவிட பணம் பெரிதல்ல. எனது உயிரினும் மேலாக உங்களை மதிக்கிறேன். என்மீது தங்களுக்கிருந்த பாசம் போய்விட்டதாக எழுதியிருந்ததைப் பார்த்தபோது எனக்கு உணவு இறங்கவில்லை. றஊபை தீனுக்காகவே நாம் வெறுக்கிறோம். மடத்தனமாக இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதால், நான் மிகவும் மனவருத்தம் அடைகிறேன்.

'தங்களின் கடிதம் பார்த்தவுடன் உடனடியாக பத்ரிய்யா கமிற்றியாருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன். றமழானில் ஹதீது சொல்வதற்கு நான் விரும்பவில்லை. எனக்கும் பத்றிய்யாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அறிவித்துவிட்டேன்.

தேவரீர் வாப்பா அவர்களே இந்த விடயத்தால் எனது குடும்பத்தினர்களை பகைத்து விட்டேன். பரவாயில்லை. எனக்கு உங்கள் பொருத்தமே பெரிது. எனக்காக உங்கள் மனம் நொந்து விட்டது. இந்தப் பாவியை மன்னியுங்கள். கண்ணீர் சிந்தியவனாக இந்தக் கடிதம் வரைகிறேன். உங்கள் இரு பாதங்களையும் தலையில் வைத்து கேட்கிறேன். என்மீது ஏற்பட்ட மனக்கசப்பை நீக்கி விடுங்கள். இனிமேலும் இப்படியான தவறு நடைபெறாமலிருக்க துஆ செய்யுங்கள்' என்று எழுதியிருந்தார்.

அவர் எழுதியதுபோல் பத்திய்யாகாரர்களுக்கு கடிதம் எழுதியிருபார். பின்னர் மத்றஸா வசூலுக்காக நம்பிள்ளைகளுடன் இங்கு வந்தார்கள். 10 ஆயிரம் மட்டில் வசூல் என்'றும் சொல்லிவிட்டு நோன்புக்கு முன் ஊர் போய்விட்டார்கள்.

பின்னர், நோன்பு 2 மட்டில் பாறூக் வந்தார். 'பதுரிய்யாவில் ஹதீது சொல்லுங்கள். அவர்களைப் பகைக்கக் கூடாது என்று வாப்பா, உம்மா என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். இரவெல்லாம் இப்படியே நிர்பந்தப்படுத்திச் சொன்னார்கள். நான் வாப்பா அவர்களிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்று வந்து விட்டேன்' என்று கலவையாகவும், மனம் தத்தளித்தவராகவும் சொன்னார். அவருக்கு நல்லபடி தேறுதல் சொல்லி, பத்றியாகாரருடைய வலையில் சிக்கிவிடாதீர்கள். அங்கு போகாதீர்கள். வீட்டில் தொந்தரவு செய்கிறதாயிருந்தால், கொழும்புக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இங்கு வாருங்கள். நோன்பில் இங்கு நின்றுவிட்டு, நோன்பு கழித்து ஊர் போகலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அவருடைய நிலை என்ன? தெரியவில்லை. அவர் பத்ரிய்யாவில் சேர்ந்து விட்டாரா, இல்லையா? விபரம் எழுதுங்கள். துஆ சலாம்.
                                                                         ……………………….

இச்சமயத்தில் மௌலவி பாறூக் அவர்கள் ஷெய்குனா அவர்களிடம் பைஅத்து பெற்றுக் கொண்டார். ஷெய்குனா அவர்கள் பைஅத்து கொடுக்கும்போதே ரஊப் மௌலவியிடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று வாக்குறுதியடன் கூடிய பைஅத்து கொடுத்தனர். இந்நிலையில் ஷெய்குனா அவர்களுக்கு பாறூக் மௌலவி கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தின் நகல்கள் இதோ:

பாறூக் மவுலவி ஷெய்குனா அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள்:
கடித எண்: 1

……………………………………………………………….
……………………………………………………………….
நேற்று 15ம் திகதி செவ்வாய் கிழமைத மத்ரசாவுக்கு லீவு வழங்கினோம். பத்ரிய்யா கமிட்டியினரும் அதைச் சார்ந்த எனது குடும்பத்தினர்களில் சிலரும் என்னிடம் வந்து எதிர்வரும் றமழானில் பகலில் பத்ரியாவில் ஹதீது சொல்ல வேண்டுமென்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். றவூபு மௌலவி இந்தியா செல்வதாகவும் சொன்னார்கள். புஹாரி மஜ்லிஸும் ஜும்ஆவும் பிரச்சனை சம்பந்தமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாக இருப்பதால் அதில் நீங்கள் கலந்து கொள்ளாததை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆயினும் றமழானில் ஹதீது சொல்லும் நிகழ்ச்சி 35 வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட விஷயம். அதற்கும் பிரடச்சினைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே நீங்கள் கல்வி படித்த பத்ரிய்யா தைக்காவை புறக்கணிக்காமல் கட்டாயம் ஹதீது சொல்ல வேண்டுமென்று என்னை பிடிக்கிறார்கள். றவூபுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவர் இந்தியா சென்று விடுவார். நாங்கள் 4000 ரூபாய் தருவோம் என்றும் வாக்களிக்கிறார்கள். எனது சூழலைப் பொறுத்தவரையில் எனக்கு பெரும் தர்ம சங்கடமாக இருக்கிறது. நமது பிள்ளைகளில் சிலர் இதை விரும்புவதாக தெரியவில்லை. மறுத்தால் எனது வீட்டுச் சூழலில் உள்ளவர்கள் என்னை வெறுக்கும் நிலையும் இருக்கிறது. எனவே தேவரீர் வாப்பா அவர்கள் கடிதம் கிடைத்ததும் தயவு செய்து உடனடியாக இதற்குரிய முடிவு எப்படி சொல்வது என்பதை எனக்கு எனது வீட்டு விலாசத்திற்கு அறிவிக்கவும். வெள்ளி மாலை கடிதம் கிடைக்கும் வகையில் அனுப்பினால் மிக நல்லது. அன்ஸா அல்லாஹ் சனி காலை இங்கிருந்து மத்ரசா வசூலுக்காக புறப்பட்டு பதுளை சென்று திங்கட்கிழமை கொழும்புக்கு வருவதாக முடிவு செய்துள்ளார்கள். திங்கள் காலை நானும் ளு.மு. ஹாஜியார் அவர்களும் ஹபீபா ஹாஜியாருடைய மகனும் கொழும்பு வருவோம். வாப்பா அவர்களின் பதிலை எதிர்பார்த்து முடிக்கிறேன்.
……………….

கடித எண்: 2
                                      17-6-1982
…………….
தேவரீர் வாப்பா அவர்களே! நான் உங்களின் சொல்படியே நடந்து கொண்டிருப்பவன். நீங்கள் தடுப்பவைகளை விலக்கி நடப்பவன். உங்களின் திருப்பொருத்தம் கிடைக்கவே ஹித்மத் செய்யும் உங்களின் அடிமை. இன்று ஹபீபா ஹாஜியார் அவர்களுக்கு தாங்கள் அனுப்பியிருந்த கடிதத்தைப் பார்வையிட்டபோது எனது உடம்பு பயத்தால் நடிங்கிவிட்டது. உங்களின் மனதுக்கு கவலையை பாவியாகிய நான் ஏற்படுத்திவிட்டேனே என நான் மிகவும் கவலையடைகிறேன். என்னை முதலாவது மன்னிக்கும்படி தங்களிடம் வேண்டுகிறேன். பத்ரிய்யா கமிட்டியினர் என்னிடம் றமழானில் ஹதீது சொல்வதர்க்கு அழைத்தபோது தாங்களிடம் கேட்டு தங்களின் விருப்பப்படியே நடப்பதாக அவர்களுக்கு கூறினேன். தங்களிடம் வசூலுக்காக கொழும்பு வரும்போது கேட்கலாம் என நான் நினைத்து இருந்தேன். (16) ம் தேதி புதன் வசூலுக்குப் பிறப்படுவதாக முடிவு செய்திருந்தார்கள். இதனால்தான் கடிதமூலம் தங்களிடம் உத்தரவு கேட்காமல் நேரடியாகவே கேட்கலாம் என எண்ணியிருந்தேன். இதற்கிடையில் ஹபீபா ஹாஜியாரை சந்தித்து செய்தியை கூறினேன். அவரும் நமது கொள்கையை பேசலாம், வாப்பா அவர்களிடம் கேட்டு செய்யுங்கள் என்றார். நான் வாப்பா அவர்களிடம் கேட்காமல் முடிவு சொல்ல மாட்டேன். வாப்பா அவர்களிடம் கேட்டுத்தான் முடிவு சொல்வேன் என்று கூறினேன். நான் புதன் கொழும்பு வந்து கேட்கலாம் என்றிருந்தேன். (16) நேற்று சனிக்கிழமை (19)ல் வசூலலுக்குப் போவதாக முடிவு செய்தார்கள். உடனே வாப்பா அவர்களுக்கு நேற்று ஒரு கடிதம் போட்டேன். வாப்பா அவர்களே! றவூபு அவனின் மீது கொண்ட அன்பினால் ஹதீது சொல்ல நான் முனையவில்லை. நமது கொள்கையை பேசலாம் என்ற எண்ணத்திலேயேதான் ஹதீது சொல்ல மனம் விரும்பினேன். முடிவு செய்யவில்லை. பணத்திற்காகவும் நான் விரும்பவில்லை. எனக்கு தங்களைவிட பணம் பெரிதல்ல. எனது உயிரிலும் மேலாக உங்களை மதிக்கிறேன். என்மீது தாங்களுக்கு இருந்த பாசம் போய்விட்டதாக எழுதியிருந்ததைப் பார்த்த போது எனக்கு உணவு கூட இன்று இறங்கவில்லை. றவூபை நாம் வெறுக்கிறோம். மடத்தனமாக இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதால் நான் மிகவும் மனவருத்தம் அடைந்தேன். எனது சூழலில் வாழ்பவர்களின் கரச்சலை பொறுத்தே நான் விரும்பினேன். தங்களின் கடிதம் பார்த்தவுடன் உடனடியாக நான் பத்ரிய்யா கமிட்டியினருக்கு கடிதம் அனுப்பி விட்டேன். றமழானில் ஹதீது சொல்வதற்கு நான் விரும்பவில்லை எனவும், எனக்கும் பத்ரிய்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்து விட்டேன். எனவே தேவரீர் வாப்பா அவர்களே! இந்த விடயத்தால் எனது குடும்பத்தினர்களை பகைத்துவிட்டேன். பறவாயில்லை. எனக்கு உங்கள் பொருத்தமே பெரிது. எனக்காக உங்கள் மனம் நொந்து விட்டது. இந்தப் பாவியை மன்னியுங்கள். நான் நேரில் சந்திப்பதை முன்வைத்தே கடிமூலம் ஏற்கனே கேட்கவில்லை. இதையும் மன்னிக்கவும். எனது ஹக்கில் துஆ செய்யுங்கள். கண்ணீர் சிந்தியவனாக இக்கடிதம் வரைகிறேன். உங்கள் இரு பாதங்களையும் தலையில் வைத்து கேட்கிறேன். என்மீது ஏற்பட்ட மனக்கசப்பை நீக்கி விடுங்கள். இனிமேலும் இப்படியான தவறு ஏற்படாமலிருக்க துஆ செய்யுங்கள். உங்களை இன்ஷாஅல்லாஹ் திங்கட்கிழமை சந்தித்து காலில் விழுந்த பிறகுதான் நான் நிம்மதி அடைவேன். இன்ஷாஅல்லாஹ் தங்களை திங்கட்கிழமை சந்திக்கிறேன்.

……………………………
…………………………….
……………………………
என்று வேண்டி முடிக்கிறேன்.
…………………….
முகம்மது பாறுக்
கா-குடி.

இதற்கு ஷெய்குனா அவர்கள் ஏற்கனவே ஜெய்னுல் ஆபிதீன் ஹாஜியார் அவர்கள் மூலமாக பதில் சொல்லிவிட்டார்கள்.  தன் ஷெய்கை மதித்து அவர்களின் வாக்குறுiதியக் காப்பாறுபவர் என்றால்  உண்மையில் அவர் இதை எழுதிக் கேட்டிருக்கவே கூடாது. ஏனெனில் ஷெய்கு அவர்கள்தான் ரஊபிடம் தொடர்பு வைக்க கூடாது என்று வாக்குறுதி வாங்கியுள்ளார்களே! அதன்பிறகு இவர் ஏன் இதைப் பற்றி எழுதிக் கேட்க வேண்டும்.

ஷெய்குனா அவர்களின் வபாத்திற்கு பின்பும் அவர் ஷெய்குவின் கட்டளைக்கு மாற்றமாக நடந்து கொண்டு ரஊப் மௌலவியிடம் தொடர்பு கொண்டிருந்தார். அவரின் கூட்டத்தாராகவே பாறூக் மௌலவி ஆகிவிட்டார். இதைப் பற்றி ரஊபும் தன்னுடைய ஹமவோஸ்த் என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நாம் முன்னால் எடுத்துக் காட்டினோம். ஷெய்குனா சொன்ன வாக்கு பிரகாரம் ரஊப் மௌலவிக்கும் பாறூக்கு மௌலவிக்கும் இறுதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இறுதியில் பாறூக்கு மௌலவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். ஷெய்குனாவின் வாக்குப்படி அவரின் இறுதிமுடிவு மோசமாகி போய்விட்டது. அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும். ஷெய்குக்கு கட்டுப்பட்டு நடக்க கூடிய தவ்ஃபீக்கை அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக!

ஷெய்குனா அவர்கள் ரஊப் மௌலவியின் நடவடிக்கையை கண்டித்து தமது முரீதீன்களுக்கு சொல்வதைக் கேள்விபட்ட ரஊப் மௌலவி தாம் தலைவராக இருக்கும் அமைப்பான இஸ்லாமிய மெஞ்ஞான பேரவை மூலம் கொஞ்சம் கூட மரியாதையும், நாகரீகமும் இல்லாமல் தமககு ஞானம் போதித்து தந்த ஞானப் பிதாவுக்கு தரும் மரியாதையை (?)அவர் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 
ஷெய்குனா அவர்களின் வழியை முழுமையாக பின்பற்றிய ஷெய்குனா அவர்களின் கலீபா நாயகம் அல் ஆரிபு பில்லாஹ் ஸெய்யிது ஸாதாத் மௌலவி ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி காதிரி ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் தங்கள் முரீதீன்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் ரஊப் மௌலவி, பாறூக் மௌலவியைப் பற்றி எச்சரித்து வெளியிட்ட நோட்டீஸ் பிரதி:
 

அல்லாஹ் நமது ஷெய்குநாயகத்தின் பொருட்டால் இந்த வழிகேடர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! ஷெய்குவை முழுமையாக பின்பற்றி அவர்களில் பனாவாகி- ரஸூலில் பனாவாகி-இறைவனிடம் பனாவாகும் பாக்கித்தை தந்தருள்வானாக! ஆமீன்.