நபி லூத் அலைஹிஸ்ஸலாம்

நபி லூத் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment March 19, 2015

Print Friendly, PDF & Email

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சகோதரர் ஹாரானின் மகன் என்றும், சகோதரி மகன் என்றும், ஸாரா அம்மையாரின் சகோதரர் என்றும் பல்வேறுவிதமாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிக அன்பு செலுத்தினார்கள். லூத் என்றால் அன்பு கொள்ளுதல் எனப் பொருள்.

இவர்களையும் தங்கள் மனைவி ஸாரா அம்மையாரையும் அழைத்துக் கொண்டே பாபல் நகரை விட்டு சிரியா நோக்கி புறப்பட்டார்கள் இப்றாஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இவர்களை இறைவன் ஜோர்டான் நதி தீரத்திலுள்ள முதஃபகாத் நாட்டிற்கு நபியாக அனுப்பி வைத்தான். இந்நாட்டின் தலைநகராகிய ஸதூமில் 70000 பேர் வாழ்ந்தனர். நான்கு இலட்சம் குடும்பத்தினர் என்று மற்றொரு ரிவாயத் கூறுகிறது. தாம் பிறந்த சமூகத்திற்கன்றி வேறு ஒரு சமூகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள் இவர்கள் ஒருவரே. இவர்கள் அங்கு சென்று ஒரு பெண்ணை மணமுடித்து பெண் மக்களை பெற்று வாழ்ந்தார்கள்.

மேலும் இவர் இவரது சமூகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவுடன் அவர் தனது சமூகத்தை நோக்கி ‘எனது சமூகமே நீங்கள் அல்லாஹு ஒருவனையே வணங்குங்கள் அவனின்  உண்மை தூதராக நான் உங்களிடம் வந்திருக்கிறேன்.  மேலும் நீங்கள் அல்லாஹுவை பயந்துகொள்ளுங்கள், எனக்கும் கீழ்படியுங்கள் என்று கூறினார். மேலும் இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. ஏன்  என்றால் எனது கூலி என்னை படைத்த என் ராப்பிடமே இருக்கிறது’ என்று கூறினார்.

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ

7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”

மேலும் நீங்கள் அல்லா விதித்த வரம்பை கடந்த சமூகமாக இருக்குறீர்கள் என்று.

மேலும் நபி லூத் அலைஹிஸ்ஸலாம்   அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை காம இச்சைக்கு உள்ளாக்குகிறீர்கள். மேலும் நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூகத்தாரவே இருக்குறீர்கள் என்று

இதற்கு அம்மக்கள் லூத்தே நிச்சயம் நீ இவ்வுபதேசத்தை நிறுத்தவில்லை என்றால்  நீர் வெளியேற்றபடுபவராக ஆகிவிடுவீர் .மேலும் அவர்கள் கூறினார்கள்.  நிச்சயமாக   நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இவ்வுரை விட்டு வெளியேற்றி விடுங்கள். ஏன் ஏன்றால் அவர் பரிசுத்தமாக இருக்கவே நாடுகிறார் என்று அந்த மக்களில் சிலர் கூறினார்கள்.  மேலும் நபி லூத் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் நிச்சயமாக நான் நீங்கள் செய்யும் இந்த தீங்கில் இருந்து வெறுத்தவனாகவே   இருக்கிறேன் மேலும் அவர் எனது ரட்சகன் என்னையும் எனது குடும்பத்தார்களையும்  இந்த தீயவர்கள் செய்வதை விட்டும்  அதற்கான   உன்னுடைய தண்டனையில் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று பிராத்தித்தார்.

மேலும் நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மூன்று மகள்களும் அந்த இடத்திலேயே வாழ்ந்து வந்தார்கள். மேலும் அந்த மக்கள் மேலும் மேலும் வரம்பு மீறி அந்த வழியில் பயணம் மேற்கொண்டு வரும் ஆண்களை அவர்கள் வழி மறித்து அவர்களை தங்களது காம இச்சைக்கு ஆட்படுத்தி கொண்டிருந்தார்கள்

இவ்வாறிருக்க அல்லாஹ் தனது மலக்குகளை விட்டு அம்மக்களை அழிக்க உத்தரவு பிறப்பித்தான்.

ஒரு நாள் சோகமே உருவாக லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் தங்களுடைய இல்லத்தில் அமர்ந்திருக்கும் போது வான தூதர்கள் இளைஞர் தோற்றத்தில் அவர்களுடைய இல்லத்திற்கு வருகை தருகிறார்கள் அவர்களிடத்தில் இவர்கள் வரம்பு மீறுவார்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்ததால் அவ்வாறு மலக்குகளை இளைஞர் தோற்றத்தில் அனுப்பி வைத்தான்.

وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ

11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.

அந்த மலக்குமார்கள் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களது இடத்திற்கு வந்தவுடன் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அச்சம் கொள்கிறார்கள். இவர்களை அந்த கயவர்கள் துன்புறுத்தி விடுவார்களோ என்று. மேலும் அவர்கள் நாங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொள்ளலாமா என்றவுடன், லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அந்த மலக்குமார்களை தங்க வைத்து தனது இல்ல கதவை சாத்திவிட்டு அவர்கள் இதனை காணவில்லை என்று அமர்ந்து இந்த மக்களை பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

மேலும் அந்த சமூக கூட்டத்தாருக்கு இவ்வாறு பருவமான வாலிபர்கள் வந்து லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டில் தங்கி இருப்பதாக செய்தி கிடைத்தவுடன் அந்த கூட்டம் அனைவரும் மகிழ்ச்சியால் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இல்லத்தை நோக்கி புறப்பட்டார்கள்.

மேலும் அவர்கள் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களில் இல்லத்தை வந்தடைதவுடன் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்து அஞ்சியவர்களாக இருந்தார்கள். மேலும் அந்த மக்கள் லூதே அந்த வாலிபர்களை வெளியில் கொண்டுவாரும்  என்று கூறினார்கள். அதற்கு நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனது விருந்தினர்களான இவர்களை கேவலபடுத்த நினைக்காதீர்கள்.

وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ ۚ قَالَ يَا قَوْمِ هَٰؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ  ۖ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي  ۖ أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ

11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.

அதற்கு அம்மக்கள்  உங்களுடைய பெண்மக்கள் எங்களுக்கு எவ்வித தேவையும் இல்லை என்று நாங்கள் விரும்புவதை நீங்கள் நன்கறிவீர் என்று கூறினார்கள். அவ்வாறு கூற லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு உங்களை எதிர்க்க சக்தி இருந்திருப்பின் உங்களை நிச்சயமாக வேதனைக்கு உள்ளாகி இருப்பேன்   என்று கூறினார்.

அதனை செவி ஏற்ற அந்த மலக்குமார்கள் ‘நபி லூதே நாங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வந்த மலக்குகள். நீர் அஞ்ச வேண்டாம். நிச்சயமாக இவர்கள் உன்னை வந்தடைய முடியாது. மேலும் நீரும் உனது குடும்பத்தார்களும் உனது மனைவியை தவிர அனைவரும் இன்றைய இரவில் நீங்கள் இந்த இடத்தை விட்டு நீங்கி சென்றுவிடுங்கள். இவர்களது அழிவு நேரம் நிச்சயமாக விடியற்காலையாகும். என்றும் கூறினார்கள்.

அவர்களில் ஒருவன் வன்முறையால் அந்த இளவல்களில் அழகுமிக்கவரை கைப்பற்ற முயன்றார். அப்பொழுது அவ்விளவல் தம் மூச்சை அவர்மீது ஊத அவரது கண் குருடாகியது. இதுகண்ட அவர்கள் நீர் சூனியக்காரர்களை உம் இல்லத்தில் விருந்தினராய் வைத்துள்ளீர். எனவே, நீரும் உம்முடைய குடும்பத்தினரும் இவ்வூரை விட்டும் புறப்பட்டு விட வேண்டும். இல்லையேல் உம் கண்களையும் குருடாக்கி விடுவோம்’ என்று கூறினார்கள்.

அப்பொழுதுதான் அவ்விளவல்கள் நாம் இவ்வூரை அழித்தொழிக்க இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்கள் என்றும் உடனே லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவரது குடும்பத்தினர்களும் அவ்வூரை விட்டும் அகல வேண்டும் என்றும் செல்லும்போது எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்க கூடாது என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் செல்லும்போது நபி அவர்களின் மனைவி என் இனத்தவரே! என் இனத்தவரே! என்று கூறி திரும்பிப்பார்த்ததினால் கல்லானாள்.

அல்லாஹ் மறுநாள் விடியலில்   அந்த மக்கள் எழுந்தவுடன் அல்லாஹ் கூறுகிறான் தந்து திருகுரானில் நம்முடைய கட்டளையான காலை வந்தவுடன் அவர்களது  ஊரில் ஒரு பெரிய இடிமுழக்கத்தை கொடுத்தோம். அவ்வாறே அவர்களது ஊரை மேல்புறத்தை கீழ்புறமாகவும் கீழ்புறத்தை மேல்புறமாகவும் தலைகீழாக மாற்றினோம். பிறகு செங்கற்களை மழைபோல் பொழிய செய்து அவர்களை அழித்தோம்  என்கிறான்.

Add Comment

Your email address will not be published.