இத்தா பற்றிய விபரம்

இத்தா பற்றிய விபரம்

By Sufi Manzil 0 Comment January 10, 2012

Print Friendly, PDF & Email

 

கேள்வி:இத்தாவின் ஷரீயத் சட்டம்(ஹனபி) தயவுசெய்து தாருங்கள்.

smk.abdul majeed s.majeed33@gmail.com

07-01-2012
 

பதில்:ஒரு பெண்ணின் கணவன் இருந்தால் அவள் பருவமடைந்தவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருப்பது அவசியம்.

ஒரு பெண்ணை ஒருவர் விவாகம் செய்து உடலுறவு கொள்ளாதிருந்து தலாக் சொல்லிவிட்டால் அந்தப் பெண்ணுக்கு இத்தா என்பது அவசியமில்லை. உடலுறவு கொண்ட பின் தலாக் சொல்லப்பட்ட பெண் ஹைலு(மாதவிடாய்) வரக்கூடிய பெண்ணாக இருந்தால் மூன்று துப்புரவுக்கு இத்தா இருக்க வேண்டும். ஹனபி மத்ஹப் படி மூன்று ஹைலு இத்தா இருக்க வேண்டும்.

ஹைலு வராத பெண் சிறிய பெண்ணாக இருந்தாலும் அல்லது ஹைலு வராத வயதை எட்டி இருந்தாலும் மூன்று மாதம் இத்தா இருப்பது அவசியமாகும். கணவர் காலம் சென்றதற்காக இத்தா இருப்பவர்களோ அல்லது தலாக் சொல்லப்பட்டதால் இத்தா இருப்பவர்களோ அந்தக் கணவன் மூலம் கர்ப்பம் இருந்தால் குழந்தை பிறந்த பிறகு இத்தாவுடைய காலம் தீரும்.