Adam Banoori-ஆதம் பனூரி ரலியல்லாஹு அன்ஹு

Adam Banoori-ஆதம் பனூரி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

ஆதம் பனூரி ரலியல்லாஹு அன்ஹு

ஷெய்கு அஹ்மது ஸர்ஹிந்தியின் பிரதம சீடரான இவரின் முழுப்பெயர் முயிஸ்ஸுத்தீன் அபூ அப்துல்லாஹ் ஆதம் இப்னு இஸ்மாயில் என்பதாகும். இவர் பனூர் என்னும் ஊரில் பிறந்ததினால் பனூரி என்று அழைக்கப்பட்டார். மூஸல காழிம் இமாம் வழி வந்தவர். இளமையில் முல்லா தாஹிர் லாகூரியிடம் கல்வி பயின்ற இவர் ஹாஜி கிதுர் ரூஹானி பகவல்பூரி அவர்களிடமும், அவர்களின் ஆலோசனையின் பேரில் அஹ்மது ஸர்ஹந்தியிடமும் தீட்சை பெற்றார்.

இவர்களுக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தனர். ஒருமுறை இவர் பதினாயிரம் மாணவர்களுடன் லாகூருக்கு சென்றபோது, அதைக் கண்டு பொறாமையும், பயமும் கொண்ட ஷாஜஹான் இவர் அங்கு வந்தற்கான காரணத்தை வினவ, அதற்கு இவர் அளித்த பதில் திருப்தியளிக்காததால் இவரை மக்கா செல்ல பணித்தார். அவ்வாறே சென்ற இவர் மதீனாவில் ஹிஜ்ரி 1053 ஷவ்வால் பிறை 13 வெள்ளியன்று (கி.பி. 1643 டிசம்பர் 25) மறைந்து ஜன்னத்துல் பகீயில் ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு வயது 47. அச்சமயத்தில் இவர்களுக்கு நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர்.

ஆண்மீகம் பற்றி 'நிகாத்துல் அஸ்ரார்', குலாஸத்துல் மஆரிப்' என்னும் இரண்டு நூல்களும் ஸூரா பாத்திஹாவிற்கு ஒரு விளக்கவுரையும் எழுதியுள்ளார்கள்.