Abdur Razzak Qadiri-அப்துர் ரஜ்ஜாக் காதிரி

Abdur Razzak Qadiri-அப்துர் ரஜ்ஜாக் காதிரி

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

HAZRATH SHEIKH HAFIZ ABDUL RAZZAK QADIRI.

18 th sheikh of QADIRIYA ALIYA  THAREEKA.

        He was born in 528 A.H. like his brothers; he learnt Fiqh and Hadith from his father. He was also Hafiz of Hadith. He was very pious and like his father enjoyed a reputation for truthfulness. He was also known as a great Wali of his time. Inspite of his limited means, he was charitable and kind to the students. He was more inclined towards solitude and would not come out of his closet, except during times for prayers, teaching and such other religious necessities. He possessed the spiritual trend of his father and like him became very popular in Baghdad.

         His soul departed on 7th Shawal at Baghdad in 603 A.H. A large crowed attended his funeral prayers. Which were held also in many other places in Baghdad.

குத்புல் அக்தாபு முகீஸுல் அஹ்பாபு தாஜுல் ஆரிஃபீன் அஷ்-ஷெய்கு தாஜுத்தீன் அஷ்ஷைகு அப்துர் ரஜ்ஜாக் காதிரி ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு.

ஸய்யிதுனா கௌதுனா குத்புல் அக்தாபு கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் 49 பிள்ளைகளில் 3-வது பிள்ளையாக பிறந்தவர்கள்​ ஸய்யிதுனா அஷ்-ஷெய்கு அப்துர் ரஜ்ஜாக் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்கள்.

ஹிஜ்ரி 528 துல்கஅதா பிறை-18 ல் பிறந்தார்கள்.

தனது தந்தை குத்பு நாயகத்திடத்திலேயே அவர்கள் வளர்ந்தார்கள் .
அவர்களிடமே  கல்வியை கற்றுக் கொண்ட போதிலும் அன்று
பகுதாதில் மிகப்பெரிய​ ஆலிம்களாக திகழ்ந்தவர்களிடமும் சென்று கற்றுக் கொண்டார்கள்…

அவர்கள் ஹம்பலி மத்ஹபின் ஃபகீஹாகவும் , முஃப்தியாகவும் , பகுதாதின் காழியாகவும் இருந்தார்கள்…

குர்ஆனை முழுமையாக மனனமிட்ட ஹாஃபிழாகவும் , பல இலட்சம் ஹதீஸுகளை மனனமிட்ட ஹாஃபிழாகவும் இருந்தார்கள்…

குத்பு நாயகத்திடன் மாதரஸாவாகிய அல்-மத்ரஸதுல் பகுதாதிய்யாவை பெரிய அளவிற்கு கொண்டு சென்றார்கள்…

ஸய்யிதுனா அப்துர் ரஜ்ஜாக் நாயகம் அவர்கள் தனது தந்தை குத்பு நாயகத்திற்கு பணிவிடை செய்பவர்களாக இருந்தார்கள்.

குத்பு நாயகத்தின் கடைசி நாட்களில் அவர்களுடன் ஸய்யிதுனா அப்துர் ரஜ்ஜாக் நாயகம் இருந்து​ அவர்களிடம் தான் கண்ட அவர்களின் அந்தஸ்தை பற்றியெல்லாம் ஸய்யிதுனா அப்துர் ரஜ்ஜாக் நாயகம் அவர்கள் மக்களுக்கு கற்றுத் தந்ததை வரலாறு அழகாக எடுத்துரைக்கிறது…

ஸய்யிதுனா அப்துர் ரஜ்ஜாக் நாயகம் அவர்களை பற்றி இமாமுல் அரூஸ் நாயகம் அவர்கள் குறிப்பிடும்போது முகீஸுல் அஹ்பாபு என்ற புனைப்பெயரைக் கொண்டு அழைக்கிறார்கள்…

ஹிஜ்ரி-603 ஷவ்வால் பிறை -7 சனிக்கிழமை இரவில் ஸய்யிதுனா அப்துர் ரஜ்ஜாக் நாயகம் அவர்கள் வஃபாத் ஆனார்கள்…

அவர்களுக்கு அப்போது 73 வயதாக இருந்தது…

ஸய்யிதுனா இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் மக்பராவிற்கு அருகில் இவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்..

அல்லாஹு தஆலா நமது ஸய்யிதுனா அப்துர் ரஜ்ஜாக் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்களின் பொருட்டாலும் ,
எல்லா ஷெய்குமார்களின் பொருட்டினாலும் ஈருலகிலும் வெற்றி அளிப்பானாக !

ஆமீன்….