Imam Moosa Kazim-இமாம் மூஸல் காளிம் ரலியல்லாஹு அன்ஹு.

Imam Moosa Kazim-இமாம் மூஸல் காளிம் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment April 7, 2010

Print Friendly, PDF & Email

இமாம் மூஸல் காளிம் ரலியல்லாஹு அன்ஹு.

ஹிஜ்ரி 128ல் இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களின் மகனாக அண்ணலரின் அன்னை ஆமினா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அடங்கப்பட்டுள்ள அபவா எனுமிடத்தில் ( மற்றொரு கூற்றுப் படி மதீனாவில்) பிறந்தார்கள்.

பணிவு, வணக்கம் ஆகியற்றின் காரணமாக இவர்களுக்கு அப்துஸ்ஸாலிஹ்(நற்பண்புள்ள அடியார்) என்னும் சிறப்புப் பெயரும், சினத்தை அடக்குபவர்களாதலால் அல்காளிம்(சினத்தை அடக்குபவர்) என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது.

  மிகவும் தாராளத்தன்மை வாய்ந்த இவர்கள் தங்களை ஏசியவர்களுக்கு கூட ஆயிரம் தீனாரை அன்பளிப்பாக அனுப்பி வைத்தனர். தீனார்களை பொட்டலங்களாக கட்டி வைத்து தேவையுடையோர்களுக்கு அறம் செய்து வந்தார்கள்.

பலர் அவர்களைக் கலீபாவாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஏராளமான பொருட்களை வழங்கினார்கள். இதனை அறிந்த கலீபா மஹ்தி இவர்களை பக்தாதில் சிறைவைத்தார். ஓரிரவு ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கலீபாவின் கனவில் தோன்றி, 'உமக்கு அதிகாரம் கிடைத்தது தீமை இழைக்கவும், இரத்த தொடர்பை முறிக்கவுமா? என்று வினவி விட்டு மறைந்தார்கள். திடுக்குற்று எழுந்த கலீபா, அவ்விரவே இமாம் அவர்களை வரவழைத்து, 'தமக்கும் தம் மக்களுக்கும் எதிராக புரட்சி செய்வதில்லை என்று வாக்குறுதி வாங்கிவிட்டு அவர்களுக்கு 3000 பொற்காசுகளை அன்பளிப்பாக நல்கி அன்றிரவே மதீனா அனுப்பி வைத்தார்.

பின்னர் அரியணை ஏறிய ஹாரூன் ரஷீதும் அவர்கள் மீது ஐயமுற்று இவர்களை சிறை வைத்தர். ஓர் இரவு கலீபா விபரீத கனவு ஒன்றைக் கண்டதினால், 'அவர்களை சிறையிலிருந்து அழைத்து வருமாறு தம் அரண்மனை ஊழியரை அனுப்பி வைத்தார். அவர் இருளில் சிறைச்சாலை சென்றபோது, இமாம் அவர்களின் முகம் ஒளிமயமாக காட்சியளித்ததைக் கண்டு அதற்கான காரணத்தை வினவ, 'நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஜ வஸல்லம் அவர்களைக் கனில் கண்டேன். அவர்கள், நீ அநியாயமாய் சிறை செய்யப்பட்டுள்ளாய்! நான் கூறும் துஆவை நீ ஓதினால் விடிவதற்குள் விடுதலை செய்யப்படுவாய் என்று கூறி ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்து மறைந்தனர். நானும் அந்த துஆவை ஓதினேன்'என்றார்கள்.

சிறையிலிருந்து விடுதலை பெற்றபின் கலீh ஹாரூன் ரஷீத் 30000 திர்ஹங்கள் இவர்களுக்கு அன்பளிப்பு செய்து, தாங்கள் விரும்பின் சகல வசதியுடனும் எங்களுடன் இருக்கலாம்' என்று கூற, இவர்கள் மதீனா செல்வதையே விரம்ப அவ்விதமே மதீனா சென்று வாழ்ந்தார்கள்.

  37 குழந்தைகளை ஈன்று ஹிஜ்ரி 183 ரஜப் 25ல் பக்தாதில் காலமான அவர்கள் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். கலீபா ஹாரூன் ரஷீது நஞ்சூட்டி கொன்றதாகவும் கூற்று உள்ளது.