Abu Salih Quadiri-அபூ முஹம்மது சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு.

Abu Salih Quadiri-அபூ முஹம்மது சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

அபூ முஹம்மது சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு.

  ஹிஜ்ரி 550 ம் ஆண்டு மொராக்கா நாட்டில் பிறந்தார்கள். புனித ஹஜ் சென்ற பிறகு இவர்கள் அலக்ஸாண்ட்ரியாவில் தங்கி 20 ஆண்டுகள் அப்துர்ரஜ்ஜாக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். பின்னர் மொராக்கோ வந்த இவர்கள் மக்களுக்கு அறபோதம் செய்தார்கள். சிறந்த இறைநேசரான அபு மத்யன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் ஆன்மீகக் கல்வி கற்று இப்போது ஸஃபி என்றழைக்கப்படும் ஆஸிஃபியிலுள்ள தவமடத்தில் தங்கி அங்கேயே ஹிஜ்ரி 631 துல்ஹஜ் பிறை25 அன்று மறைந்தார்கள்.

இவர்களின் சிறப்பினைப் பற்றியும், இவரின் அற்புதங்களைப் பற்றியும் இவரின் கொள்ளுப் பேரன் அஹ்மது என்பவர் 'மின்ஹாஜுல் வாதிஹ  ஃபீ தஹ்கீக் கராமத்தி அபீ முஹம்மது ஸாலிஹ்' என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்கள்.