நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்

நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயதாகியும் குழந்தை அல்லாஹ் அருளாதாதால் மிகவும் வேதனையுற்றார்கள். மேலும் சாரா அம்மையாருக்கும் இத்தகைய வருத்தம் உண்டு. ஒரு நாள் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுவிடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் எனக்கு வாரிசுகளை கொடுப்பாயாக! என்று மனம் வருந்தி துஆ செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சாரா அம்மையார் அவர்களை கண்டு மனம் வருந்தி அவர்களின் அடிமை பெண்ணான அன்னை ஹாஜரா அம்மையாரை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து நபியே! என்னை அல்லாஹ் மலடாக்கிவிட்டான் என்பதுபோல் தெரிகிறது. ஆதலால் இந்த பெண்ணின் மூலம் நீங்கள் குழந்தை பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பிறகு அவ்வாறே அல்லாஹுவின் அருளோடு மூன்றாம் மாதத்திலேயே இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கருவில் உருவாகி விட்டார்கள். நம்மால் குழந்தை ஈன்றெடுக்க இயலவில்லை என்று சாரா அமையார் வேதனைபட்டுக் கொண்டார்.

மேலும் அவர்களது பயம் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்மை வெறுத்து விடுவார்களோ என்றும் அஞ்சினார்கள். .இவ்வாறு இருக்க ஹாஜரா அம்மையார் மீது சிறிது கோபத்தோடு சாரா அம்மையார் இருப்பதை கண்டு ஹாஜரா அம்மையார் வருந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அல்லாஹ் தனது மலக்கை அனுப்பி அவர்களிடம் ஒரு சுப செய்தி கூறினான்

அந்த மலக்குகள் ஹாஜரா அம்மையாரிடம் உமக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கும் அதற்கு இஸ்மாயில் என்ற பெயர் சூட்டுங்கள். மேலும் இவரது சந்ததிகளை அல்லாஹ் மேன்மைபடுத்தி வைப்பான். மேலும் இவர்களது சந்ததிகளில் இருந்து பனிரெண்டு தலைவர்கள் உருவாகுவார்கள் என்ற சுப செய்தியையும் அவர்கள் கூறினார்கள் .

இந்த பனிரெண்டு தலைவர்கள் என்ற அந்த சுப செய்தி என்னுடைய சமுதாயத்தில் வருவார்கள் என்று நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹிஸ்ஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் இந்த பனிரெண்டு தலைவர்கள் யார் என்பதில் பல கருத்து வேறுபாடுகள் மார்க்க அறிஞர்களுகிடையில் ஆனால் பல அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் இந்த பனி ரெண்டு பேரும் சகாபக்கள்தான் என்று. அது 10 பேர் சொர்கத்துக்கு சுப செய்தி சொல்லப்பட்ட நபி தோழர்கள். மற்றொருவர் உமர் பின் அப்துல் அஜீஸ். அவர்கள் இன்னும் ஒருவரின் பெயர் ஹதீதுகளில் குறிப்பிடப்படவில்லை குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.

இதனை அறிந்த ஹாஜரா அம்மையார் சந்தோசத்துடன் குழந்தையை பெற்றெடுத்தார்கள். அப்போது இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 86.

இவர்களுக்கு ‘இறைஞ்சுதலை செவியேற்றான்’ என்கிற சரியி மொழியிர் பொருள்தருகின்ற ‘அஷ்முயீல்’ என்று பெயரிடப்பட்டது. அதுவே இஸ்மாயீல் எனத் திரிந்தது. இவர்களுக்கு தபீயுல்லாஹ் – அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கப்பட்டவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர்கள் ஒரு வயதாக இருக்கும் போது இவர்களையும், இவர்களின் அன்னையையும் பாரான் பள்ளத்தாக்கில் தம் இல்லத்தின் அருகில் விட்டு வருமாறு நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ் கட்டளையிட்டான்.. அந்த சமயத்தில் அவரும் அல்லாஹுவின் கட்டளையை ஏற்று தனது மனைவியையும் தனது குழந்தையையும் அழைத்து புறப்பட்டார்கள் . அந்த புனித இடமான மக்காவை வந்தடைந்ததும் கால்களும் மண்ணுகளும் நிறைந்த பாலைவன பூமியாக காட்சியளித்தது. சற்று தொலைவில் அமாலிக் கூட்டடத்தார்கள் வாழந்து வந்தனர். யாருமில்லாத அந்த பாலைவனத்தில் அவர்களை கஃபாவின் அருகிலுள்ள மரத்தின் நிழலில் இறக்கிவிட்டு 3 நாட்கள் இருந்துவிட்டு அல்லாஹுவின் கட்டளைப்படி சிரியா திரும்பினார்கள்.

சிறிது நேரத்தில் பச்சிளம் குழந்தையாக இரந்த இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பசியால் அழ ஆரம்பித்து விட்டார்கள் . அதனை கண்ட ஹாஜரா அம்மையார் அவர்கள் எங்காவது நீர் சிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை காபாவிற்கு பத்தடி தூரத்தில் வைத்துவிட்டு அவர்கள் சபா என்ற மலை மீது ஏறினார்கள். ஒரு குறிப்பிட்ட சில தூரத்தில் மர்வா என்ற இன்னொரு மலை இருக்கிறது. அதன் மேல் நீர் இருப்பது போல் ‘ கானல் நீர் ‘ தெரிகிறது. ஆதலால் அவர்கள் அந்த மலைக்கு ஓடுகிறார்கள். பிறகு அந்த மர்வா என்ற மலையில் ஏறி பார்த்தால் சபா மலையில் கானல் நீர் தெரிகிறது இப்படியே ஏழு முறை அங்கும் இங்கு ஒடுகிறார்கள்.

இவ்வாறு ஹாஜரா அம்மையார் ஏழு முறை இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அவர்கள் மர்வாவில் நிற்கும்போது விலங்குகளஜின் சப்தம் கேட்க அவை குழந்தைகளுக்கு துPங்கு செய்து விடுமோ என்று அஞ்சி குழந்தை இருந்தபக்கம் ஓடிவர அப்பொழ அவர்களின் மகன் அழும்பொழுது காலை உதறிய இடத்தில் நீர்ச்சுனை ஒன்று பொங்கி ஓடிக் கொண்டிருந்ததது. இதனை கண்ட ஹாஜரா அம்மையார் அங்கு வந்து தண்ணீரை அருந்தி பிறகு நாளை வேண்டும் என்பதற்காக மண்ணை வைத்து அணைபோல் கட்டி ‘ஜம் ஜம்’   – நில், நில் என்று கூறினார்கள். அதுவே ஜம்ஜம் தண்ணீர் ஆகும்.

தனது தாகத்தையும் தனது பிள்ளையின் பசியையும் அடைத்துவிட்டு மேலும் கஃபத்துல்லாவின் அருகிலே ஒரு சிறு கூடாரம் கட்டி அங்கு தங்கி இருக்கிறார்கள். எமன் நாட்டைச் சார்ந்த இப்றாஹிம் அலைஹிஸ்ஸல்லம் அவர்களின் உறவினர்களான ஜுருஹூம் என்ற வியாபாரக் கூட்டம் ஹாஜரா அம்மையாரிடம் இங்கு தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டார்கள். அதற்கு தாராளமாக தங்கி கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் சிறுக சிறுக மக்கள் வர வர அந்த பாலைவனமாக இருந்த பகுதி ஒரு சிறிய ஊரை போல் மாறுகிறது. அவர்களின் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடிய இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபி பேசக் கற்றுக் கொண்டார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை வந்து தம் மனைவியையும், மகனையும் பார்த்து விட்டு செல்வாhக்ள். ஒருமுறை இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மக்கா சென்று அவர்கள் தம் மகனுடன் சேர்ந்து கஃபாவின் கடைக்காலை உயர்த்தி கட்ட வேண்டும் என இறைஆணை வந்தது.

சிறிது காலம் கழித்து அல்லாஹ் மேலும் ஒரு கட்டளை பிறப்பித்தான் நபி இப்ராஹீமே காபத்துல்லாஹ்வை உயர்த்தி கட்டுவாயாக என்று மேலும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களிடம் என் அருமை மகனே நான் அல்லாஹுவின் பள்ளியை கட்டவிருக்கிறேன் எனக்கு உதவி செய்வாய என்று கேட்டார் அதற்கு நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிச்சயமாக தந்தையே நானும் உங்களுக்கு உதவுகிறேன் மேலும் இருவரும் சேர்ந்து காபதுல்லாஹுவை கட்ட தொடங்கினார்கள் சிறிது உயரம் ஆக நபி இப்ராகீம் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் ஒரு கல்லின் மீது ஏறி நின்று காபதுல்லாவை உயர்த்தினார்கள் அந்த கல் கபதுல்லாஹ் உயர உயர அவருக்கு அந்த கல்லும் உயர்துகொண்டே போனதாக அல்லாஹ் இவ்வாறு நபி இப்ராஹீமுக்கு உதவி செய்ததாக உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் இந்த கல்தான் மக்காமு இபுறாஹீம் என்று காபதுல்லாவில் ஒரு கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது   மேலும் சிறிது நேரம் கழித்து நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் தந்தையே எனக்கு மிகவும் சோர்வாக இருக்கு சிறிது நேரம் கழித்து நான் கல் எடுத்து தருகிறேன் என்று கூறி உட்கார்ந்து விட்டர்கள்.

மேலும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் கல்லு தா மகனே! என்று கேட்க ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹஜ்ரத் அஸ்வத் கல்லை கொடுத்தார்கள் சிறிது நேரம் கழித்து இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள் தந்தையே இந்த கல்லை எடுத்து தந்தது யார் என்று வினவியபொழுது சோர்வடையாத ஒருவர் தந்தார் என்று நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்

மேலும் இந்த ஹஜ்ரத் அஸ்வத் கல்லை பற்றி பெருமானார் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் இந்த ஹஜ்ரத் அஸ்வத் கல் சொர்கத்தில் இருந்து வந்த கல். இது நபி இபுராஹிம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் வெள்ளையாக இருந்தது என்று கூறியதாக உலமாக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த கல்லை முத்தமிடுவது சுன்னத்.

மேலும் இந்த பணியை முடித்தவுடன் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்ஹுவிடம் எங்கள் ரட்சகனே எங்களது இந்த பணியை நீ முழுமையாக ஏற்று கொள்வாயாக மேலும் நீயே அனைத்தையும் செவி ஏற்பவன் நன்கறிந்தவன் என்றும்

மேலும் எங்கள் ரட்சகனே எங்களில் இருந்து எங்கள் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினரை உனக்கு கீல்படிபவர்களாக ஆக்கி வைப்பாயாக மேலும் எங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வாயாக மேலும் நிச்சயமாக நீயே தவ்பாவை ஏற்பவன் மிக்க கருணையுடையவன்

மேலும் எங்கள் ரட்சகனே எங்கள் சந்ததிகளில் இருந்து ஒரு தூதரை அனுப்புவாயாக அவர்கள் மக்களுக்கு உன்னுடைய வசனங்களை ஓதி காண்பித்து வேதத்தையும் அறிவையும் (குரானின் விளக்கமான சுன்னத்தையும் ) மேலும் அவர்களை பரிசுத்தமும் படுத்துவார் நிச்சயமாக நீயே தீர்க்கமான அறிவுடையவன் என்று பிராத்தித்தார்.

நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்அவர்களது சந்ததிகளில் வந்த ஒரே நபி நபி முகம்மது சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டுமே நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம்அவர்கள் கூறுகிறார்கள் நான் அறுத்து பலியிடதுணிந்த இரு தந்தையின் மகனாக இருக்கிறேன் என்று . ஒருவர் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மற்றும் ஒருவர் நாயகம் சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் என்று குறிப்பிடுவார்கள் ..

அடுத்த ஆண்டு இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்கா வந்து சிறிது காலம் அங்கு தங்கி இருந்தார்கள் பிறகு சில காலம் கழித்து இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது குடும்பத்தை காண மக்காவிற்கு வந்தார்கள் அப்பொழுது இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாலிபத்தை அடைந்த நிலையில் தன் தந்தையின் பணியில் ஒத்துழைக்கும் அளவிற்கு அறிவுடையவராக இருந்தார்கள். மேலும் அன்றைய இரவு இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள் . மேலும் அவர் காலையில் தனது மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதை போன்று கனவு கண்டேன் உன்னுடைய அபிப்ராயம் என்ன என்று தனது மகனிடம் கேட்டார். என் அருமை தந்தையே நீங்கள் உங்களுக்கு ஏவப்பட்டதை நிறைவேற்றுங்கள் அல்லஹ்வின் அருளால் நிச்சயமாக நீங்கள் என்னை பொறுமையாளராகவே காண்பீர்கள் என்று கூறினார். மேலும் அறுக்கும்போது மனம் மாறாதிருக்கும் பொரட்டு தம்மை குப்புற படுக்க வைத்து அறுக்குமாறும், அறுக்க வசதியாக இருக்கும்பொருட்டு தம்மை கயிற்றால் பிணைக்குமாறும் கூறினார்கள். அறுக்கும்போது கத்தியை நன்கு அழுத்தி அறுக்குமாறு கூறினர்.

அவ்வாறு செய்தும் கத்;தியால் இஸ்மாயில் நபியின் கழுத்து அறுபடவில்லை. மாறாக கத்தியை இப்றாஹிம் நபி ஓங்கி அருகிலிருந்த பாறையின் மீது ஓங்கி அடிக்க கத்தியின் கூர்மையால் அப்பாறை இரு கூறாகி ஒரு கூறு கீழே விழுந்தது. அவர்களுக்குப் பதிலாக ஒரு ஆட்டை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொடுக்க அதை அறுத்தார்கள்.

இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்காவில் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதிநிததியாகவும், கஃபாவின் காவலராகவும் இருந்து வந்தார்கள். வில்லும், அம்பும் செய்வது இவர்களின் தொழிலாக இருந்தது. வேட்டையாடுவதிலும், குதிரைகளை அடக்குவதிலம் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தார்கள்.

ஜுர்ஹூம் கூட்டத்தினர் இவர்களுக்கு வழங்கிய ஆடுகிகள் பல்கிப் பெருகி பெரும் சொத்தாக மாறியிரந்தன. இவர்கள் பதினைந்து வயதை எட்டியபோது இவர்களின் அன்னை காலமானார்கள். ஜுர்ஹும் கூட்டத்தினர் இவர்களுக்கு அம்ரா என்ற மங்கையை மணம் முடித்து கொடுத்தனர். அவள் இனிய இயல்பில்லாதிருந்ததால் தம் தந்தையின் ஆணைப்படி மணவிடுதலை செய்து விட்டு இவர்கள் ஸையிதா என்ற மாதரசியை மணந்து இல்வாழ்வு நடத்தினர்.

இந்நிலையில் அவர்களின் தந்தைத இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்தனர். இதைக் கேள்வியுற்ற இவர்கள் தந்தையின் அடக்கவிடத்தை தரிசித்தனர்.அப்பொழுது இறைவன் இவர்களை நபியாக்கி, யமன், எகிப்து ஆகிய நாடுகளில் வாழும் நிராகரிப்போரை நேர்வழியில் ஆக்குமாறு ஆணையிட்டான். அவ்வாறே அவர்கள் அங்கு சென்று ஓரிறை வணக்கத்தை போதித்தபோது அம்மக்கள் அதை ஏற்கவில்லை.

தம் தந்தையாருக்குப் பின் 47 ஆண்டுகள் வாழ்நந்து இவ்வுலகில் ஓரிறை வணக்கத்தைப் போதித்து வந்தார்கள். இவர்களுக்கு 12 மக்கள் பிறந்தனர். தமது 137ஆவது வயதில் மறைந்தனர். இவர்களின் உடல் கஃபாவைச் சேர்ந்த ஹிஜ்ரில் அன்னை ஹாஜராவின் கப்ருக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்குப் பின் இவர்களின் மகன் கிதார் மக்காவில் தங்கி கஃபாவின் ஊழியத்தை செய்து வந்தார்.

Add Comment

Your email address will not be published.